samsung M12 https://www.91mobiles.com/tamil Wed, 10 Aug 2022 11:39:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 விலை குறைந்தது சாம்சங் M12! https://www.91mobiles.com/tamil/best-6000mah-battery-phone-samsung-galaxy-m12-price-cut/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=best-6000mah-battery-phone-samsung-galaxy-m12-price-cut Wed, 10 Aug 2022 11:37:33 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1526 சாம்சங் நிறுவனதின் மிகவும் பிரபலமான பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் ஒன்றான Galaxy M12 போனின் விலை குறைந்துள்ளது. சாம்சங் கேலக்சி M12 ஆனது 4 GB மற்றும் 6GB என இரண்டு RAM வகைகளில் வெளியாகி இருக்கிறது. ஆனால் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் வேரியண்ட்டின் விலையை மட்டுமே குறைத்துள்ளது. அதாவது 4ஜிபி ரேம் மாறுபாட்டின் விலையில் எந்த மாற்றமும் இருக்காது! புதிய விலை VS பழைய விலை? சாம்சங் நிறுவனம் கேலக்ஸி M12 […]

The post விலை குறைந்தது சாம்சங் M12! first appeared on .

]]>

சாம்சங் நிறுவனதின் மிகவும் பிரபலமான பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் ஒன்றான Galaxy M12 போனின் விலை குறைந்துள்ளது. சாம்சங் கேலக்சி M12 ஆனது 4 GB மற்றும் 6GB என இரண்டு RAM வகைகளில் வெளியாகி இருக்கிறது. ஆனால் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் வேரியண்ட்டின் விலையை மட்டுமே குறைத்துள்ளது. அதாவது 4ஜிபி ரேம் மாறுபாட்டின் விலையில் எந்த மாற்றமும் இருக்காது!

புதிய விலை VS பழைய விலை?

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி M12 ஸ்மார்ட்போனின் 6GB ரேம் வேரியண்ட்டை ரூ.13,499 க்கு அறிமுகப்படுத்தியது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.1,000 என்கிற விலைக்குறைப்பை பெற்று ரூ.12,499 க்கு வாங்க கிடைக்கிறது. விலைக்குறைப்பு மட்டும் அல்ல Samsung Galaxy M12 மீது No cost EMI வசதியும் கிடைக்கிறது.

கூடுதலாக நீங்களொரு ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளராக இருந்தால் M12-ஐ வாங்கும் போது ரூ.1000 என்கிற உடனடி தள்ளுபடியையும் பெறலாம். இந்த ஸ்மார்ட்போன் நீலம், கருப்பு மற்றும் வெள்ளை என்கிற 3 நிறத் தேர்வுகளில் கிடைக்கிறது.

ரூ.12,499 க்கு Galaxy M12 வொர்த் ஆன போன்-ஆ? ரூ.12,499 க்கு Galaxy M12 வொர்த் ஆன போன்-ஆ? இது வொர்த்-ஆ, இல்லையா என்கிற முடிவுக்கு வர, முதலில் Samsung Galaxy M12 ஸ்மார்ட்போனின் அம்சங்களை பற்றி அறிந்துகொள்ளலாம்.

இது 720×1600 பிக்சல் ரெசல்யூஷனை கொண்ட 6.5 இன்ச் HD+ இன்ஃபினிட்டி-V டிஸ்ப்ளேவுடன் வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் Octa-core Exynos 850 SoC மூலம் இயக்கப்படுகிறது. இரட்டை சிம் சப்போர்ட் உடன் இந்த ஸ்மார்ட்போன், ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் அடிப்படையிலான நிறுவனத்தின் சொந்த லேயர் ஆன ஒன் யுஐ 3.1-ஐ உடன் வெளி வந்திருக்கிறது.

Samsung Galaxy M12 ஆனது (4GB ரேம் + 64GB மற்றும் 6GB ரேம் + 128GB) இரண்டு ஸ்டோரேஜ் வகைகளில் வருகிறது. ஒரு மைக்ரோ எஸ்டி கார்ட் மூலம் இதன் சேமிப்புத்திறனை 1TB வரை அதிகரித்துக் கொள்ளலாம்.

கேமராக்களை பொறுத்தவரை, கேலக்ஸி M12 ஆனது 48MP மெயின் கேமரா (f/2.0) + 5MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் (f/2.2) கேமரா + 2MP டெப்த் சென்சார் + 2MP மேக்ரோ கேமரா என்கிற குவாட்-ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 8MP செல்ஃபி கேமரா உள்ளது. பக்கவாட்டில் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் இருக்கிறது. இதோடு இந்த ஸ்மார்ட்போன் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்ஐக் கொண்டிருக்கிறது. இதோடு 6000mAh பேட்டரியும் இருக்கிறது.

அற்புதமான பேட்டரி லைஃப், கவர்ச்சிகரமான டிசைன், நல்ல சாஃப்ட்வேர் போன்றவைகளை எதிர்பார்ப்பவர்கள் கண்களை மூடிக்கொண்டு இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம். தரமான HD+ ரெசல்யூஷன் டிஸ்பிளே வேண்டும், மிகத்தரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்கும் கேமரா வேண்டும் என்பவர்கள் இந்த ஸ்மார்ட்போனை வாங்காமல் தவிர்க்கலாம்!

The post விலை குறைந்தது சாம்சங் M12! first appeared on .

]]>