realme 10 https://www.91mobiles.com/tamil Thu, 09 Mar 2023 13:41:46 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 50MP கேமரா, 33W பாஸ்ட் சார்ஜிங், 5000 mAh பேட்டரி.. ரூ.12,999-க்கு இவ்வளவு வசதிகளுடன் வரும் Realme 10! https://www.91mobiles.com/tamil/50mp-camera-5000mah-battery-powered-realme-10-smartphone-launched-at-rs-13-999/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=50mp-camera-5000mah-battery-powered-realme-10-smartphone-launched-at-rs-13-999 Tue, 10 Jan 2023 05:26:46 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4829 50 MP டூயல் ரியர் கேமரா, 16 MP செல்ஃபி கேமரா, மீடியாடெக் ஹீலியோ ஜீ99 எஸ்ஓசி சிப்செட் மற்றும் 5000 mAh பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது Realme 10. இந்த வசதிகள் அனைத்தும் ரூ.12,999க்கே கிடைக்கிறது என்பது இந்த மொபைலின் சிறப்பு ஆகும். Realme 10 Realme 10 ஸ்மார்ட்போன் இந்தியாவில் நேற்று (திங்கட்கிழமை) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஷென்சென் நிறுவனத்தின் சமீபத்திய பட்ஜெட் 4ஜி ஸ்மார்ட்போனாக ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 எஸ்ஓசி […]

The post 50MP கேமரா, 33W பாஸ்ட் சார்ஜிங், 5000 mAh பேட்டரி.. ரூ.12,999-க்கு இவ்வளவு வசதிகளுடன் வரும் Realme 10! first appeared on .

]]>

50 MP டூயல் ரியர் கேமரா, 16 MP செல்ஃபி கேமரா, மீடியாடெக் ஹீலியோ ஜீ99 எஸ்ஓசி சிப்செட் மற்றும் 5000 mAh பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது Realme 10. இந்த வசதிகள் அனைத்தும் ரூ.12,999க்கே கிடைக்கிறது என்பது இந்த மொபைலின் சிறப்பு ஆகும்.

Realme 10

Realme 10 ஸ்மார்ட்போன் இந்தியாவில் நேற்று (திங்கட்கிழமை) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஷென்சென் நிறுவனத்தின் சமீபத்திய பட்ஜெட் 4ஜி ஸ்மார்ட்போனாக ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 எஸ்ஓசி உடன் இது அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. 8 ஜிபி ரேம் ஆதரவோடு இது வெளியாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் AnTuTu செயல்திறனில் 390,000 புள்ளி மதிப்பெண்களை பெற்றிருப்பதாக ரியல்மி தெரிவித்துள்ளது.

விலை & சலுகை

இந்த ரியல்மி 10 ஸ்மார்ட்போன் ரியல்மி இந்தியா தளம் மற்றும் பிளிப்கார்ட் மூலமாக ஜனவரி 15 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் விற்பனைக்கு வரும். இதன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்ன்ஸ் ஸ்டோரேஜ் விலை ரூ.13,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனுக்கு அறிமுக சலுகையாக ரூ.1000 வழங்கப்படுகிறது. அதேபோல் இதன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.16,999 எனவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

நிறங்கள்

இந்த ஸ்மார்ட்போனானது க்ளாஷ் ஒயிட் மற்றும் ரஷ் ப்ளாக் வண்ண விருப்பத்தில் வெளியாகி உள்ளது.

டிஸ்ப்ளே

இந்த ஸ்மார்ட்போனில் 6.4 அங்குல முழு எச்டி+ சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே ஆனது 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட், 360 ஹெர்ட்ஸ் டச் மாதிரி வீதம் மற்றும் 1000 நிட்ஸ் உச்ச பிரகாச நிலை ஆதரவைக் கொண்டுள்ளது. கூடவே இந்த டிஸ்ப்ளே ஆனது கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பைக் கொண்டிருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனானது 4 ஜிபி ரேம் – 64 ஜிபி இண்டர்ல் ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் – 128 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்டுகளில் வெளியாகி இருக்கிறது. இதன் சேமிப்புத்திறனை அதிகரித்துக் கொள்ள இதில் மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1டிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம்.

கேமரா

Realme 10 ஸ்மார்ட்போனானது 50 எம்பி பிரதான கேமரா மற்றும் 2 எம்பி மோனோக்ரோம் சென்சார் என டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தின் மேல் இடது மூலையில் 16 எம்பி செல்ஃபி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. இது ப்ரோலைட் இமேஜிங் தொழில்நுட்பம் மற்றும் நைட் மோட் ஃப்ளாஷ் நைட் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

ஃபாஸ்ட் சார்ஜிங்

Realme 10 ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டிருக்கிறது. இதில் 33W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 28 நிமிடத்தில் 50% வரை சார்ஜ் செய்யலாம். இந்த ஸ்மார்ட்போனின் எடை 178 கிராம் ஆகும். இந்த ஸ்மார்ட்போனில் அல்ட்ரா பூம் ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளது. முன்னதாகவே குறிப்பிட்டது போல் இது பக்கா பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆகும். இந்த ஸ்மார்ட்போனானது ரியல்மி 10 ஸ்மார்ட்போன் ரியல்மி இந்தியா தளம் மற்றும் பிளிப்கார்ட் மூலமாக ஜனவரி 15 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் விற்பனைக்கு வருகிறது.

The post 50MP கேமரா, 33W பாஸ்ட் சார்ஜிங், 5000 mAh பேட்டரி.. ரூ.12,999-க்கு இவ்வளவு வசதிகளுடன் வரும் Realme 10! first appeared on .

]]>
50MP கேமரா, 5000mAh பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங், 5ஜி போன் ரூ13,000 மட்டுமே! https://www.91mobiles.com/tamil/realme-10s-5g-smartphone-launched-with-a-budget-of-rs-13-000/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=realme-10s-5g-smartphone-launched-with-a-budget-of-rs-13-000 Tue, 20 Dec 2022 10:48:04 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4423 ரியல்மி நிறுவனம் புதிய ரியல்மி 10எஸ் 5ஜி என்ற் ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் அசத்தலான கேமரா மற்றும் தரமான சிப்செட் வசதியுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது. தற்போது இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த போன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளதால் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த புதிய ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று […]

The post 50MP கேமரா, 5000mAh பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங், 5ஜி போன் ரூ13,000 மட்டுமே! first appeared on .

]]>

ரியல்மி நிறுவனம் புதிய ரியல்மி 10எஸ் 5ஜி என்ற் ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் அசத்தலான கேமரா மற்றும் தரமான சிப்செட் வசதியுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது. தற்போது இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த போன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளதால் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த புதிய ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

டிஸ்ப்ளே

ரியல்மி 10எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 6.6 அங்குல Full HD plus டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்த மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 1080×2408 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

சிப்செட்

Realme 10s 5G ஸ்மார்ட்போனில் தரமான மீடியாடெக் Dimensity 810 சிப்செட் உள்ளது. இந்த சிப்செட் செயல்திறன் மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். அதாவது கேமிங் ஆப்ஸ்களை இந்த ஸ்மார்ட்போனில் தடையின்றி பயன்படுத்த முடியும்.

மெமரி

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ரியல்மி 10எஸ் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. இதைக் கொண்டு இதன் சேமிப்புத்திறனை அதிகரித்துக் கொள்ள முடியும். இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டுள்ளது.

கேமரா

ரியல்மி 10எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 0.3எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த கேமராக்கள் உதவியுடன் அருமையான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே முன்பக்கத்தில் 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

பேட்டரி

புதிய ரியல்மி 10எஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீங்கள் 5ஜி சேவை பயன்படுத்த இந்த ஸ்மார்ட்போன் அருமையாக உதவும். அதாவது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும். கூடவே, இந்த போன் 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை விரைவில் சார்ஜ் செய்துவிட முடியும்

கனெக்டிவிட்டி

இதுதவிர கைரேகை ஸ்கேனர், யுஎஸ்பி டைப்-சி போர்ட்,3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி 10எஸ் 5ஜி ஸ்மார்ட்போன். அதேபோல் கருப்பு மற்றும் நீல நிறங்களில் இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் எடை 191 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது.

விலை

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்ட ரியல்மி 10எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை 1099 yuan (இந்திய மதிப்பில் சுமார் ரூ.13,000) ஆக உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் அசத்தலான அம்சங்களுடன் 5ஜி மொபைலாக வெளிவந்துள்ளதால் அதிக வரவேற்பை பெற வாய்ப்புள்ளது.

The post 50MP கேமரா, 5000mAh பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங், 5ஜி போன் ரூ13,000 மட்டுமே! first appeared on .

]]>
வெளியானது ரியல்மி 10 – என்ன பெஸ்ட்? என்ன வொஸ்ட்? https://www.91mobiles.com/tamil/realme-10-4g-budget-phone-launched-globally-with-50mp-camera-and-mediatek-helio-g99-soc-price-specs/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=realme-10-4g-budget-phone-launched-globally-with-50mp-camera-and-mediatek-helio-g99-soc-price-specs Thu, 10 Nov 2022 05:16:27 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3515 Realme நிறுவனம் புதிதாக Realme 10 என்ற ஸ்மார்ட்போனை நேற்று உலகளவில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த புதிய ரியல்மி 10 ஸ்மார்ட்போன் ஆனது Realme 9 இன் வாரிசாக வருகிறது. இந்த ரியல்மி 10 சீரிஸ் வரிசையில் நிறுவனம் realme 10 pro மாடல்களை அறிமுகம் செய்யும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த முறை ப்ரோ மாடல்களை இந்த நிகழ்வில் ரியல்மி நிறுவனம் அறிமுகம் செய்யவில்லை. ஆகவே, Realme 10 Pro தொடர் வரிசையில் உள்ள […]

The post வெளியானது ரியல்மி 10 – என்ன பெஸ்ட்? என்ன வொஸ்ட்? first appeared on .

]]>

Realme நிறுவனம் புதிதாக Realme 10 என்ற ஸ்மார்ட்போனை நேற்று உலகளவில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த புதிய ரியல்மி 10 ஸ்மார்ட்போன் ஆனது Realme 9 இன் வாரிசாக வருகிறது. இந்த ரியல்மி 10 சீரிஸ் வரிசையில் நிறுவனம் realme 10 pro மாடல்களை அறிமுகம் செய்யும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த முறை ப்ரோ மாடல்களை இந்த நிகழ்வில் ரியல்மி நிறுவனம் அறிமுகம் செய்யவில்லை.

ஆகவே, Realme 10 Pro தொடர் வரிசையில் உள்ள ப்ரோ மாடல்களை சீனாவில் வருகின்றன நவம்பர் 17 ஆம் தேதி நடக்கும் நிகழ்வில் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது புதிதாக அறிமுகமாகி இருக்கும் Realme 10 விபரங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

இது சமீபத்திய MediaTek Helio G99 SoC உடன் வருகிறது. இதன் தோற்றம் வாடிக்கையாளர்களைக் கவரும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு சில வாடிக்கையாளர்களின் தேவையை இந்த Realme 10 நிறைவேற்றாமல் போகலாம்.

தோற்றம்

இது செல்ஃபி ஸ்னாப்பருக்காக கார்னர் பஞ்ச்-ஹோல் கட்அவுட் உடன் வருகிறது. பின்பக்கத்தில், இது டூயல் கேமரா உடன் மிரட்டலான தோற்றத்தை வழங்குகிறது. இதன் கலர் கிரேடியன்ட் தனித்துவமான லுக்கை உருவாக்கியுள்ளது. பட்ஜெட் விலையில், 50MP கேமராவுடன் மக்களை மயக்குகிறது.

டிஸ்ப்ளே

Realme 10 ஆனது 2400 x 1080 பிக்சல்கள் அடர்த்தி கொண்ட 6.4 அங்குல FHD+ AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது 90Hz ரெப்ரெஷ் ரேட் உடன் மேல் இடது மூலையில் ஒரு பஞ்ச் ஹோல் நாட்ச்சை கொண்டுள்ளது. இது 1000nits வரை பீக் பிரைட்னெஸ் மற்றும் 360Hz டச் சாம்பிளிங் அம்சத்தைக் கொண்டுள்ளது. இந்த போன் MediaTek Helio G99 SoC மூலம் இயக்கப்படுகிறது.

4ஜி போன்

இந்த ஸ்மார்ட்போனுடன் வரும் இந்த MediaTek Helio G99 சிப்செட் வெறும் 4ஜி நெட்வொர்க்கை மட்டுமே ஆதரிக்கிறது. உலகமே 5ஜி நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் வேளையில், ரியல்மி இப்படி ஒரு டிவிஸ்டை ஏன் வைத்தது என்று புரியவில்லை. இது ஒரு 5ஜி டிவைஸ் என்று யூகித்து நினைத்து வாங்கிவிடாதீர்கள். இது முழுக்க முழுக்க 4ஜி நெட்வொர்க்கில் இயங்கும் ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போன் மாடலாகும். இந்த ஒரு குறையைத் தவிர இதில் வேறெந்த குறைபாடும் இல்லை என்பதே உண்மை.

மெமரி

இந்த ரியல்மி 10 ஸ்மார்ட்போன் 8GB வரை LPDDR4x ரேம் மற்றும் 256GB UFS 2.2 ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இதில் 8ஜிபி எக்ஸ்பெண்டபிள் ரேம் வசதியும் உள்ளது. இதன் மூலம் மொத்த ரேமை 16ஜிபி வரை அதிகப்படுத்திக் கொள்ளலாம். இது ஆண்ட்ராய்டு 12-அடிப்படையிலான Realme UI 3.0 உடன் இயங்குகிறது. இது 4G, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ் மற்றும் USB டைப்-சி போர்ட் உடன் வருகிறது.

கேமரா & பேட்டரி

இந்த Realme 10 4G ஆனது 33W ஃபாஸ்ட் வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 50MP மெயின் கேமரா மற்றும் 2MP டெப்த் சென்சார் உடன் வருகிறது. முன்பக்கத்தில் 16MP ஸ்னாப்பரை கொண்டுள்ளது. இந்த போன் பிளாக் மற்றும் வைட் வண்ண விருப்பங்களில் வருகிறது.

விலை

இதன் விலை பற்றிப் பார்க்கையில், Realme 10 இன் 4ஜிபி + 64ஜிபி மாடல் $229 விலையில் அறிமுகமாகியுள்ளது. இந்திய மதிப்பில் இது தோராயமாக ரூ.18,700 ஆகும். அதேபோல், இதன் 4ஜிபி + 128ஜிபி மாடல் $249 (இந்திய மதிப்பில் தோராயமாக சுமார் ரூ.20,300) என்ற விலையில் வருகிறது. அடுத்து, இதன் 6ஜிபி + 128ஜிபி மாடல் $269 (தோராயமாக ரூ.21,900) விலையில் வருகிறது. இறுதியாக, இதன் ஹை-வேரியண்ட் மாடலான 8ஜிபி + 128ஜிபி மற்றும் 8ஜிபி + 256ஜிபி மாடல் $299 என்ற விலையில் வருகிறது. இது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 24,400 ஆகும்.

The post வெளியானது ரியல்மி 10 – என்ன பெஸ்ட்? என்ன வொஸ்ட்? first appeared on .

]]>
நவம்பர் 9ல் அறிமுகமாகிறது ரியல்மி 10 https://www.91mobiles.com/tamil/realme-10-confirmed-to-launch-with-mediatek-helio-g99-processor-on-november-9/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=realme-10-confirmed-to-launch-with-mediatek-helio-g99-processor-on-november-9 Fri, 04 Nov 2022 08:57:19 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3400 Realme நிறுவனம் அதன் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியா, சீனா, ஐரோப்பா உட்பட பல்வேறு நாடுகளில் அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த வரிசையில் வெண்ணிலா Realme 10, Realme 10 Pro 5G மற்றும் Realme 10 Pro+ 5G ஆகியவை அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் வரும் நவம்பர் 9 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Realme 10 ரியல்மி 10 ஸ்மார்ட்போனின் அறிமுகத்திற்கு முன்னதாக, பிராண்டின் VP மற்றும் […]

The post நவம்பர் 9ல் அறிமுகமாகிறது ரியல்மி 10 first appeared on .

]]>

Realme நிறுவனம் அதன் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியா, சீனா, ஐரோப்பா உட்பட பல்வேறு நாடுகளில் அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த வரிசையில் வெண்ணிலா Realme 10, Realme 10 Pro 5G மற்றும் Realme 10 Pro+ 5G ஆகியவை அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் வரும் நவம்பர் 9 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Realme 10

ரியல்மி 10 ஸ்மார்ட்போனின் அறிமுகத்திற்கு முன்னதாக, பிராண்டின் VP மற்றும் Realme இன்டர்நேஷனல் தலைவரான மாதவ் ஷெத், Realme 10 ஸ்மார்ட்போன் குறித்த சில முக்கிய விவரங்களை ஒரு நேர்காணலில் வெளிப்படுத்தியுள்ளார். இதன் படி, வரவிருக்கும் புதிய Realme 10 ஸ்மார்ட்போன் ஆனது நவம்பர் 9, 2022 இல் பட்ஜெட் ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

எத்தனை மாடல்கள்?

10 சீரிஸில் எத்தனை மாடல்கள் வெளியாகிறது என்பதை ரியல்மி நிறுவனம் வெளியீட்டை உறுதிப்படுத்தவில்லை, ஆனால் லீக் தகவல்களின் குறிப்பு படி, இந்த புதிய ஸ்மார்ட்போன் ரியல்மி 10 ப்ரோ மற்றும் ரியல்மி 10 ப்ரோ பிளஸ் மாடல்களுடன் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது. இவை இரண்டும் 5ஜி மாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வரவிருக்கும் புதிய ரியல்மி 10 ஸ்மார்ட்போன் 5ஜி இணக்கம் இல்லாமல், 4ஜி சேவையில் இயங்கக் கூடியதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

சிறப்பம்சம்

ரியல்மி 10 சீரிஸில் வரவிருக்கும் Realme 10 4G ஸ்மார்ட்போன் 180Hz டச் சாம்பிளிங் மாதிரி விகிதத்துடன் 6.5 அங்குல முழு HD+ AMOLED டிஸ்பிளேவைக் கொண்டிருக்கும். இந்த டிஸ்பிளே 90Hz ரெப்ரெஷ் ரேட் உடன் வரும் என்று கூறப்படுகிறது. ஸ்கிராட்ச் மற்றும் டிராப்ஸ் சேதத்திற்கு எதிராகக் கூடுதல் பாதுகாப்பை வழங்க டிஸ்பிளே பாண்டா கிளாஸ் அடுக்கு சேர்க்கப்பட்டுள்ளது.

16 ஜிபி ரேம்?

இந்த புதிய ரியல்மி 10 4ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி 99 சிப்செட் உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 50MP பிரைமரி கேமரா சென்சார் மற்றும் 2MP மேக்ரோ சென்சார் உடன் வரும். இந்த மொபைல் 16MP முன்பக்க கேமராவையும் கொண்டிருக்கிறது. இது 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5000mAh பேட்டரியைக் கொண்டு இருக்கும் என்று குக்லானி தெரிவித்திருக்கிறார். Realme 10 டிவைஸ் 8 + 8 என்று மொத்தமாக 16 ஜிபி ரேம் வரை இருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

என்ன எதிர்பார்க்கலாம்?

மேலும், இந்த புதிய ஸ்மார்ட்போனில் LPDDR4x ரேம் மற்றும் UFS 2.2 ஸ்டோரேஜ் அம்சம் இடம்பெறுவது உறுதி என்று சமீபத்திய தகவல் வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் கிடைக்கும் ரேம் அம்சத்திற்கு மேல் 5ஜிபி வரை எக்ஸ்டர்னல் ரேம் ஆதரவும் கிடைக்கும் என்று டிப்ஸ்டர் தகவல் தெரிவிக்கிறது. இந்த Realme ஸ்மார்ட்போனின் டிசைன் ரெண்டர்கள் சில தினங்களுக்கு முன் இணையத்தில் லீக் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

4ஜி-யா 5ஜி-யா?

ஹார்டுவேர் தகவலை வைத்துப் பார்க்கையில், இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் 5ஜி இணைப்பு அம்சம் இல்லாமல் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. Realme 10 4G விலை ரூ.16999 விலையில் வரலாம் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் ஆரம்ப சலுகைகளுடன், அடிப்படை மாடலின் விலை சுமார் ரூ.15,000 என்ற விலையில் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post நவம்பர் 9ல் அறிமுகமாகிறது ரியல்மி 10 first appeared on .

]]>
கசிந்தது ரியல்மி 10 அம்சங்கள் https://www.91mobiles.com/tamil/realme-10-smartphone-specifications-leaked-online-full-details/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=realme-10-smartphone-specifications-leaked-online-full-details Mon, 03 Oct 2022 08:28:33 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2721 ரியல்மி நிறுவனம் விரைவில் Realme 10 எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ரியல்மி போன் பட்ஜெட் விலையில் வெளிவர இருக்கிறது. ரியல்மி 10 இந்த ரியல்மி 10 போன் இரட்டை சிம் வசதி கொண்ட ஒரு 4ஜி போன் ஆகும். இதன் மாடல் நம்பர் RMX3630 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இணையத்தில் கசிந்த இந்த ரியல்மி 10 ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம். டிஸ்ப்ளே இதில் 6.5 அங்குல, 405ppi அடர்த்தி […]

The post கசிந்தது ரியல்மி 10 அம்சங்கள் first appeared on .

]]>

ரியல்மி நிறுவனம் விரைவில் Realme 10 எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ரியல்மி போன் பட்ஜெட் விலையில் வெளிவர இருக்கிறது.

ரியல்மி 10

இந்த ரியல்மி 10 போன் இரட்டை சிம் வசதி கொண்ட ஒரு 4ஜி போன் ஆகும். இதன் மாடல் நம்பர் RMX3630 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இணையத்தில் கசிந்த இந்த ரியல்மி 10 ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

டிஸ்ப்ளே

இதில் 6.5 அங்குல, 405ppi அடர்த்தி கொண்ட, AMOLED டிஸ்ப்ளேவுடன் வெளிவர இருக்கிறது. இது பெஸில் லெஸ் வடிவமைப்பில், இடது ஓரத்தில் பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் வெளிவரும்.

சிப்செட்

ரியல்மி 10 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட் வசதி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 12 மேல் ரியல்மி UI இயங்குதளத்தில் கட்டமைக்கப்பட்டு இந்த ரியல்மி 10 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

கேமரா

பின்பக்கத்தில் f/1.8 அப்பசருடன் கூடிய 50MP முதன்மை கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 2MP டெப்த் கேமரா என மூன்று கேமராக்கள் இருக்கும் எனத் தெரிகிறது. முன்பக்கத்தில் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 16MP முன்பக்க கேமராவும் இருக்கிறது.

மெமரி

இந்த ரியல்மி 10 மொபைலில் 4ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. கூடவே 64ஜிபி சேமிப்புத்திறனும் இருக்கிறது. இதை மைக்ரோ SD கார்டு மூலமாக 1TB வரை அதிகரித்துக் கொள்ளவும் முடியும்.

பேட்டரி

ரியல்மி 10 ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரியோடு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது.

கனெக்டிவிட்டி

இதில் பிங்கர் ப்ரிண்ட் சென்சார், வை-பை 802.11, ப்ளூடூத் 5.1, GPS, Type -C port, 3.5mm ஆடியோ ஜாக் போன்ற வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.
பட்ஜெட் விலையில் ஒரு நல்ல ஸ்மார்ட்போன் வேண்டும் என்று நினைப்பவர்கள் ரியல்மி நார்சோ 50ஐ ப்ரைம் ஸ்மார்ட்போனின் வசதிகளை ஒருமுறை பார்ப்பது நல்லது.

ரியல்மி நார்சோ 50ஐ பிரைம் 6.5 அங்குல HD+ LCD டிஸ்ப்ளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 400 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் 88.7% ஸ்கிரீன் டு பாடி விகிதத்தைக் கொண்டிருக்கிறது. ஆக்டோ கோர் Unisoc T612 பிராஸசர் வசதியைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 50ஐ பிரைம் ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
நார்சோ 50ஐ பிரைம் ஸ்மார்ட்போனில் சிங்கிள் ரியர் கேமரா மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது. அதாவது இந்த போன் 8எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்ஃபி கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது.

ரியல்மி நார்சோ 50ஐ பிரைம் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். மேலும் வைஃபை, ப்ளூடூத் 5.0, மைக்ரோ யூஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளும் இருக்கிறது. 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரியல்மி நார்சோ 50ஐ போன் ரூ.7,999 என்ற விலையிலும், 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் ரூ.8,999- என்ற விலைக்கும் கிடைக்கிறது.

The post கசிந்தது ரியல்மி 10 அம்சங்கள் first appeared on .

]]>