realme C33 https://www.91mobiles.com/tamil Mon, 05 Sep 2022 05:35:25 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ரூ10,000க்குள் அறிமுகமாகிறது ரியல்மி C33 https://www.91mobiles.com/tamil/realme-c33-budget-centric-smartphone-listed-on-flipkart-ahead-of-india-launch-on-september-6/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=realme-c33-budget-centric-smartphone-listed-on-flipkart-ahead-of-india-launch-on-september-6 Mon, 05 Sep 2022 05:33:12 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2040 Realme நிறுவனம் இந்தியாவில் ஒரு சிறந்த மலிவு விலை ஸ்மார்ட்போனை நாளை அறிமுகம் செய்யப் போகிறது. இது உங்களுடைய அனைத்து எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றும் என்பதில் சந்தேகமே இல்லை. Realme நிறுவனம் வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி, இந்தியாவில் ஒரு அறிமுக நிகழ்வை நிகழ்த்தத் திட்டமிட்டு இருக்கிறது. இந்த அறிமுக நிகழ்வின் போது, ரியல்மி நிறுவனம் புதிய Realme Buds Air 3S TWS வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனம், Realme Watch 3 Pro என்ற ஸ்மார்ட் […]

The post ரூ10,000க்குள் அறிமுகமாகிறது ரியல்மி C33 first appeared on .

]]>

Realme நிறுவனம் இந்தியாவில் ஒரு சிறந்த மலிவு விலை ஸ்மார்ட்போனை நாளை அறிமுகம் செய்யப் போகிறது. இது உங்களுடைய அனைத்து எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றும் என்பதில் சந்தேகமே இல்லை.

Realme நிறுவனம் வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி, இந்தியாவில் ஒரு அறிமுக நிகழ்வை நிகழ்த்தத் திட்டமிட்டு இருக்கிறது. இந்த அறிமுக நிகழ்வின் போது, ரியல்மி நிறுவனம் புதிய Realme Buds Air 3S TWS வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனம், Realme Watch 3 Pro என்ற ஸ்மார்ட் வாட்ச் சாதனம் மற்றும் புதிய Realme C33 என்ற ஸ்மார்ட்போனையும் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு இருக்கிறது.

இந்தியாவில் மலிவு விலை ஸ்மார்ட்போன்களின் விற்பனை அதிகரித்து இருப்பதைத் தொடர்ந்து, இந்த புதிய Realme C33 ஸ்மார்ட்போன் மாடலை செப்டம்பர் 6 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. Realme C33 பட்ஜெட்டை மையமாகக் கொண்ட ஸ்மார்ட்போனாக வெளிவரும் என்பதனால், இதற்கு இப்போதே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த போனின் அறிமுகத்திற்கு முன்னதாக, இது பற்றிய பல முக்கியமான விபரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த புதிய Realme C33 அடுத்த வாரம் முதல் Flipkart வழியாக வாங்க முடியும் என்ற தகவலும் இப்போது வெளியாகியுள்ளது. சரி, மலிவு விலையில் எதிர்பார்க்கப்படும் இந்த ஸ்மார்ட்போனில் என்னவெல்லாம் நாம் எதிர்பார்க்கலாம் என்பதை இப்போது பார்க்கலாம். முதலில் இந்த பட்ஜெட் செக்மென்ட் Realme C33 போனில் தரமான டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளதா என்ற விபரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

சிறப்பம்சம்

Realme C33 ஸ்மார்ட்போன் 6.6 அங்குல அளவு கொண்ட 1080 x 2408 பிக்சல் உடைய IPS LCD டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த டிஸ்பிளே 60Hz ஆதரவை ஆதரிக்கும். Realme C33 சாதனம் 50MP பிரைமரி கேமரா உடன் கூடிய டூயல் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது. இதில் 2MP டெப்த் அல்லது மேக்ரோ ஷூட்டர் வழங்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த பிரிவில் அதிக பிக்சல் செயல்திறன் கொண்ட சாதனமாக இது இருக்கும் என்று Realme கூறுகிறது.

Realme C33 இன் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக இதன் டிசைன் இருக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த போனின் வடிவமைப்பு சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Realme 9i 5G போல் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் கொண்ட அடிப்படை வேரியண்ட்டாகவும், இரண்டு 4ஜிபி ரேம் வேரியண்ட் மாடலாகவும் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரியல்மி C33 சாதனம் 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது.

விலை

இந்த புதிய ரியல்மி C33 சாதனம் ப்ளூ, கோல்டு மற்றும் பிளாக் நிறங்களில் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை பற்றி பார்க்கையில், இந்த Realme C33 சாதனம் 3ஜிபி ரேம் + 32ஜிபி ஸ்டோரேஜ், 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மாடலாக அறிமுகம் செய்யப்படும். இந்த ரியல்மி C33 போனின் அடிப்படை வேரியண்ட் மாடல் இந்தியாவில் ரூ.9,500 முதல் ரூ.10,500 விலைக்குள் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post ரூ10,000க்குள் அறிமுகமாகிறது ரியல்மி C33 first appeared on .

]]>