realme 10 pro https://www.91mobiles.com/tamil Fri, 10 Mar 2023 03:18:22 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 நோக்கியா X30 மொபைலுக்கு பதில் வாங்கக்கூடிய 5 போன்கள்! https://www.91mobiles.com/tamil/why-you-should-consider-these-5-cheap-and-best-alternative-smartphones-for-nokia-x30-5g/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=why-you-should-consider-these-5-cheap-and-best-alternative-smartphones-for-nokia-x30-5g Fri, 17 Feb 2023 10:01:02 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5896 ஒரு நோக்கியா 5ஜி போனை வாங்கினால் போதும் என்கிற எண்ணம் மட்டுமே இருந்தால்.. நோக்கியா எக்ஸ்30-ஐ வாங்கலாம். ஒருவேளை நீங்கள் விலை நிர்ணயத்தையும் கருத்தில் கொள்ள விரும்பினால்.. உங்களுக்கு ஒரு ஷாக் நியூஸ் – தற்போது இந்தியாவிலேயே மிகவும் விலையுயர்ந்த ஸ்னாப்டிராகன் 695 எஸ்ஓசி ஸ்மார்ட்போனென்றால் அது நோக்கியா எக்ஸ்30 தான். இதன் விலை ரூ.48,999 ஆகும். இந்த ஒரு விஷயத்திற்காகவே நோக்கியா எக்ஸ்30 மாடலின் இந்திய விற்பனை மந்தமாகலாம். ஏனென்றால், இதை விட மலிவான விலைக்கு […]

The post நோக்கியா X30 மொபைலுக்கு பதில் வாங்கக்கூடிய 5 போன்கள்! first appeared on .

]]>

Highlights

  • நோக்கியா எக்ஸ்30 5ஜி  உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டு சுமார் 5 மாதங்களுக்கு பிறகே இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
  • இதன் இந்திய விற்பனை வருகிற பிப்.20 முதல் தொடங்கவுள்ளது.

ஒரு நோக்கியா 5ஜி போனை வாங்கினால் போதும் என்கிற எண்ணம் மட்டுமே இருந்தால்.. நோக்கியா எக்ஸ்30-ஐ வாங்கலாம். ஒருவேளை நீங்கள் விலை நிர்ணயத்தையும் கருத்தில் கொள்ள விரும்பினால்.. உங்களுக்கு ஒரு ஷாக் நியூஸ் – தற்போது இந்தியாவிலேயே மிகவும் விலையுயர்ந்த ஸ்னாப்டிராகன் 695 எஸ்ஓசி ஸ்மார்ட்போனென்றால் அது நோக்கியா எக்ஸ்30 தான். இதன் விலை ரூ.48,999 ஆகும். இந்த ஒரு விஷயத்திற்காகவே நோக்கியா எக்ஸ்30 மாடலின் இந்திய விற்பனை மந்தமாகலாம். ஏனென்றால், இதை விட மலிவான விலைக்கு மற்றும் நோக்கியா எக்ஸ்30 5ஜி-ஐ விட நல்ல-நல்ல ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் கிடைகின்றன. அதில் நாங்கள் பரிந்துரைக்கும் டாப் 5 போன்களின் பட்டியல் இதோ:

  1. Realme 10 Pro (ரியல்மி 10 ப்ரோ)

ரியல்மி 10 ப்ரோவின் விலை – நோக்கியா எக்ஸ்30-ன் விலையில் மூன்றில் ஒரு பங்காகும். ஆனால் அதே குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட்டை கொண்டுள்ளது. இது ரூ.18,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 6.72 அங்குல ஃபுல் எச்டி+ எல்சிடி டிஸ்ப்ளே, 108எம்பி மெயின் கேமரா, 5000mAh பேட்டரி, 33W பாஸ்ட் சார்ஜிங் போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.

  1. POCO X5 Pro (போக்கோ எக்ஸ்5 ப்ரோ)

போக்கோ எக்ஸ்5 ப்ரோ, நோக்கியா எக்ஸ்30-க்கான மற்றொரு தகுதியான ஆல்டர்நேட்டிவ் ஸ்மார்ட்போனாகும். இது ரூ.22,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை 6.67 அங்குல ஃபுல் எச்டி+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட், 108எம்பி கேமரா, 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி போன்றவைகளைக் கூறலாம்.

  1. Redmi Note 12 Pro (ரெட்மி நோட் 12 ப்ரோ)

ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்மார்ட்போனும் போக்கோ எக்ஸ்5 ப்ரோவும் ஒரே மாதிரியான அம்சங்களை பகிர்ந்து கொள்வதால், இதுவும் நோக்கியா எக்ஸ்30 க்கான ஒரு நல்ல மாற்றாகும். இதன் விலை – ரூ.24,999. இது ஓஐஎஸ் (OIS) ஆதரவுடனான 50எம்பி மெயின் கேமரா, மீடியாடெக் டைமன்சிட்டி 1080 சிப்செட் போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது.

  1. Google Pixel 6a (கூகுள் பிக்சல் 6ஏ)

சரியான விலை மற்றும் நம்பமுடியாத கேமரா திறன்களுக்காகவே கூகுள் பிக்சல் 6ஏ மாடலை கருத்தில் கொள்ளலாம். இது ரூ.30,999 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது நோக்கியா எக்ஸ்30-ஐ விட ரூ,18,000 குறைவான விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இது 6.1அங்குல ஃபுல் எச்டி+ OLED டிஸ்ப்ளே, 12.2எம்பி மெயின் கேமரா + 12எம்பி அல்ட்ரா-வைட் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப், 8எம்பி செல்ஃபி கேமரா, கூகுளின் சொந்த டென்சர் எஸ்ஓசி, 4410mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை வழங்குகிறது.

  1. iQOO 9 (ஐக்யூ 9)

நோக்கியா எக்ஸ்30 மாடலை போலல்லாமல், ஐக்யூ 9 ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 888+ சிப்செட் உடன் வருகிறது. அதாவது ஒப்பீட்டளவில் இதுவொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போனாகும். இதன் விலை – ரூ.42,999. இதன் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை 6.56 அங்குல ஃபுல் எச்டி+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட், ஓஐஎஸ்-எனேபிள்டு 48எம்பி மெயின் கேமரா, 4350mAh பேட்டரி, 120W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் போன்றவைகளை கூறலாம்.

The post நோக்கியா X30 மொபைலுக்கு பதில் வாங்கக்கூடிய 5 போன்கள்! first appeared on .

]]>
வெளியானது கோக கோலா போனின் வெளியீட்டு தேதி! https://www.91mobiles.com/tamil/realme-10-pro-coca-cola-phone-will-be-launched-in-india-on-february-10/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=realme-10-pro-coca-cola-phone-will-be-launched-in-india-on-february-10 Fri, 03 Feb 2023 05:41:47 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5528 கோகோ கோலா ஸ்பெஷல் எடிஷன் போனின் பின்புறம் ஒரு பக்கம் கருப்பு நிறம் மற்றும் ரியல்மி லோகோ உள்ளது, மற்றொரு பக்கத்தில் சிவப்பு நிறத்தில் Coca-Cola பிராண்டிங் உள்ளது. இது ஸ்பெஷல் எடிஷனாக இருந்தாலும் ரியல்மி 10 ப்ரோவின் அம்சங்களில் எந்தவித மாற்றங்களும் இல்லாமல் அப்படியே கொண்டு இருக்கிறது. வெளித்தோற்றத்தில் மட்டுமே மாற்றங்கள் உள்ளன. தற்போது இதன் அறிமுகத் தேதியும் வெளியாகி இருக்கிறது. இந்த மொபைலின் அம்சங்களை இப்போது விரிவாகப் பார்க்கலாம். டிஸ்ப்ளே இந்த கோககோலா ஸ்பெஷல் […]

The post வெளியானது கோக கோலா போனின் வெளியீட்டு தேதி! first appeared on .

]]>

Highlights

  • ரியல்மி நிறுவனம் ரியல்மி 10 ப்ரோ கோகோ கோலா ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.
  • இந்த புதிய போன் வரும் பிப்ரவரி 10-ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோகோ கோலா ஸ்பெஷல் எடிஷன் போனின் பின்புறம் ஒரு பக்கம் கருப்பு நிறம் மற்றும் ரியல்மி லோகோ உள்ளது, மற்றொரு பக்கத்தில் சிவப்பு நிறத்தில் Coca-Cola பிராண்டிங் உள்ளது. இது ஸ்பெஷல் எடிஷனாக இருந்தாலும் ரியல்மி 10 ப்ரோவின் அம்சங்களில் எந்தவித மாற்றங்களும் இல்லாமல் அப்படியே கொண்டு இருக்கிறது. வெளித்தோற்றத்தில் மட்டுமே மாற்றங்கள் உள்ளன. தற்போது இதன் அறிமுகத் தேதியும் வெளியாகி இருக்கிறது. இந்த மொபைலின் அம்சங்களை இப்போது விரிவாகப் பார்க்கலாம்.

டிஸ்ப்ளே

இந்த கோககோலா ஸ்பெஷல் எடிஷன் போன் ஆனது ரியல் மி 10 ப்ரோவின் அம்சங்களையே கொண்டுள்ளது. இந்த போன் 6.72 அங்குல ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. கூடவே, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 680 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். பெரிய டிஸ்பிளே என்பதால் இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 

சிப்செட்

ரியல்மி 10 ப்ரோ ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் Realme UI 4.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவரும்.

மெமரி

இந்த ரியல்மி 10 ப்ரோ ஸ்மார்ட்போனில் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த போன் அறிமுகமாகும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. இதன் மூலம் போனின் சேமிப்புத்திறனை அதிகரித்துக் கொள்ள முடியும்.

 

கேமரா

108எம்பி Samsung HM6 பிரைமரி கேமரா + 2எம்பி போர்ட்ரெயிட் கேமரா என்கிற டூயல் ரியர் கேமராவைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி + ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே முன்பக்கத்தில் 16எம்பி செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி 10 ப்ரோ ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். கூடவே 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.

 

கனெக்டிவிட்டி

5ஜி, 4ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது ரியல்மி ஸ்மார்ட்போன். மேலும் இந்த போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. தற்போது இந்தியாவில் 5ஜி போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டு பல 5ஜி ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

 

The post வெளியானது கோக கோலா போனின் வெளியீட்டு தேதி! first appeared on .

]]>
ரீ-ப்ராண்டிங் இல்ல.. ரியல்மி 10 ப்ரோ 5ஜி ஸ்பெஷல் எடிஷனாக இருக்கலாம் எனத் தகவல்! https://www.91mobiles.com/tamil/coca-cola-phone-is-not-rebranded-version-smartphone-it-could-be-special-edition-of-realme-10-pro-5g/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=coca-cola-phone-is-not-rebranded-version-smartphone-it-could-be-special-edition-of-realme-10-pro-5g Tue, 31 Jan 2023 07:17:36 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5385 கோகோ கோலா Vs ரியல்மீ கோகோ கோலா ஸ்மார்ட்போன் இப்படித்தான் இருக்கும் என்பதை வெளிப்படுத்தும் புகைப்படமானது, அது ரியல்மி 10 (Realme 10) ஸ்மார்ட்போனின் ரீபிராண்டட் எடிஷன் (Rebranded Version) ஆக இருக்கும் என்கிற யூகத்தை கிளப்பி இருந்தது. அதன் விளைவாக, கோகோ கோலா நிறுவனமும், ரியல்மி நிறுவனமும் கூட்டு சேர்ந்துள்ளன என்கிற பேச்சுகளும் அடிபட்டன. இதற்கிடையில் ரியல்மி நிறுவனம் ஒரு புதிய டிவிஸ்ட்டை முன்வைத்துள்ளது.   ஸ்பெஷல் எடிஷன் கோகோ கோலா ஸ்மார்ட்போன், ரியல்மி நிறுவனத்தின் […]

The post ரீ-ப்ராண்டிங் இல்ல.. ரியல்மி 10 ப்ரோ 5ஜி ஸ்பெஷல் எடிஷனாக இருக்கலாம் எனத் தகவல்! first appeared on .

]]>

Highlights

  • கடந்த சில தினங்களுக்கு முன்னர், பிரபல குளிர்பான நிறுவனமான கோகோ கோலா (Coca Cola) அதன் முதல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாகவும், அது கோலா போன் (Cola Phone) என்கிற பிராண்டின் கீழ் அறிமுகமாகும் என்றும் தகவல் வெளியானது.
  • ஆரம்பத்தில் இதுவொரு போலியான தகவலாக இருக்குமென்று நம்பப்பட்டது. இருப்பினும் தற்போது – கோகோ கோலா ஸ்மார்ட்போன் இந்திய மொபைல் சந்தையின் ஹாட்-டாபிக் ஆக மாறி உள்ளது!

கோகோ கோலா Vs ரியல்மீ

கோகோ கோலா ஸ்மார்ட்போன் இப்படித்தான் இருக்கும் என்பதை வெளிப்படுத்தும் புகைப்படமானது, அது ரியல்மி 10 (Realme 10) ஸ்மார்ட்போனின் ரீபிராண்டட் எடிஷன் (Rebranded Version) ஆக இருக்கும் என்கிற யூகத்தை கிளப்பி இருந்தது. அதன் விளைவாக, கோகோ கோலா நிறுவனமும், ரியல்மி நிறுவனமும் கூட்டு சேர்ந்துள்ளன என்கிற பேச்சுகளும் அடிபட்டன. இதற்கிடையில் ரியல்மி நிறுவனம் ஒரு புதிய டிவிஸ்ட்டை முன்வைத்துள்ளது.

 

ஸ்பெஷல் எடிஷன்

கோகோ கோலா ஸ்மார்ட்போன், ரியல்மி நிறுவனத்தின் ஒரு ரீபிராண்டட் எடிஷனாக இல்லமால், ஒரு ஸ்பெஷல் எடிஷனாக (Special Edition) இருக்கும் என்கிற தகவல் கிடைத்துள்ளது. அதாவது குளிர்பான நிறுவனமான கோகோ கோலா ஸ்மார்ட்போன் தொழிலுக்குள் இறங்கவில்லை; மாறாக ரியல்மி நிறுவனம் தான் கோகோ-கோலாவை விளம்பரப்படுத்தும் நோக்கத்தின் கீழ் அல்லது வேறு எதோ ஒரு காரணத்தின் கீழ் ஒரு ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது.

இது இல்ல.. அது!

இன்னொரு டிவிஸ்ட்டும் உள்ளது! கோகோ கோலா ஸ்மார்ட்போன், முதலில் ரியல்மி 10 ஸ்மார்ட்போனின் ரீபிராண்டட் எடிஷனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது – ரியல்மி 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் ஸ்பெஷல் எடிஷனாக இருக்கும் என்பது போல் தெரிகிறது. ஏனென்றால், ரியல்மி நிறுவனத்தின் வைஸ் ப்ரெசிடென்ட் ஆன மாதவ் ஷெத் (Madhav Sheth), ட்விட்டர் வழியாக ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் ஹைப்பர்ஸ்பேஸ் கோல்ட் கலரில் வாங்க கிடைக்கும் ரியல்மி 10 ப்ரோ ஸ்மார்ட்போன் உள்ளது மற்றும் அதன் பேக் பேனலில் கோகோ-கோலா டின் பாட்டிலின் பிரதிபலிப்பை தெளிவாக பார்க்க முடிகிறது.

ஆக, இந்திய மொபைல் சந்தையில் பரபரப்பை கிளப்பிய கோகோ கோலா ஸ்மார்ட்போன் உண்மையில் ரியல்மி 10 ப்ரோவின் ஸ்பெஷல் எடிஷனாகத்தான் இருக்கும் என்பது “கிட்டத்தட்ட” உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Coco-Cola போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?

கண்டிப்பாக கோகோ கோலாவால் ஈர்க்கப்பட்ட ஸ்பெஷல் வால்பேப்பர்கள், தீம்கள் அல்லது ரிங்டோன்களை எதிர்பார்க்கலாம். அதுமட்டுமின்றி, பேக் பேனலில் கோகோ கோலா பிராண்டிங்கை வெளிப்படுத்தும் டிசைன் நிச்சயம் இடம்பெறும்! ஆன்லைனில் லீக் ஆன புகைப்படத்தை வைத்து பார்க்கும் போது, கோகோ கோலா ஸ்மார்ட்போனின் பேக் பேனலில் பளபளப்பான டிசைனும் அதில் கோகோ கோலா லோகோவும் உள்ளது. அது தவிர்த்து மீதமுள்ள எல்லாமே ரியல்மி 10 ப்ரோ ஸ்மார்ட்போனும் ஒற்றுப்போகிறது. ஆக மேலோட்டமான மாற்றங்களை தவிர்த்து, உள்ளிருக்கும் அம்சங்கள் எல்லாமே ரியல்மி 10 ப்ரோவுடன் ஒற்றுப்போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

 

Realme 10 Pro-வின் முக்கிய அம்சங்கள்:

இது ரியல்மி 10 ப்ரோ 5ஜி மொபைலின் ஸ்பெஷல் எடிஷனாக இருக்கும் பட்சத்தில், கோகோ கோலா ஸ்மார்ட்போனில் ரியல்மி 10 ப்ரோ 5ஜி மாடலில் உள்ள சில முக்கிய அம்சங்ககள் இடம்பெறலாம். அதாவது 6.7 அங்குல ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 108எம்பி ட்ரிபிள்-ரியர் கேமரா செட்டப், ஸ்னாப்டிராகன் 695 எஸ்ஓசி மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரி போன்ற அம்சங்கள் இந்த மொபைலில் இடம்பெற்று இருக்கும்.

 

 

The post ரீ-ப்ராண்டிங் இல்ல.. ரியல்மி 10 ப்ரோ 5ஜி ஸ்பெஷல் எடிஷனாக இருக்கலாம் எனத் தகவல்! first appeared on .

]]>
ப்ரீமியம் வசதிகளுடன் ரூ.25,000க்கு கீழ் வெளியாகிறதா ரியல்மி 10 ப்ரோ ப்ளஸ்? https://www.91mobiles.com/tamil/realme-10-pro-with-curved-amoled-display-to-launch-in-india-under-rs-25-000-on-december-8/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=realme-10-pro-with-curved-amoled-display-to-launch-in-india-under-rs-25-000-on-december-8 Mon, 28 Nov 2022 06:50:07 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3934 ரியல்மி நிறுவனம் அதன் ரியல்மி 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்த மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தியது. தற்போது இதன் சீரிஸ் இல் இடம்பெற்ற ரியல்மி 10 ப்ரோ+ மற்றும் ரியல்மி 10 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் டிசம்பர் 8 2022 அன்று வெளியிட இருக்கிறது. Realme India VP மாதவ் ஷெத் Realme 10 Pro+ ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி மற்றும் விலை குறித்து டீஸ் செய்யும் வகையிலான வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதன்படி, Realme 10 […]

The post ப்ரீமியம் வசதிகளுடன் ரூ.25,000க்கு கீழ் வெளியாகிறதா ரியல்மி 10 ப்ரோ ப்ளஸ்? first appeared on .

]]>

ரியல்மி நிறுவனம் அதன் ரியல்மி 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்த மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தியது. தற்போது இதன் சீரிஸ் இல் இடம்பெற்ற ரியல்மி 10 ப்ரோ+ மற்றும் ரியல்மி 10 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் டிசம்பர் 8 2022 அன்று வெளியிட இருக்கிறது.

Realme India VP மாதவ் ஷெத் Realme 10 Pro+ ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி மற்றும் விலை குறித்து டீஸ் செய்யும் வகையிலான வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதன்படி, Realme 10 Pro+ இந்தியாவில் ரூ.25,000க்கு கீழ் வெளியிடப்படலாம். இந்த ஸ்மார்ட்போனுக்கு வங்கிச் சலுகைகள் இருக்குமா அல்லது அறிமுக சலுகை கிடைக்குமா என்பது இதுவரை தெரியவில்லை. ஆனால், மலிவு விலையில் வளைந்த டிஸ்ப்ளேவுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாக இருக்கிறது என்பது குறிபிடத்தக்கது.

வளைந்த டிஸ்ப்ளே

ப்ரீமியம் விலைப் பிரிவு ஸ்மார்ட்போன்களில் மட்டுமே வளைந்த டிஸ்ப்ளே அம்சம் இடம்பெற்று வந்தது. இந்த நிலையில் மிட்ரேன்ஜ் விலைப் பிரிவில் வளைந்த டிஸ்ப்ளே ஸ்மார்ட்போனாக அறிமுகமாக இருக்கிறது இந்த ரியல்மீ 10 சீரிஸ் போன்கள். இதன் காரணமாகவே இந்த ஸ்மார்ட்போன் மீதான எதிர்பார்ப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதுதவிர இரண்டு கேமராக்களுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாக இருக்கிறது.

சிறப்பம்சங்கள்

Realme 10 Pro+ ஸ்மார்ட்போனானது முழு எச்டி+ தெளிவுத் திறன் உடன் கூடிய 6.7 அங்குல வளைந்த அமோலெட் பேனல் பொருத்தப்பட்டிருக்கும். இதன் டிஸ்ப்ளே ஆனது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவைக் கொண்டிருக்கும். கூடவே 800 நிட்ஸ் உச்ச பிரகாச நிலையைக் கொண்டுள்ளது. டிஸ்ப்ளேவின் மேல் மையத்தில் பஞ்ச் கேமரா கட்அவுட் இடம்பெறும். இந்த ஸ்மார்ட்போன் ஆனது மீடியா டெக்கின் சமீபத்திய டைமன்சிட்டி 1080 சிப்செட் மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது. இது மிட் ரேன்ஜ் சிப்செட் ஆகும். ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்மார்ட்போன்களும் இதே சிப்செட் மூலமாக தான் இயக்கப்படுகிறது. இந்த சிப்செட் ஆனது டைமன்சிட்டி 920 எஸ்ஓசி இன் புதுப்பிக்கப்பட்ட பதிப்பாகும். 12 ஜிபி ரேம் ஆதரவை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

கேமரா

Realme 10 Pro+ ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்களைப் பொறுத்தவரையில், இதில் 108MP Samsung ISOCELL HM6 முதன்மை சென்சார் பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த சென்சார் ஆனது OIS (ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன்) ஆதரவைக் கொண்டிருக்கும். அதேபோல் 8MP அல்ட்ராவைடு ஷூட்டர் மற்றும் 2MP மேக்ரோ சென்சார் என டிரிபிள் ரியர் கேமரா ஆதரவு இடம்பெறும் என கூறப்படுகிறது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புக்கு என ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16 எம்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கும் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

கனெக்டிவிட்டி

பாதுகாப்பு அம்சத்துக்கு என இன் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர், டூயல் ஸ்பீக்கர்கல், ஹை ரெஸ் ஆடியோ, யூஎஸ்பி டைப் சி போர்ட் ஆகியவை இணைப்பு ஆதரவுகளாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி உடன் 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கிறது. புதிய ரியல்மி ஸ்மார்ட்போனானது Android 13 OS அடிப்படையிலான ரியல்மி யுஐ 4.0 மூலம் இயக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

விலை

Realme 10 Pro+ ஆனது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆகிய மூன்று வேரியண்ட்களில் அறிமுகமாகி இருக்கிறது. 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை CNY 1,699 (தோராயமாக ரூ.19,500) என அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை CNY 1,999 (தோராயமாக ரூ.23,000) மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் CNY 2,299 (தோராயமாக ரூ.26,500) எனவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

அறிமுகம்

இந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் 8 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது நைட், ஓஷன் மற்றும் ஸ்டார் லைட் வண்ண விருப்பங்களில் வெளியாகி இருக்கிறது. மிட்ரேஞ்ச் விலையில் ப்ரீமியம் வசதிகளைக் கொண்டு இருப்பதால் இந்த போனுக்கு இந்தியாவே வெயிட்டிங்!

The post ப்ரீமியம் வசதிகளுடன் ரூ.25,000க்கு கீழ் வெளியாகிறதா ரியல்மி 10 ப்ரோ ப்ளஸ்? first appeared on .

]]>