samsung a14 5G https://www.91mobiles.com/tamil Fri, 10 Mar 2023 08:56:32 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 விரைவில் அறிமுகமாகிறதா சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி? இணையத்தில் கசிந்த படங்கள்! https://www.91mobiles.com/tamil/samsung-galaxy-a14-5g-phone-design-case-renders-leaked-online/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=samsung-galaxy-a14-5g-phone-design-case-renders-leaked-online Tue, 25 Oct 2022 13:59:35 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3201 விரைவில் சாம்சங் நிறுவனம் இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த புதிய போன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இப்போது அறிமுகமாகும் பட்ஜெட் விலை சாம்சங் போன்கள் அட்டகாசமான வடிவமைப்புடன் வெளிவருகின்றன. அதேபோல் மற்ற நிறுவனங்களை விட சிறந்த பாதுகாப்பு வசதி மற்றும் அதிக தரத்தை வழங்குகிறது. கேலக்ஸி ஏ14 5ஜி தற்போது கேலக்ஸி ஏ14 5ஜி போனின் படங்கள் மற்றும் சில அம்சங்கள் […]

The post விரைவில் அறிமுகமாகிறதா சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி? இணையத்தில் கசிந்த படங்கள்! first appeared on .

]]>

விரைவில் சாம்சங் நிறுவனம் இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த புதிய போன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இப்போது அறிமுகமாகும் பட்ஜெட் விலை சாம்சங் போன்கள் அட்டகாசமான வடிவமைப்புடன் வெளிவருகின்றன. அதேபோல் மற்ற நிறுவனங்களை விட சிறந்த பாதுகாப்பு வசதி மற்றும் அதிக தரத்தை வழங்குகிறது.

கேலக்ஸி ஏ14 5ஜி

தற்போது கேலக்ஸி ஏ14 5ஜி போனின் படங்கள் மற்றும் சில அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. இந்த கேலக்ஸி ஏ14 5ஜி போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம். இப்போது ஆன்லைனில் கசிந்த கேலக்ஸி ஏ14 5ஜி போனின் அம்சங்களைப்பார்ப்போம்.

கேமரா

சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி போன் ஆனது 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களுடன் வெளிவரும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதேபோல் செல்ஃபி கேமராவிற்கான வாட்டர் டிராப் நாச்சைக் கொண்டிருக்கிறது.

நிறங்கள்

சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி போனின் வால்யூம் மற்றும் பவர் பட்டன்கள் வலது பக்கத்தில் உள்ளன. கைரேகை ஸ்கேனர், டூயல் ஸ்பீக்கர்கள், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பச்சை, கருப்பு வெள்ளை நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஒரு நல்ல வடிவமைப்பு கொண்ட 5ஜி போனை வாங்க நினைக்கும் பயனர்கள், இந்த கேலக்ஸி ஏ14 5ஜி போன் அறிமுகமாகும் வரை காத்திருங்கள். சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி ஏ04இ ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி ஏ04இ

சாம்சங் கேலக்ஸி ஏ04இ ஸ்மார்ட்போன் ஆனது 6.5 அங்குல எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

கேமரா

சாம்சங் கேலக்ஸி ஏ04இ ஸ்மார்ட்போன் 13எம்பி பிரைமரி கேமரா+ 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. கூடவே செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது.

ஸ்டோரேஜ்

சாம்சங் கேலக்ஸி ஏ04இ ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி/128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதி உள்ளது. மேலும் இந்த போனில் ஆக்டோ-கோர் சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனம் One UI Core 4.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஏ04இ ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். குறிப்பாக 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11, புளூடூத் வி5.0, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ04இ ஸ்மார்ட்போன்.

The post விரைவில் அறிமுகமாகிறதா சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி? இணையத்தில் கசிந்த படங்கள்! first appeared on .

]]>