Seal https://www.91mobiles.com/tamil Thu, 09 Mar 2023 11:54:19 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 டெஸ்லாவுக்கு போட்டியாக களம் இறங்கும் BYD சீல்! 700கிமீ மைலேஜ் கிடைக்குமென தகவல்! https://www.91mobiles.com/tamil/byd-plans-to-showcase-seal-electric-suv-in-auto-expo-2023/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=byd-plans-to-showcase-seal-electric-suv-in-auto-expo-2023 Fri, 06 Jan 2023 07:58:09 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4769 பிஒய்டி (BYD)- சீல் (Seal) முழு சார்ஜில் 700 கி.மீ பயணிக்கும் திறன் கொண்ட தனது ‘சீல்’ எலக்ட்ரிக் காரை டெஸ்லா நிறுவனத்தின் மாடல் 3 காருக்கு போட்டியாக இந்தியாவில் களம் இறக்க பிஒய்டி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த கார் குறித்த விபரங்களை இப்போது பார்க்கலாம். சீன நிறுவனமான பிஒய்டி நிறுவனம் இந்தியாவில் தனது இரண்டு கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்த இ6 என்ற எம்பிவி, மற்றும் அட்டோ 3 என்ற எஸ்யூவி கார்கள் […]

The post டெஸ்லாவுக்கு போட்டியாக களம் இறங்கும் BYD சீல்! 700கிமீ மைலேஜ் கிடைக்குமென தகவல்! first appeared on .

]]>

பிஒய்டி (BYD)- சீல் (Seal)

முழு சார்ஜில் 700 கி.மீ பயணிக்கும் திறன் கொண்ட தனது ‘சீல்’ எலக்ட்ரிக் காரை டெஸ்லா நிறுவனத்தின் மாடல் 3 காருக்கு போட்டியாக இந்தியாவில் களம் இறக்க பிஒய்டி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த கார் குறித்த விபரங்களை இப்போது பார்க்கலாம்.

சீன நிறுவனமான பிஒய்டி நிறுவனம் இந்தியாவில் தனது இரண்டு கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்த இ6 என்ற எம்பிவி, மற்றும் அட்டோ 3 என்ற எஸ்யூவி கார்கள் இரண்டும் எலெக்ட்ரிக் கார்களாகும். இந்நிலையில் இந்நிறுவனம் இன்னும் சில தினங்களில் கிரேட்டர் நொய்டா பகுதியில் நடக்கவுள்ள 2023 ஆட்டோ எக்ஸ்போவில் இன்னொரு புதிய காரை அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது.

வடிவமைப்பு

இந்த பிஒய்டி (BYD)- சீல் (Seal) எலெக்ட்ரிக் செடான் கார் ஏற்கனவே பல நாடுகளில் விற்பனையாகி வருகிறது. இந்த காரின் வடிவமைப்பைப் பொருத்தவரை ஓசன் எக்ஸ் கான்செப்டில் ஓசன் அஸ்தெட்டிக்ஸ் ஃபிலாசஃபியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் அதற்கான பிரத்தியேகமான வடிவமைக்கப்பட்ட ஸ்கேட்போர்டு பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் 4.80 மீட்டர் நீளமும், 1.87 மீட்டர் அகலமும், 1.46 மீட்டர் உயரமும் கொண்டது. இதில் வீல் பேஸ் மட்டும் 2.92 மீட்டர் நீளத்தில் வழங்கப்பட்டுள்ளது. இதன் வெளிப்புற டிசைனை பொருத்தவரை இதன் பானட் பகுதியில் சரிவாக இருக்கும்படி கொடுத்துள்ளனர்.

வசதிகள்

இது போக ஷார்ப்பான ஹெட்லைட் கிளஸ்டர், கூபே வடிவ ரூஃப்லைன், பக்கவாட்டு பகுதிகளில் ஸ்டிராங்கான கேரக்டர் லைன்கள், ஸ்போர்ட்டி அலாய் வீல்கள், ஸ்மார்ட் டோர் ஹேண்டில்கள், ஷார்ட் ஓவர் ஹேங்க்ஸ், அக்ரஷிவ் பம்பரின் கீழ்ப் பகுதியில் பெரிய ஏர் இன்டெக்கிற்கான இடம், பூமராங் வடிவ எல்இடி டிஆர்எல்கள், முழு அகலமான எல்இடி லைட் பார். இது போக பிஒய்டி அட்டோ 3 காரில் உள்ளதைப் போல இந்த காரிலும் சுழலும் 15.6 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஹெட்ஸ் அப் டிஸ்பிளே, 10.25 டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், குறைவான ஃபிசிக்கல் பட்டன், டிரைவ் மோட்கள், வயர்லெஸ் ஸ்மார்ட்ஃபோன் சார்ஜர்கள், பெரிய ஏசி வென்ட்கள், பிளாட் பாட்டம் ஸ்டியரிங் வீல், மற்றும் இரண்டு டோன்களால் ஆன கேபின் தீம் ஆகியன இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன.

பேட்டரி

இந்த காரின் பேட்டரியை பொருத்தவரை பிளோடு பேட்டரி தொழிற்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இது 61.4 கிலோ வாட் ஹவர் பேட்டரி, 82.5 கிலோ வாட் ஹவர் பேட்டரி என இரண்டு பேட்டரி ஆப்ஷன்களை கொண்டது. குறைந்த திறன் பேட்டரியில் இந்த கார் முழு சார்ஜில் 550 கி.மீ வரை பயணிக்கும் திறன் கொண்டது. அதிக திறன் கொண்ட பேட்டரியில் முழு சார்ஜில் 700 கி.மீ வரை பயணிக்கும் திறன் கொண்டது. இந்த காரில் சிங்கிள் மற்றும் டூயல் மோட்டார் தொழிற்நுட்ப ஆப்ஷன்கள் உள்ளன. டூயல் மோட்டார் ஆல் வீல் டிரைவ் வேரியன்டை பொருத்தவரை 530 எச்பி பவரை வெளிப்படுத்தும், இது 0-100 கி.மீ வேகத்தை வெறும் 3.8 நொடிகளில் பிக்கப் செய்துவிடும். அதிகபட்சமாக 650 கி.மீ வரை பயணிக்கும் திறன் கொண்டது. இந்த காரும் அட்டோ 3 மற்றும் இவி6 ஆகிய கார்களுடன் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்படும்.

The post டெஸ்லாவுக்கு போட்டியாக களம் இறங்கும் BYD சீல்! 700கிமீ மைலேஜ் கிடைக்குமென தகவல்! first appeared on .

]]>