Reno 8T 5G https://www.91mobiles.com/tamil Fri, 10 Mar 2023 07:53:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 108MP கேமரா, 65W பாஸ்ட் சார்ஜ் வசதியுடன் வெளியாகிறது ஒப்போ ரெனோ 8T 5G! https://www.91mobiles.com/tamil/oppo-reno8-t-5g-first-look-reigniting-the-segment-with-power-packed-features/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=oppo-reno8-t-5g-first-look-reigniting-the-segment-with-power-packed-features Mon, 06 Feb 2023 10:54:03 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5587 ஒப்போ நிறுவனம் இந்தியாவில் தனது ரெனோ சீரிஸில் 8டி என்னும் 5ஜி போனை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த போனின் சிறப்பம்சமாக இதில் 108 மெகாபிக்சல் கேமராவும், 65 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியையும் சொல்லலாம். மேலும் இது சமீபத்திய ஆண்ட்ராய்டு இயங்குதளமான ஆண்ட்ராய்டு 13ல் இயங்குகிறது. பிப்ரவரி 10-ம் தேதி இந்த ஒப்போ போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திரை பெரிய டிஸ்பிளே ஒப்போ ரெனோ 8டி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.7 அங்குல micro-curved […]

The post 108MP கேமரா, 65W பாஸ்ட் சார்ஜ் வசதியுடன் வெளியாகிறது ஒப்போ ரெனோ 8T 5G! first appeared on .

]]>
Highlights

  • ஒப்போ நிறுவனம் புதிய ஒப்போ ரெனோ 8டி 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
  • இந்த புதிய போன் பெரிய டிஸ்பிளே, தரமான சிப்செட் மற்றும் அசத்தலான கேமரா வசதியுடன் வெளிவந்துள்ளது.

ஒப்போ நிறுவனம் இந்தியாவில் தனது ரெனோ சீரிஸில் 8டி என்னும் 5ஜி போனை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த போனின் சிறப்பம்சமாக இதில் 108 மெகாபிக்சல் கேமராவும், 65 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியையும் சொல்லலாம். மேலும் இது சமீபத்திய ஆண்ட்ராய்டு இயங்குதளமான ஆண்ட்ராய்டு 13ல் இயங்குகிறது. பிப்ரவரி 10-ம் தேதி இந்த ஒப்போ போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரை

பெரிய டிஸ்பிளே ஒப்போ ரெனோ 8டி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.7 அங்குல micro-curved AMOLED ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. கூடவே, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1080 x 2412 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

 

சிப்செட் & இயங்குதளம்

ஒப்போ ரெனோ 8டி 5ஜி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப்செட் உடன் அட்ரினோ ஜிபியு ஆதரவைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் சிறந்த செயல்திறன் மற்றும் மேம்பட்ட வேகத்தை வழங்கும். பின்பு ColorOS 13.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியைக் கொண்டுள்ளது ஒப்போ ரெனோ ஸ்மார்ட்போன்.

மெமரி

புதிய ஒப்போ ரெனோ 8டி 5ஜி ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. மேலும் நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. இதன்  மூலம் இந்த மொபைலின் சேமிப்புத்திறனை அதிகரித்துக் கொள்ள முடியும்.

 

நிறங்கள்

இந்த ஒப்போ ரெனோ 8டி 5ஜி ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக் மற்றும் சன்ரைஸ் கோல்டு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 

கேமரா

ஒப்போ ரெனோ 8டி 5ஜி ஸ்மார்ட்போனில் 108எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. எனவே இந்த போனின் உதவியுடன் தரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.  செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே முன்பக்கத்தில் 32எம்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ரெனோ ஸ்மார்ட்போன்.

பேட்டரி

ஒப்போ ரெனோ 8டி 5ஜி ஸ்மார்ட்போனில் 4800 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளதால் இந்த போனை 45 நிமிடங்களில் முழுவதுமாக சார்ஜ் செய்துவிட முடியும். இதுதவிர, கைரேகை ஸகேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஒப்போ ஸ்மார்ட்போன்.

 

கனெக்டிவிட்டி

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ரெனோ 8டி 5ஜி ஸ்மார்ட்போன்.

 

விலை

இந்தியாவில் ஒப்போ ரெனோ 8டி 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.29,999-ஆக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. ஒப்போ ஸ்டோர், பிளிப்கார்ட் போன்ற முன்னணி தளங்களில் வரும் பிப்ரவரி 10-ம் தேதி இந்த ஒப்போ போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சில சலுகைகளும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

 

The post 108MP கேமரா, 65W பாஸ்ட் சார்ஜ் வசதியுடன் வெளியாகிறது ஒப்போ ரெனோ 8T 5G! first appeared on .

]]>
பிப்ரவரி 3ல் வெளியாகிறது ஒப்போ ரெனோ 8டி 5ஜி! https://www.91mobiles.com/tamil/oppo-reno-8t-5g-smartphone-launching-in-india-on-february-3-check-expected-price-and-specifications/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=oppo-reno-8t-5g-smartphone-launching-in-india-on-february-3-check-expected-price-and-specifications Tue, 31 Jan 2023 04:32:03 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5370 அதென்ன ஸ்மார்ட்போன்? அதன் கேமரா செட்டப் எப்படி இருக்கும்? அது என்ன விலைக்கு வரும்? பார்க்கலாம்.  அது ஒப்போ நிறுவனத்தின் ரெனோ 8டி 5ஜி (Oppo Reno 8T 5G) ஆகும். இந்த ஸ்மார்ட்போன் வருகிற பிப்ரவரி 3 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகமாகும் என்பதை ஒப்போ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. ரெனோ 8 சீரீஸின் கீழ் ஏற்கனவே 2 மாடல்கள் அறிமுகமாகி விட்டன. அவைகள் ஒப்போ ரெனோ 8 (Oppo Reno 8) மற்றும் ஒப்போ […]

The post பிப்ரவரி 3ல் வெளியாகிறது ஒப்போ ரெனோ 8டி 5ஜி! first appeared on .

]]>

Highlights

  • ஒப்போ நிறுவனம் வருகிற பிப்ரவரி 3 ஆம் தேதியன்று ஒரு ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
  • இது, இந்த ரெனோ 8 சீரிஸின் கீழ் வரும் மூன்றாவது மாடலாக இருக்கும்!

அதென்ன ஸ்மார்ட்போன்? அதன் கேமரா செட்டப் எப்படி இருக்கும்? அது என்ன விலைக்கு வரும்? பார்க்கலாம்.  அது ஒப்போ நிறுவனத்தின் ரெனோ 8டி 5ஜி (Oppo Reno 8T 5G) ஆகும். இந்த ஸ்மார்ட்போன் வருகிற பிப்ரவரி 3 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகமாகும் என்பதை ஒப்போ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

ரெனோ 8 சீரீஸின் கீழ் ஏற்கனவே 2 மாடல்கள் அறிமுகமாகி விட்டன. அவைகள் ஒப்போ ரெனோ 8 (Oppo Reno 8) மற்றும் ஒப்போ ரெனோ 8 ப்ரோ (Oppo Reno 8) ஆகும். ஆக ஒப்போ ரெனோ 8டி மாடல், இந்த சீரிஸின் கீழ் வரும் மூன்றாவது மாடலாக இருக்கும்!

என்ன விலை?

கிடைக்கப்பெற்ற லீக் தகவலின் அடிப்படையில், ஒப்போ ரெனோ 8டி 5ஜி ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் தோராயமாக ரூ.28,500 ஆக இருக்கலாம். இது எதிர்பார்க்கப்படும் விலை ஆகும்; அதிகாரபூர்வமான விலை நிர்ணயம் அல்ல. ஒப்போ ரெனோ 8 5ஜி ஸ்மார்ட்போன், ரூ.29,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மறுகையில் உள்ள ப்ரோ மாடல், ரூ.45,999 க்கு வாங்க கிடைக்கிறது!

வெளியாகி இருக்கும் பல்வேறு லீக்-களைக் கொண்டு ஒப்போ ரெனோ 8டி 5ஜி: என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.

டிஸ்ப்ளே

ஒப்போ ரெனோ 8டி ஸ்மார்ட்போனில் பஞ்ச்-ஹோல் டிசைன் உடனான 6.43 அங்குல AMOLED டிஸ்ப்ளே பேனல் இடம் பெறலாம். மேலும் இந்த டிஸ்பிளே 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டை ஆதரிக்கும் என்றும், ஃபுல்எச்டி பிளஸ் ரெசல்யூஷனுடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கேமரா

ரெனோ 8டி ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இடம்பெறலாம். அதில் 100எம்பி மெயின் சென்சார் + 2எம்பி மைக்ரோ சென்சார் + 2எம்பி மோனோ லென்ஸ் இருக்கலாம். முன்பக்கத்தை பொறுத்தவரை, 32எம்பி செப்ஃபி கேமரா இருக்கலாம்.

 

ப்ராசஸர்

கீக்பெஞ்ச் வழியாக கிடைத்த தகவலின்படி, ரெனோ 8டி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட் பேக் செய்யப்படலாம். அது 8ஜிபி வரையிலான ரேம் மற்றும் 128ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜுடன் அனுப்பப்படலாம்.

கனெக்டிவிட்டி

ப்ளூடூத் எஸ்இஜி லிஸ்டிங் வழியாக கிடைத்த தகவலின்படி, இந்த ஸ்மார்ட்போன் ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டியை ஆதரிக்கும் மற்றும் கலர்ஓஎஸ் 13 உடன் அனுப்பப்படும். பேட்டரியை பொறுத்தவரை, எவ்வளவு எம்ஏஎச் திறனை பேக் செய்யும் என்பது பற்றி விவரங்கள் இல்லை. ஆனால் 33W வயர்டு பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் என்பது போல் தெரிகிறது.

அறிமுகத் தேதி

ஒப்போவின் புதிய ரெனோ 8டி 5ஜி ஸ்மார்ட்போன், இந்தியாவில் மட்டுமல்ல பிலிப்பைன்ஸ் நாட்டிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது; ஆனால் பிப்ரவரி 3 ஆம் தேதிக்கு பதிலாக, பிப்ரவரி 8 அன்று அறிமுகமாகும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

The post பிப்ரவரி 3ல் வெளியாகிறது ஒப்போ ரெனோ 8டி 5ஜி! first appeared on .

]]>
ரெனோ சீரிஸில் அடுத்த 5G மொபைலை வெளியிடுகிறது ஒப்போ! https://www.91mobiles.com/tamil/oppo-reno-8t-5g-budget-mobile-price-in-india/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=oppo-reno-8t-5g-budget-mobile-price-in-india Wed, 18 Jan 2023 12:47:47 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5164 OPPO Reno 8T 5G மொபைல் வரும் மாதத்தில் இந்தியாவில் வெளியிடத் தயாராக உள்ளது. முன்னதாக, ஸ்மார்ட்போன் OPPO F23 5G என மறுபெயரிடப்படலாம் என்று கூறப்பட்டது. ஆனால், இப்போது, ​​இரண்டு ஸ்மார்ட்போன்களும் இந்தியாவில் தனித்தனியாக வெளியிடப்படும் என்று அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.   OPPO Reno 8T 5G இந்திய அறிமுகம் எப்போது? OPPO Reno 8T 5G இந்தியாவில் பிப்ரவரி முதல் வாரத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இருப்பினும், டிப்ஸ்டர் முகுல் ஷர்மாவை மேற்கோள் காட்டி […]

The post ரெனோ சீரிஸில் அடுத்த 5G மொபைலை வெளியிடுகிறது ஒப்போ! first appeared on .

]]>

Highlights

  • சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஒப்போ (Oppo ) நிறுவனம் விரைவில் இந்தியாவில் அதன் பிரபலமான ரெனோ தொடரிலிருந்து புதிய மொபைலை வெளியிட இருக்கிறது.
  • இது ஒப்போ ரெனோ 8T 5G (Oppo Reno 8T 5G) என்ற பெயரில் வெளியாகும்.

OPPO Reno 8T 5G மொபைல் வரும் மாதத்தில் இந்தியாவில் வெளியிடத் தயாராக உள்ளது. முன்னதாக, ஸ்மார்ட்போன் OPPO F23 5G என மறுபெயரிடப்படலாம் என்று கூறப்பட்டது. ஆனால், இப்போது, ​​இரண்டு ஸ்மார்ட்போன்களும் இந்தியாவில் தனித்தனியாக வெளியிடப்படும் என்று அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.

 

OPPO Reno 8T 5G இந்திய அறிமுகம் எப்போது?

OPPO Reno 8T 5G இந்தியாவில் பிப்ரவரி முதல் வாரத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இருப்பினும், டிப்ஸ்டர் முகுல் ஷர்மாவை மேற்கோள் காட்டி சரியான வெளியீட்டு தேதி எதுவும் இல்லை என்று அறிக்கை கூறுகிறது. பெரும்பாலும் இந்த டிவைஸ் பிப்ரவரி மதத்தின் நடுப்பகுதிக்குள் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் OPPO Reno 8T 5G விலை, ரேம் மற்றும் சேமிப்பு

இது ஒரு 5ஜி மொபைல் என்பதாலும், இதில் வழங்கப்பட இருக்கும் வசதிகளை வைத்துப் பார்க்கும் போது, இந்த புதிய OPPO Reno 8T 5G மொபைலின் விலை ரூ. 32,000 இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், இந்த புது Oppo Reno 8T 5G வரவிருக்கும் ஸ்மார்ட்போன்  குறைந்தது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலாக அறிமுகம் செய்யப்படும் என்று டிப்ஸ்டர் உறுதிப்படுத்தியுள்ளார். இத்துடன் கூடுதல் ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல்களும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

OPPO Reno 8T 5G சிறப்பம்சம்

OPPO Reno 8T 5G ஆனது 120Hz ரெப்ரெஷ் ரேட் வீதத்துடன் 6.67 அங்குல OLED 10 பிட் டிஸ்பிளேவைக்  கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போனில் 108 MP பிரைமரி கேமரா மற்றும் பின்புறத்தில் டூயல் 2 MP சென்சார்கள் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் Qualcomm Snapdragon 695 5G சிப்செட் மூலம் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 67W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,800mAh பேட்டரியைக் கொண்டிருக்கும். இது ஆண்ட்ராய்டு 13 இல் இயங்கும் என்றும் லீக் தகவல் குறிப்பிட்டுள்ளது.

 

4ஜி வேரியண்ட்

அதேபோல், இந்த ஸ்மார்ட்போனின் 4ஜி மாடலும் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது. இது மீடியாடெக் ஹீலியோ G99 சிப்செட் மூலம் இயக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது OPPO Reno 8T 4G என்று அழைக்கப்படலாம் என்றும் ஊகிக்கப்படுகிறது. இது 33W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை வழங்கும். இதன் விலை ரூ. 20,000 முதல் ரூ.25,000 விலைக்குள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புது போன் வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலோ அல்லது அருமையான ஒரு 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என்ற ஐடியா இருந்தாலோ அடுத்த மாதம் வரை காத்திருந்து இந்த போனை வாங்கலாம்.

2022ஆம் ஆண்டின் சிறந்த மொபைலைத் தேர்ந்தெடுக்க இங்கே க்ளிக் செய்யவும்!

https://www.indiangadgetawards.com/

 

The post ரெனோ சீரிஸில் அடுத்த 5G மொபைலை வெளியிடுகிறது ஒப்போ! first appeared on .

]]>