realme 10 pro plus https://www.91mobiles.com/tamil Fri, 10 Mar 2023 10:07:54 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ப்ரீமியம் வசதிகளுடன் ரூ.25,000க்கு கீழ் வெளியாகிறதா ரியல்மி 10 ப்ரோ ப்ளஸ்? https://www.91mobiles.com/tamil/realme-10-pro-with-curved-amoled-display-to-launch-in-india-under-rs-25-000-on-december-8/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=realme-10-pro-with-curved-amoled-display-to-launch-in-india-under-rs-25-000-on-december-8 Mon, 28 Nov 2022 06:50:07 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3934 ரியல்மி நிறுவனம் அதன் ரியல்மி 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்த மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தியது. தற்போது இதன் சீரிஸ் இல் இடம்பெற்ற ரியல்மி 10 ப்ரோ+ மற்றும் ரியல்மி 10 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் டிசம்பர் 8 2022 அன்று வெளியிட இருக்கிறது. Realme India VP மாதவ் ஷெத் Realme 10 Pro+ ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி மற்றும் விலை குறித்து டீஸ் செய்யும் வகையிலான வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதன்படி, Realme 10 […]

The post ப்ரீமியம் வசதிகளுடன் ரூ.25,000க்கு கீழ் வெளியாகிறதா ரியல்மி 10 ப்ரோ ப்ளஸ்? first appeared on .

]]>

ரியல்மி நிறுவனம் அதன் ரியல்மி 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்த மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தியது. தற்போது இதன் சீரிஸ் இல் இடம்பெற்ற ரியல்மி 10 ப்ரோ+ மற்றும் ரியல்மி 10 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் டிசம்பர் 8 2022 அன்று வெளியிட இருக்கிறது.

Realme India VP மாதவ் ஷெத் Realme 10 Pro+ ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி மற்றும் விலை குறித்து டீஸ் செய்யும் வகையிலான வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதன்படி, Realme 10 Pro+ இந்தியாவில் ரூ.25,000க்கு கீழ் வெளியிடப்படலாம். இந்த ஸ்மார்ட்போனுக்கு வங்கிச் சலுகைகள் இருக்குமா அல்லது அறிமுக சலுகை கிடைக்குமா என்பது இதுவரை தெரியவில்லை. ஆனால், மலிவு விலையில் வளைந்த டிஸ்ப்ளேவுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாக இருக்கிறது என்பது குறிபிடத்தக்கது.

வளைந்த டிஸ்ப்ளே

ப்ரீமியம் விலைப் பிரிவு ஸ்மார்ட்போன்களில் மட்டுமே வளைந்த டிஸ்ப்ளே அம்சம் இடம்பெற்று வந்தது. இந்த நிலையில் மிட்ரேன்ஜ் விலைப் பிரிவில் வளைந்த டிஸ்ப்ளே ஸ்மார்ட்போனாக அறிமுகமாக இருக்கிறது இந்த ரியல்மீ 10 சீரிஸ் போன்கள். இதன் காரணமாகவே இந்த ஸ்மார்ட்போன் மீதான எதிர்பார்ப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதுதவிர இரண்டு கேமராக்களுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாக இருக்கிறது.

சிறப்பம்சங்கள்

Realme 10 Pro+ ஸ்மார்ட்போனானது முழு எச்டி+ தெளிவுத் திறன் உடன் கூடிய 6.7 அங்குல வளைந்த அமோலெட் பேனல் பொருத்தப்பட்டிருக்கும். இதன் டிஸ்ப்ளே ஆனது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவைக் கொண்டிருக்கும். கூடவே 800 நிட்ஸ் உச்ச பிரகாச நிலையைக் கொண்டுள்ளது. டிஸ்ப்ளேவின் மேல் மையத்தில் பஞ்ச் கேமரா கட்அவுட் இடம்பெறும். இந்த ஸ்மார்ட்போன் ஆனது மீடியா டெக்கின் சமீபத்திய டைமன்சிட்டி 1080 சிப்செட் மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது. இது மிட் ரேன்ஜ் சிப்செட் ஆகும். ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்மார்ட்போன்களும் இதே சிப்செட் மூலமாக தான் இயக்கப்படுகிறது. இந்த சிப்செட் ஆனது டைமன்சிட்டி 920 எஸ்ஓசி இன் புதுப்பிக்கப்பட்ட பதிப்பாகும். 12 ஜிபி ரேம் ஆதரவை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

கேமரா

Realme 10 Pro+ ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்களைப் பொறுத்தவரையில், இதில் 108MP Samsung ISOCELL HM6 முதன்மை சென்சார் பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த சென்சார் ஆனது OIS (ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன்) ஆதரவைக் கொண்டிருக்கும். அதேபோல் 8MP அல்ட்ராவைடு ஷூட்டர் மற்றும் 2MP மேக்ரோ சென்சார் என டிரிபிள் ரியர் கேமரா ஆதரவு இடம்பெறும் என கூறப்படுகிறது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புக்கு என ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16 எம்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கும் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

கனெக்டிவிட்டி

பாதுகாப்பு அம்சத்துக்கு என இன் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர், டூயல் ஸ்பீக்கர்கல், ஹை ரெஸ் ஆடியோ, யூஎஸ்பி டைப் சி போர்ட் ஆகியவை இணைப்பு ஆதரவுகளாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி உடன் 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கிறது. புதிய ரியல்மி ஸ்மார்ட்போனானது Android 13 OS அடிப்படையிலான ரியல்மி யுஐ 4.0 மூலம் இயக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

விலை

Realme 10 Pro+ ஆனது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆகிய மூன்று வேரியண்ட்களில் அறிமுகமாகி இருக்கிறது. 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை CNY 1,699 (தோராயமாக ரூ.19,500) என அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை CNY 1,999 (தோராயமாக ரூ.23,000) மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் CNY 2,299 (தோராயமாக ரூ.26,500) எனவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

அறிமுகம்

இந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் 8 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது நைட், ஓஷன் மற்றும் ஸ்டார் லைட் வண்ண விருப்பங்களில் வெளியாகி இருக்கிறது. மிட்ரேஞ்ச் விலையில் ப்ரீமியம் வசதிகளைக் கொண்டு இருப்பதால் இந்த போனுக்கு இந்தியாவே வெயிட்டிங்!

The post ப்ரீமியம் வசதிகளுடன் ரூ.25,000க்கு கீழ் வெளியாகிறதா ரியல்மி 10 ப்ரோ ப்ளஸ்? first appeared on .

]]>
108MP கேமரா, 67வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதிகளோடு வெளியானது ரியல்மி 10 ப்ரோ+ https://www.91mobiles.com/tamil/realme-launched-its-realme-10-pro-at-mid-range-price-with-108mp-camera-android-13/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=realme-launched-its-realme-10-pro-at-mid-range-price-with-108mp-camera-android-13 Sat, 19 Nov 2022 06:29:51 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3746 ரியல்மி நிறுவனத்தின் Realme 10 Pro+ மற்றும் Realme 10 Pro ஸ்மார்ட்போன்கள் சீனாவில் வெளியிடப்பட்டு இருக்கின்றன. இந்த ஸ்மார்ட்போன்கள் டூயல் பேண்ட் Wi-Fi ஆதரவுடன் வெளியாகி இருக்கிறது. புதிய ப்ரீமியம் 5ஜி போன் வாங்கத் திட்டமிட்டவர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும். இதில் Realme 10 Pro+ ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை விரிவாக பார்க்கலாம்   Realme 10 Pro+ டாப் ஆஃப் தி லைன் மாடலாக Realme 10 Pro+ வெளியாகி இருக்கிறது. […]

The post 108MP கேமரா, 67வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதிகளோடு வெளியானது ரியல்மி 10 ப்ரோ+ first appeared on .

]]>

ரியல்மி நிறுவனத்தின் Realme 10 Pro+ மற்றும் Realme 10 Pro ஸ்மார்ட்போன்கள் சீனாவில் வெளியிடப்பட்டு இருக்கின்றன. இந்த ஸ்மார்ட்போன்கள் டூயல் பேண்ட் Wi-Fi ஆதரவுடன் வெளியாகி இருக்கிறது. புதிய ப்ரீமியம் 5ஜி போன் வாங்கத் திட்டமிட்டவர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும். இதில் Realme 10 Pro+ ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை விரிவாக பார்க்கலாம்

 

Realme 10 Pro+

டாப் ஆஃப் தி லைன் மாடலாக Realme 10 Pro+ வெளியாகி இருக்கிறது. இதில் 6.7 அங்குல வளைந்த AMOLED டிஸ்ப்ளேவுடன் கூடிய 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளே ஆனது 2,160Hz பல்ஸ்-வித்த் மாடுலேஷன் (PWM) மற்றும் 800 நிட்ஸ் உச்ச பிரகாச நிலையைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 1080 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. ரியல்மி சமீபத்தில் Realme 10 4G மற்றும் Realme 10 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது.

 

விலை

Realme 10 Pro+ ஆனது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆகிய மூன்று வேரியண்ட்களில் அறிமுகமாகி இருக்கிறது. புது ஸ்மார்ட்போன் விலை விவரம் புது ஸ்மார்ட்போன் விலை விவரம் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை CNY 1,699 (தோராயமாக ரூ.19,500) என அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை CNY 1,999 (தோராயமாக ரூ.23,000) மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் CNY 2,299 (தோராயமாக ரூ.26,500) எனவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

 

நிறங்கள்

இந்த ஸ்மார்ட்போனானது நைட், ஓஷன் மற்றும் ஸ்டார் லைட் வண்ண விருப்பங்களில் வெளியாகி இருக்கிறது. இந்த ரியல்மி ஸ்மார்ட்போனானது நவம்பர் 24 முதல் சீனாவில் வாங்குவதற்கு கிடைக்கும். பக்கா ப்ரீமியம் 5ஜி போனை மிட் ரேன்ஜ் விலைப் பிரிவில் வாங்கலாம். ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு என தனி வாடிக்கையாளர்கள் பட்டாளமே இருக்கிறது.

 

டிஸ்ப்ளே

Realme 10 Pro+ சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனில் 6.7 அங்குல AMOLED டிஸ்ப்ளே இடம்பெற்றிருக்கிறது. 120Hz ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவைக் கொண்டிருக்கிறது இந்த டிஸ்ப்ளே.

 

சிப்செட்

பாதுகாப்பு அம்சத்துக்கு என இந்த புதிய ரியல்மி 10 ப்ரோ+ ஸ்மார்ட்போனில் அண்டர் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் உடன் மீடியாடெக் டைமன்சிட்டி 1080 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. டூயல் சிம் ஆதரவு கொண்ட 5ஜி ஸ்மார்ட்போன் இதுவாகும்.

 

கேமரா

Realme 10 Pro+ ஆனது 108-மெகாபிக்சல் முதன்மை கேமரா உட்பட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது. 8 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் சென்சார் இரண்டாம் நிலை கேமராவாகவும் மற்றும் 2 எம்பி மோனோக்ரோம் லென்ஸ் மூன்றாம் நிலை கேமராவாகவும் இருக்கிறது. ரியல்மி 10 ப்ரோ+ ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 16 எம்பி செல்ஃபி கேமரா இடம்பெற்றிருக்கிறது.

 

இயங்குதளம்

ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான Realme UI 4.0 மூலம் இயக்கப்படுகிறது. 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது. இதில் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களும் வழங்கப்பட்டுள்ளது.

The post 108MP கேமரா, 67வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதிகளோடு வெளியானது ரியல்மி 10 ப்ரோ+ first appeared on .

]]>
ப்ரீமியம் வசதிகளுடன் வெளியாகும் மிட்ரேஞ்ச் போன்! https://www.91mobiles.com/tamil/realme-10-pro-launching-date-confirmed-a-curved-oled-smartphone-at-a-midrange-price/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=realme-10-pro-launching-date-confirmed-a-curved-oled-smartphone-at-a-midrange-price Tue, 08 Nov 2022 08:16:01 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3464 Realme 10 Pro+ ஸ்மார்ட்போன் சமீபத்தில் சீன சான்றிதழ் வலைதளமான TENAA இல் பட்டியலிடப்பட்டிருந்தது. இதில் ஸ்மார்ட்போனின் முன் மற்றும் பின்புற தோற்றம் குறித்தும் தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் ரியல்மி நிறுவனமே அதிகாரப்பூர்வமாக ரியல்மி 10 ப்ரோ+ குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இதனுடன் வெளியிடப்பட்டுள்ள ஒரு புகைப்படம் ரியல்மி 10 ப்ரோ+ மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது. எப்போது அறிமுகம்? Realme ஸ்மார்ட்போனின் முன் வடிவமைப்பைக் காண்பிக்கும் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. இதில் […]

The post ப்ரீமியம் வசதிகளுடன் வெளியாகும் மிட்ரேஞ்ச் போன்! first appeared on .

]]>

Realme 10 Pro+ ஸ்மார்ட்போன் சமீபத்தில் சீன சான்றிதழ் வலைதளமான TENAA இல் பட்டியலிடப்பட்டிருந்தது. இதில் ஸ்மார்ட்போனின் முன் மற்றும் பின்புற தோற்றம் குறித்தும் தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் ரியல்மி நிறுவனமே அதிகாரப்பூர்வமாக ரியல்மி 10 ப்ரோ+ குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இதனுடன் வெளியிடப்பட்டுள்ள ஒரு புகைப்படம் ரியல்மி 10 ப்ரோ+ மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

எப்போது அறிமுகம்?

Realme ஸ்மார்ட்போனின் முன் வடிவமைப்பைக் காண்பிக்கும் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் Realme 10 Pro+ ஸ்மார்ட்போனின் வெளியீட்டுத் தேதியும் வெளியிடப்பபட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது நவம்பர் 17 2022 அன்று சீனாவில் அதிகாரிப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

வளைந்த டிஸ்ப்ளே

Realme 10 Pro+ ஆனது ரியல்மி 10 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு இணையான அம்சங்களைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தில் பிரதானமாக அதன் டிஸ்ப்ளே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Realme 10 Pro ஸ்மார்ட்போனில் பிளாட் டிஸ்ப்ளே இருக்கும் எனவும், Realme 10 Pro ப்ளஸ் போனில் ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களில் இருப்பது போன்ற வளைந்த டிஸ்ப்ளே இதில் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. மிட் ரேன்ஜ் விலையில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாக அதிக வாய்ப்பிருக்கிறது.

ரியல்மி நிறுவனம் Realme 10 Pro+ குறித்து வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், ஸ்மார்ட்போன் முன்புற தோற்றத்தின் புகைப்படத்தையும் பகிர்ந்திருக்கிறது. இந்த புகைப்படத்தின் மூலம், ஸ்மார்ட்போனில் வளைந்த ஓஎல்இடி டிஸ்ப்ளேக்கள் இருக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது. மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களில் வளைந்த ஓஎல்இடி டிஸ்ப்ளே என்பது அரிது. எனவே இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் விலைப்பிரிவில் உள்ள பிற ஸ்மார்ட்போன்களுடன் கடுமையான போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. வளைந்த டிஸ்ப்ளே என்பது ஸ்மார்ட்போனின் தோற்றத்தையும், அழகையும் மேம்படுத்துகிறது. ஆனால் இது போன்ற டிஸ்ப்ளேக்களை மிகவும் பாதுகாப்பாக கையாள வேண்டும்.

அம்சங்கள்

Realme 10 Pro+ ஸ்மார்ட்போனின் பின்புற வடிவமைப்பில் இரண்டு கேமரா வளையங்கள் இருக்கும் எனவும் அதில் டிரிபிள் ரியர் கேமராக்கள் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. சிம் கார்ட் ஸ்லாட், யுஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் ஸ்பீக்கர் கீல் உள்ளிட்டவைகள் டீஸர் படத்தில் காட்டப்படுகின்றன.

டிஸ்ப்ளே

இந்த ஸ்மார்ட்போனில் 120Hz ரெஃப்ரஷிங் ரேட் உடனான பெரிய 6.7 அங்குல வளைந்த ஓஎல்இடி டிஸ்ப்ளேக்கள் இடம்பெறும் என கூறப்படுகிறது. பஞ்ச் போல் கேமரா கட்அவுட் உடன் இந்த ஸ்மார்ட்போன் வரும் என்பதை ரியல்மி உறுதிப்படுத்தி இருக்கிறது.

கேமரா

அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் OIS ஆதரவுடன் 108எம்பி முதன்மை கேமரா இடம்பெறும் எனவும் 8MP அல்ட்ராவைட் ஷூட்டர் மற்றும் 2MP டெப்த் பொருத்தப்பட்டிருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. செல்ஃபி மற்றும் வீடியோ ஆதரவுக்கு என ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16 எம்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கும் எனவும் தெரிகிறது.

சார்ஜிங்

அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி உடன் 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இடம்பெறும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

சேமிப்புத்திறன்

இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 1080 ஆக்டோ கோர் சிப்செட் மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் வரை அறிமுகமாகும் எனத் தெரிகிறது.

The post ப்ரீமியம் வசதிகளுடன் வெளியாகும் மிட்ரேஞ்ச் போன்! first appeared on .

]]>