shankar https://www.91mobiles.com/tamil Thu, 09 Mar 2023 14:22:21 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 RC15 படக்குழுவின் பிரம்மாண்ட வரவேற்பு! https://www.91mobiles.com/tamil/shankar-s-rc-15-team-wishes-kiara-advani-and-sidharth-malhotra-a-happy-wedding/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=shankar-s-rc-15-team-wishes-kiara-advani-and-sidharth-malhotra-a-happy-wedding Mon, 13 Feb 2023 11:00:30 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5793 வாழ்த்திய பிரபலங்கள்! பாலிவுட் ஜோடி திருமணம் பாலிவுட் ஜோடி திருமணம் சுஷாந்த் சிங் நடித்த தோனியின் பயோபிக்கான ‘எம்.எஸ் தோனி அன்டோல்ட் ஸ்டோரி’ படத்தில் சாக்ஷியாக நடித்திருந்தார் கியாரா அத்வானி. இந்தப் படம் அவரை மிகப்பெரிய அளவில் பிரபலமாக்கியது. இதனைத் தொடர்ந்து இந்தி, தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வரும் கியாரா அத்வானி, சித்தார்த் மல்ஹோத்ராவை காதலிப்பதாக தகவல்கள் வெளியாகின. சித்தார்த் மல்ஹோத்ராவும் பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருவது குறிப்பிடத்தக்கது. காதல் செய்திகளை அவர்கள் இருவரும் […]

The post RC15 படக்குழுவின் பிரம்மாண்ட வரவேற்பு! first appeared on .

]]>

Highlights

  • கியாரா அத்வானிக்கும் பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் சித்தார்த் மல்ஹோத்ராவுக்கும் கடந்த 7ம் தேதி திருமணம் நடைபெற்றது.
  • கியாரா அத்வானி ஹீரோயினாக நடித்து வரும் ஆர்சி 15 படக்குழுவினர் அவர்களுக்கு திருமண வாழ்த்துக் கூறி வீடியோ வெளியிட்டுள்ளனர்.

வாழ்த்திய பிரபலங்கள்!

பாலிவுட் ஜோடி திருமணம் பாலிவுட் ஜோடி திருமணம் சுஷாந்த் சிங் நடித்த தோனியின் பயோபிக்கான ‘எம்.எஸ் தோனி அன்டோல்ட் ஸ்டோரி’ படத்தில் சாக்ஷியாக நடித்திருந்தார் கியாரா அத்வானி. இந்தப் படம் அவரை மிகப்பெரிய அளவில் பிரபலமாக்கியது. இதனைத் தொடர்ந்து இந்தி, தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வரும் கியாரா அத்வானி, சித்தார்த் மல்ஹோத்ராவை காதலிப்பதாக தகவல்கள் வெளியாகின. சித்தார்த் மல்ஹோத்ராவும் பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருவது குறிப்பிடத்தக்கது. காதல் செய்திகளை அவர்கள் இருவரும் மறுத்து வந்த நிலையில், திடீரென கடந்த 7ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். ஜெய்ப்பூரில் கூடிய நட்சத்திரங்கள் ஜெய்ப்பூரில் கூடிய நட்சத்திரங்கள் ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர், ஏக் வில்லன் உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் சித்தார்த் மல்ஹோத்ரா. கியாரா அத்வானியும் சித்தார்த் மல்ஹோத்ராவும் ஷெர்ஷா’ படத்தில் இணைந்து நடித்தபோதே காதலிக்கத் தொடங்கியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், இருவருக்கும் பிப்ரவரி 7ம் தேதி ராஜஸ்தானில் உள்ள ஜெய் சாலிமர் பேலஸ் ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது. இதில் கரன் ஜோஹர், ரோஹித் ஷெட்டி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர். அதேபோல் இருவரது குடும்ப உறுப்பினர்களும் நெருங்கிய நண்பர்களும் பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

ஆர்சி 15 படக்குழுவினர் வாழ்த்து

கியாரா – சித்தார்த் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்தன. திருமணம் முடிந்த கையோடு காதல் மனைவி கியாரா அத்வானியை டெல்லிக்கு அழைத்துச் சென்றார் சித்தார்த். மேலும், தன் காதல் மனைவிக்காக மும்பையில் ரூ.70 கோடி மதிப்பில் பிரம்மாண்ட பங்களா ஒன்றையும் கட்டி வருகிறாராம் சித்தார்த். அதன் வேலைகள் முடிந்ததும், அந்த கடலோர பங்களாவில் தான் இருவரும் குடியேறபோகிறார்களாம். இந்நிலையில், கியாரா அத்வானி – சித்தார்த் மல்ஹோத்ரா தம்பதியினருக்கு ஷங்கரின் ஆர்சி 15 படக்குழுவினர் வாழ்த்துக் கூறியுள்ளனர்.

 

பிரம்மாண்டம்

கியாரா அத்வானி தற்போது ஷங்கரின் ஆர்சி 15 படத்தில் நடித்து வருகிறார். தில்ராஜூ தயாரிப்பில் ராம் சரண் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகும் ஆர்சி 15 விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தான் கியாராவின் திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து இயக்குனர் ஷங்கர், நடிகர் ராம் சரண், தயாரிப்பாளர் தில் ராஜூ உள்ளிட்ட ஆர்சி 15 படக்குழுவினர் காதல் தம்பதியினருக்கு பிரம்மாண்டமாக வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

 

ட்ரெண்டாகும் வீடியோ

இந்த வீடியோவில் ஷங்கர், ராம் சரண், தில் ராஜூ உள்ளிட்ட மொத்த படக்குழுவினரும் ஒரு கேமரா முன்னர் நின்று மலர் தூவி வாழ்த்துக் கூறுகின்றனர். க்ளோஸப்பாக இருந்து பின்னர் ஒரேஷாட்டில் வைட் ஆக செல்லும் கேமராவில் ஆர்சி 15 டீம் மொத்தமும் இருப்பது பார்க்கவே பிரமிப்பாக உள்ளது. தனது படத்தின் பாடல் காட்சிகளைப் போல இந்த வாழ்த்து வீடியோவையும் பிரம்மாண்டமாக எடுத்துள்ளார் ஷங்கர். இந்த வீடியோ டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. அதேநேரம் கியாரா அத்வானி – சித்தார்த் மல்ஹோத்ரா திருமணத்தின் ஓடிடி ஒளிபரப்பு உரிமையை அமேசான் ப்ரைம் கைப்பற்றியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

The post RC15 படக்குழுவின் பிரம்மாண்ட வரவேற்பு! first appeared on .

]]>
இந்தியன் 2 படத்தின் கதை குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் சொன்னது என்ன? https://www.91mobiles.com/tamil/writer-jeyamohan-says-interesting-information-about-indian-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=writer-jeyamohan-says-interesting-information-about-indian-2 Fri, 16 Dec 2022 07:17:06 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4353 இந்தியன் 2 திரைப்படத்தின் கதை குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் பல சுவாரசியத் தகவல்களை தெரிவித்துள்ளார். 1996ம் ஆண்டு இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் உருவானத் திரைப்படம் தான் இந்தியன். ஊழல் எதிர்ப்பு திரைப்படங்களுக்கு முன்னோடியாக வெளியான இந்த திரைப்படம், பிளாக் பஸ்டர் ஹிட்டடித்து வசூலை வாரிக்குவித்தது அன்றைய காலகட்டத்தில் இருந்த தொழில்நுட்ப வளர்ச்சியின் நிலையை ஒப்பிட்டால் இது வியக்கவைக்கும் இமாலய சாதனை. இந்தப் படமும் இதற்குக் கிடைத்த வெற்றியும் ஷங்கரின் இமேஜை தூக்கி நிறுத்தியது. இந்தியன் 2 இந்தியன் […]

The post இந்தியன் 2 படத்தின் கதை குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் சொன்னது என்ன? first appeared on .

]]>

இந்தியன் 2 திரைப்படத்தின் கதை குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் பல சுவாரசியத் தகவல்களை தெரிவித்துள்ளார். 1996ம் ஆண்டு இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் உருவானத் திரைப்படம் தான் இந்தியன். ஊழல் எதிர்ப்பு திரைப்படங்களுக்கு முன்னோடியாக வெளியான இந்த திரைப்படம், பிளாக் பஸ்டர் ஹிட்டடித்து வசூலை வாரிக்குவித்தது
அன்றைய காலகட்டத்தில் இருந்த தொழில்நுட்ப வளர்ச்சியின் நிலையை ஒப்பிட்டால் இது வியக்கவைக்கும் இமாலய சாதனை. இந்தப் படமும் இதற்குக் கிடைத்த வெற்றியும் ஷங்கரின் இமேஜை தூக்கி நிறுத்தியது.

இந்தியன் 2

இந்தியன் திரைப்படம் அளித்த உத்வேகத்துடன் கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு பிறகு இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில், கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இதற்கான படப்பிடிப்பு கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கியது. ஆனால், அப்போது ஏற்பட்ட விபத்து காரணமாக படம் நிறுத்தப்பட்டது. அதன் பின் கொரோனா, படத்தின் பட்ஜெட் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட காரணங்களால் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதையடுத்து, ஷங்கர், ராம்சரணை வைத்து ‘RC15’ படப்பிடிப்பில் கவனம் செலுத்தினார். கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் மெகாஹிட் அடித்த நிலையில், இந்தியன் 2 படத்தின் பிரச்சினைகள் சரிசெய்யப்பட்டு படப்பிடிப்பு மீண்டும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது
இந்நிலையில், எழுத்தாளர் ஜெயமோகன் அளித்துள்ள பேட்டியில், இந்தியன் 2 படம் குறித்து பல சுவாரசியமானத் தகவல்களை தெரிவித்துள்ளார். இதில், இந்தியன் 2 படத்திற்காக கமல்ஹாசன் பட்டினி கிடந்து நடிக்கிறார். வாயில் எதை மென்றாலும், அது மேக்கப்பை கெடுத்துவிடும் என்பதால், ஸ்ட்ராவில் ஜூஸ்சை மட்டுமே குடித்து வருகிறார். இதைப்பார்க்கும் போது எனக்கே ரொம்ப கஷ்டமா இருக்கும் என்றார் .

கதை

இந்தியன் இரண்டாம் பாகமும் முதல் பாகத்தைப் போல பீல் குட் கொண்ட படம் தான். ஆனால், இந்தியன் 2 படத்தின் கதை கொஞ்சம் பின்னால் போகும், அதாவது சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பாக நடந்த கதையை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது. சொல்லப் போனால் இந்தியன் தாத்தா என்ற சேனாதிபதிக்கும் அவருடைய தந்தைக்கும் இடையே நடக்கும் மோதல் தான் இந்தியன் 2 திரைப்படத்தின் கதை. இந்த படத்தில் இந்தியன் தாத்தாவின் அப்பா வருவார் என்றார்.

3 மணி நேரப்படம்

மேலும், இந்தியன் 2 படத்திற்கு 3 மணி நேரம் 10 நிமிடங்கள் நீளம் கொண்ட படம் என்றும், இது ஷங்கரின் கேரியரில் மிக நீண்ட திரைப்படமாக இப்படம் இருக்கும் என்றும் இந்தியன் 2 படம் குறித்து பல சுவாரசியமானத் தகவலை எழுத்தாளர் ஜெயமோகன் பேட்டியில் கூறியுள்ளார்.

இந்தியன் 2 படத்தின் உருவாக்கத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் முக்கியபங்கு ஆற்றுகிறார். திரைக்கதை உருவாக்கம், வசனம் போன்றவற்றில் அவரது பங்களிப்பு இருக்கிறது. இந்தியன் 2 படத்தில் அப்பா கதாபாத்திரமும் வருகிறது என்றால் இதிலும் கமலஹாசனுக்கு இரட்டை வேடம் இருக்கிறது. மேலும் சுதந்திரப் போராட்டத்துக்கு முந்தைய காலம் என்பதால் படத்தின் பெறும்பகுதி பீரியட் பிலிம் என்னும் வரலாற்றுப்படமாக இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது. இதனைக் கொண்டு பார்க்கையில் இந்தியன் 2 படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கும்.

The post இந்தியன் 2 படத்தின் கதை குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் சொன்னது என்ன? first appeared on .

]]>
விஜய்-லோகேஷ் இணையும் தளபதி 67 படத்தின் பூஜை இன்று போடப்பட்டது! https://www.91mobiles.com/tamil/vijay-s-thalapathy-67-movie-pooja-starts-today/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=vijay-s-thalapathy-67-movie-pooja-starts-today Mon, 05 Dec 2022 14:04:43 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4091 நீண்ட காலமாக ரசிகர்கள் காத்திருந்த தளபதி 67 படத்தின் பூஜை இன்றைய தினம் சென்னையில் மிகவும் எளிமையான வகையில் நடத்தப்பட்டுள்ளது. ஏவிஎம் ஸ்டூடியோ பிள்ளையார் கோயிலில் இந்த பூஜை தற்போது நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதன் ஸ்டில்களுக்காக விஜய் ரசிகர்கள் தற்போது காத்திருக்கின்றனர். வீடியோ முன்னதாக லோகேஷ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகி கவனம் பெற்ற நிலையில், அதேபோல தளபதி 67 படத்திற்கும் வீடியோ வெளியாகும் என்றும் இதன் வீடியோ சூட்டிங் வரும் 7ம் […]

The post விஜய்-லோகேஷ் இணையும் தளபதி 67 படத்தின் பூஜை இன்று போடப்பட்டது! first appeared on .

]]>

நீண்ட காலமாக ரசிகர்கள் காத்திருந்த தளபதி 67 படத்தின் பூஜை இன்றைய தினம் சென்னையில் மிகவும் எளிமையான வகையில் நடத்தப்பட்டுள்ளது. ஏவிஎம் ஸ்டூடியோ பிள்ளையார் கோயிலில் இந்த பூஜை தற்போது நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதன் ஸ்டில்களுக்காக விஜய் ரசிகர்கள் தற்போது காத்திருக்கின்றனர்.

வீடியோ முன்னதாக லோகேஷ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகி கவனம் பெற்ற நிலையில், அதேபோல தளபதி 67 படத்திற்கும் வீடியோ வெளியாகும் என்றும் இதன் வீடியோ சூட்டிங் வரும் 7ம் தேதி துவங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக இந்தப் படத்தின் பணிகளுக்காக சமூக வலைதளங்களில் இருந்து விலகிய லோகேஷ் மீண்டும் இணைவார் என்று எதிர்பார்க்கலாம்.

இதேபோல இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானவுடன் இந்தப் படம் லோகேஷ் யூனிவர்சில் இணையுமா என்பது குறித்து அப்டேட் கொடுக்கவுள்ளதாக முன்னதாக லோகேஷ் தெரிவித்த நிலையில், விரைவில் அதுகுறித்து அவர் அப்டேட் கொடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் த்ரிஷா, கௌதம் மேனன் என அடுத்தடுத்த நடிகர்கள் குறித்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கலாம்.

இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் சென்னையில் துவங்கவுள்ள நிலையில், அடுத்ததாக காஷ்மீருக்கு படக்குழு சூட்டிங்கிற்காக செல்லவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே இந்தப் படத்திற்காக 4 மாதங்கள் விஜய் கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் அவர் கேங்ஸ்டர் வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் முன்னதாக லோகேஷ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தியன் 2 படம் இன்று மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசனின் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் சூட்டிங்கிற்காக இந்தப் படத்தின் சூட்டிங் ஒரு மாத காலம் தள்ளி வைக்கப்பட்டது. முந்தைய பாகத்தில் சந்த்ரு மற்றும் சேனாபதி என இரண்டு கேரக்டர்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் கமல். இந்நிலையில் 21 ஆண்டுகள் கழித்து இந்தியன் படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கி 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

ஷூட்டிங் ஸ்பாட்டில் நடைபெற்ற விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு காரணமாக இந்தப் படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. இந்தப் படத்தை இயக்கிவரும் இயக்குநர் ஷங்கர், ஒரே நேரத்தில் கமல் மற்றும் ராம்சரண் படங்களை இயக்கி வருகிறார். மாதத்தில் 20 நாட்கள் என அடுத்தடுத்து இந்தப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

கடந்த சில தினங்களாக ராம்சரணின் சூட்டிங்கிற்காக நியூசிலாந்து சென்றிருந்த ஷங்கர் கடந்த 3ம் தேதி நாடு திரும்பிய நிலையில், இன்றைய தினம் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. சென்னை ஏர்போர்ட்டில் இந்தப் படத்தின் ஷூட்டிங் துவங்கிய நிலையில் தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் சித்தார்த், பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர். படத்தில் வில்லன் கேரக்டருக்காக சத்யராஜிடம் பேசி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துவரும் நிலையில், பாடல்கள் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு மே மாதத்தில் நிறைவடைந்து 2023 தீபாவளிக்கு படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

The post விஜய்-லோகேஷ் இணையும் தளபதி 67 படத்தின் பூஜை இன்று போடப்பட்டது! first appeared on .

]]>