samsung S21 Fe 5G https://www.91mobiles.com/tamil Tue, 11 Oct 2022 05:35:18 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ரூ19,000 தள்ளுபடியில் சாம்சங் கேலக்சி S21 FE 5G https://www.91mobiles.com/tamil/flipkart-big-diwali-sale-samsung-galaxy-s21-fe-5g-gets-flat-rs-19000-discount/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=flipkart-big-diwali-sale-samsung-galaxy-s21-fe-5g-gets-flat-rs-19000-discount Tue, 11 Oct 2022 05:35:18 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2908 இந்த தீபாவளி பண்டிகைக்கு இதற்கு முன் இல்லாத வகையில், ஏராளமான தள்ளுபடியை இம்முறை அமேசான், ப்ளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் வழங்கியுள்ளன. குறிப்பாக Flipkart அறிமுகம் செய்துள்ள பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனையில் (Flipkart Big Diwali Sale) ஏராளமான சலுகை மற்றும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனை நேற்று முதல் தொடங்கியுள்ளது. பிளிப்கார்ட் பிளஸ் சந்தா உங்களிடம் இருக்கிறது என்றால், உங்களுக்கு உண்மையிலேயே அதிஷ்டம் தான். ஏனெனில் Samsung Galaxy S21 FE 5G […]

The post ரூ19,000 தள்ளுபடியில் சாம்சங் கேலக்சி S21 FE 5G first appeared on .

]]>

இந்த தீபாவளி பண்டிகைக்கு இதற்கு முன் இல்லாத வகையில், ஏராளமான தள்ளுபடியை இம்முறை அமேசான், ப்ளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் வழங்கியுள்ளன. குறிப்பாக Flipkart அறிமுகம் செய்துள்ள பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனையில் (Flipkart Big Diwali Sale) ஏராளமான சலுகை மற்றும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனை நேற்று முதல் தொடங்கியுள்ளது. பிளிப்கார்ட் பிளஸ் சந்தா உங்களிடம் இருக்கிறது என்றால், உங்களுக்கு உண்மையிலேயே அதிஷ்டம் தான். ஏனெனில் Samsung Galaxy S21 FE 5G போன் மீது நம்ப முடியாத வகையில் ரூ.19,000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போனை மிகக் குறைந்த விலையில் வாங்க இது ஒரு அரிய வாய்ப்பு.

சாம்சங்கின் இந்த பிரீமியம் 5G போன் (Premium 5G Phone) இந்த ஆண்டு ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் ஆரம்ப விலை இந்தியாவில் ரூ.54,999 ஆக இருக்கிறது. இப்போது, Flipkart இன் பிக் தீபாவளி விற்பனையின் மூலம், இதை நாம் வெறும் ரூ. 35,999 என்ற விலையில் வாங்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இது ஒரு சிறந்த சலுகை. இந்த ஸ்மார்ட்போன் மீது ரூ.19,000 விலை குறைக்கப்பட்டுள்ளது.

இந்த விலை குறைப்பு, Samsung Galaxy S21 FE 5G ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மாடலுக்கானது. இதோடு கூடுதல் சலுகையையும் பெற ஒரு வாய்ப்பும் இருக்கிறது. நீங்கள் SBI மற்றும் Kotak வங்கி கிரெடிட் கார்டு பயனர் என்றால், இந்த ஸ்மார்ட்போனின் மீது கிடைக்கும் தள்ளுபடியுடன் கூடுதலாக ரூ.1,250 தள்ளுபடியையும் நீங்கள் பெறலாம். இதன் மூலம் Samsung Galaxy S21 FE 5G போனின் விலையை ரூ.34,749 ஆக குறைக்க முடியும்.

Samsung Galaxy S21 FE அட்டகாசமான சாப்ட்வேர் மற்றும் சிறந்த AMOLED 120Hz டிஸ்பிளே உடன் வருகிறது. இது சிறப்பான பயனர் அனுபவத்தை தடை இல்லாமல் வழங்குகிறது. இது நல்ல பேட்டரி ஆயுளையும் வழங்குகிறது. கேமரா செயல்திறன் கூட இதில் சிறப்பாக அமைந்துள்ளது. ரூ.30,000 விலை வரம்பில் உள்ள சில போன்களை விட இது சிறந்த கேமராக்களைக் கொண்டுள்ளது. இதன் பின்பக்கத்தில் 12MP, 8MP, 12MP என மூன்று கேமராக்களையும், முன்பக்கத்தில் 32MP செல்ஃபி கேமராவையும் கொண்டிருக்கிறது.

இந்த Samsung Galaxy S21 FE 5G சாதனம் வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவையும் வழங்குகிறது. இது குறைந்த விலை பிரிவில் நீங்கள் பெற முடியாத ஒரு அம்சமாக இருக்கிறது. இருப்பினும், Samsung Galaxy S21 FE போன் சார்ஜருடன் வரவில்லை என்பதே ஒரு பெரிய நெகட்டிவ் பாயிண்டாக பார்க்கப்படுகிறது.

எனவே, நீங்கள் தனியாக ஒரு அடாப்டரை வாங்க வேண்டியிருக்கும். மேலும், ரூ.30,000 வரம்பில் உள்ள போன்கள் 80W சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வருகின்றன. ஆனால், சாம்சங்கின் இந்த 5G போன் 25W ஆதரவுடன் மட்டுமே வருகிறது. கூடுதலாக, இதில் எக்ஸ்ட்ரா ஸ்டோரேஜ் விருப்பத்தை ஆதரிக்கக்கூடிய அம்சம் இல்லை. இவற்றை எல்லாம் கணக்கில் கொண்டாலும் இந்த போன் மீது இப்போது கிடைக்கும் இந்த சலுகை உண்மையிலேயே சிறப்பானது என்று கூற முடியும்.

The post ரூ19,000 தள்ளுபடியில் சாம்சங் கேலக்சி S21 FE 5G first appeared on .

]]>