Ryder Supermax https://www.91mobiles.com/tamil Thu, 09 Mar 2023 12:53:55 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 டாப் ஸ்பீடு 60கிமீ, மைலேஜ் 100கிமீ.. அறிமுகமானது ‘ரைடர் சூப்பர்மேக்ஸ்’ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்! https://www.91mobiles.com/tamil/gemopai-ryder-supermax-electric-scooter-launched-in-india/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=gemopai-ryder-supermax-electric-scooter-launched-in-india Wed, 01 Mar 2023 12:06:29 +0000 https://www.91mobiles.com/tamil/?p=6160 பேட்டரி இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் BLDC Hub Motor பொருத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 2.7 kW பவரை வெளிப்படுத்தும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டிருப்பது AIS-156-க்கு இணக்கமான 1.8 kW பேட்டரி ஆகும். இதனை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 100 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டாப் ஸ்பீடு இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிகபட்சமாக மணிக்கு 60 கிலோ மீட்டர்கள் வேகத்தில் பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த […]

The post டாப் ஸ்பீடு 60கிமீ, மைலேஜ் 100கிமீ.. அறிமுகமானது ‘ரைடர் சூப்பர்மேக்ஸ்’ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்! first appeared on .

]]>

Highlights

  • இந்தியாவின் ஜெமோபாய் (Gemopai) நிறுவனம் ரைடர் சூப்பர்மேக்ஸ் (Ryder Supermax) என்ற புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
  • எலெக்ட்ரிக் ப்ளூ, கிராபைட் க்ரே, பிளாசிங் ரெட், ஸ்பார்க்கிளிங் ஒயிட், ஜாஸி நியான் மற்றும் ஃப்ளோசரண்ட் யெல்லோ என 6 கலர்களில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கிடைக்கும்.

பேட்டரி

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் BLDC Hub Motor பொருத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 2.7 kW பவரை வெளிப்படுத்தும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டிருப்பது AIS-156-க்கு இணக்கமான 1.8 kW பேட்டரி ஆகும். இதனை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 100 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாப் ஸ்பீடு

இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிகபட்சமாக மணிக்கு 60 கிலோ மீட்டர்கள் வேகத்தில் பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேகம் நமக்கு போதுமான ஒன்றாக இருக்கும். இதுதவிர இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஜெமோபாய் கனெக்ட் செயலி தொழில்நுட்ப வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நீங்கள் நிகழ் நேரத்தில் கண்காணிக்க முடியும்.

 

விலை

அத்துடன் பேட்டரி, வேகம் தொடர்பான எச்சரிக்கைகள் மற்றும் எப்போது சர்வீஸ் செய்ய வேண்டும்? என்ற நினைவூட்டல்களையும் இது வழங்கும். இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பி வழியில் ஜெமோபாய் ரைடர் சூப்பர்மேக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை 79,999 ரூபாய் மட்டுமே. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

முன்பதிவு

அத்துடன் இது அறிமுக சலுகை விலை என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே விலை உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஜெமோபாய் ரைடர் சூப்பர்மேக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் வரும் 10ம் தேதியில் இருந்து தொடங்குகின்றன. ஜெமோபாய் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் (Website) மூலமாகவோ அல்லது அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப்கள் (Dealerships) மூலமாகவோ வெறும் 2,999 ரூபாயை முன்பணமாக செலுத்தி, இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை புக்கிங் (Booking) செய்து கொள்ளலாம்.

யுலு மற்றும் பஜாஜ் ஆட்டோ நிறுவனங்கள் இணைந்து மிராகில் GR மற்றும் DeX GR மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த இரு நிறுவனங்களின் கூட்டணியில் தனிநபர் பயன்பாடு மற்றும் டெலிவரிக்காக தனித்தனி மாடல்கள் அறிமுகமாகி உள்ளன.

மிராகில் GR & டெக்ஸ் GR

இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களையும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் உற்பத்தி செய்ய இருக்கிறது. யுலு மற்றும் பஜாஜ் ஆட்டோ நிறுவனங்கள் இணைந்து மிராகில் GR மற்றும் DeX GR மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இரு மாடல்களும் யுலு நிறுவனத்தின் ஏஐ சார்ந்த தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டு பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இவற்றை செட்டாக் டெக்னாலஜி லிமிடெட் நிறுவனத்தால் விற்பனை செய்யப்படுகிறது. மிராகில் GR தனிநபர் பயன்பாட்டு வாகனம் ஆகும். இதனை குறைந்த தூர போக்குவரத்துக்கு ஏற்ற வாகனமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் மணிக்கு அதிகபட்சம் 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. DeX GR மாடல் வினியோக பயன்பாட்டுக்கு ஏற்றதாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் அதிகபட்சம் 150 கிலோ எடையை சுமந்து செல்ல முடியும்.

வசதிகள்

இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலும் ஹெட்லைட், டெயில்லைட், டெலிஸ்கோபிக் முன்புற ஃபோர்க்குகள், ரியர் ஸ்ப்ரிங்குகள், இரு வீல்களிலும் டிரம் பிரேக்குகள் உள்ளன. கடந்த மூன்று மாதங்களில் இந்த எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம் நாடு முழுக்க முக்கிய நகரங்களில் சுமார் ஒரு லட்சம் வாகனங்களை இயக்க ஆயத்தமாகி இருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் யுலு நிறுவனம் வருவாயை பத்து மடங்கு வரை அதிகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. பஜாஜ் ஆட்டோ உடனான கூட்டணி மூலம் யுலு நிறுவனம் செலவீனங்களை குறைப்பது மற்றும் ஒட்டுமொத்த நிதி மேலான்மையை மேம்படுத்தி, உள்நாட்டு உதிரிபாகங்களை பயன்படுத்துகிறது.

 

பேட்டரி

யுலு ஃப்ளீட்டில் கழற்றி மாற்றக்கூடிய பேட்டரிகள் உள்ளன. இவை யுமா எனர்ஜி மூலம் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. தற்போது பெங்களூரு, மும்பை மற்றும் டெல்லி பகுதிகளில் சுமார் 100 யுமா ஸ்டேஷன்கள் உள்ளன. 2024 வாக்கில் இந்த எண்ணிக்கையை 500 ஆக அதிகப்படுத்த இந்நிறுவனம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

 

The post டாப் ஸ்பீடு 60கிமீ, மைலேஜ் 100கிமீ.. அறிமுகமானது ‘ரைடர் சூப்பர்மேக்ஸ்’ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்! first appeared on .

]]>