Pova Neo 3 https://www.91mobiles.com/tamil Thu, 08 Jun 2023 05:13:19 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 தயாராகி வருகிறது Tecnoவின் புதிய Pova Neo 3. அம்சங்கள் கசிந்தன https://www.91mobiles.com/tamil/4-gb-ram-smartphone-tecno-pova-neo-3-spotted-on-google-play-console/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=4-gb-ram-smartphone-tecno-pova-neo-3-spotted-on-google-play-console Thu, 08 Jun 2023 05:13:19 +0000 https://www.91mobiles.com/tamil/?p=8613     டெக்னோ நிறுவனம் அதன் ‘POVA’ சீரிஸின் புதிய ஸ்மார்ட்போனினை Tecno Pova Neo 3 என்ற பெயரில் அறிமுகப்படுத்த இருப்பதாக டெக்னோ தொடர்பான செய்திகள் வருகின்றன. இந்த மொபைல் போன் கூகுள் பிளே கன்சோலில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதில் போனின் புகைப்படத்துடன் பல முக்கிய விவரக்குறிப்புகளும் வெளியாகியுள்ளன. Tecno Pova Neo 3 பட்டியல்   Google Play Console இல் இந்த ஃபோன் Tecno Pova Neo 3 என்ற பெயரில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த […]

The post தயாராகி வருகிறது Tecnoவின் புதிய Pova Neo 3. அம்சங்கள் கசிந்தன first appeared on .

]]>

 

Highlights

  • கூகுள் பிளே கன்சோலில்  இந்த போன் பட்டியலிடப்பட்டுள்ளது.
  • இதன் முன்பக்க வடிவமைப்பும் வெளி வந்துள்ளது.
  • இது குறைந்த பட்ஜெட்டில் வெளியிடப்படலாம்.

 

டெக்னோ நிறுவனம் அதன் ‘POVA’ சீரிஸின் புதிய ஸ்மார்ட்போனினை Tecno Pova Neo 3 என்ற பெயரில் அறிமுகப்படுத்த இருப்பதாக டெக்னோ தொடர்பான செய்திகள் வருகின்றன. இந்த மொபைல் போன் கூகுள் பிளே கன்சோலில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதில் போனின் புகைப்படத்துடன் பல முக்கிய விவரக்குறிப்புகளும் வெளியாகியுள்ளன.

Tecno Pova Neo 3 பட்டியல்

 

  • Google Play Console இல் இந்த ஃபோன் Tecno Pova Neo 3 என்ற பெயரில் பட்டியலிடப்பட்டுள்ளது.
  • இந்த போனில் 4 ஜிபி ரேம் மெமரி கொடுக்கப்பட்டுள்ளது இதன் மூலம் தெரியவந்துள்ளது.
  • இந்த டெக்னோ ஃபோன் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொண்டதாக பட்டியலில்  காட்டப்பட்டுள்ளது.
  • டெக்னோ போவா நியோ 3 மொபைலில் MediaTek Helio G85 சிப்செட் வழங்கப்படும் எனஇதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
  • இந்த ஃபோன் 2x ARM Cortex-A75 (2000MHz) மற்றும் 2x ARM Cortex- A55 (1800MHz) செயலிகளைப் பெறும்.
  • Tecno Pova Neo 3 மொபைலில் கிராபிக்ஸ்க்காக ARM Mali-G52 GPU வழங்குவது பற்றிய தகவல் பட்டியலில் தெரியவந்துள்ளது.
  • இந்த டெக்னோ போனுக்கு 320dpi சப்போர்ட் செய்யும் 720 x 1640 பிக்சல் அடர்த்தி  கொண்ட திரை வழங்கப்படும் என்று கூகுள் பிளே கன்சோலில் கூறப்பட்டுள்ளது.

Tecno Pova Neo 3 தோற்றம் மற்றும் வடிவமைப்பு

Tecno Pova Neo 3 இன் முன் தோற்றம் Google Play கன்சோல் பட்டியலில் வெளிவந்துள்ளது. இதில், ஃபோன் பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே வடிவமைப்பில் இருப்பதாகக் காட்டப்பட்டுள்ளது. இது திரையின் மேற்பகுதியின் நடுவில் கொடுக்கப்பட்டுள்ளது. போனின் வலது பேனலில் வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டன் கொடுக்கப்பட்டுள்ளது.

 

டெக்னோ போவா நியோ 3 விவரக்குறிப்புகள்

டிஸ்ப்ளே

இந்த மொபைல் ஃபோன் 6.82 இன்ச் HD + LCD டிஸ்ப்ளேவை 720 x 1640 பிக்சல் தெளிவுத்திறனுடன் ஆதரிக்கிறது. இது 90Hz புதுப்பிப்பு விகிதத்தில் வேலை செய்கிறது.

 

சிப்செட்

Pova Neo 2 ஆனது Android 12 அடிப்படையிலான HiOS 8.6 இல் வேலை செய்கிறது. செயலாக்கத்திற்காக, MediaTek Helio G85 சிப்செட் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

 

ரேம் மற்றும் ஸ்டோரேஜ்

இந்த போனில் 6 ஜிபி வரை ரேம் மெமரி மற்றும் 128 ஜிபி வரை உள்ளக சேமிப்பு உள்ளது. இதை SD கார்டு மூலம் அதிகரிக்கலாம்.

 

கேமரா

புகைப்படம் எடுப்பதற்கு, டெக்னோ போவா நியோ 2 இரட்டை பின்புற கேமராவை ஆதரிக்கிறது. இதில் 16 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் உள்ளது. முன் பேனலில் 8 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

 

பேட்டரி

பவர் பேக்கப்பிற்காக, இந்த ஸ்மார்ட்போன் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் கூடிய 7,000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது

The post தயாராகி வருகிறது Tecnoவின் புதிய Pova Neo 3. அம்சங்கள் கசிந்தன first appeared on .

]]>