ROG Phone 7 series https://www.91mobiles.com/tamil Mon, 27 Mar 2023 12:30:26 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ASUS ROG ஃபோன் 7 இரண்டு மாடல்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது https://www.91mobiles.com/tamil/asus-rog-phone-7-specifications-models-tipped/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=asus-rog-phone-7-specifications-models-tipped Mon, 27 Mar 2023 12:30:26 +0000 https://www.91mobiles.com/tamil/?p=7114   ASUS தனது புதிய ROG போன் சீரிஸை உலகம் முழுவதும் வெளியிட தயாராகி வருகிறது. ASUS ROG Phone 7 ஆனது ஏப்ரல் 13 ஆம் தேதி உலக அளவிலும், இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று ஏசஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது . வரவிருக்கும் சீரிஸ், ‘ROG Phone 7’ என்று அழைக்கப்படும் என்று நிறுவனம் அறிவித்திருந்தாலும், இந்த சீரிஸில் எத்தனை மாடல் போன்கள் வெளியாகும் என்பதைக் குறிப்பிடவில்லை. இருப்பினும், சமீபத்திய கசிவு இந்த புதிய ROG சீரிஸில் […]

The post ASUS ROG ஃபோன் 7 இரண்டு மாடல்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது first appeared on .

]]>

Highlights

  • ROG Phone 7 சீரிஸை ஏப்ரல் 13 ஆம் தேதி அறிமுகப்படுத்தும் என்று ASUS தெரிவித்துள்ளது.
  • இந்த சீரிஸில் ROG Phone 7 மற்றும் ROG Phone 7 Ultimate ஆகிய இரண்டு மாடல்கள் உள்ளன.
  • இந்த கேமிங் ஸ்மார்ட்போன்கள் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 SoC ஆல் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

ASUS தனது புதிய ROG போன் சீரிஸை உலகம் முழுவதும் வெளியிட தயாராகி வருகிறது. ASUS ROG Phone 7 ஆனது ஏப்ரல் 13 ஆம் தேதி உலக அளவிலும், இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று ஏசஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது . வரவிருக்கும் சீரிஸ், ‘ROG Phone 7’ என்று அழைக்கப்படும் என்று நிறுவனம் அறிவித்திருந்தாலும், இந்த சீரிஸில் எத்தனை மாடல் போன்கள் வெளியாகும் என்பதைக் குறிப்பிடவில்லை. இருப்பினும், சமீபத்திய கசிவு இந்த புதிய ROG சீரிஸில் வெளியாகும் மொபைல் மாடல்கள் மற்றும் அவற்றின் விவரக்குறிப்புகள் குறித்து சிறிது வெளிச்சம் போட்டுள்ளது.

டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில் ROG ஃபோன் 7 சீரிஸில் வெண்ணிலா ROG ஃபோன் 7 மற்றும் ROG ஃபோன் 7 அல்டிமேட் ஆகிய இரண்டு மாடல்கள் இருக்கும் என்று தெரிவித்தார் . அவரைப் பொறுத்தவரை, ASUS ஆனது ROG Phone 7 Pro ஐ கைவிட திட்டமிட்டுள்ளது. இது ஒரு ஆச்சரியமான விஷயம் ஆகும். ASUS ROG Phone 7 தொடரின் அம்சங்கள், விவரக்குறிப்புகள் மற்றும் பிற தகவல்களைப் பார்ப்போம்.

 

ASUS ROG ஃபோன் 7 விவரக்குறிப்புகள்

யாதவின் சமீபத்திய ட்வீட் படி, ASUS ROG Phone 7 சீரிஸ், ROG Phone 7 மற்றும் ROG Phone 7 Ultimate என  இரண்டு கேமிங் ஸ்மார்ட்போன்களைக் கொண்டிருக்கும். ASUS இன் வரவிருக்கும் மொபைல்களில் ஹை-எண்ட் போன்களில் இருக்கும் குவால்காமின் முதன்மையான ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 SoC இடம்பெறும். சாம்சங் கேலக்ஸி S23 தொடரில் காணப்படும் ஓவர்லாக் செய்யப்பட்ட பதிப்பாக இல்லாமல், ROG ஃபோன் 7 சீரிஸில் ஸ்னாப்டிராகன் 8 Gen 2 SoCன் ஸ்டாண்டர்டு மாடல் சிப்செட் உடன் வரலாம். இதன் அதிகபட்ச க்ளாக் ஸ்பீடு 3.2GHz.

 

கேமரா

ROG ஃபோன் 7 சீரிஸில் 50MP Sony IMX766 முதன்மை கேமரா சென்சார், 13MP அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 8MP மேக்ரோ சென்சார் ஆகியவற்றைக் கொண்ட மூன்று கேமரா அமைப்பு இருக்கும் என்று இணைய கசிவு கூறுகிறது. இந்த மொபைல்கள் 32MP முன் கேமரா சென்சார் மற்றும் 239 கிராம் எடையுடன் 173 x 77 x 10.3mm அளவைக் கொண்டிருக்கும்.

மெமரி

ROG ஃபோன் 7 அல்டிமேட் 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி சேமிப்பகத்தைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது ஸ்டாண்டர்டு மாடலின் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி சேமிப்பகத்தை விட அதிக மெமரியைக் கொண்டு இருக்கும். இந்த மொபைல்கள் ஆண்ட்ராய்டு 13 இல் நேரடியாக இயங்கும் மற்றும் கஸ்டமைஸ் செய்யப்பட்ட ROG ​​UI லேயருடன் இருக்கும்.

 

டிஸ்ப்ளே & பேட்டரி

ROG ஃபோன் 7 சீரிஸ் முழு HD+ அடர்த்தி மற்றும் 165Hz ரிஃப்ரெஷ் ரேட்டுடன் 6.8 அங்குல AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் என்று முந்தைய அறிக்கைகள் சுட்டிக்காட்டின. இது தவிர, இந்தத் சீரிஸில் 6000mAh பேட்டரி மற்றும் 65W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த சீரிஸ் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த மொபைல்களைப் பற்றி மேலும் விவரங்கள் கிடைத்தவுடன்  தெரியப்படுத்துகிறோம்.

The post ASUS ROG ஃபோன் 7 இரண்டு மாடல்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது first appeared on .

]]>