Snapdragon Gen 1 processor https://www.91mobiles.com/tamil Thu, 09 Mar 2023 15:08:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 240 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் பிப்ரவரி 28 ஆம் தேதி அறிமுகமாகிறது ரியல்மி ஜிடி 3! https://www.91mobiles.com/tamil/new-realme-gt-3-phone-that-charges-fully-in-10-minutes-will-be-launched-soon/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=new-realme-gt-3-phone-that-charges-fully-in-10-minutes-will-be-launched-soon Wed, 22 Feb 2023 07:36:32 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5999 ரியல்மி நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ஸ்மார்ட்போன்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி MWC 2023 நிகழ்ச்சியில் புதிய ரியல்மி ஜிடி 3 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போன் மற்ற ஆண்ட்ராய்டு போன்களை விட தனித்துவமான அம்சங்கள் மற்றும் தனித்துவமான வடிவமைப்புடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இந்த புதிய ரியல்மி ஜிடி […]

The post 240 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் பிப்ரவரி 28 ஆம் தேதி அறிமுகமாகிறது ரியல்மி ஜிடி 3! first appeared on .

]]>

Highlights

  • பிப்ரவரி 28 ஆம் தேதி MWC 2023 நிகழ்ச்சியில் புதிய ரியல்மி ஜிடி 3 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.
  • இந்த புதிய ரியல்மி ஜிடி 3 போன் 240 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ஸ்மார்ட்போன்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி MWC 2023 நிகழ்ச்சியில் புதிய ரியல்மி ஜிடி 3 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.

குறிப்பாக இந்த போன் மற்ற ஆண்ட்ராய்டு போன்களை விட தனித்துவமான அம்சங்கள் மற்றும் தனித்துவமான வடிவமைப்புடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இந்த புதிய ரியல்மி ஜிடி 3 போன் 240 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

10 நிமிடங்களில்

எனவே 10 நிமிடங்களில் இந்த போனை முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும். அதாவது இந்த ரியல்மி ஜிடி 3 போன் 10 நிமிடங்களில் 100 சதவீதம் சார்ஜ் ஆகிவிடும் என நிறுவவனம் தெரிவித்துள்ளது. அதேபோல் பாஸ்ட் சார்ஜிங் வசதி ஆதரவுடன் சிறந்த பாதுகாப்பு தொழில்நுட்ப வசதியும் இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இணையத்தில் வைரல்

தற்போது இந்த ரியல்மி ஜிடி 3 போன் சார்ஜ் ஆகும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவியுள்ளது. மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த ரியல்மி ஜிடி 3 போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

 

டிஸ்ப்ளே

ரியல்மி ஜிடி 3 ஸ்மார்ட்போன் ஆனது 6.73 அங்குல ஃபுல் எச்டி AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. இதன் டிஸ்பிளே வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரியல்மி நிறுவனம். மேலும் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த போன் அறிமுகமாகும்.

 

சிப்செட்

புதிய ரியல்மி ஜிடி 3 ஸ்மார்ட்போன் ஆனது சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த புதிய போன் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு அறிமுகமாகும். அதேபோல் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் சிறந்த செயல்திறன் கொடுக்கும், எனவே இந்த போனை நம்பி வாங்கலாம்.

கேமரா

50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி ஜிடி 3 ஸ்மார்ட்போன். எனவே இந்த போனின் உதவியுடன் தரமான புகைப்படங்களை எடுக்க முடியும். பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே முன்பக்கத்தில் 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது. கூடவே  எல்இடி ப்ளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி ஜிடி 3 ஸ்மார்ட்போன்.

 

பேட்டரி

ரியல்மி ஜிடி 3 ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை சார்ஜ் செய்ய 240 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் மற்றும் பல்வேறு சென்சார் வசதிகளுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கனெக்டிவிட்டி

அதேபோல் 5ஜி, வைஃபை, புளூடூத், என்எப்சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த ரியல்மி ஜிடி 3 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ரியல்மி ஜிடி 3 ஸ்மார்ட்போன் ஆனது சற்று உயர்வான விலையில் தான் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post 240 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் பிப்ரவரி 28 ஆம் தேதி அறிமுகமாகிறது ரியல்மி ஜிடி 3! first appeared on .

]]>
ஜென் 1 சிப்செட், 5000mAh பேட்டரி, 120W பாஸ்ட் சார்ஜிங் அம்சங்களோடு வெளியாகிறதா iQoo 11 5G? https://www.91mobiles.com/tamil/new-iqoo-11-5g-smartphone-will-launch-on-december-8-specs-features/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=new-iqoo-11-5g-smartphone-will-launch-on-december-8-specs-features Mon, 05 Dec 2022 06:12:16 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4072 டிசம்பர் 8-ம் தேதி விவோ நிறுவனத்தின் துணை பிராண்டான் iQoo ‘ஐகூ 11 5ஜி (iQoo 11 5G) எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த போன் முதலில் சீனாவிலும் அதன்பின்பு சிறிது நாட்கள் கழித்து இந்தியாவிலும் அறிமுகமாகலாம். iQoo 11 ஸ்மார்ட்போன் உடன் iQOO 11 Pro எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது ஐகூ நிறுவனம். இந்த iQoo 11 5G போன் ஜென் 1 சிப்செட், 5000 […]

The post ஜென் 1 சிப்செட், 5000mAh பேட்டரி, 120W பாஸ்ட் சார்ஜிங் அம்சங்களோடு வெளியாகிறதா iQoo 11 5G? first appeared on .

]]>

டிசம்பர் 8-ம் தேதி விவோ நிறுவனத்தின் துணை பிராண்டான் iQoo ‘ஐகூ 11 5ஜி (iQoo 11 5G) எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த போன் முதலில் சீனாவிலும் அதன்பின்பு சிறிது நாட்கள் கழித்து இந்தியாவிலும் அறிமுகமாகலாம். iQoo 11 ஸ்மார்ட்போன் உடன் iQOO 11 Pro எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது ஐகூ நிறுவனம். இந்த iQoo 11 5G போன் ஜென் 1 சிப்செட், 5000 mAh பேட்டரி, 120W பாஸ்ட் சார்ஜிங் போன்ற அம்சங்களோடு வெளியாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த iQoo 11 5G ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

GPU திறன்

இது ஒரு 5ஜி போன் ஆகும். iQoo 11 5G ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட் வசதியைக் கொண்டு அறிமுகமாக இருக்கிறது. இந்த சிப்செட் சிறந்த செயல்திறன் மற்றும் மேம்பட்ட வேகத்தை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட் 40 சதவீத குறைந்த மின்திறன் பயன்பாடு, 25 சதவீதம் வேகமான GPU திறனைக் கொண்டிருக்கிறது. எனவே இந்த iQoo 11 ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.

டிஸ்பிளே

iQOO 11 5G ஆனது 6.78 அங்குல ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும்.

மெமரி

iQOO 11 5G ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவையும் இந்த போன் கொண்டிருக்கும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. இதன் மூலம் இதன் சேமிப்புத்திறனை அதிகரித்துக்கொள்ள முடியும்.

கேமரா

iQOO 11 5G ஸ்மார்ட்போன் பின்பக்கத்தில் 50எம்பி மெயின் கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 8எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதனோடு எல்இடி ப்ளாஷ் ஒன்றும் வழங்கப்பட்டு இருக்கிறது. கூடவே செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே முன்பக்கத்தில் 16எம்பி செல்ஃபி கேமரா இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டு இருக்கும் எனத் தெரிகிறது.

பேட்டரி

iQOO 11 5G ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 120 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியை கொண்டுள்ளது. எனவே இந்த போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. கேமிங் பயன்பாட்டுக்கும் நன்றாக இருக்கும். அதேசமயம் சில நிமிடங்களில் இந்த போனை ஃபுல் சார்ஜ் செய்ய முடியும். இத்தகைய பாஸ்ட் சார்ஜிங் வசதியை ஒரிரு மொபைல்கள் மட்டுமே கொண்டு இருக்கிறது.

இயங்குதளம்

இந்த iQOO 11 5G ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தில் இயங்குகிறது. யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் அறிமுகமாக இருக்கிறது இந்த iQOO 11 5G ஸ்மார்ட்போன். முன்பே குறிப்பிட்டது போல் இந்த மொபைல் டிசம்பர் 8 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

The post ஜென் 1 சிப்செட், 5000mAh பேட்டரி, 120W பாஸ்ட் சார்ஜிங் அம்சங்களோடு வெளியாகிறதா iQoo 11 5G? first appeared on .

]]>