security issue https://www.91mobiles.com/tamil Wed, 11 Jan 2023 06:31:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Google Pixel 6A போனில் பாதுகாப்பு குறைபாடு https://www.91mobiles.com/tamil/google-pixel-6as-fingerprint-scanner-has-a-security-bug/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=google-pixel-6as-fingerprint-scanner-has-a-security-bug Wed, 27 Jul 2022 04:44:05 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1088 கூகுள் நிறுவனம் அதன் பிக்சல் 6A ஸ்மார்ட்போனை கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ.43,999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இந்த ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை 28-ந் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளது. இந்நிலையில், இதன் இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனரில் (indisplay fingerprint scanner) பிரச்சனை இருப்பதாக புகார்கள் எழுந்தபடி இருக்கிறது. மொபைல் விற்பனைக்கு வரும் முன் விமர்சனம் செய்பவர்களுக்காக முன்கூட்டியே பிரத்யேகமாக இந்த போன் வழங்கப்பட்டு இருந்தது. […]

The post Google Pixel 6A போனில் பாதுகாப்பு குறைபாடு first appeared on .

]]>

கூகுள் நிறுவனம் அதன் பிக்சல் 6A ஸ்மார்ட்போனை கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ.43,999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இந்த ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை 28-ந் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளது.

இந்நிலையில், இதன் இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனரில் (indisplay fingerprint scanner) பிரச்சனை இருப்பதாக புகார்கள் எழுந்தபடி இருக்கிறது. மொபைல் விற்பனைக்கு வரும் முன் விமர்சனம் செய்பவர்களுக்காக முன்கூட்டியே பிரத்யேகமாக இந்த போன் வழங்கப்பட்டு இருந்தது. அவ்வாறு ரிவ்யூ செய்தவர்கள் ஏராளமானோர் அதன் இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனரில் கோளாறு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

பொதுவாக இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனரில் குறிப்பிட்ட விரல்களில் உள்ள கைரேகை பதிவு செய்யப்பட்ட பின், அந்த விரலை பயன்படுத்தினால் மட்டுமே அந்த போனின் டிஸ்ப்ளே லாக் ஓபன் ஆகும். ஆனால் கூகுளின் இந்த ஸ்மார்ட்போனில் பதிவு செய்யப்படாத விரலின் மூலமும் திறக்க முடிவதாக ரிவ்யூ செய்தவர்கள் தெரிவித்துள்ளனர். இது சாஃப்ட்வேரில் உள்ள பிரச்சனையா அல்லது ஹார்ட்வேரில் உள்ள பிரச்சனையா என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என ரிவ்யூவர்கள் தெரிவித்துள்ளனர்.

கூகுள் நிறுவனமும் இதுவரை இதுபற்றி எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை. இந்த பிரச்சனையை சரி செய்யாவிட்டால் அது இந்த போனின் விற்பனையை பெரிதும் பாதிக்கக்கூடும். ஆதலால் விரைவில் கூகுள் நிறுவனம் இதற்கு தீர்வு கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post Google Pixel 6A போனில் பாதுகாப்பு குறைபாடு first appeared on .

]]>