spark 10 pro https://www.91mobiles.com/tamil Fri, 03 Mar 2023 06:03:51 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ரூ.10,000க்கு ‘ப்ரோ’ மொபைல்! அதிரடி காட்டும் டெக்னோ! https://www.91mobiles.com/tamil/tecno-spark-10-pro-budget-range-smartphone-coming-to-india-soon/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=tecno-spark-10-pro-budget-range-smartphone-coming-to-india-soon Fri, 03 Mar 2023 06:03:51 +0000 https://www.91mobiles.com/tamil/?p=6204 புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை பல வகைகளில் அறிமுகம் செய்து, மக்களின் மனதில் ஒரு நம்பகமான பிராண்டாக Tecno மாறிவருகிறது. அந்த வகையில், டெக்னோ நிறுவனம் அடுத்து ரூ.10,000 முதல் ரூ.12,000 விலைக்குள் அறிமுகம் செய்யப்போகும் ஒரு சாதனம் தான் Tecno Spark 10 Pro. டெக்னோ சமீபத்தில் நடந்து வரும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2023 நிகழ்வில், அதன் அடுத்த அறிமுகமான டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ பட்ஜெட் ரேஞ்ச் ஸ்மார்ட்போனை காட்சிப்படுத்தியது. இது விரைவில் இந்தியா […]

The post ரூ.10,000க்கு ‘ப்ரோ’ மொபைல்! அதிரடி காட்டும் டெக்னோ! first appeared on .

]]>

Highlights

  • டெக்னோ நிறுவனம் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2023 நிகழ்வில், அதன் அடுத்த அறிமுகமான டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ பட்ஜெட் ரேஞ்ச் ஸ்மார்ட்போனை காட்சிப்படுத்தியது.
  • இது ரூ.10,000 – ரூ.12,000 என்ற விலையில் அறிமுகமாக இருக்கிறது.

புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை பல வகைகளில் அறிமுகம் செய்து, மக்களின் மனதில் ஒரு நம்பகமான பிராண்டாக Tecno மாறிவருகிறது. அந்த வகையில், டெக்னோ நிறுவனம் அடுத்து ரூ.10,000 முதல் ரூ.12,000 விலைக்குள் அறிமுகம் செய்யப்போகும் ஒரு சாதனம் தான் Tecno Spark 10 Pro.

டெக்னோ சமீபத்தில் நடந்து வரும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2023 நிகழ்வில், அதன் அடுத்த அறிமுகமான டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ பட்ஜெட் ரேஞ்ச் ஸ்மார்ட்போனை காட்சிப்படுத்தியது. இது விரைவில் இந்தியா உட்பட பல நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது, ​​​​டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோவின் விலை விபரம் மற்றும் அதன் விரிவான ஸ்பெக் ஷீட்டை வெளிப்படுத்தும் ஒரு லீக் தகவல் வெளியாகியுள்ளது.

 

சிறப்பம்சங்கள்

டிப்ஸ்டர் பராஸ் குக்லானி, டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோவின் சந்தைப்படுத்தல் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அதில் மொபைல் பற்றிய அனைத்து முக்கிய விவரங்களும் உள்ளன. டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ (K17 மாடல்) ஆனது 1080 x 2460 பிக்சல்கள், 20.5:9 விகிதம், 90Hz ரெப்ரெஷ் ரேட், 270Hz டச் செம்பில், HD தெளிவுத்திறன் கொண்ட பெரிய 6.78 அங்குல LCD டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

 

சிப்செட்

Tecno Spark 10 Pro ஸ்மார்ட்போனின் ஹூட்டின் கீழ், நிறுவனம் சக்தி வாய்ந்த Helio G88 சிப்செட்டை வழங்கியுள்ளதாகத் தெரிகிறது. இந்த புதிய Tecno Spark 10 Pro ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜ் பற்றி பேசுகையில், இது 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வெளிவரும். கூடுதல் ஸ்டோரேஜ் விருப்பத்திற்காக, இதில் மைக்ரோ SD கார்ட் ஸ்லாட் அம்சமும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேமரா

இந்த புதிய Tecno Spark 10 Pro சாதனத்தின் முன்பக்க கேமரா 32 மெகாபிக்சல் ஷூட்டராக இருக்கும். அதேபோல், இதன் பின்புற கேமராவில் 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, AI லென்ஸ் மற்றும் டூயல் எல்இடி ஃபிளாஷ் போன்றவை இடம்பெறும் என்று கூறப்படுகிறது.இதில் ப்ரோ மோட், ஏஐ பியூட்டி, சூப்பர் நைட் மோட், சூப்பர் போன்ற அம்சங்களுடன் இருக்கும்.

 

பேட்டரி

Tecno Spark 10 Pro ஸ்மார்ட்போன் USB-C வழியாக 18W சார்ஜிங்கை ஆதரிக்கும். இந்த சாதனம் 5,000mAh பேட்டரியை பேக் செய்யுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் மார்ச் நடுப்பகுதியில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ.10,000 முதல் ரூ.12,000-க்குள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

தோற்றம்

Tecno Spark 10 Pro சாதனம் மூன்று வண்ணத் தேர்வுகளுடன் வழங்கப்படும். இதில் ஸ்டார்ரி பிளாக் மற்றும் பேர்ல் ஒயிட் மாடல்கள் ஸ்போர்ட்டிங் கிளாஸ் பேக் மற்றும் லூனார் எக்லிப்ஸ் வேரியண்ட் என கடினமான தோல் பூச்சு உடன் ஒரு மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் விலையில் பெஸ்ட் சாய்ஸ் ஆக இந்த Tecno Spark 10 Pro இருக்குமென்று கூறப்படுகிறது.

 

The post ரூ.10,000க்கு ‘ப்ரோ’ மொபைல்! அதிரடி காட்டும் டெக்னோ! first appeared on .

]]>