tamil movie https://www.91mobiles.com/tamil Thu, 09 Mar 2023 12:28:05 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 துணிவு படத்திற்கும் AK62 படத்திற்கும் தொடர்பா? https://www.91mobiles.com/tamil/ajith-s-ak-62-is-reportedly-titled-devil-an-official-update-will-soon/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=ajith-s-ak-62-is-reportedly-titled-devil-an-official-update-will-soon Thu, 23 Feb 2023 12:15:29 +0000 https://www.91mobiles.com/tamil/?p=6043 அஜித்தின் 62வது படமான ஏகே 62 டைட்டில் ப்ரோமோ எப்போது வரும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். கடந்த மாதம் பொங்கலுக்கு வெளியான அஜித்தின் துணிவு திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாக அமைந்தது. அந்தப் படத்தில் அஜித் டார்க் டெவில் என்ற கேரக்டரில் கேங்ஸ்டராக நடித்திருந்தார். இந்நிலையில், தற்போது உருவாகும் ஏகே 62ல், துணிவு படத்தில் இருந்து ஒரு கனெக்ட் இருக்கும் என தகவல் கிடைத்துள்ளது.   ஏகே 62 பூஜை விஜய்யின் தளபதி 67 லியோ என்ற […]

The post துணிவு படத்திற்கும் AK62 படத்திற்கும் தொடர்பா? first appeared on .

]]>

Highlights

  • தற்போது உருவாகும் ஏகே 62ல், துணிவு படத்தில் இருந்து ஒரு கனெக்ட் இருக்கும் என தகவல் கிடைத்துள்ளது.
  • படத்தின் டைட்டிலும் வெளியாகி இருக்கிறது

அஜித்தின் 62வது படமான ஏகே 62 டைட்டில் ப்ரோமோ எப்போது வரும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். கடந்த மாதம் பொங்கலுக்கு வெளியான அஜித்தின் துணிவு திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாக அமைந்தது. அந்தப் படத்தில் அஜித் டார்க் டெவில் என்ற கேரக்டரில் கேங்ஸ்டராக நடித்திருந்தார். இந்நிலையில், தற்போது உருவாகும் ஏகே 62ல், துணிவு படத்தில் இருந்து ஒரு கனெக்ட் இருக்கும் என தகவல் கிடைத்துள்ளது.

 

ஏகே 62 பூஜை

விஜய்யின் தளபதி 67 லியோ என்ற டைட்டில் அறிவிப்புடன் ஷூட்டிங் சென்றுவிட்டது. இதனையடுத்து அஜித்தின் ஏகே 62 அப்டேட் என்னவென்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ரொம்பவே ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். லைகா தயாரிக்கும் இந்தப் படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் தற்போது மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து இன்னும் அபிஸியல் அப்டேட் வெளியாகாத நிலையில், ஏகே 62 பூஜை சிம்பிளாக முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

துணிவுடன் கனெக்ட் ஆகும் ஏகே 62

சென்னையில் நடைபெற்ற ஏகே 62 பூஜையில், மகிழ் திருமேனி உள்ளிட்ட படக்குழுவினர் மட்டும் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. அதேபோல் மார்ச் இரண்டாவது வாரம் டைட்டில் ப்ரோமோ வெளியானதும் ஷூட்டிங் தொடங்கிவிடும் எனவும் தகவல் கிடைத்துள்ளது. முக்கியமாக ஏகே 62 படத்திற்கு டெவில் என்ற தலைப்பை வைக்க முடிவு செய்துள்ளதாம் படக்குழு. துணிவு படத்தில் டார்க் டெவில் என்ற கேரக்டரில் நடித்திருந்தார் அஜித். தற்போது அந்த டெவில் என்ற பெயரையே ஏகே 62 டைட்டிலாக வைத்துவிட்டார்களாம்.

 

ட்ரெண்டாகும் டார்க் டெவில்

அஜித்தின் டெவில் கேரக்டர் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றதால், படக்குழு இப்படியொரு ப்ளான் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதேநேரம் ஏகே 62 ஸ்பை த்ரில்லர் ஜானரில் உருவாகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதனால் தான் டெவில் என்ற டைட்டில் சரியாக இருக்கும் என மகிழ் திருமேனி நினைத்துள்ளாராம். இதனையடுத்து ஏகே 62 டைட்டில் டெவில் என சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. ஆனாலும், இதுகுறித்து அபிஸியலான அறிவிப்பு வெளியானால் மட்டுமே உண்மையாகும்.

 

விரைவில் ஷூட்டிங் அப்டேட்

ஏகே 62 டைட்டில் ப்ரோமோவுடன் இந்தப் படத்தில் கமிட் ஆகியுள்ள நடிகர்கள் குறித்த அப்டேட்டும் வெளியாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த அப்டேட் மார்ச் முதல் வாரம் அல்லது இரண்டாவது வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து ஏகே 62 படப்பிடிப்பு ஆரம்பாகிறதாம். மேலும், அஜித்துடன் அருண் விஜய், அதர்வா, பிக் பாஸ் கவின், ஜான் கெக்கென் ஆகியோரும் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல் ஏகே 62 படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ்ஷா கமிட் ஆகியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

 

ஏகே 62 ரிலீஸ் தேதி

மார்ச் மாதம் தொடங்கும் ஏகே 62 ஷூட்டிங் இரண்டு அல்லது மூன்றே ஷெட்யூல்களில் விரைவாக முடிவுக்கு வரும் எனக் கூறப்படுகிறது. மேலும், பொங்கல் ரேஸில் விஜய்யின் வாரிசுக்கு போட்டியாக துணிவு களமிறங்கியது. அதேபோல், லியோ படத்துக்கு போட்டியாக ஏகே 62-ஐ களமிறக்க அஜித் முடிவு செய்துள்ளாராம். ஏகே 62 டைட்டில் ப்ரோமோ வெளியானதும் அசுர வேகத்தில் படப்பிடிப்பை நடத்திமுடிக்க உள்ளாராம் மகிழ் திருமேனி. இந்நிலையில், ஏகே 62 படத்தின் டைட்டில் டெவில் என்றே இருக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

The post துணிவு படத்திற்கும் AK62 படத்திற்கும் தொடர்பா? first appeared on .

]]>