samsung galaxy z flip 4 https://www.91mobiles.com/tamil Mon, 03 Oct 2022 06:33:52 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 புதிய நிறத்தில் வெளியானது Samsung Galaxy Z Flip 4 https://www.91mobiles.com/tamil/samsung-galaxy-z-flip-4-5g-gets-a-new-blue-colour-option-in-india/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=samsung-galaxy-z-flip-4-5g-gets-a-new-blue-colour-option-in-india Mon, 03 Oct 2022 06:33:52 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2712 Samsung Galaxy Z Flip 4 மற்றும் Galaxy Z Flip 4 ஆகிய ஸ்மார்ட்போன்களை இந்த ஆண்டின் துவக்கத்தில் சாம்சங் அறிமுகப்படுத்தியது. சாம்சங்கின் இந்த புதிய போல்டபில் ஸ்மார்ட்போன்கள் அதற்கு முந்தைய வெர்ஷனை விட மேம்பட்டதாக அறிமுகம் செய்யப்பட்டன. வளர்ந்து வரும் போல்டப்பில் ஸ்மார்ட்போன் வரிசையில் இந்த புதிய மாடல்கள் பெரியளவில் வரவேற்பைப் பெற்றன. புதிய நிறம் அதேசமயம் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட போன்களின் விலையை இந்தியா மாடல் போன்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் இவை சற்று […]

The post புதிய நிறத்தில் வெளியானது Samsung Galaxy Z Flip 4 first appeared on .

]]>

Samsung Galaxy Z Flip 4 மற்றும் Galaxy Z Flip 4 ஆகிய ஸ்மார்ட்போன்களை இந்த ஆண்டின் துவக்கத்தில் சாம்சங் அறிமுகப்படுத்தியது. சாம்சங்கின் இந்த புதிய போல்டபில் ஸ்மார்ட்போன்கள் அதற்கு முந்தைய வெர்ஷனை விட மேம்பட்டதாக அறிமுகம் செய்யப்பட்டன. வளர்ந்து வரும் போல்டப்பில் ஸ்மார்ட்போன் வரிசையில் இந்த புதிய மாடல்கள் பெரியளவில் வரவேற்பைப் பெற்றன.

புதிய நிறம்

அதேசமயம் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட போன்களின் விலையை இந்தியா மாடல் போன்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் இவை சற்று அதிகமான விலை ஏற்றத்துடன் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த Samsung Galaxy Z Flip வரிசையில் ஒரு புதிய கலர் வேரியண்ட் வெளியாகி இருக்கிறது. Samsung Galaxy Z Flip 4 போனை புதிய நிறத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நான்காவது புதிய நிறம் ஆகும். சாம்சங் நிறுவனம் முன்பு Z Flip 4 ஐ கிராஃபைட், பிங்க் கோல்ட் மற்றும் போரா பர்பில் வண்ணங்களில் அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. Samsung Galaxy Z Flip 4 ஸ்மார்ட்போனின் விலை, சிறப்பம்சம் மற்றும் பிற விவரங்களைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

விலை

சாம்சங் இந்தியா, Samsung Galaxy Z Flip 4 5G மாடலுக்கான புதிய நீல வண்ண விருப்பத்தை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த போல்டபில் ஸ்மார்ட்போன் வெளிர் நீல நிறத்தில் உள்ளது. அதேசமயம், கேமரா அமைப்பு கருப்பு நிறத்தில் உள்ளது. இது இந்தியாவில் போரா பர்ப்பிள், கிராஃபைட் மற்றும் பிங்க் கோல்ட் வண்ண விருப்பங்களுக்கு அடுத்ததாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 8GB + 128GB மற்றும் 8GB + 256GB ஸ்டோரேஜ் முறையே ரூ.89,999 மற்றும் ரூ.94,999 விலையில் கிடைக்கிறது. தற்போதைய சலுகைகளின் ஒரு பகுதியாக, HDFC பேங்க் கார்டைக் கொண்ட வாடிக்கையாளர்கள் ரூ.7,000 கேஷ் பேக் சலுகையுடன் வாங்கலாம. அதே போல், Samsung Galaxy Z Flip 4 வாங்குபவர்கள் ரூ.31,999 மதிப்புள்ள Galaxy Watch 4 Classic ஸ்மார்ட் வாட்சை வெறும் ரூ. 2,999 விலைக்கே பெற முடியும்.

சிறப்பம்சம்

Samsung Galaxy Z Flip 4 5G ஸ்மார்ட்போன் 6.7 அங்குல முழு HD+ AMOLED டிஸ்ப்ளேவுடன் 120Hz ரெப்ரெஷ் ரேட் உடன் வருகிறது. இது போல்டபில் டிஸ்ப்ளேவில் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ்+ லேயரைக் கொண்டுள்ளது. 1.9 அங்குல சூப்பர் AMOLED கவர் டிஸ்பிளே உடன் வருகிறது. மேலும் இதில் டூயல் கேமரா அமைப்பு இருக்கிறது. Z Flip 4 இல் 12MP பிரைமரி கேமரா சென்சார் மற்றும் 12MP அல்ட்ராவைட் கேமரா உள்ளது.

சிப்செட்

Samsung Galaxy Z Flip 4 5G ஸ்மார்ட்போன், Snapdragon 8+ Gen 1 SoC மற்றும் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் 3700 mAh பேட்டரியோடு வருகிறது. இதன் முன்பக்கத்தில் 10MP கேமரா இருக்கிறது. இது பக்கவாட்டில் கைரேகை ஸ்கேனரையும் கொண்டுள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான OneUI 4.1 இல் இயங்குகிறது. புது விதமான ஸ்மார்ட்போன் அனுபவத்தை அனுபவிக்கத் துடிக்கும் பயனர்களுக்கு இந்த ஸ்மார்ட்போன் ஒரு சிறந்த போனாக இருக்கும்.

The post புதிய நிறத்தில் வெளியானது Samsung Galaxy Z Flip 4 first appeared on .

]]>