samsung Galaxy A34 5G https://www.91mobiles.com/tamil Mon, 13 Mar 2023 12:48:18 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 சாம்சங் கேலக்ஸி ஏ34 4ஜி மற்றும் கேலக்ஸி ஏ54 5ஜி மொபைல்கள் மார்ச் 16ல் அறிமுகம் செய்யப்படலாம் https://www.91mobiles.com/tamil/samsung-galaxy-a34-5g-and-a54-5g-phone-may-launch-in-india-on-16-march/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=samsung-galaxy-a34-5g-and-a54-5g-phone-may-launch-in-india-on-16-march Mon, 13 Mar 2023 12:48:18 +0000 https://www.91mobiles.com/tamil/?p=6816 சாம்சங் நிறுவனத்தின் புதிய ‘கேலக்ஸி ஏ’ சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் மார்ச் 16ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரில் வெளியாகும் மொபைல்களின் பெயர்களை நிறுவனம் குறிப்பிடாவிட்டாலும், அவை கேலக்ஸி ஏ34 5ஜி மற்றும் கேலக்ஸி ஏ54 5ஜி மொபைலாக இருக்கும் என்று சில்லரை விற்பனை கடைகள் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த இரண்டு போன்களின் விவரங்களைக் குறிப்பிடும் பக்கங்கள் சாம்சங் இணைய தளத்தில்  இப்போது லைவில் இருக்கிறது. இப்போது ஆன்லைனில் கசிந்த Samsung […]

The post சாம்சங் கேலக்ஸி ஏ34 4ஜி மற்றும் கேலக்ஸி ஏ54 5ஜி மொபைல்கள் மார்ச் 16ல் அறிமுகம் செய்யப்படலாம் first appeared on .

]]>

Highlights

  • சாம்சங் நிறுவனம் வரும் மார்ச் 16-ம் தேதி இந்தியாவில் கேலக்ஸி ஏ54 5ஜி, சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி போன்களை அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது.
  • இந்த இரண்டு போன்களுக்கான பக்கங்கள் சாம்சங்கின் இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் புதிய ‘கேலக்ஸி ஏ’ சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் மார்ச் 16ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரில் வெளியாகும் மொபைல்களின் பெயர்களை நிறுவனம் குறிப்பிடாவிட்டாலும், அவை கேலக்ஸி ஏ34 5ஜி மற்றும் கேலக்ஸி ஏ54 5ஜி மொபைலாக இருக்கும் என்று சில்லரை விற்பனை கடைகள் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த இரண்டு போன்களின் விவரங்களைக் குறிப்பிடும் பக்கங்கள் சாம்சங் இணைய தளத்தில்  இப்போது லைவில் இருக்கிறது. இப்போது ஆன்லைனில் கசிந்த Samsung கேலக்ஸி ஏ34 5ஜி போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

சிப்செட்

சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி அம்சங்கள் சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது தரமான மீடியாடெக் Dimensity 1080 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. அதே வேளையில் கேலக்ஸி ஏ54 5ஜி மொபைலில் சாம்சங்கின் எக்ஸினோஸ் 1380 சிப்செட் வழங்கப்பட்டு இருக்கும் எனத் தெரிகிறது. இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். இரண்டு மாடல்களும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும்.

டிஸ்ப்ளே

சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி ஸ்மார்ட்போன் 6.6 அங்குல ஃபுல் எச்டி பிளஸ் Infinity U டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. அதேவேளையில் கேலக்ஸி ஏ54 5ஜி 6.4 அங்குல டிஸ்ப்ளேவைக் கொண்டு இருக்கும் எனத் தெரிகிறது. இரண்டு மொபைல்களும் 1080 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் அறிமுகமாகும். இரண்டு மொபைல்களும் கார்னிங் கொரில்லா க்ளாஸ் 5 உடன் வெளியாகும்.

கேமரா

கேலக்ஸி ஏ34 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 48எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. அதேவேளையில் கேலக்ஸி ஏ54 5ஜி மொபைலானது 50எம்பி பிரைமரி கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இரண்டு போன்களிலும் 4கே வீடியோ எடுக்க முடியும்.  எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அருமையான புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே கேலக்ஸி ஏ34 5ஜி மொபைலில் 13எம்பி கேமராவும், கேலக்ஸி ஏ54 5ஜி மொபைலில் 32எம்பி கேமராவும் வழங்கப்பட்டு இருக்கும் எனத் தெரிகிறது.

மெமரி

கேலக்ஸி ஏ34 5ஜி ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக 1டிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த போன்கள் அறிமுகமாகும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் உள்ளது.

பிற வசதிகள்

சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். கூடவே 25 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். இவற்றோடு 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, புளூடூத், ஜிபிஎஸ், என்எஃப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த இரண்டு சாம்சங் கேலக்ஸி போன்களும் கொண்டுள்ளன.

விலை

இதில் சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி மொபைலின் 6ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்புத்திறன் கொண்ட மொபைல் ரூ.24,999 என்ற விலையிலும், சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி மொபைலின் 8ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்புத்திறன் கொண்ட மொபைல் ரூ.34,999 என்ற விலையிலும் வெளியாகலாம் என்ற வதந்தி இருக்கிறது.

The post சாம்சங் கேலக்ஸி ஏ34 4ஜி மற்றும் கேலக்ஸி ஏ54 5ஜி மொபைல்கள் மார்ச் 16ல் அறிமுகம் செய்யப்படலாம் first appeared on .

]]>