redmi 11 prime 5G https://www.91mobiles.com/tamil Tue, 06 Sep 2022 12:20:22 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 அறிமுகமானது Redmi 11 Prime, Redmi 11 Prime 5G மற்றும் Redmi A1 https://www.91mobiles.com/tamil/redmi-11-prime-series-launched-in-india/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=redmi-11-prime-series-launched-in-india Tue, 06 Sep 2022 12:18:53 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2090 தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு Xiaomi இந்தியாவில் Redmi 11 Prime மற்றும் Redmi 11 Prime 5G- மொபைல்களை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. Redmi A1 உடன் இரண்டு ஸ்மார்ட்போன்கள் அறிவிக்கப்பட்டன. ரெட்மி 11 பிரைம் சீரிஸ் சிறந்த அம்சங்களுடனும், மிகக் குறைந்த விலையிலும் வருகிறது. ரெட்மி 11 பிரைம் சீரிஸின் விலை மற்றும் அதிலுள்ள வசதிகளை இப்போது பார்க்கலாம். Redmi 11 Prime Series விலை Redmi 11 Prime 4 ஜிபி + 64 ஜிபி […]

The post அறிமுகமானது Redmi 11 Prime, Redmi 11 Prime 5G மற்றும் Redmi A1 first appeared on .

]]>

தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு Xiaomi இந்தியாவில் Redmi 11 Prime மற்றும் Redmi 11 Prime 5G- மொபைல்களை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. Redmi A1 உடன் இரண்டு ஸ்மார்ட்போன்கள் அறிவிக்கப்பட்டன. ரெட்மி 11 பிரைம் சீரிஸ் சிறந்த அம்சங்களுடனும், மிகக் குறைந்த விலையிலும் வருகிறது. ரெட்மி 11 பிரைம் சீரிஸின் விலை மற்றும் அதிலுள்ள வசதிகளை இப்போது பார்க்கலாம்.

Redmi 11 Prime Series விலை

Redmi 11 Prime
4 ஜிபி + 64 ஜிபி – ரூ 12,999
6 ஜிபி + 128 ஜிபி – ரூ 14,999

இது Thunder Black, Chrome Silver மற்றும் Meadow Green ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது.

Redmi 11 Prime 5G
4 ஜிபி + 64 ஜிபி – ரூ 13,999
6 ஜிபி + 128 ஜிபி – ரூ 15,999

இது பெப்பி பர்பிள்(peppy purple), ஃப்ளாஷி பிளாக் (flashy black) மற்றும் ப்ளேஃபுல் கிரீன் (Playful green) ஆகிய மூன்று நிறங்களில் கிடைக்கிறது. Redmi 11 Prime 5G-யின் விற்பனை செப்டம்பர் 9 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு தொடங்கும். Mi.com, Amazon India, Mi Home கடைகள் மற்றும் சில்லறை விற்பனைக் கடைகளில் இந்த போனை வாங்கலாம். ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு மற்றும் கிரெடிட்/டெபிட் கார்டு இஎம்ஐ பரிவர்த்தனைகளில் வாடிக்கையாளர்கள் ரூ.1,000 தள்ளுபடியைப் பெறலாம்.

ரெட்மி 11 பிரைம் சீரிஸ்

Redmi 11 Prime தொடரில் Redmi 11 Prime மற்றும் Redmi 11 Prime 5G என இரண்டு மாடல்கள் உள்ளன. முதலாவது மாடல் 4G, இரண்டாவது போன் 5G. Redmi 11 Prime ஆனது சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Poco M5 -ஐப் போன்றே வித்தியாசமான பின்புற வடிவமைப்பைக் கொண்டுள்ளது. அதேவேளையில், Redmi 11 Prime 5G என்பது சீனாவில் இருந்து மறுபெயரிடப்பட்ட Redmi Note 11E ஆகும். இரண்டு ஸ்மார்ட்போன்களும் 2408 x 1080 பிக்சல்கள் (FHD+), 90Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 6.58 அங்குல எல்சிடி திரையைக் கொண்டிருக்கிறது.

ரெட்மி 11 பிரைம் சீரிஸ் கேமரா

4ஜி மாடலில் கூடுதலாக 2எம்பி மேக்ரோ ஸ்னாப்பருடன் 50எம்பி பிரதான கேமரா, 2எம்பி டெப்த் சென்சார் மற்றும் முன்புறத்தில் 5எம்பி செல்ஃபி கேமரா ஆகியவை உள்ளன. இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசம் அவற்றின் சிப்செட் ஆகும். 4G வேரியண்ட் புளூடூத் 5.3 உடன் MediaTek Helio G99 SoC மூலம் இயக்கப்படுகிறது. அதே சமயம் 5G வேரியண்ட் புளூடூத் 5.1 உடன் MediaTek Dimensity 700 சிப் கொண்டுள்ளது. அவை LPDDR4x ரேம், UFS 2.2 சேமிப்பு மற்றும் பிரத்யேக microSD கார்டு ஸ்லாட்டுடன் வருகின்றன. இதனால் சேமிப்புத்திறனை அதிகரித்துக் கொள்ள முடியும்.

ரெட்மி 11 பிரைம் சீரிஸ் பேட்டரி

இதுதவிர மற்ற அம்சங்களைப் பொறுத்தவரை டூயல்-பேண்ட் வைஃபை, ஜிஎன்எஸ்எஸ், பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார், ஐஆர் பிளாஸ்டர், 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக், 5,000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் ஆகியவை இருக்கின்றன. இருப்பினும், 5G வேரியண்ட் எடையுடன் ஒப்பிடும்போது 4G மாடல் சற்று கனமாக உள்ளது.

The post அறிமுகமானது Redmi 11 Prime, Redmi 11 Prime 5G மற்றும் Redmi A1 first appeared on .

]]>
செப். 6ல் வெளியாகிறது ஷாவ்மியின் பட்ஜெட் விலை போன் https://www.91mobiles.com/tamil/redmi-a1-plus-budget-smartphone-to-launch-in-india-alongside-redmi-11-prime-4g-and-5g-on-september-6/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=redmi-a1-plus-budget-smartphone-to-launch-in-india-alongside-redmi-11-prime-4g-and-5g-on-september-6 Mon, 05 Sep 2022 10:11:18 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2048 சீனாவைச் சேர்ந்த Xiaomi இன் துணை பிராண்ட்டான Redmi இப்போது இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் வரிசையில் Redmi A1 Plus என்ற பட்ஜெட் விலை போனை நிறுவனம் Redmi 11 Prime மற்றும் Redmi 11 Prime 5G உடன் அறிமுகம் செய்ய இருக்கிறது என்பது உறுதியாகியுள்ளது. ஷாவ்மியின் ரெட்மி நாளை (செப்டம்பர் 6 ஆம் தேதி) இந்தியாவில் Redmi 11 Prime 4G மற்றும் 5G மாடல்களை […]

The post செப். 6ல் வெளியாகிறது ஷாவ்மியின் பட்ஜெட் விலை போன் first appeared on .

]]>

சீனாவைச் சேர்ந்த Xiaomi இன் துணை பிராண்ட்டான Redmi இப்போது இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் வரிசையில் Redmi A1 Plus என்ற பட்ஜெட் விலை போனை நிறுவனம் Redmi 11 Prime மற்றும் Redmi 11 Prime 5G உடன் அறிமுகம் செய்ய இருக்கிறது என்பது உறுதியாகியுள்ளது.

ஷாவ்மியின் ரெட்மி நாளை (செப்டம்பர் 6 ஆம் தேதி) இந்தியாவில் Redmi 11 Prime 4G மற்றும் 5G மாடல்களை அறிமுகப்படுத்த இருக்கிறது. இதே நிகழ்வில், Redmi A1 Plus என்ற மாடலையும் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதை தனது டீஸர் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறது. Xiaomi இந்த அறிவிப்பை அதன் சமூக வலைத்தள சேனல் மூலம் வெளியிட்டுள்ளது.

ஷாவ்மி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் டீசரில் வரவிருக்கும் Redmi A1 Plus ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் ஒட்டுமொத்த தோற்றமும் தெளிவாகக் காண்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகத்திற்கு முன்னதாக, Mi ஸ்டோரில் உள்ள மைக்ரோ சைட் இந்த போனின் விபரங்களை லைவ் செய்துள்ளது. இது Xiaomi Redmi A1 இன் சில முக்கிய சிறப்பம்சங்களை வெளிப்படுத்தியுள்ளது.

ஷாவ்மி அறிமுகம் செய்ய இருக்கும் Redmi A1 Plus ஸ்மார்ட்போனில் இருக்கும் அம்சங்களைப் பார்க்கலாம். ரெட்மி A1 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது MediaTek சிப்செட் மூலம் இயக்கப்படும் என்பதை நிறுவனத்தின் மைக்ரோ சைட் வெளிப்படுத்துகிறது. ஆனால் எந்த சிப்செட் என்பதை Xiaomi நிறுவனம் அந்த சைடில் குறிப்பிட்டு பதிவிடவில்லை. ஆனால், முந்தைய பெஞ்ச்மார்க் தகவல், இது MediaTek Helio A22 சிப்செட் உடன் வெளிவரும் என்று பரிந்துரைக்கிறது.

புதிய ரெட்மி A1 பிளஸ் ஸ்மார்ட்போன் பச்சை, நீலம் மற்றும் கருப்பு ஆகிய மூன்று நிறத் தேர்வுகளில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பதை ஷாவ்மியின் மைக்ரோ சைட் தெளிவாக வெளிப்படுத்துகிறது. இந்த மூன்று மாடல்களும் சிக்-லெதர் லுக் உடன் வெளிவரும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த Redmi A1 Plus ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரியைக் கொண்டு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரெட்மி A1 பிளஸ் ஸ்மார்ட்போன் டூயல் ரியர் கேமரா அம்சத்துடன் வருகிறது. கூடவே இதில் டூயல் டோன் எல்இடி ஃபிளாஷ் வசதியும் இருக்கிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளே மற்றும் சிங்கிள் செல்ஃபி கேமராவுடன் வருகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் HD+ குவாலிட்டி உடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது முழு HD+ டிஸ்பிளேவுடன் வராது என்று முந்தைய லீக் தகவல் பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.

புதிய ரெட்மி A1 பிளஸ் ஸ்மார்ட்போன் மற்ற Xiaomi சாதனங்களைப் போலவே வலது விளிம்பில் பவர் பட்டன் மற்றும் வால்யூம் ராக்கர்களைக் கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனம் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரை வழங்காது என்று கருதுகிறோம். காரணம், மைக்ரோ சைட் தகவலில் உள்ள படங்களில் எங்கும் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரை காண்பிக்கவில்லை. இந்த ரெட்மி A1 பிளஸ் ஸ்மார்ட்போன் ரூ.9,990 என்ற விலையில் அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிகிறது.

The post செப். 6ல் வெளியாகிறது ஷாவ்மியின் பட்ஜெட் விலை போன் first appeared on .

]]>