samsung galaxy S22 5G https://www.91mobiles.com/tamil Tue, 25 Oct 2022 14:02:47 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 டாப் 5 ப்ரீமியம் ஸ்மார்ட்போன்கள் https://www.91mobiles.com/tamil/top-feature-flagship-smartphones/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=top-feature-flagship-smartphones Tue, 25 Oct 2022 06:14:02 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3184 நீண்ட நாட்களாக ஒரு ப்ரீமியம் தர ஸ்மார்ட்போனை வாங்கத் திட்டமிட்டிருந்தால் எது பெஸ்ட் என்ற குழப்பம் வேணாம். நியாயமான விலையில் கிடைக்கும் ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களின் பட்டியல்.. இதோ உங்களுக்காக! இதில் ஐபோன் 13 முதல் மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா வரை அனைத்து ஸ்மார்ட்போன்களும் இடம்பெற்றிருக்கிறது. ஐபோன் 13 பண்டிகை காலத்தில் இந்தியாவில் சிறந்த சலுகையுடன் வாங்கக் கிடைக்கும் போன்களில் ஐபோன் 13 சிறந்த தேர்வாகும். இந்த ஐபோனுக்கான சலுகைகள் ஒவ்வொரு தளத்திலும் மாறுபடுகிறது. முன்பை விட […]

The post டாப் 5 ப்ரீமியம் ஸ்மார்ட்போன்கள் first appeared on .

]]>
நீண்ட நாட்களாக ஒரு ப்ரீமியம் தர ஸ்மார்ட்போனை வாங்கத் திட்டமிட்டிருந்தால் எது பெஸ்ட் என்ற குழப்பம் வேணாம். நியாயமான விலையில் கிடைக்கும் ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களின் பட்டியல்.. இதோ உங்களுக்காக! இதில் ஐபோன் 13 முதல் மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா வரை அனைத்து ஸ்மார்ட்போன்களும் இடம்பெற்றிருக்கிறது.

ஐபோன் 13

பண்டிகை காலத்தில் இந்தியாவில் சிறந்த சலுகையுடன் வாங்கக் கிடைக்கும் போன்களில் ஐபோன் 13 சிறந்த தேர்வாகும். இந்த ஐபோனுக்கான சலுகைகள் ஒவ்வொரு தளத்திலும் மாறுபடுகிறது. முன்பை விட ஐபோன் 13 மாடல் தற்போது மலிவு விலையில் கிடைக்கிறது. இந்த ஐபோன் 13 ஆனது தற்போது ரூ.59,999 என்ற விலைக்குக் கிடைக்கிறது. கார்டு சலுகைகளுடன் இந்த ஐபோன் மாடலை ரூ.58,000 என வாங்கலாம். டூயல் ரியர் கேமரா ஐபோன் 13 இல் 6.1 அங்குல சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. 12 எம்பி டூயல் ரியர் கேமரா, 12 எம்பி செல்ஃபி கேமரா இதில் பொருத்தப்பட்டிருக்கிறது. ஏ15 பயோனிக் சிப் மூலம் இந்த மாடல் இயக்கப்படுகிறது. நைட்மோட், 4கே டால்பி விஷன் எச்டிஆர் என பல்வேறு ஆதரவைக் கொண்டிருக்கிறது இந்த ஐபோனின் கேமரா.

கூகுள் பிக்சல் 7

நியாயமான விலையில் ப்ரீமியம் தர அம்சங்களுடன் கூகுள் பிக்சல் 7 போன் கிடைக்கிறது. இந்த டிஜிட்டல் யுகத்தில் பாதுகாப்பு என்பது மிக அவசியம். பாதுகாப்பு என்பதற்கு மிகவும் புகழ் பெற்ற ஸ்மார்ட்போன் கூகுள் பிக்சல் 7 ஆகும். Google Pixel 7 ஸ்மார்ட்போனின் ஒவ்வொரு அம்சமும் மேம்பட்டதாக இருக்கிறது.

கூகுள் பிக்சல் 7 ஸ்மார்ட்போனானது 6.3 அங்குல 90 ஹெர்ட்ஸ் அமோலெட் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது டென்சர் ஜி2 சிப்செட் ஆதரவைக் கொண்டுள்ளது. இதில் 50 எம்பி பிரதான கேமரா மற்றும் 12 எம்பி இரண்டாம் நிலை கேமரா என டூயல் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது. இந்த கூகுள் பிக்சல் போனில் 4335 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது அன்ப்ளர் அம்சத்தைக் கொண்டுள்ளது. இந்த கூகுள் பிக்சல் 7 ஸ்மார்ட்போன் ரூ.59,999 என்ற விலைக்குக் கிடைக்கிறது. ப்ரீமியம் ஸ்மார்ட்போனை வாங்கத் திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான தேர்வாகும்.

சாம்சங் கேலக்ஸி எஸ்22 5ஜி

சாம்சங் கேலக்ஸி எஸ்22 5ஜி ஸ்மார்ட்போனானது சமீபத்தில் பெரிய அளவு விலைக் குறைப்பைப் பெற்றது. இந்த ஸ்மார்ட்போனானது தற்போது ரூ.52,999 என கிடைக்கிறது. கார்டு சலுகைகள் உடன் இந்த ஸ்மார்ட்போனை ரூ.50,000 என்ற விலைக்கு வாங்கலாம். சாம்சங் கேலக்ஸி S22 5G ஸ்மார்ட்போன் உங்களுக்கு சிறந்த தேர்வான ப்ரீமியம் ஸ்மாரட்போன் ஆகும். 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு சாம்சங் கேலக்ஸி S22 5G ஆனது 6.1 அங்குல 120Hz AMOLED டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 50 எம்பி டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. தரமான புகைப்படம் மற்றும் வீடியோக்களை இதில் பதிவு செய்ய முடியும். இந்த ஸ்மார்ட்போனானது Exynos 2200 SoC மூலம் இயக்கப்படுகிறது. இதில் 3700 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. அதோடு 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் இதில் வழங்கப்பட்டிருக்கிறது.

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா

மோட்டோ நிறுவனத்தின் சமீபத்திய ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனும் ஐபோன், கூகுள் போனின் விலைப் பிரிவுக்கு இணையாக ரூ.59,999 என்ற விலையில் அறிமுகமாகி இருக்கிறது. ஐபோன் விலைக்கு மோட்டோ போனா என்று ஆச்சரியப்பட வேண்டாம். இதன் அம்சங்களும் வடிவமைப்பும் வேற லெவலில் இருக்கும்.

இந்த ஸ்மார்ட்போனானது வளைந்த காட்சி டிஸ்ப்ளே உடன் சமீபத்திய ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் உடன் கூடிய 6.67 அங்குல டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 200 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக மெகாபிக்சல் கேமரா மொபைல் என்பது இதுதான். அதேபோல் இதில் 60 எம்பி செல்ஃபி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இந்த ஸ்மார்ட்போனில் 125 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 4610 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

ஷாவ்மி 12 ப்ரோ

Xiaomi 12 Pro என்பது சிறந்த பல்வேறு மேம்பட்ட அம்சங்களைக் கொண்டிருக்கிறது. மலிவு விலைப் பிரிவில் புகழ் பெற்ற நிறுவனம் தான் ஷாவ்மி. ஆனால் ஷாவ்மி ப்ரீமியம் ரகத்திலும் சிறந்து விளங்குகிறது. அதை நிரூபிக்கும் ஸ்மார்ட்போன் தான் Xiaomi 12 Pro. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.54,999 ஆகும். 2கே தெளிவுத்திறன் மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவுடன் கூடிய 6.73 அங்குல அமோலெட் டிஸ்ப்ளே இந்த ஸ்மார்ட்போனில் பொருத்தப்பட்டுள்ளது. 8K வீடியோ பதிவுக்கான ஆதரவுடன் கூடிய 50 எம்பி டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இதில் உள்ளது. ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 எஸ்ஓசி மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. இதில் 4600 எம்ஏஎச் ஆதரவுடன் கூடிய 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இருக்கிறது. எந்த மொபைல் வாங்கலாம்னு முடிவு பண்ணிட்டீங்களா?

The post டாப் 5 ப்ரீமியம் ஸ்மார்ட்போன்கள் first appeared on .

]]>
சாம்சங் கேலக்ஸி S22 5G போனுக்கு ரூ10,000 தள்ளுபடி! https://www.91mobiles.com/tamil/samsung-2022-flagship-smartphone-galaxy-s22-5g-gets-rs-10000-discount-on-amazon/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=samsung-2022-flagship-smartphone-galaxy-s22-5g-gets-rs-10000-discount-on-amazon Tue, 11 Oct 2022 13:57:25 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2935 அமேசான் தளத்தின் தீபாவளி சிறப்பு விற்பனையில் சாம்சங் நிறுவனத்தின் லேட்டஸ்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஒன்றின் மீது ரூ.10,000 என்கிற நம்பமுடியாத தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதென்ன ஸ்மார்ட்போன்? அதன் பழைய மற்றும் புதிய விலை என்ன? அந்த Samsung ஸ்மார்ட்போனை வாங்குவது லாபமா? பார்க்கலாம். அது Samsung Galaxy S22 5G போன் ஆகும். இந்த சலுகையின் மூலம் இந்த Samsung Galaxy S22 5G மாடல் ஆனது சாம்சங் கேலக்ஸி S21 FE 5ஜி மாடலை விட […]

The post சாம்சங் கேலக்ஸி S22 5G போனுக்கு ரூ10,000 தள்ளுபடி! first appeared on .

]]>

அமேசான் தளத்தின் தீபாவளி சிறப்பு விற்பனையில் சாம்சங் நிறுவனத்தின் லேட்டஸ்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஒன்றின் மீது ரூ.10,000 என்கிற நம்பமுடியாத தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதென்ன ஸ்மார்ட்போன்? அதன் பழைய மற்றும் புதிய விலை என்ன? அந்த Samsung ஸ்மார்ட்போனை வாங்குவது லாபமா? பார்க்கலாம்.

அது Samsung Galaxy S22 5G போன் ஆகும். இந்த சலுகையின் மூலம் இந்த Samsung Galaxy S22 5G மாடல் ஆனது சாம்சங் கேலக்ஸி S21 FE 5ஜி மாடலை விட குறைவான விலைக்கு கிடைக்கிறது!

விலை

சாம்சங் நிறுவனத்தின் இந்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆனது இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.72,999 ஆகும். ஆனால் தற்போது இது ரூ.50,000க்கும் குறைவான விலைக்கு கிடக்கிறது! சாம்சங் கேலக்ஸி S22 5G ஆனது இப்போது ரூ.49,999 என்கிற விலைக்கு விற்பனையாகிறது. மேற்குறிப்பிட்ட தள்ளுபடி விலையானது அமேசான் வலைதளம் வழியாக கிடைக்கும் ரூ.10,000 மதிப்பிலான கூப்பனைப் பயன்படுத்திய பிறகு கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது!

ஃபாண்டம் பிளாக், ஃபாண்டம் ஒயிட் மற்றும் ஃபாண்டம் க்ரீன் என்கிற 3 நிறங்களில் கிடைக்கும் சாம்சங் கேலக்ஸி எஸ்22 மீது கிடைக்கும் இந்த தள்ளுபடி குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இருக்கும். எனவே, எஸ்22 மாடலை மேற்கூறிய தள்ளுபடி விலையில் நீங்கள் வாங்க விரும்பினால், நீங்கள் விரைவாக செயல்பட வேண்டும்!

Galaxy S22 5G மாடல் ஆனது – சாம்சங்கின் லேட்டஸ்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். இந்த ஸ்மார்ட்போனை வாங்குவதற்கு ஒரு சில காரணங்களை மட்டும் அல்ல, எக்கச்சக்கமான காரணங்களை முன்வைக்கலாம்! ஏனெனில், இது அலுமினியம் ஃப்ரேம் மற்றும் கிளாஸ் பேக்கை வழங்கும் பிரீமியம் கட்டமைப்பைக் கொண்டு இருக்கிறது. மேலும் இது 6.1 அங்குல அளவிலான ஃபுல்-எச்டி+ ரெசல்யூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளேவை கொண்டு இருக்கிறது. கூடுதலாக, முன் பக்கமும், பின் பக்கமும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ்+ பாதுகாப்பையும் கொண்டுள்ளது!

ப்ராசஸர்.. ஸ்டோரேஜ்.. கேமரா?

இது Qualcomm Snapdragon 8 Gen 1 SoC-ஐ பேக் பேக் செய்கிறது. இது ஒரு 5ஜி சிப்செட் ஆகும். இது 8GB ரேம் மற்றும் 256GB வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை, இது 50MP மெயின் லென்ஸ் + 12MP அல்ட்ரா-வைட் லென்ஸ் + 3x ஆப்டிகல் ஜூம் ஆதரவுடனான 10MP டெலிஃபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பைக் கொண்டு இருக்கிறது. முன்பக்கத்தில், 10எம்பி செல்ஃபி கேமரா உள்ளது.

பேட்டரி?

இது 25W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடனான 3,700mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது வயர்லெஸ் மற்றும் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது.

கனெக்டிவிட்டி

இந்த கேலக்ஸி எஸ்22 5ஜி மொபைல், வைஃபை 6, ப்ளூடூத் 5.2 மற்றும் GPS ஆகிய வசதிகளைக் கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் கொண்டு இயங்குகிறது; விரைவில் இது ஆண்ட்ராய்டு 13 அப்டேட்டையும் பெறும்.

ரூ.49,999 என்கிற சலுகை விலையில் கிடைக்கும் வரை, Galaxy S22 5G ஸ்மார்ட்போன் ஆனது மிஸ் பண்ணவே கூடாத ஒரு பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆகும். ஏனெனில் இது Android 13 OS-ஐ பெறும் மற்றும் செயல்திறனில் ஒரு குறையும் சொல்லாத ஃபிளாக்ஷிப் சிப்பைக் கொண்டுள்ளது, மேலும் இதன் கேமரா மூலம் 8K வீடியோக்களையும் எடுக்க முடியும்.

The post சாம்சங் கேலக்ஸி S22 5G போனுக்கு ரூ10,000 தள்ளுபடி! first appeared on .

]]>