realme 10 pro 5G https://www.91mobiles.com/tamil Thu, 09 Mar 2023 13:33:23 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 108MP கேமரா, 5000mAh பேட்டரி – ப்ரீமியம் வசதிகளோடு மிட்ரேஞ்ச் விலையில் வெளியான ரியல்மி 10 ப்ரோ சீரிஸ்! https://www.91mobiles.com/tamil/realme-10-pro-5g-launched-in-india-know-price-feature-specifications-sale-details/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=realme-10-pro-5g-launched-in-india-know-price-feature-specifications-sale-details Thu, 08 Dec 2022 07:18:15 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4164 ரியல்மி நிறுவனத்தின் Realme 10 Pro+ மற்றும் Realme 10 Pro ஸ்மார்ட்போன்கள் சீனாவில் வெளியிடப்பட்டதை அடுத்து தற்போது இந்தியாவிலும் வெளியாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் டூயல் பேண்ட் Wi-Fi ஆதரவுடன் வெளியாகி இருக்கிறது. புதிய ப்ரீமியம் 5ஜி போன் வாங்கத் திட்டமிட்டவர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும். இதில் Realme 10 Pro+ ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை விரிவாக பார்க்கலாம் Realme 10 Pro+ டாப் ஆஃப் தி லைன் மாடலாக Realme 10 […]

The post 108MP கேமரா, 5000mAh பேட்டரி – ப்ரீமியம் வசதிகளோடு மிட்ரேஞ்ச் விலையில் வெளியான ரியல்மி 10 ப்ரோ சீரிஸ்! first appeared on .

]]>

ரியல்மி நிறுவனத்தின் Realme 10 Pro+ மற்றும் Realme 10 Pro ஸ்மார்ட்போன்கள் சீனாவில் வெளியிடப்பட்டதை அடுத்து தற்போது இந்தியாவிலும் வெளியாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் டூயல் பேண்ட் Wi-Fi ஆதரவுடன் வெளியாகி இருக்கிறது. புதிய ப்ரீமியம் 5ஜி போன் வாங்கத் திட்டமிட்டவர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும். இதில் Realme 10 Pro+ ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை விரிவாக பார்க்கலாம்

Realme 10 Pro+

டாப் ஆஃப் தி லைன் மாடலாக Realme 10 Pro+ வெளியாகி இருக்கிறது. இதில் 6.7 அங்குல வளைந்த AMOLED டிஸ்ப்ளேவுடன் கூடிய 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளே ஆனது 2,160Hz பல்ஸ்-வித்த் மாடுலேஷன் (PWM) மற்றும் 800 நிட்ஸ் உச்ச பிரகாச நிலையைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 1080 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. ரியல்மி சமீபத்தில் Realme 10 4G மற்றும் Realme 10 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. 2.33mm chin உடன் ரியல்மியின் மெல்லிய போனாக இந்த போன் வெளியாகி இருக்கிறது.

விலை

Realme 10 Pro+ ஆனது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்களில் அறிமுகமாகி இருக்கிறது. 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ரூ 18,300 என்ற விலைக்கும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ரூ 22,000 விலைக்கும் விற்பனையாக இருக்கிறது.

நிறங்கள்

இந்த ஸ்மார்ட்போனானது நைட் ப்ளாக், ஓஷன் ப்ளூ மற்றும் ஸ்டார் லைட் வண்ண விருப்பங்களில் வெளியாகி இருக்கிறது. பக்கா ப்ரீமியம் 5ஜி போனை மிட் ரேன்ஜ் விலைப் பிரிவில் வாங்கலாம். ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு என தனி வாடிக்கையாளர்கள் பட்டாளமே இருக்கிறது.

டிஸ்ப்ளே

Realme 10 Pro+ சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனில் 6.7 அங்குல AMOLED டிஸ்ப்ளே இடம்பெற்றிருக்கிறது. 120Hz ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவைக் கொண்டிருக்கிறது இந்த டிஸ்ப்ளே. இது தவிர ரியல்மி போன்களில் முதன்முறையாக 2160Hz PWM dimming டிஸ்ப்ளே வசதியையும் கொண்டு இருக்கிறது. இது தவிர உலகில் முதன்முறையாக ஃப்ளிக்கர் ப்ரீ TUV Rheindland சான்றிதழையும் பெற்று இருக்கிறது.

சிப்செட்

பாதுகாப்பு அம்சத்துக்கு என இந்த புதிய ரியல்மி 10 ப்ரோ+ ஸ்மார்ட்போனில் அண்டர் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் உடன் மீடியாடெக் டைமன்சிட்டி 1080 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. டூயல் சிம் ஆதரவு கொண்ட 5ஜி ஸ்மார்ட்போன் இதுவாகும்.

கேமரா

Realme 10 Pro+ ஆனது 108-மெகாபிக்சல் முதன்மை கேமரா உட்பட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது. 8 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் சென்சார் இரண்டாம் நிலை கேமராவாகவும் மற்றும் 2 எம்பி மோனோக்ரோம் லென்ஸ் மூன்றாம் நிலை கேமராவாகவும் இருக்கிறது. ரியல்மி 10 ப்ரோ+ ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 16 எம்பி செல்ஃபி கேமரா இடம்பெற்றிருக்கிறது.

இயங்குதளம்

ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான Realme UI 4.0 மூலம் இயக்கப்படுகிறது. 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது. இதில் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களும் வழங்கப்பட்டுள்ளது.

The post 108MP கேமரா, 5000mAh பேட்டரி – ப்ரீமியம் வசதிகளோடு மிட்ரேஞ்ச் விலையில் வெளியான ரியல்மி 10 ப்ரோ சீரிஸ்! first appeared on .

]]>
108MP கேமராவோடு ரியல்மியில் இருந்து வெளியாகிறதா ரியல்மி 10 ப்ரோ? https://www.91mobiles.com/tamil/premiums-specs-smartphone-available-at-budget-price-realme-10-pro-5g/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=premiums-specs-smartphone-available-at-budget-price-realme-10-pro-5g Fri, 18 Nov 2022 14:29:06 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3735 சீனாவில் ரியல்மி நிறுவனத்தின் Realme 10 Pro+ மற்றும் Realme 10 Pro ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. ரியல்மி 10 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என ரியல்மி நிறுவனம் டீஸ் செய்திருந்தது. எனவே இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாவது உறுதியாகிவிட்டது. ஆகையால் இந்த போனைப் பற்றி நாம் தெரிந்து கொள்வது நல்லது. ரியல்மி 10 ப்ரோ ரியல்மி 10 ப்ரோ ஸ்மார்ட்போனானது 6.7 அங்குல அமோலெட் டிஸ்ப்ளே, 108 எம்பி பிரதான கேமரா மற்றும் […]

The post 108MP கேமராவோடு ரியல்மியில் இருந்து வெளியாகிறதா ரியல்மி 10 ப்ரோ? first appeared on .

]]>

சீனாவில் ரியல்மி நிறுவனத்தின் Realme 10 Pro+ மற்றும் Realme 10 Pro ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. ரியல்மி 10 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என ரியல்மி நிறுவனம் டீஸ் செய்திருந்தது. எனவே இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாவது உறுதியாகிவிட்டது. ஆகையால் இந்த போனைப் பற்றி நாம் தெரிந்து கொள்வது நல்லது.

ரியல்மி 10 ப்ரோ

ரியல்மி 10 ப்ரோ ஸ்மார்ட்போனானது 6.7 அங்குல அமோலெட் டிஸ்ப்ளே, 108 எம்பி பிரதான கேமரா மற்றும் 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்தியா முழுவதும் 5ஜி சேவை வழங்கும் நகரங்களின் எண்ணிக்கை வேகமாக வளர்ந்து வருகிறது. குறைந்த விலையில் சிறந்த அம்சங்களுடன் 5ஜி போன் வாங்க வேண்டும் என திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும்.

சிறப்பம்சங்கள்

Realme 10 Pro ஆனது முழு எச்டி+ டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. 1,080 x 2,400 பிக்சல்கள் அடர்த்தி மற்றும் 680 nits பிரகாசத்துடன் கூடிய 6.72 அங்குல AMOLED டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டிஸ்ப்ளே டூ பாடி விகிதம் 93.76 சதவீதமாக இருக்கிறது.

சிப்செட்

இந்த ரியல்மி ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 695 5ஜி எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 12 ஜிபி ரேம் வரையிலான ஆதரவைக் கொண்டுள்ளது. இதில் மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் வசதி இருக்கிறது. இதன்மூலம் 1 டிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம்.

கேமரா

Realme 10 Pro ஸ்மார்ட்போனில் 108 எம்பி பிரதான கேமரா மற்றும் 2 எம்பி இரண்டாம் நிலை கேமரா என டூயல் ரியர் கேமராகள் இருக்கின்றன. ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் மூலம் இயங்குகிறது.

பேட்டரி

Realme 10 Pro ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. இதில் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. இது 44 மணிநேரம் வரை இசை கேட்கும் நேரத்தை வழங்கும் என கூறப்பட்டுள்ளது. முன்னதாகவே குறிப்பிட்டது போல் 5ஜி ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ளது.

மெமரி

ரியல்மி 10 ப்ரோ ஸ்மார்ட்போனானது இரண்டு வேரிண்ட்களில் விற்பனைக்குக் கிடைக்கிறது. ரியல்மி 10 ப்ரோ ஆனது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் என்று இரண்டு வேரியண்ட்களில் அறிமுகமாகி இருக்கிறது. 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் இன் இந்திய விலை மதிப்பு ரூ.19,500 எனவும் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.21,800 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த சீரிஸின் டாப் மாடலாக Realme 10 Pro+ வெளியாகி இருக்கிறது. இதில் 6.7 அங்குல வளைந்த AMOLED டிஸ்ப்ளேவுடன் கூடிய 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளே ஆனது 2,160Hz பல்ஸ்-வித்த் மாடுலேஷன் (PWM) மற்றும் 800 நிட்ஸ் உச்ச பிரகாச நிலையைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 1080 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இது பக்கா ப்ரீமியம் 5ஜி ஸ்மார்ட்போனாகும். இதன் முழு விவரத்தை விரைவில் பார்க்கலாம்.

The post 108MP கேமராவோடு ரியல்மியில் இருந்து வெளியாகிறதா ரியல்மி 10 ப்ரோ? first appeared on .

]]>