RRR https://www.91mobiles.com/tamil Mon, 16 Jan 2023 12:44:18 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 இன்னும் இரண்டு சர்வதேச விருதுகளைப் பெற்றது RRR! https://www.91mobiles.com/tamil/rrr-film-won-two-critics-choice-awards/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=rrr-film-won-two-critics-choice-awards Mon, 16 Jan 2023 13:07:51 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5039 Preview (opens in a new tab) ராஜமெளலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் கடந்தாண்டு மார்ச் 24ம் தேதி வெளியானது. ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உலகம் முழுவதும் பான் இந்தியா படமாக வெளியான ஆர்.ஆர்.ஆர் பாக்ஸ் ஆபிஸில் 1200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. Critics Choice Awards தெலுங்கு திரையுலகின் பிரம்மாண்டமான இயக்குநர் என கொண்டாடப்படும் ராஜமெளலி, தற்போது சர்வதேச அளவில் அதிக கவனம் ஈர்த்து வருகிறார். அவரது இயக்கத்தில் கடந்தாண்டு மார்ச் […]

The post இன்னும் இரண்டு சர்வதேச விருதுகளைப் பெற்றது RRR! first appeared on .

]]>
Preview (opens in a new tab)

Highlights

  • RRR படத்தில் இடம்பெற்ற நாட்டு கூத்து பாடல் கோல்டன் குளோப் விருதை வென்ற நிலையில், மேலும் இரு சர்வதேச விருதுகளை வென்று அசத்தியுள்ளது.
  • சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படம், சிறந்த பாடல் என இரு பிரிவுகளில் Critics Choice Awards வென்று சாதனை படைத்துள்ளது.

ராஜமெளலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் கடந்தாண்டு மார்ச் 24ம் தேதி வெளியானது. ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உலகம் முழுவதும் பான் இந்தியா படமாக வெளியான ஆர்.ஆர்.ஆர் பாக்ஸ் ஆபிஸில் 1200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது.

Critics Choice Awards

தெலுங்கு திரையுலகின் பிரம்மாண்டமான இயக்குநர் என கொண்டாடப்படும் ராஜமெளலி, தற்போது சர்வதேச அளவில் அதிக கவனம் ஈர்த்து வருகிறார். அவரது இயக்கத்தில் கடந்தாண்டு மார்ச் மாதம் ரிலீஸான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், ஸ்ரேயா, அஜய்தேவ் கன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படம் 1200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்திருந்தது. பாக்ஸ் ஆபிஸ் வசூல் வேட்டையை தொடர்ந்து தற்போது சர்வதேச விருதுகளை வென்று அசத்தி வருகிறது.

இரண்டு விருதுகள்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற Critics Choice Awards விழாவில், இரண்டு பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது. ஆர்.ஆர்.ஆர் வெளியானதில் இருந்தே இந்தப் படத்திற்கு சர்வதேச விருதுகள் கிடைக்கும் என ஹாலிவுட் பிரபலங்கள் கூறி வந்தனர். இந்நிலையில், Critics Choice Awards விழாவில் சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்துக்கான விருது ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்துக்கு கிடைத்துள்ளது. அதேபோல் சிறந்த பாடலுக்கான விருதும் இந்தப் படத்தில் இடம்பெற்ற நாட்டு கூத்து பாடலுக்கு வழங்கப்பட்டுள்ளது. Critics Choice Awards விழாவில் பங்கேற்ற ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினர் இந்த விருதுகளை வென்றதை உற்சாகமாக கொண்டாடினர். ராஜமெளலியும் அவரது மகன் கார்த்திகேயாவும் இரண்டு விருதுகளுடன் சியர்ஸ் அடித்து உற்சாகமாக போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கீரவாணி

இந்திய சுதந்திரத்துக்காக போராடிய அல்லுரி சீதாராம ராஜூ, கொமாரம் பீம் இருவரும் நண்பர்களாக இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் உருவானது தான் இந்த ஆர்.ஆர்.ஆர். ராஜமெளலியின் உறவினரும் முன்னணி மியூசிக் கம்போஸருமான கீரவாணி இந்தப் படத்துக்கு இசையமைத்திருந்தார். தற்போது Critics Choice Awards வென்ற நாட்டு கூத்து பாடல், கடந்த வாரம் கோல்டன் குளோப் விருதையும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த விழாவில் கீரவாணிக்கு கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக Critics Choice Awards விழாவில் ஆர்.ஆர்.ஆர் படத்துக்கு இரு பிரிவுகளில் விருது கிடைத்துள்ளது. ஆஸ்கர் ரேஸில் எகிறும் எதிர்பார்ப்பு ஆஸ்கர் ரேஸில் எகிறும் எதிர்பார்ப்பு ஹாலிவுட் திரைப்படங்களின் மேக்கிங் எப்படி இருக்குமோ, அதற்கு இணையாக உருவாகியுள்ள ஆர்.ஆர்.ஆர், ஆஸ்கர் விருதை வெல்லுமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பாஃப்தா & ஆஸ்கர்

15 பிரிவுகளில் இந்த படம் ஆஸ்கர் போட்டியில் நாமினேட் ஆகியுள்ளது. அதேபோல் பாஃப்தா விருதுக்கும் ஆர்.ஆர்.ஆர் நாமினேட் செய்யப்பட்டுள்ளது. வரும் 19ம் தேதி பாஃப்தா விருது விழாவும், 24ம் தேதி ஆஸ்கர் விருதுகளும் வழங்கப்படவுள்ளன. இதனால் ஆர்.ஆர்.ஆர் படத்துக்கு இந்த விருதுகளும் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

The post இன்னும் இரண்டு சர்வதேச விருதுகளைப் பெற்றது RRR! first appeared on .

]]>
RRR படத்தின் ‘நாட்டு கூத்து’ பாடலுக்கு கோல்டன் க்ளோப் விருது! https://www.91mobiles.com/tamil/rrr-team-for-getting-golden-globe-award-for-nattu-nattu-song/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=rrr-team-for-getting-golden-globe-award-for-nattu-nattu-song Wed, 11 Jan 2023 12:28:54 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4913 ஆர்ஆர்ஆர் படத்தின் ‘நாட்டு கூத்து’ பாடல் சிறந்த பாடலுக்கான கோல்டன் க்ளோப் விருதை தட்டிச் சென்றுள்ளது. இது ஆஸ்கருக்கு நிகரான விருது ஆகும். இந்த விருதை பெற்றுள்ள முதல் ஆசிய பாடல் என்ற பெருமையையும் நாட்டு கூத்து பாடல் பெற்றுள்ளது. இந்த விருதை படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி பெற்றுள்ளார். அவருக்கு சர்வதேச அளவில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. ஆர்ஆர்ஆர் படம் இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் சுதந்திர போராட்டக் காலத்தை மையமாக வைத்து வெளியான ஆர்ஆர்ஆர் படம் சர்வதேச […]

The post RRR படத்தின் ‘நாட்டு கூத்து’ பாடலுக்கு கோல்டன் க்ளோப் விருது! first appeared on .

]]>

ஆர்ஆர்ஆர் படத்தின் ‘நாட்டு கூத்து’ பாடல் சிறந்த பாடலுக்கான கோல்டன் க்ளோப் விருதை தட்டிச் சென்றுள்ளது. இது ஆஸ்கருக்கு நிகரான விருது ஆகும்.

இந்த விருதை பெற்றுள்ள முதல் ஆசிய பாடல் என்ற பெருமையையும் நாட்டு கூத்து பாடல் பெற்றுள்ளது. இந்த விருதை படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி பெற்றுள்ளார். அவருக்கு சர்வதேச அளவில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

ஆர்ஆர்ஆர் படம்

இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் சுதந்திர போராட்டக் காலத்தை மையமாக வைத்து வெளியான ஆர்ஆர்ஆர் படம் சர்வதேச அளவில் 1200 கோடி ரூபாய் வசூலை குவித்தது. இந்தப் படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட நடிகர்கள் முக்கியமான கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

இசையமைப்பாளர் கீரவாணி

இந்தப் படத்திற்கு பிரபல தெலுங்குப்பட இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. குறிப்பாக படத்தின் நாட்டு நாட்டு பாடல் மிகச்சிறப்பாக அமைந்தது. இந்தப் பாடலில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் போட்டிப் போட்டு நடனமாடியிருந்தனர். இந்தப் பாடல் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தது.

சர்வதேச கவனம்

ஆர்ஆர்ஆர் படம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்ததுடன் பல விருதுகளையும் கைப்பற்றியுள்ளது. தற்போது ஆஸ்கார் விருதிற்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதனிடையே இந்தப் படத்தின் நாட்டு கூத்து பாடல் கோல்டன் க்ளோப் விருதை தட்டிச் சென்றுள்ளது. இதையடுத்து அமெரிக்காவில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் படக்குழுவினர் பங்கேற்றனர்.

கோல்டன் க்ளோப் விருது

ஆர்ஆர்ஆர் படத்தின் இயக்குநர் ராஜமௌலி, ராம்சரண், ஜூனியர் என்டிஆர் மற்றும் இசையமைப்பாளர் கீரவாணி உள்ளிட்டவர்கள் தங்களது குடும்பத்தினருடன் இந்த விருது வழங்கும் விழாவில் பங்கேற்றனர். விழாவில் கெத்தாக சென்று விருதை பெற்றுக் கொண்டார் இசையமைப்பாளர் கீரவாணி. அவருக்கு சர்வதேச அளவில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

இளையராஜா வாழ்த்து

ஏஆர் ரஹ்மான், தெலுங்குப்பட நடிகர் மகேஷ்பாபு உள்ளிட்டவர்களும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். இதனிடையே இசையமைப்பாளர் இளையராஜாவும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். இசையமைப்பாளர் கீரவாணி, இயக்குநர் ராஜமௌலி மற்றும் படக்குழுவினருக்கு அவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இளையராஜா மகிழ்ச்சி

படக்குழுவினரின் கடின உழைப்பே அவர்களுக்கு இந்த விருதை பெற்றுத் தந்துள்ளதாகவும் இதையடுத்து தான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள இளையராஜா, படக்குழுவினருக்கு வாழ்த்துக்களையும் பகிர்ந்துள்ளார். தொடர்ந்து ஆர்ஆர்ஆர் படக்குழுவினருக்கு பலதரப்பட்டவர்களிடம் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

The post RRR படத்தின் ‘நாட்டு கூத்து’ பாடலுக்கு கோல்டன் க்ளோப் விருது! first appeared on .

]]>
கோல்டன் குளோப் விருது நாமினேஷனுக்குச் சென்றது ராஜமெளலியின் RRR! https://www.91mobiles.com/tamil/rrr-movie-got-nominated-in-golden-global-award/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=rrr-movie-got-nominated-in-golden-global-award Tue, 13 Dec 2022 11:26:28 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4275 இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலி இயக்கத்தில் உருவான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் கோல்டன் குளோப் விருது நாமினேஷனில் இடம் பிடித்துள்ளது. இயக்குனர் ராஜமௌலி நான் ஈ, பாகுபலி, பாகுபலி 2 போன்ற தரமான படங்களை இயக்கி வருகிறார். இந்த படங்கள் வர்த்தக ரீதியிலும், விமர்சன அளவிலும் பிரமாண்ட வரவேற்பை பெற்றன. இவர் இயக்கிய பாகுபலி 2 திரைப்படம் ஒட்டுமொத்தமாக ரூ. 1800 கோடி அளவுக்கு வசூலித்தது. இந்திய அளவில் அமீர் கானின் தங்கல் திரைப்படத்திற்கு அடுத்தபடியாக பாகுபலி 2 திரைப்படம் […]

The post கோல்டன் குளோப் விருது நாமினேஷனுக்குச் சென்றது ராஜமெளலியின் RRR! first appeared on .

]]>

இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலி இயக்கத்தில் உருவான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் கோல்டன் குளோப் விருது நாமினேஷனில் இடம் பிடித்துள்ளது. இயக்குனர் ராஜமௌலி நான் ஈ, பாகுபலி, பாகுபலி 2 போன்ற தரமான படங்களை இயக்கி வருகிறார். இந்த படங்கள் வர்த்தக ரீதியிலும், விமர்சன அளவிலும் பிரமாண்ட வரவேற்பை பெற்றன.

இவர் இயக்கிய பாகுபலி 2 திரைப்படம் ஒட்டுமொத்தமாக ரூ. 1800 கோடி அளவுக்கு வசூலித்தது. இந்திய அளவில் அமீர் கானின் தங்கல் திரைப்படத்திற்கு அடுத்தபடியாக பாகுபலி 2 திரைப்படம் வசூலில் 2ம் இடம் வகிக்கிறது.

பாகுபலி என்ற மகத்தான வெற்றிப்படத்தை கொடுத்த ராஜமௌலி, ஆர்.ஆர்.ஆர் என்ற படத்தை இயக்கி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவன், ஆலியா பட், ஸ்ரேயா சரண் ஆகியோர் நடித்திருந்தனர். தமிழ்,தெலுங்கு, இந்தி,மலையாளம், கன்னடம் என பான் இந்திய திரைப்படமாக வெளியான இப்படம் வசூலை வாரிக்குவித்தது.

நண்பர்கள் பற்றிய கதை

சுதந்திரத்துக்காகப் போராடிய இரண்டு நண்பர்களைப் பற்றிய கதை தான் ஆர்.ஆர்.ஆர். இதில், அல்லுரி சீதாராம ராஜு என்ற ரோலில் ராம்சரணும், கொமாரம் பீம் என்ற வேடத்தில் ஜூனியர் என்டிஆரும் நடித்திருந்தார்கள். இருவருமே சிறந்த நடிகர்களாக இருந்த போதும், ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்று சொல்லும் அளவுக்கு இருவரின் நடிப்பும் உச்சு கொட்ட வைத்தது.

கோல்டன் குளோப்

இந்நிலையில் இத்திரைப்படம் 80வது குளோப் விருது நாமினேஷனில் தேர்வாகி உள்ளது டோலிவுட் ரசிகர்களை மட்டுமல்லாது இந்திய ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. திரைத்துறையின் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கு இணையானதாக கோல்டன் குளோப் விருது விளங்குகிறது. இந்த விருது வழங்கும் விழா அடுத்த மாதம் ஜனவரி 10ந் தேதி அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது. இதில் சிறந்த நடிகர், நடிகை, ஆங்கிலம் அல்லாத படம் உள்ளிட்ட பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்ட 5 படங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் ‘ஆங்கிலம் அல்லாத சிறந்த திரைப்படம்’ பிரிவிலும், ‘சிறந்த பாடல்’ பிரிவிலும் RRR திரைப்படம் நாமினேஷன் ஆகி இருக்கிறது.

ரசிகர்கள் மகிழ்ச்சி

இதில், ராஜமௌலி இயக்கிய ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஆங்கிலம் மொழி இல்லாத படப்பிரிவிலும், நாட்டு நாட்டு பாடல் சிறந்த பாடல் பிரிவிலும் தேர்வாகி உள்ளது. ஜனவரி 10ந் தேதி நடைபெறும் விழாவில் ஆர்.ஆர்.ஆர் படம் விருதை பெறுமா? இல்லையா என்பது தெரியவரும். இதற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் டுவிட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். இவர் தவிர சினிமா துறை சார்ந்த பலரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

The post கோல்டன் குளோப் விருது நாமினேஷனுக்குச் சென்றது ராஜமெளலியின் RRR! first appeared on .

]]>
ரசூல் பூக்குட்டியின் சர்ச்சை ட்வீட்! https://www.91mobiles.com/tamil/rusul-pookuttis-tweets-rrr-movie-is-a-gay-love-story/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=rusul-pookuttis-tweets-rrr-movie-is-a-gay-love-story Tue, 05 Jul 2022 11:49:41 +0000 https://www.91mobiles.com/tamil/?p=764 ‘Slumdog Millionaire’ படத்துக்காக சிறந்த சவுண்ட் மிக்ஸிங்கிற்கான ஆஸ்கர் விருதை பெற்றவரும், தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி எனப் பல மொழிப்படங்களில் சவுண்ட் டிசைனர், எடிட்டர் மற்றும் ஆடியோ மிக்ஸ்ராகப் பணியாற்றி வருபவர் ரசூல் பூக்குட்டி.. இவர், ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தை விமர்சித்து பதிவிட்ட ட்வீட் தற்போது பேசுபொருளாகியுள்ளது. சமீபத்தில் இயக்குநர் ராஜமௌலியின் இயக்கத்தில், பிரமாண்டமாக வெளியான படம் ‘ஆர்.ஆர்.ஆர்’ (RRR). இத்திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் இருவரும் முன்னணி கதாபாத்திரத்தில் நண்பர்களாக நடித்திருந்தனர். இப்படம் […]

The post ரசூல் பூக்குட்டியின் சர்ச்சை ட்வீட்! first appeared on .

]]>
‘Slumdog Millionaire’ படத்துக்காக சிறந்த சவுண்ட் மிக்ஸிங்கிற்கான ஆஸ்கர் விருதை பெற்றவரும், தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி எனப் பல மொழிப்படங்களில் சவுண்ட் டிசைனர், எடிட்டர் மற்றும் ஆடியோ மிக்ஸ்ராகப் பணியாற்றி வருபவர் ரசூல் பூக்குட்டி.. இவர், ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தை விமர்சித்து பதிவிட்ட ட்வீட் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

rusul-pookuttis-tweets-rrr-movie-is-a-gay-love-story

சமீபத்தில் இயக்குநர் ராஜமௌலியின் இயக்கத்தில், பிரமாண்டமாக வெளியான படம் ‘ஆர்.ஆர்.ஆர்’ (RRR). இத்திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் இருவரும் முன்னணி கதாபாத்திரத்தில் நண்பர்களாக நடித்திருந்தனர். இப்படம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இப்படத்தை குறித்து ட்வீட் போட்ட ரசூல் பூக்குட்டி, “ஆர்.ஆர்.ஆர். படம் தன்பால் ஈர்ப்பாளர்களின் காதல் கதை (gay love story)” என்று விமர்சித்துள்ளார். மேலும் படத்தின் கதாநாயகியான ஆலியா பட், ஒரு செட் பிராப்பர்ட்டி போன்று பயன்படுத்தப்பட்டிருக்கிறார் என்றும் விமர்சித்துள்ளார்.
இதற்கு சமூக வலைதளப் பயனர்கள் பலர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

 

 

The post ரசூல் பூக்குட்டியின் சர்ச்சை ட்வீட்! first appeared on .

]]>