Realme Narzo N55 https://www.91mobiles.com/tamil Thu, 06 Apr 2023 05:12:14 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Realme Narzo N55 மொபைலின் வடிவமைப்பை அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு முன்னதாக டீஸ் செய்தது ரியல்மி https://www.91mobiles.com/tamil/realme-narzo-n55-project-n-design-teased/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=realme-narzo-n55-project-n-design-teased Thu, 06 Apr 2023 05:12:14 +0000 https://www.91mobiles.com/tamil/?p=7372   Realme விரைவில் Realme Narzo N55 என அழைக்கப்படும் புதிய நார்சோ பிராண்டட் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. இதற்கு முன்பு அந்த மொபைலின் பெயர், சில முக்கிய விவரக்குறிப்புகள் மற்றும் வெளியீட்டு தேதியை வெளியிட்டு இருந்தோம்.  இப்போது இறுதியாக Realme நிறுவனம் வரவிருக்கும் ஸ்மார்ட்போனின் தோற்றத்தை டீஸ் செய்யத் தொடங்கி இருக்கிறது. அதற்கான இரண்டு விளம்பர வீடியோக்கள் சமீபத்தில் பிராண்டின் சமூக ஊடக பக்கங்களைல் வெளியிடப்பட்டுள்ளன. அந்த விளம்பர வீடியோக்கள் இந்த மொபைல் எப்படி […]

The post Realme Narzo N55 மொபைலின் வடிவமைப்பை அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு முன்னதாக டீஸ் செய்தது ரியல்மி first appeared on .

]]>

Highlights

  • Realme விரைவில் இந்தியாவில் Realme Narzo N55 போனை அறிமுகப்படுத்தவுள்ளது.
  • அறிமுகத்திற்கு முன்பாக இதன் வடிவமைப்பை டீஸ் செய்துள்ளது.
  • Realme Narzo N55  இரட்டை கேமராவுடன் டூயல்-டோன்  பேனலைக் கொண்டிருக்கும்.

 

Realme விரைவில் Realme Narzo N55 என அழைக்கப்படும் புதிய நார்சோ பிராண்டட் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. இதற்கு முன்பு அந்த மொபைலின் பெயர், சில முக்கிய விவரக்குறிப்புகள் மற்றும் வெளியீட்டு தேதியை வெளியிட்டு இருந்தோம்.  இப்போது இறுதியாக Realme நிறுவனம் வரவிருக்கும் ஸ்மார்ட்போனின் தோற்றத்தை டீஸ் செய்யத் தொடங்கி இருக்கிறது. அதற்கான இரண்டு விளம்பர வீடியோக்கள் சமீபத்தில் பிராண்டின் சமூக ஊடக பக்கங்களைல் வெளியிடப்பட்டுள்ளன. அந்த விளம்பர வீடியோக்கள் இந்த மொபைல் எப்படி இருக்கும்,  எப்படி வேலை செய்யும் என்பதைப் பற்றி ஓரளவுக்கு அறிவுறுத்துகின்றன.

மேலே உள்ள ட்வீட்டில் பார்த்தது போல, Realme Narzo N55 பின்பக்கம் இப்படித்தான் இருக்கும். மொபைலின் பின்புறம் டூயல் டோனில் இருப்பது போல் தெரிகிறது. கேமரா தொகுதி மொபைலின் பின்புறத்தின் மேல் இடது மூலையில் இருக்கிறது. அதனுடன் LED ஃபிளாஷ் உள்ளது. வால்யூம் அப் மற்றும் டவுன் பட்டன்கள் மற்றும் பவர் பட்டன் ஆகியவை மொபைலின் வலது பக்கத்தில் உள்ளன. பவர் பட்டன் கைரேகை ஸ்கேனரை ஒருங்கிணைப்பதாகத் தெரியவில்லை. ஆனால் விளம்பர வீடியோ அதைத் தெளிவாக உறுதிப்படுத்தாததால், இப்போதைக்கு அதை உறுதியாகச் சொல்ல முடியாது.  Realme Narzo N55 ஆனது AMOLED பேனல் அல்லது IPS LCD பேனல் இரண்டில் எதைக் கொண்டுள்ளது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

மொபைலின் கீழ் பகுதித் தோற்றம் ஏற்கனவே கடந்த காலத்தில் கசிந்துள்ளது. மேலும் Realme Narzo N55 ஆனது 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் USB டைப்-சி சார்ஜிங் போர்ட் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்பது ஏற்கனவே உறுதியாகி இருக்கிறது. மொபைலின் முன்பக்க கேமரா அதில் காட்டப்படாததால், அதன் அம்சங்கள் பற்றி தெரியவில்லை. எனவே, Realme Narzo N55 மொபைலில் பஞ்ச்-ஹோல் கேமரா இடம்பெறுமா அல்லது அதற்கு பதிலாக வாட்டர் டிராப் நாட்ச் பயன்படுத்தப்படுமா என்று சொல்வது மிகவும் கடினம்.

Realme Narzo N55, இந்தியாவில் ஏப்ரல் 12 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும். எனவே வரவிருக்கும் நாட்களில் இந்த மொபைலைப் பற்றிய கூடுதல் விவரங்களை Realme டீஸ் செய்யும் என்பது உறுதி. அவ்வாறு வெளியிடும்போது கண்டிப்பாக அதை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம்.

 

Realme Narzo N55 – முக்கிய விவரக்குறிப்புகள்

 

  • சிப்செட் – MediaTek Dimensity 810
  • ரேம் – 4 ஜிபி
  • திரை – 6.67 அங்குலம் (16.94 செமீ)
  • பின் கேமரா – 50 எம்பி + 8 எம்பி + 2 எம்பி
  • செல்ஃபி கேமரா – 16 எம்.பி
  • பேட்டரி – 5000 mAh

 

The post Realme Narzo N55 மொபைலின் வடிவமைப்பை அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு முன்னதாக டீஸ் செய்தது ரியல்மி first appeared on .

]]>
Realme Narzo N55 மொபைலின் இந்திய வெளியீட்டு தேதி வெளியிடப்பட்டது https://www.91mobiles.com/tamil/realme-narzo-n55-launch-date-india-revealed/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=realme-narzo-n55-launch-date-india-revealed Thu, 30 Mar 2023 12:48:38 +0000 https://www.91mobiles.com/tamil/?p=7199   ரியல்மி இந்தியா நிறுவனம், இந்தியாவில் ஒரு புதிய நார்சோ என்-சீரிஸ் தொலைபேசியின் வருகையை டீஸ் செய்யத் தொடங்கியுள்ளது. நமக்குக் கிடைத்த எக்ஸ்குளூசிவ் தகவலின்படி இந்த போன் அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. இப்போது, ​​மற்றொரு பிரத்தியேக தகவலாக Realme Narzo N55 மொபைலின் சரியான வெளியீட்டுத் தேதியை நாங்கள் உங்களுக்குக் தருறோம் . தொழில்துறை வட்டாரங்களின்படி, Realme Narzo N55 ஏப்ரல் 12 ஆம் தேதி மதியம் 12:30 IST க்கு அறிவிக்கப்படும். இது […]

The post Realme Narzo N55 மொபைலின் இந்திய வெளியீட்டு தேதி வெளியிடப்பட்டது first appeared on .

]]>

Highlights

  • Realme Narzo N55 இந்தியாவில் ஏப்ரல் 12 ஆம் தேதி மதியம் 12:30 மணிக்கு அறிமுகப்படுத்தப்படும்.
  • இந்த மொபைல் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி, 4ஜிபி + 128ஜிபி, 6ஜிபி மற்றும் 64ஜிபி/128ஜிபி கூடவே, 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பகத்திலும் கிடைக்கும்.
  • Realme இன்னும் இந்த மொபைல் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை

 

ரியல்மி இந்தியா நிறுவனம், இந்தியாவில் ஒரு புதிய நார்சோ என்-சீரிஸ் தொலைபேசியின் வருகையை டீஸ் செய்யத் தொடங்கியுள்ளது. நமக்குக் கிடைத்த எக்ஸ்குளூசிவ் தகவலின்படி இந்த போன் அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. இப்போது, ​​மற்றொரு பிரத்தியேக தகவலாக Realme Narzo N55 மொபைலின் சரியான வெளியீட்டுத் தேதியை நாங்கள் உங்களுக்குக் தருறோம் . தொழில்துறை வட்டாரங்களின்படி, Realme Narzo N55 ஏப்ரல் 12 ஆம் தேதி மதியம் 12:30 IST க்கு அறிவிக்கப்படும். இது நார்சோ பிராண்டிங்கின் கீழ் ஒரு புதிய சீரிஸாக இருக்கும். மேலும் N55 இந்த சீரிஸின் முதல் மொபைலாக இருக்கும். இருப்பினும், வெளியீட்டு தேதியை ரியல்மி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

எங்கள் முந்தைய பிரத்தியேக அறிக்கை Realme Narzo N55 பிரைம் பிளாக் மற்றும் பிரைம் ப்ளூ வண்ண விருப்பங்களில் கிடைக்கும் என்று கூறியது. இந்த மொபைலின் பேசிக் மாடல் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜைக் கொண்டு இருக்கும். இது தவிர, Narzo N55 ஆனது 4GB + 128GB, 6GB மற்றும் 64GB/128GB சேமிப்பகத்திலும் இறுதியாக 8GB RAM மற்றும் 128GB சேமிப்பகத்திலும் விற்பனை செய்யப்படும். அதாவது பல வேரியண்ட்களில் இந்த மொபைல் வெளியாக இருக்கிறது.

 

இருப்பினும், போனின் மற்ற விவரக்குறிப்புகள் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை. ஆனால் Narzo N55 ஒரு மிட்ரேஞ்ச் போனாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். Narzo N55 மொபைலி கேமிங்கை மையப்படுத்தி இருக்கும் என்றுத் தெரிய வருகிறது. இது Realme வழங்கும் Narzo சீரிஸின் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டது. ஃபோனின் வடிவமைப்பும் இதுவரை வெளிப்படுத்தப்பட வில்லை.

இந்த மொபைல் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு Amazon மற்றும் Realme வலைத்தளங்கள் வழியாக விற்பனைக்கு வரும். அறிமுகம் இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இன்னும் பல தகவல்கள் வெளியாக வாய்ப்பு இருக்கிறது.

 

realme Narzo N55 முக்கிய விவரக்குறிப்புகள்

  • சிப்செட் – MediaTek Dimensity 810
  • ரேம் – 4/ 6 / 8ஜிபி
  • சேமிப்புத்திறன் – 64 / 128ஜிபி
  • திரை – 6.67 அங்குலம் (16.94 செமீ)
  • பின் கேமரா – 50 எம்பி + 8 எம்பி + 2 எம்பி
  • செல்ஃபி கேமரா – 16 எம்.பி
  • பேட்டரி – 5000 mAh

The post Realme Narzo N55 மொபைலின் இந்திய வெளியீட்டு தேதி வெளியிடப்பட்டது first appeared on .

]]>