redmi note 11R https://www.91mobiles.com/tamil Mon, 03 Oct 2022 04:51:18 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ரெட்மி நோட் 11R – நோட் 11 சீரிஸில் வரும் பட்ஜெட்போன் https://www.91mobiles.com/tamil/redmi-note-11r-5g-has-been-launched-under-budget-segment/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=redmi-note-11r-5g-has-been-launched-under-budget-segment Mon, 03 Oct 2022 04:51:18 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2708 Redmi நிறுவனம் தனது நோட் 11 சீரிஸ்ஸின் அடுத்த வரவாக ரெட்மி நோட் 11R (Redmi Note 11R) என்ற புதிய ஸ்மார்ட் போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ரெட்மீ நோட் 11R ஸ்மார்ட்போன் Dimensity 700 சிப்செட் உடன், இரண்டு பின்பக்க கேமெராக்கள் மற்றும் 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களோடு, ஒரு சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட் போனாக வெளியாகி இருக்கிறது. இது எப்போது இந்தியா வரும்? விலை என்ன? பார்க்கலாம். விலை Redmi Note […]

The post ரெட்மி நோட் 11R – நோட் 11 சீரிஸில் வரும் பட்ஜெட்போன் first appeared on .

]]>

Redmi நிறுவனம் தனது நோட் 11 சீரிஸ்ஸின் அடுத்த வரவாக ரெட்மி நோட் 11R (Redmi Note 11R) என்ற புதிய ஸ்மார்ட் போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ரெட்மீ நோட் 11R ஸ்மார்ட்போன் Dimensity 700 சிப்செட் உடன், இரண்டு பின்பக்க கேமெராக்கள் மற்றும் 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களோடு, ஒரு சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட் போனாக வெளியாகி இருக்கிறது. இது எப்போது இந்தியா வரும்? விலை என்ன? பார்க்கலாம்.

விலை
Redmi Note 11R ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் சீனாவில் CNY 1,099 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பின் படி, இது தோராயமாக ரூ. 12,600 ஆகும். இதன், 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் CNY 1,199 என்ற விலையில் வருகிறது. இந்திய மதிப்பில் இது ரூ. 13,700 ஆகும். இதன் 8ஜிபி ரேம் + 128ஜிபி மாடல் இந்திய மதிப்பில் ரூ. 16,000 விலைக்கு Redmi பிரத்தியேக இணையதளத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த ரெட்மி நோட் 11R ஸ்மார்ட் போன் போலார் ப்ளூ ஓசன் (Polar Blue Ocean), மிஸ்டேரியஸ் டார்க்னெஸ் (Mysterious Darkness) மற்றும் ஐஸ் கிரிஸ்டல் கேலக்சி (Ice Crystal Galaxy) ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இது மிக விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்பம்சம்

இந்த ரெட்மி நோட் 11R ஸ்மார்ட் போன் 6.58 அங்குல FHD+ கொண்ட 1080 x 2408 பிக்சல் உடைய டிஸ்பிளேவுடன் வருகிறது. இது 90HZ ரெப்பிரேஷ் ரேட் கொண்ட 1500:1 கான்ட்ராஸ்ட் ரேசியோ உடன் கூடிய 240Hz டச் சாம்ப்ளிங் ரேட்டுடன் வருகிறது. மேலும் இந்த ரெட்மீ நோட் 11R ஆக்டா கோர் 7nm MediaTek Dimensity 700 SoC சிப்செட்டில் வேலை செய்கிறது.1TB வரை விரிவுபடுத்த கூடிய 128 GB UFS 2.2 ஸ்டோரேஜ் மற்றும் அதிகபட்சம் 8GB LPDDR4x RAM உடன் வருகிறது.

பேட்டரி & கேமரா

ரெட்மி நோட் 11R 5000 mAh பேட்டரி மற்றும் 18W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வருகிறது. இந்த போன் 10W சார்ஜருடன் வருகிறது. கேமராவைப் பொருத்தவரை இது f/2.8 லென்ஸுடன் கூடிய 13 மெகா பிக்சல் பிரைமரி கேமரா மற்றும் f/2.4 லென்ஸுடன் கூடிய 2 மெகா பிக்சல் போர்ட்ரைட் ஷூட்டர் என்று டூயல் ரியர் கேமராக்களைக் கொண்டுள்ளது. மேலும் செல்ஃபி எடுப்பதற்காக முன்பக்க டிஸ்பிளேவில் 5 மெகா பிக்சல் சென்சாரும் கொடுக்கப்பட்டுள்ளது.

கனெக்டிவிட்டி

5G, வைஃபை, Bluetooth v5.1, GPS/ A-GPS, GLONASS, Infrared IR remote control போன்ற வயர்லெஸ் அம்சங்களுடன் 3.5mm ஹெட் போன் ஜாக் மற்றும் சி-டைப் USB போர்ட் ஆகிய அம்சங்களும் இந்த ரெட்மீ நோட் 11R வருகிறது. இதில் சைடு மௌண்டட் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் மற்றும் ஃபேஸ் அன்லாக்வசதியும் இருக்கிறது. இந்த ரெட்மீ நோட் 11R ஸ்மார்ட் போன் ஆண்ட்ராய்டு 12 MIUI 13ல் இயங்குகிறது. இத்தனை அம்சங்கள் இருப்பதால் இது குறைந்த விலையில் கிடைக்கும் பெஸ்டான 5ஜி போனாக மாற நிறைய வாய்ப்புகள் உள்ளன.

The post ரெட்மி நோட் 11R – நோட் 11 சீரிஸில் வரும் பட்ஜெட்போன் first appeared on .

]]>