tata Nexon ev https://www.91mobiles.com/tamil Thu, 10 Nov 2022 07:23:35 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 இந்தியாவில் வெளியாகும் இரண்டு பென்ஸ் எலக்ட்ரிக் கார்கள் https://www.91mobiles.com/tamil/mercedes-benz-glb-and-eqb-india-launch-date-announced/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=mercedes-benz-glb-and-eqb-india-launch-date-announced Thu, 10 Nov 2022 07:23:35 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3523 மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் முற்றிலும் புதிய GLB மற்றும் EQB மாடல்களை டிசம்பர் 2 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இப்போது இந்த புதிய எலெக்ட்ரிக் கார்களுக்கான முன்பதிவுகளும் துவங்கி நடைபெற்று வருகிறது. இவற்றுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. முன்பதிவு மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா வலைதளம் மற்றும் விற்பனை மையங்களில் நடைபெறுகிறது. MFA2 பிளாட்பார்மில் உருவாகி இருக்கும் புதிய GLB மாடல் அளவில் […]

The post இந்தியாவில் வெளியாகும் இரண்டு பென்ஸ் எலக்ட்ரிக் கார்கள் first appeared on .

]]>

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் முற்றிலும் புதிய GLB மற்றும் EQB மாடல்களை டிசம்பர் 2 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இப்போது இந்த புதிய எலெக்ட்ரிக் கார்களுக்கான முன்பதிவுகளும் துவங்கி நடைபெற்று வருகிறது. இவற்றுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. முன்பதிவு மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா வலைதளம் மற்றும் விற்பனை மையங்களில் நடைபெறுகிறது.

MFA2 பிளாட்பார்மில் உருவாகி இருக்கும் புதிய GLB மாடல் அளவில் 4634mm நீளம், 1834mm அகலம், 1658mm உயரம், 2829mm வீல்பேஸ் கொண்டுள்ளது. புதிய பென்ஸ் EQB மாடல் அளவில் 4748mm நீளம், 1667mm உயரம் கொண்டிருக்கிறது. இதன் வீல்பேஸ் மற்றும் அகலம் அதன் ICE மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய பென்ஸ் GLB மற்றும் EQB மாடல்களில் ஏராளமான புது அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் எல்இடி ஹெட்லைட்கள், ரியர் லைட்கள், பானரோமிக் சன்ரூப், 10.25 இன்ச் டிரைவர் டிஸ்ப்ளே, 10.25 இன்ச் இன்போடெயின்மெண்ட் ஸ்கிரீன், வயர்லெஸ் சார்ஜிங் பேட், 360 டிகிரி கேமரா, மல்டி-ஜோன் டெம்ப்பரேச்சர் கண்ட்ரோல் உள்ளிட்டவை அடங்கும்.

இந்த இரு எலெக்ட்ரிக் கார் மாடல்களும் சில மேற்கத்திய சந்தைகளில் ஐந்து மற்றும் ஏழு இருக்கை அமைப்புகளில் கிடைக்கின்றன. சர்வதேச சந்தையில் பென்ஸ் GLB மாடல் ஏராளமான வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த கார் 1.3 லிட்டர், 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றின் செயல்திறன் நிச்சயம் வேறுபடும். மேலும், இவற்றின் சில வேரியண்ட்களில் ஆல்-வீல் டிரைவ் வசதியும் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பூனேவில் உள்ள உற்பத்தி ஆலையில் இருந்து 50 ஆயிரமாவது எலெக்ட்ரிக் வாகனத்தை வெளியிட்டு உள்ளது. 50 ஆயிரமாவது யூனிட்டாக டாடா நெக்சான் EV வெளியிடப்பட்டது. இந்த கார் கிளேசியர் வைட் நிறம் கொண்டிருக்கிறது.

இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்சான் EV, டிகோர் EV மற்றும் டியாகோ EV என மூன்று எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது. இது மட்டுமின்றி அடுத்த ஐந்து ஆண்டுகளில் பத்து எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. பத்து புது எலெக்ட்ரிக் வாகனங்களில் கர்வ் EV, அவினியா மற்றும் அல்ட்ரோஸ் EV உள்ளிட்டவை ப்ரோடக்‌ஷன் நிலையை எட்டும் என தெரிகிறது.

இந்நிலையில் டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனம் மற்றும் டாடா பயணிகள் எலெக்ட்ரிக் மொபிலிட்டி பிரிவு நிர்வாக இயக்குனர் சைலேஷ் சந்திரா, “வாடிக்கையாளர்களுக்கு எளிய, குறைந்த விலை தீர்வுகளை வழங்க டாடா குழும நிறுவனங்களுடன் இணைந்து எலெக்ட்ரிக் வாகன துறையை உருவாக்கி இருக்கிறோம்.

இந்தியாவில் 50 ஆயிரமாவது எலெக்ட்ரிக் வாகனத்தை கொண்டாடுவது, மக்கள் எங்களின் தயாரிப்புகளை எந்த அளவுக்கு ஏற்று கொண்டுள்ளனர் என்பதற்கு சான்றாக விளங்குகிறது. தொடர்ந்து அதிகரிக்கும் எரிபொருள் விலை மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு போன்றவற்றை தவிர்க்க சரியான மாற்று எலெக்ட்ரிக் வாகனங்கள் ஆகும்.”

“தற்போது வாடிக்கையாளர்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை ஏற்க தயாராகி விட்டனர். முன்கூட்டியே எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க செய்ததோடு, இந்திய வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய முதன்மை பிராண்டாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.” என தெரிவித்து இருக்கிறார்.

The post இந்தியாவில் வெளியாகும் இரண்டு பென்ஸ் எலக்ட்ரிக் கார்கள் first appeared on .

]]>