Tata Punch ev https://www.91mobiles.com/tamil Thu, 09 Mar 2023 10:12:49 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 2023 ஆட்டோ எக்ஸ்போவில் 3 எலக்ட்ரிக் கார்களை காட்சிப்படுத்துகிறதா டாடா? https://www.91mobiles.com/tamil/tata-to-unveil-3-electric-cars-at-2023-auto-expo/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=tata-to-unveil-3-electric-cars-at-2023-auto-expo Wed, 04 Jan 2023 10:07:00 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4701 இந்தியாவின் மிகப்பெரிய வாகன திருவிழாக்களில் ஒன்றாக கருதப்படும் 2023 ஆட்டோ எக்ஸ்போ (2023 Auto Expo) இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ளது. இந்த வாகன கண்காட்சியில், டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம், 3 எலெக்ட்ரிக் கார்களை (Electric Cars) காட்சிக்கு வைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த 3 எலெக்ட்ரிக் கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம். டாடா பன்ச் எலெக்ட்ரிக் கார் (Tata Punch EV) இந்தியாவில் தற்போது மிகவும் பிரபலமாக உள்ள டாடா பன்ச் […]

The post 2023 ஆட்டோ எக்ஸ்போவில் 3 எலக்ட்ரிக் கார்களை காட்சிப்படுத்துகிறதா டாடா? first appeared on .

]]>

இந்தியாவின் மிகப்பெரிய வாகன திருவிழாக்களில் ஒன்றாக கருதப்படும் 2023 ஆட்டோ எக்ஸ்போ (2023 Auto Expo) இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ளது. இந்த வாகன கண்காட்சியில், டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம், 3 எலெக்ட்ரிக் கார்களை (Electric Cars) காட்சிக்கு வைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த 3 எலெக்ட்ரிக் கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டாடா பன்ச் எலெக்ட்ரிக் கார் (Tata Punch EV)

இந்தியாவில் தற்போது மிகவும் பிரபலமாக உள்ள டாடா பன்ச் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன்தான் இது. டாடா பன்ச் எலெக்ட்ரிக் காரானது, ஜென் 2 (சிக்மா) பிளாட்பார்ம் அடிப்படையில் கட்டமைக்கப்பட இருக்கிறது. இது ஆல்ஃபா பிளாட்பார்மின் மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட வெர்ஷன் என்பது குறிப்பிடத்தக்கது. டாடா பன்ச் எலெக்ட்ரிக் காரில் மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவை 26 kWh மற்றும் 30.2 kWh பேட்டரி ஆப்ஷன்கள் ஆகும். முறையே டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் (Tata Tigor EV) மற்றும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்களிடம் (Tata Nexon EV) இருந்து இந்த பேட்டரி ஆப்ஷன்கள் பெறப்படவுள்ளன. இந்த 2 பேட்டரி ஆப்ஷன்களின் ரேஞ்சும் (ஒரு முறை முழுமையாக நிரப்பினால் பயணம் செய்யும் தொலைவு) 300 கிலோ மீட்டர்களுக்கு மேல் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா கர்வ் எலெக்ட்ரிக் கார் (Tata Curvv EV)

கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கர்வ் எலெக்ட்ரிக் கார் கான்செப்ட்டை காட்சிப்படுத்தியிருந்தது. இது எஸ்யூவி கூபே (SUV Coupe) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். எலெக்ட்ரிக் வெர்ஷனில் மட்டுமல்லாது, பெட்ரோல் (Petrol) மற்றும் (Diesel) வெர்ஷன்களிலும், இந்த கார்  அறிமுகம் செய்யப்படும் என்பதை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது. டாடா கர்வ் எலெக்ட்ரிக் காரை பொறுத்தவரையில், 40 kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் ரேஞ்ச் 400 கிலோ மீட்டர்களுக்கும் அதிகமாக இருக்கலாம். எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் கார் (MG ZS EV), ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் (Hyundai Kona EV), மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி400 (Mahindra XUV400) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுடன், டாடா கர்வ் எலெக்ட்ரிக் கார் போட்டியிடும். டாடா கர்வ் எலெக்ட்ரிக் காரின் நீளம் 4.3 மீட்டர்களாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா அவின்யா எலெக்ட்ரிக் கார் (Tata Avinya EV)

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஜென் 3 எலெக்ட்ரிக் வாகன பிளாட்பார்ம் அடிப்படையில், டாடா அவின்யா எலெக்ட்ரிக் கார் உருவாக்கப்படுகிறது. இந்த பிளாட்பார்ம் அடிப்படையில், எதிர்காலத்தில் உருவாக்கப்படும் அனைத்து எலெக்ட்ரிக் வாகனங்களின் ரேஞ்சும் 500 கிலோ மீட்டர்களுக்கு மேல் இருக்க வேண்டும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விரும்புகிறது. எனவே டாடா அவின்யா எலெக்ட்ரிக் காரின் ரேஞ்சும் 500 கிலோ மீட்டர்களுக்கு மேலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்படவுள்ள இந்த 3 எலெக்ட்ரிக் கார்களில் டாடா பன்ச் எலெக்ட்ரிக் கார்தான் முதலில் விற்பனைக்கு வரவுள்ளது. டாடா பன்ச் எலெக்ட்ரிக் கார், நடப்பு 2023ம் ஆண்டின், ஜூலை-செப்டம்பர் காலகட்டத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து வரும் ஆண்டுகளில், டாடா கர்வ் எலெக்ட்ரிக் கார் மற்றும் டாடா அவின்யா எலெக்ட்ரிக் கார் ஆகியவை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்.

டாடா நானோ எலக்ட்ரிக் கார்

இதற்கிடையே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நானோ காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை (Tata Nano EV) விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டாடா நானோ கார், எலெக்ட்ரிக் அவதாரத்தில் விற்பனைக்கு வந்தால், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறலாம். விலை குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதுதான் இதற்கு காரணம். ஆனால் 2023 ஆட்டோ எக்ஸ்போவில், டாடா நானோ எலெக்ட்ரிக் கார் காட்சிக்கு வைக்கப்படுமா என்பது உறுதியாக தெரியவில்லை.

The post 2023 ஆட்டோ எக்ஸ்போவில் 3 எலக்ட்ரிக் கார்களை காட்சிப்படுத்துகிறதா டாடா? first appeared on .

]]>
டாடாவின் 4வது எலக்ட்ரிக் காராக வருகிறது ‘பஞ்ச்’ https://www.91mobiles.com/tamil/tata-punch-ev-india-launch-confirmed/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=tata-punch-ev-india-launch-confirmed Fri, 23 Dec 2022 06:10:44 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4506 இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பன்ச் காரை, கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் பன்ச் காரை விற்பனைக்கு கொண்டு வந்தது. இது மைக்ரோ எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். டாடாவின் 4வது எலக்ட்ரிக் காராக வருகிறது ‘பஞ்ச். முதல் காரணம் அறிமுகம் செய்யப்பட்ட உடனேயே டாடா பன்ச் கார் ‘ஹிட்’ ஆகி விட்டது. தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் ஒவ்வொரு மாதமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பன்ச் கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை […]

The post டாடாவின் 4வது எலக்ட்ரிக் காராக வருகிறது ‘பஞ்ச்’ first appeared on .

]]>

இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பன்ச் காரை, கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் பன்ச் காரை விற்பனைக்கு கொண்டு வந்தது. இது மைக்ரோ எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். டாடாவின் 4வது எலக்ட்ரிக் காராக வருகிறது ‘பஞ்ச்.

முதல் காரணம்

அறிமுகம் செய்யப்பட்ட உடனேயே டாடா பன்ச் கார் ‘ஹிட்’ ஆகி விட்டது. தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் ஒவ்வொரு மாதமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பன்ச் கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. டாடா பன்ச் காருக்கு வாடிக்கையாளர்கள் இந்த அளவிற்கு பிரம்மாண்டமான வரவேற்பை வாரி வழங்கி வருவதற்கு 2 முக்கியமான காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம்.. குறைவான விலை!

இரண்டாவது காரணம்

தற்போதைய நிலையில் டாடா பன்ச் காரின் ஆரம்ப விலை வெறும் 6 லட்ச ரூபாய் மட்டுமே. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். இதுதவிர குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில் டாடா பன்ச் கார் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது. டாடா பன்ச் காருக்கு கிடைத்துள்ள பிரம்மாண்டமான வரவேற்பிற்கு இது இரண்டாவது காரணம் ஆகும்.

எலக்ட்ரிக் வெர்ஷன்

மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளதால், பன்ச் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன. தற்போது அந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. டாடா பன்ச் இவி (Tata Punch EV) என்ற பெயரில், இந்த புதிய மாடல் விற்பனைக்கு வரவுள்ளது. இதில், EV என்பது Electric Vehicle என்பதை குறிக்கிறது. டாடா பன்ச் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் விற்பனைக்கு வருவது உறுதியாகியுள்ளதால், வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

எப்போது?

டாடா பன்ச் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வருவதை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உறுதி செய்து விட்டாலும், இந்த புதிய மாடலின் அறிமுக தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அனேகமாக 2023ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் டாடா பன்ச் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது 2023ம் ஆண்டின் ஜூலை – செப்டம்பர் காலகட்டத்தில் டாடா பன்ச் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம். இது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நான்காவது எலெக்ட்ரிக் காராக இருக்கும். முன்னதாக நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் (Nexon EV), டிகோர் எலெக்ட்ரிக் கார் (Tigor EV) மற்றும் டியாகோ எலெக்ட்ரிக் கார் (Tiago EV) என 3 மாடல்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

ப்ளாட்பார்ம்

டாடா பன்ச் காரானது, ஆல்ஃபா பிளாட்பார்ம் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. டாடா பன்ச் எலெக்ட்ரிக் காரில், இதே பிளாட்பார்ம்மின் மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட வெர்ஷன் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஜிப்ட்ரான் பவர்ட்ரெயினும் இடம்பெற்றிருக்கும். குறைந்தபட்சம் 2 வகையான பேட்டரி ஆப்ஷன்களுடன் டாடா பன்ச் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அம்சங்கள்

இதுதவிர 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் போன்ற வசதிகளும் டாடா பன்ச் எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தற்போது 100 எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையாகிறது என்றால், அதில் 80-85 கார்கள், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடையதாகதான் இருக்கும். அந்த அளவிற்கு இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வலுவாக காலூன்றி விட்டது. இந்த சூழலில் பன்ச் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனும் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளதால், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆதிக்கம் மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாக இருக்கிறது.

The post டாடாவின் 4வது எலக்ட்ரிக் காராக வருகிறது ‘பஞ்ச்’ first appeared on .

]]>