samsung flip 3 https://www.91mobiles.com/tamil Fri, 10 Mar 2023 02:58:36 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 மற்றும் கேலக்ஸி இசட் ஃபிளிப் 3 போன்களுக்கு 41% வரை தள்ளுபடி! https://www.91mobiles.com/tamil/diwali-mobile-offers-2022-samsung-galaxy-z-fold-3-and-flip-3-gets-heavy-discounts/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=diwali-mobile-offers-2022-samsung-galaxy-z-fold-3-and-flip-3-gets-heavy-discounts Wed, 12 Oct 2022 05:41:21 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2943 சாம்சங் (Samsung ) நிறுவனம் அதன் பிரபலமான இரண்டு பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களின் மீது 41% வரையிலான தள்ளுபடிகளை அறிவித்துள்ளது! அது சாம்சங் நிறுவனத்தின் போல்டபிள் ஸ்மார்ட்போன்களான – கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 மற்றும் கேலக்ஸி இசட் ஃபிளிப் 3 ஆகும். இந்த 2 ஸ்மார்ட்போன்களின் மீதும் என்னென்ன சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் கிடைக்கிறது. அவற்றை எந்த வலைதளத்தின் வழியாக வாங்கலாம் எல்லாவற்றையும் விரிவாகப் பார்க்கலாம்! Galaxy Z Fold 3 ஸ்மார்ட்போன் Flipkart Big Diwali […]

The post கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 மற்றும் கேலக்ஸி இசட் ஃபிளிப் 3 போன்களுக்கு 41% வரை தள்ளுபடி! first appeared on .

]]>

சாம்சங் (Samsung ) நிறுவனம் அதன் பிரபலமான இரண்டு பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களின் மீது 41% வரையிலான தள்ளுபடிகளை அறிவித்துள்ளது!

அது சாம்சங் நிறுவனத்தின் போல்டபிள் ஸ்மார்ட்போன்களான – கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 மற்றும் கேலக்ஸி இசட் ஃபிளிப் 3 ஆகும். இந்த 2 ஸ்மார்ட்போன்களின் மீதும் என்னென்ன சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் கிடைக்கிறது. அவற்றை எந்த வலைதளத்தின் வழியாக வாங்கலாம் எல்லாவற்றையும் விரிவாகப் பார்க்கலாம்!

Galaxy Z Fold 3 ஸ்மார்ட்போன் Flipkart Big Diwali Sale-ல் 41 சதவிகிதம் தள்ளுபடியில் கிடைக்கிறது. அதேசமயம், அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவலில் Galaxy Z Flip 3 ஆனது 38 சதவிகிதம் தள்ளுபடியில் கிடைக்கிறது.

 

கேலக்ஸி இசட் ஃபிளிப் 3

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 3 போன், இந்தியாவில் ரூ.77,999 என்கிற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது இந்த ஸ்மார்ட்போன், பிளிப்கார்ட்டில் ரூ.59,999 க்கு கிடைக்கிறது. கோடக் வங்கி மற்றும் எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தினால் ரூ.5,000 என்கிற உடனடி தள்ளுபடியையும் பெறலாம்.

முக்கிய அம்சங்கள்

கிரீம் மற்றும் பாண்டம் பிளாக் என்கிற 2 நிறங்களில் விற்பனை செய்யப்படும் கேலக்ஸி இசட் ஃபிளிப் 3 ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 ஆக்டா-கோர் சிப்செட், 120 ஹெர்ட்ஸ் டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளே, IPX8 ரேட்டிங் போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தில் வரும் இந்த போனில் ஆண்ட்ராய்டு 12-ஐ அப்கிரேட் செய்து கொள்ளும் வசதியும் இருக்கிறது. வாட்டர் ரெசிஸ்டென்ஸ் ரேட்டிங் உடன் வரும் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனும் இதுவாகும்! இதன் பின்பக்கத்தில் 12 மெகா பிக்சல் கேமராக்கள் இரண்டு வழங்கப்பட்டுள்ளன. முன்பக்கத்தில் 10 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த கேமராக்களைக் கொண்டு 4K வீடியோக்களைகூட எடுக்கலாம்.

கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3

சாம்சங் Galaxy Z Fold 3 மீதான தீபாவளி சலுகைகளை பொறுத்தவரை, நடந்துகொண்டிருக்கும் Amazon சிறப்பு விற்பனையில் இது பெரும் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்தியாவில் ரூ.1,42,999 என்கிற ஆரம்ப விலையில் வெளியிடப்பட்ட கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 ஆனது தற்போது ரூ.1,19,999 என்கிற ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் போது ரூ.10,000 மதிப்புள்ள Amazon கூப்பனையும் நீங்கள் பெறலாம். கூடுதலாக, நீங்களொரு ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு பயனராக இருந்தால் ரூ.4,000 என்கிற உடனடி தள்ளுபடியையும் பெறலாம்.

முக்கிய அம்சங்கள்

கிரீன், பிளாக் மற்றும் சில்வர் என்கிற 3 நிறத் தேர்வுகளில் கிடைக்கும் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 ஆக்டா-கோர் சிப்செட், S-Pen க்கான ஆதரவு, 12 மெகா பிக்சல் கேமராக்கள் மூன்று வழங்கப்பட்டுள்ளன. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புக்கு 10 மெகா பிக்சல் கேமரா மற்றும் 2 மெகா பிக்சல் அண்டர் டிஸ்ப்ளே கேமரா, 7.6-அங்குல இன்பினிட்டி ஃப்ளெக்ஸ் டிஸ்பிளே போன்ற முக்கிய அம்சங்களைக் கொண்டு இருக்கிறது.

பிற ஆஃபர்கள்

நடைபெற்று வரும் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் விற்பனையின் போது, கேலக்ஸி எஸ்22, கேலக்ஸி எஸ்22 பிளஸ், கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜி, கேலக்ஸி எம்32 ப்ரைம் எடிஷன் போன்ற பல போன்களுக்கும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

The post கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 மற்றும் கேலக்ஸி இசட் ஃபிளிப் 3 போன்களுக்கு 41% வரை தள்ளுபடி! first appeared on .

]]>