Realme C33 2023 https://www.91mobiles.com/tamil Tue, 14 Mar 2023 11:58:06 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 UniSoC T612 சிப்செட், 50MP கேமராவோடு இந்தியாவில் அறிமுகமானது Realme C33 2023. விலை, விவரக்குறிப்புகள் என்னென்ன? https://www.91mobiles.com/tamil/realme-c33-2023-launched-india-price-specifications-availability/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=realme-c33-2023-launched-india-price-specifications-availability Tue, 14 Mar 2023 11:51:30 +0000 https://www.91mobiles.com/tamil/?p=6865 2022 இல் அறிமுகமான மொபைலின் புதிய மறுபதிப்பாக இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது ரியல்மி சி33 2023 . ரேம்/சேமிப்பு திறன் மற்றும் ஒரு சிறிய பம்ப் தவிர, பெரும்பாலும் அதே வடிவமைப்பையும், அதே வன்பொருளையும் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் செல்ஃபி ஸ்னாப்பருக்கு வாட்டர் டிராப் நாட்ச், வட்டமான விளிம்புகளுடன் கூடிய பாக்ஸி வடிவமைப்பு, பின்புறத்தில் இரட்டை கேமரா சென்சார்கள் கொண்ட இரண்டு வட்ட வளையங்கள், பாதுகாப்பிற்காக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் மற்றும் பின் பேனலில் தனித்துவமான பளபளப்பான […]

The post UniSoC T612 சிப்செட், 50MP கேமராவோடு இந்தியாவில் அறிமுகமானது Realme C33 2023. விலை, விவரக்குறிப்புகள் என்னென்ன? first appeared on .

]]>

Highlights

  • இந்தியாவில்  பட்ஜெட் விலை போனாக வெளியானது Realme C33
  • இது 6.5 அங்குல HD+ டிஸ்ப்ளே, Unisoc T612 சிப்செட், மற்றும் 50MP கேமராவைக் கொண்டுள்ளது
  • இந்தியாவில் Realme C33 2023 மொபைல் ரூ.9,999 விலையில் தொடங்குகிறது.

2022 இல் அறிமுகமான மொபைலின் புதிய மறுபதிப்பாக இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது ரியல்மி சி33 2023 . ரேம்/சேமிப்பு திறன் மற்றும் ஒரு சிறிய பம்ப் தவிர, பெரும்பாலும் அதே வடிவமைப்பையும், அதே வன்பொருளையும் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் செல்ஃபி ஸ்னாப்பருக்கு வாட்டர் டிராப் நாட்ச், வட்டமான விளிம்புகளுடன் கூடிய பாக்ஸி வடிவமைப்பு, பின்புறத்தில் இரட்டை கேமரா சென்சார்கள் கொண்ட இரண்டு வட்ட வளையங்கள், பாதுகாப்பிற்காக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் மற்றும் பின் பேனலில் தனித்துவமான பளபளப்பான வடிவமைப்புடன் வெளியாகி உள்ளது இந்த ரியல்மி சி33 2023 மொபைல்.

Realme C33 2023 விவரக்குறிப்புகள், நிலையான 60Hz புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 6.5 அங்குல HD+ டிஸ்ப்ளே, Unisoc T612 சிப்செட், ஆண்ட்ராய்டு 12 OS, 50MP முதன்மை கேமரா சென்சார், 10W சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரி மற்றும் 5MP செல்ஃபி ஸ்னாப்பர் ஆகியவை அடங்கும்.

விலை & விற்பனை

இந்தியாவில் Realme C33 2023 விலை 4GB + 64GB ரூ. 9,999 மற்றும் 4GB + 128GB மாடலுக்கு ரூ.10,499. இந்த போன் அக்வா ப்ளூ, நைட் சீ மற்றும் சாண்டி கோல்ட் வண்ண விருப்பங்களில் வருகிறது. இந்த மொபைல் Realme India இணையதளம் வழியாக விற்பனைக்கு வரும்.

 

Realme C33 2023 விவரக்குறிப்புகள்

  • 6.5 அங்குல HD+ டிஸ்ப்ளே
  • Unisoc T612 சிப்செட், மாலி G57 GPU
  • ஆண்ட்ராய்டு 12
  • 50MP + AI இரட்டை கேமராக்கள்
  • 5MP முன் கேமரா
  • 5,000mAh பேட்டரி, 10W வேகமாக சார்ஜிங்

 

சிப்செட்

Realme C33 2023 ஆனது வாட்டர் டிராப் நாட்ச், 88.7 சதவீதம் ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ, 16.7 மில்லியன் நிறங்கள், 120 ஹெர்ட்ஸ் டச் சாம்லிங் ரேட் மற்றும் 88.7 சதவீத ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோவுடன் 6.5 அங்குல எச்டி+ டிஸ்ப்ளே கொண்டுள்ளது. ஃபோனை இயக்குவது Unisoc T612 சிப்செட் கிராபிக்ஸிற்காக Mai-G57 GPU உடன் இணைக்கப்பட்டுள்ளது.

மெமரி

இந்த மொபைல்   4GB ரேமி + 64GB சேமிப்புத்திறன் மற்றும் 4GB  ரேம்+ 128GB சேமிப்புத்திறன்  என இரண்டு வேரியண்டுகளில் வருகிறது. இந்த போன் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான Realme UI S பதிப்பில் இயங்குகிறது.

 

கேமரா

கேமராக்களைப் பொறுத்தவரை, Realme C33 2023 ஆனது பின்புறத்தில் 50MP முதன்மை சென்சார் மற்றும் AI இரண்டாம் நிலை சென்சார் கொண்ட இரட்டை கேமரா சென்சார்களைக் கொண்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு முன்புறத்தில் 5MP கேமரா உள்ளது. இதோடு பின்பக்கத்தில் ஒரு எல்இடி ப்ளாஷ் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.

 

கனெக்டிவிட்டி

Realme C33 2023 பாதுகாப்புக்காக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. Realme C33 2023 மொபைலில் 4G, டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் மற்றும் USB டைப்-சி போர்ட் ஆகிய கனெடிவிட்டி ஆதரவுகள் உள்ளன. இதோடு 10W நிலையான சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 5,000mAh பேட்டரியும் இந்த மொபைலில் உள்ளது.

The post UniSoC T612 சிப்செட், 50MP கேமராவோடு இந்தியாவில் அறிமுகமானது Realme C33 2023. விலை, விவரக்குறிப்புகள் என்னென்ன? first appeared on .

]]>