pova 4 pro https://www.91mobiles.com/tamil Mon, 10 Oct 2022 09:55:29 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 6000mAh பேட்டரியோடு அறிமுகமானது Tecno Pova 4 Pro https://www.91mobiles.com/tamil/tecno-pova-4-pro-with-6000mah-battery-launched-know-the-price-and-specifications/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=tecno-pova-4-pro-with-6000mah-battery-launched-know-the-price-and-specifications Mon, 10 Oct 2022 09:55:29 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2883 டெக்னோ (Tecno) நிறுவனம் அதன் போவா (Pova) சீரிஸ் வரிசையில் Tecno Pova 4 Pro என்ற புதிய ஸ்மார்ட்போன் மாடலைச் சேர்த்துள்ளது. இந்த புதிய டெக்னோ போவா 4 ப்ரோ (Tecno Pova 4 Pro) இப்போது பங்களாதேஷில் அறிமுகமாகி இருக்கிறது. இந்த புதிய மொபைல் MediaTek Helio G99 சிப்செட் உடன் 8ஜிபி ரேம் மூலம் இயக்கப்படுகிறது. மற்ற போவா சீரிஸ் சாதனங்களைப் போலவே இந்த ஸ்மார்ட்போன் 6000mah பேட்டரியைக் கொண்டுள்ளது. சிறப்பம்சங்கள் Tecno […]

The post 6000mAh பேட்டரியோடு அறிமுகமானது Tecno Pova 4 Pro first appeared on .

]]>

டெக்னோ (Tecno) நிறுவனம் அதன் போவா (Pova) சீரிஸ் வரிசையில் Tecno Pova 4 Pro என்ற புதிய ஸ்மார்ட்போன் மாடலைச் சேர்த்துள்ளது. இந்த புதிய டெக்னோ போவா 4 ப்ரோ (Tecno Pova 4 Pro) இப்போது பங்களாதேஷில் அறிமுகமாகி இருக்கிறது. இந்த புதிய மொபைல் MediaTek Helio G99 சிப்செட் உடன் 8ஜிபி ரேம் மூலம் இயக்கப்படுகிறது. மற்ற போவா சீரிஸ் சாதனங்களைப் போலவே இந்த ஸ்மார்ட்போன் 6000mah பேட்டரியைக் கொண்டுள்ளது.

சிறப்பம்சங்கள்

Tecno Pova 4 Pro ஸ்மார்ட்போனின் மிக முக்கியமான அம்சங்களாக அதன் 90Hz AMOLED டிஸ்ப்ளே மற்றும் 50MP கேமராவைக் கூறலாம். இந்த போன் 45W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது. இதன் விலைக்கேற்ற சிறப்பான அம்சங்களுடன் இந்த மொபைல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Tecno Pova 4 Pro ஸ்மார்ட்போனின் முழுமையான சிறப்பம்ச தகவலைத் தெரிந்துகொண்டு, இந்த புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விபரங்கள் பற்றி பார்க்கலாம். இந்த போன் 90Hz ரெப்ரெஷ் ரேட் உடன் வரும் AMOLED டிஸ்பிளே பேனலைக் கொண்டுள்ளது. இது 6.66 அங்குல அளவு கொண்ட முழு HD+ தெளிவுத்திறனைக் கொண்ட டிஸ்பிளே மூலம் வெளிவந்துள்ளது.

ரேம்

Tecno Pova 4 Pro ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 (MediaTek Helio G99) சிப்செட் உடன் வருகிறது. இது Mali G57 GPU-வைக் கொண்டு வருகிறது. இது 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 5ஜிபி எக்ஸ்டெர்னல் ரேம் இணைக்கும் அம்சமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் உங்களுக்கு மொத்தமாக 13ஜிபி ரேம் கிடைக்கிறது. இது ஆண்ட்ராய்டு 12 உடன் வருகிறது.

கேமரா

புதிய டெக்னோ போவா 4 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 50 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி ஷூட்டர் வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு செகெண்டரி சென்சார் மற்றும் டூயல் LED ஃபிளாஷ் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் முன்புறத்தில் செல்ஃபி மற்றும் வீடியோகால்களுக்காக எல்இடி ப்ளாஷ் உடன் 8 மெகா பிக்சல் செல்ஃபி ஷூட்டரைக் கொண்டுள்ளது. இது 6000mAh பேட்டரியை கொண்டுள்ளது. கூடவே இது 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை கொண்டு இருக்கிறது. இது மட்டும் இன்றி 10W இல் ரிவர்ஸ் சார்ஜிங் செய்யும் வசதியும் உள்ளது.

ஏமாற்றம்!

இது சார்ஜிங் மற்றும் டேட்டா எக்ஸ்சேஞ் அம்சத்திற்கு டைப்-சி போர்ட்டை வழங்குகிறது. இந்த சாதனம் ஹை-ரெஸ் ஆடியோவுடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர் அமைப்பையும் கொண்டுள்ளது. Tecno Pova 4 Pro ஸ்மார்ட்போன் Fluorite Blue என்ற வண்ணத்தில் வருகிறது. இது டூயல் சிம், 4ஜி, வைஃபை, புளூடூத், என்எப்சி மற்றும் ஜிபிஎஸ் போன்ற அம்சங்களுடன் வருகிறது. இது ஒரு 5ஜி போன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 5ஜி டிவைஸை எதிர்பார்த்தவர்களுக்கு இது ஒரு சிறிய ஏமாற்றத்தைத் தருகிறது.

விலை

இந்த புதிய Tecno Pova 4 Pro ஸ்மார்ட்போன் இந்திய மதிப்பில் வெறும் ரூ.21,500 என்ற விலையில் கிடைக்கும். இப்போதைக்கு, இந்த ஸ்மார்ட்போன் தற்போது பங்களாதேஷில் மட்டுமே கிடைக்கிறது. பிற பகுதியில் இந்த டிவைஸ் எப்போது கிடைக்கும் என்பதற்கான அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. இந்தியாவில் இந்த Tecno Pova 4 Pro தீபாவளிக்கு முன்னால் அறிமுகம் செய்யப்படலாம்.

The post 6000mAh பேட்டரியோடு அறிமுகமானது Tecno Pova 4 Pro first appeared on .

]]>