Tecno Phantom V Fold https://www.91mobiles.com/tamil Fri, 10 Mar 2023 07:50:21 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ஃபோல்டபிள் போனை அறிமுகப்படுத்தியது டெக்னோ! https://www.91mobiles.com/tamil/tecno-phantom-v-fold-5g-with-dimensity-9000-plus-launched-in-india/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=tecno-phantom-v-fold-5g-with-dimensity-9000-plus-launched-in-india Thu, 02 Mar 2023 05:52:28 +0000 https://www.91mobiles.com/tamil/?p=6167 ‘டச் ஸ்கிரீன்’ வசதிக்குப் பிறகு மொபைல் போனில் பெரிய மாற்றங்கள் எதுவும் வராத நிலையில், தற்போது மொபைலின் திரையை மடிக்கக்கூடிய அல்லது சுருட்டக்கூடிய புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படுகிறது.  சாம்சங், மோட்டரோலா போன்ற பிரபல மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் இந்த புதிய தொழில்நுட்பத்தில் மொபைலை தயாரித்து வெளியிட்டு வருகின்றன. வாடிக்கையாளர்களிடமும் இதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இதனையடுத்து இப்போது டெக்னோ நிறுவனமும் மடிக்கக்கூடிய வகையில் மொபைல் ஒன்றை தயாரித்து வெளியிட்டு இருக்கிறது. இதன் அம்சங்கள், விலை குறித்து இப்போது […]

The post ஃபோல்டபிள் போனை அறிமுகப்படுத்தியது டெக்னோ! first appeared on .

]]>

Highlights

  • புதிய TECNO Phantom V Fold 5G போனை அறிமுகம் செய்துள்ளது டெக்னோ நிறுவனம்.
  • இந்த போன் தனித்துவமான டிஸ்பிளே மற்றும் தரமான அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

‘டச் ஸ்கிரீன்’ வசதிக்குப் பிறகு மொபைல் போனில் பெரிய மாற்றங்கள் எதுவும் வராத நிலையில், தற்போது மொபைலின் திரையை மடிக்கக்கூடிய அல்லது சுருட்டக்கூடிய புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படுகிறது.  சாம்சங், மோட்டரோலா போன்ற பிரபல மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் இந்த புதிய தொழில்நுட்பத்தில் மொபைலை தயாரித்து வெளியிட்டு வருகின்றன. வாடிக்கையாளர்களிடமும் இதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இதனையடுத்து இப்போது டெக்னோ நிறுவனமும் மடிக்கக்கூடிய வகையில் மொபைல் ஒன்றை தயாரித்து வெளியிட்டு இருக்கிறது. இதன் அம்சங்கள், விலை குறித்து இப்போது விரிவாகப் பார்க்கலாம்.

டிஸ்ப்ளே

டெக்னோ ஃபேண்டம் வி ஃபோல்டு 5ஜி போன் ஆனது 7.85 அங்குல மடிக்கக்கூடிய LLTPO AMOLED டிஸ்பிளே மற்றும் 6.4 அங்குல LLTPO AMOLED வெளிப்புற டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இதன் 7.85 அங்குல டிஸ்பிளே ஆனது 2296×2000 பிக்சல்ஸ் வசதியைக் கொண்டுள்ளது. பின்பு வெளிப்புற 6.42 அங்குல டிஸ்பிளே ஆனது 1080×2550 பிக்சல்ஸ் வசதியைக் கொண்டுள்ளது. இந்த போனில் பிரத்யேகமாக ஃபிக்சட் ஆக்சிஸ் ரோடேட் மற்றும் ஸ்லைடு தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் இதில் உள்ள ரிவர்ஸ் ஸ்னாப் ஸ்டிரக்ச்சர் மடிக்கும் அனுபவத்தைச் சிரமம் அற்றதாகவும், கிரீஸ் அற்றதாகவும் மாற்றுகிறது. குறிப்பாக இந்த போன் இரண்டு லட்சம் முறை சோதனை செய்யப்பட்டு அதன்பின்பு தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 

சிப்செட்

டெக்னோ ஃபேண்டம் வி ஃபோல்டு 5ஜி போன் 3.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 9000+பிராசஸரோடு வெளியாகி இருக்கிறது. கூடவே இதில் மாலி G710 MC10 ஜிபியு ஆதரவும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும். குறிப்பாக மேம்பட்ட செயல்திறன் வழங்கும் இந்த தரமான Dimensity 9000+பிராசஸர். HiOS 13 Fold சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய டெக்னோஃபோல்டு போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஃபோல்டு போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

மெமரி

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய டெக்னோ ஃபேண்டம் வி ஃபோல்டு 5ஜி போன்.

 

கேமரா

50எம்பி பிரைமரி கேமரா +13எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி போர்ட்ரெயிட் டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த புதிய போன். மேலும் இந்த போன் 32MP வெளிப்புற / 16 MP உள்புற செல்ஃபி கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த போனின் உதவியுடன் தெளிவான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது

 

பேட்டரி

இந்த புதிய போன். 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 45 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த டெக்னோ ஃபேண்டம் வி ஃபோல்டு 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 

கனெக்டிவிட்டி

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3. யுஎஸ்பி டைப் சி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டு இந்த டெக்னோ போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விலை

வெள்ளை மற்றும் கருப்பு நிறங்களில் இந்த டெக்னோ ஃபேண்டம் வி ஃபோல்டு 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதி கொண்டுள்ளது. இந்த போனின் விலையைப் பொருத்தவரை..

12GB + 256GB  =  ரூ.89,999

12GB + 512GB  =  ரூ.99,999

என்ற விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அறிமுகச் சலுகையாக இப்போது 12GB + 256GB  போனை  ரூ.79,999 என்ற விலைக்கே வாங்க முடியும். விரைவில் இந்த போனின் விற்பனை தொடங்கும்.

 

அம்சங்கள்

  • 7.65 அங்குல (2296 x 2000) 2K+ 10-120Hz LTPO AMOLED foldable டிஸ்ப்ளே
  • 6.42 அங்குல (1080 x 2550) FHD+ 10-120Hz LTPO AMOLED outer டிஸ்ப்ளே
  •  Up to 3.2GHz Octa Core MediaTek Dimensity 9000+ processor with Mali-G710 MC10 GPU
  • 12GB LPDDR5X RAM, 256GB / 512GB UFS 3.1 சேமிப்புத்திறன்
  • Android 13 with HiOS 13 Fold
  • Dual SIM (nano + nano)
  • 1/1.3″ சென்சாருடன்கூடிய 50MP முதன்மை கேமரா, f/1.8 aperture, f/2.2 அப்பசருடன் கூடிய 13MP 120° அல்ட்ரா வைடு கேமரா, 50MP 2x portrait டெலிபோட்டோ கேமரா, 20x digital zoom
  • 32MP (outer) / 16MP (inner) முன்பக்க கேமராக்கள்
  • இன் – டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்
  • USB Type-C audio, Stereo speakers
  • 159.4×72 (fold) / 140.4 (unfold), 14.5-14.2mm (fold) / 6.8mm (unfold)
  • 5G SA/NSA, Dual 4G VoLTE, Wi-Fi 6 802.11 ax, Bluetooth 5.3,GPS/GLONASS, USB Type-C, NFC
  • 45W fast charging ஆதரவுடன் கூடிய 5000mAh (Typical) பேட்டரி

The post ஃபோல்டபிள் போனை அறிமுகப்படுத்தியது டெக்னோ! first appeared on .

]]>
பிப். 28 வெளியாகிறது Tecno Phantom V Fold https://www.91mobiles.com/tamil/february-28-new-tecno-phantom-v-fold-to-be-launched/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=february-28-new-tecno-phantom-v-fold-to-be-launched Wed, 08 Feb 2023 13:50:59 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5676 மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2023 ஸ்பெயினின் பார்சிலோனாவில் இந்த மாதம் பிப்ரவரி 27 ஆம் தேதி மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2023 நிகழ்வு தொடங்குகிறது. இந்த நிகழ்வு தொடங்கிய அடுத்த நாளான பிப்ரவரி 28 ஆம் தேதி Tecno Phantom V Fold போன் வெளியிடப்படும் என டெக்னோ நிறுவனம் உறுதி செய்துள்ளது. அதன்படி Tecno Phantom V Fold போனின் வெளியீட்டுப் பக்கம் தற்போதே MWC 2023 இணையதளத்தில் நேரலையில் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் […]

The post பிப். 28 வெளியாகிறது Tecno Phantom V Fold first appeared on .

]]>

Highlights

  • டெக்னோ நிறுவனம் விரைவில் Tecno Phantom V Fold போனை இந்தியாவில் அறிமுகம் செய்யும் என டிப்ஸ்டர் தகவல் தெரிவிக்கிறது.
  • இந்த Tecno Phantom V Fold ஸ்மார்ட்போன் பிப்ரவரி 28 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2023

ஸ்பெயினின் பார்சிலோனாவில் இந்த மாதம் பிப்ரவரி 27 ஆம் தேதி மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2023 நிகழ்வு தொடங்குகிறது. இந்த நிகழ்வு தொடங்கிய அடுத்த நாளான பிப்ரவரி 28 ஆம் தேதி Tecno Phantom V Fold போன் வெளியிடப்படும் என டெக்னோ நிறுவனம் உறுதி செய்துள்ளது. அதன்படி Tecno Phantom V Fold போனின் வெளியீட்டுப் பக்கம் தற்போதே MWC 2023 இணையதளத்தில் நேரலையில் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 9000+ SoC சிப்செட் பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.

Tecno Phantom V Fold

புத்தகம் போல் மடிக்கக்கூடிய ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என கூறப்படுகிறது. டெக்னோ நிறுவனத்தின் முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் இது என்பது கவனிக்கத்தக்க ஒன்று. இதில் மீடியாடெக் டைமன்சிட்டி 9000+ SoC சிப்செட் இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கிறது. AnTuTu சோதனையில் 1.08 மில்லியனுக்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றிருக்கிறது இந்த சிப்செட். Tecno Phantom V Fold இன் வெளியீட்டுப் பக்கம் தற்போது MWC 2023 இணையதளத்தில் நேரலையில் உள்ளது.

 

வெளியான ஒரிஜினல் புகைப்படம்

அதேபோல் வரவிருக்கும் ஸ்மார்ட்போனின் நேரடி புகைப்படங்கள் டிப்ஸ்டர் பராஸ் குக்லானியால் மூலம் கசிந்தது. இந்த படத்தில் Tecno Phantom V Fold இன் கவர் டிஸ்ப்ளே காண்பிக்கப்படுகிறது. ஸ்மார்ட்போன் மையத்தில் பஞ்ச் ஹோல் வசதியுடன் செல்பி கேமரா வசதி இருக்கிறது. ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே அளவு இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

இந்தியாவில் விரைவில் அறிமுகம்

வரவிருக்கும் டெக்னோ பாண்டம் வி ஃபோல்ட் ஸ்மார்ட்போன் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கலாம் என்பது வெளியான படங்கள் மூலம் தெரியவந்திருக்கிறது. இந்த ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனின் முழு அம்சங்கள் மற்றும் வடிவமைப்பு குறித்த எந்த தகவலும் இதுவரை முறையாக வெளியாகவில்லை. இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என டிப்ஸ்டர் தகவல் தெரிவிக்கிறது.

 

 ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்

ஒரே மாதிரியான ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறோமே என பயனர்கள் விரக்தி அடைவதை தடுக்கும் வகையில் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் ஃபோல்டபிள் மற்றும் ஃபிளிப் மாடல் ஸ்மார்ட்போன்களில் கவனம் செலுத்தத் தொடங்கி இருக்கிறது. சாம்சங் நிறுவனத்தை தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களும் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களில் கவனம் செலுத்தி அதை அறிமுகம் செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கின்றன. அதன்படி தான் டெக்னோ நிறுவனமும் இந்த பணியில் ஈடுபட்டிருக்கிறது.

 

ரோலிங் டிஸ்ப்ளே

ஜிஎஸ்எம் அரீனாவின் (GSM Arena) அறிக்கையின்படி, இப்போது உலக சந்தையில் வாங்க கிடைக்கும் மற்ற அனைத்து மடிக்கக்கூடிய மொபைல் போன் (foldable mobile phone) டிவைஸ்களிலிருந்தும் இது முற்றிலும் வேறுபட்டது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதற்கு காரணம், ரோலிங் டிஸ்ப்ளே மற்றும் ஸ்லைடிங் டிஸ்ப்ளே ஆதரவுடன் கூடிய ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என கூறப்படுவதே ஆகும்.

பெரிய டிஸ்ப்ளே

YouTube மூலம் பகிரப்பட்ட Tecno Phantom Vision V இன் வீடியோவில் இந்த சாதனத்தைப் பற்றிய தகவல்கள் தெளிவாகக் காண்பிக்கப்பட்டுள்ளது. இந்த போன் போல்டபில் நிலையில் இருந்து பெரிய டிஸ்பிளேவிற்கு மாறுவதை வீடியோ காட்டுகிறது. வெளிப்புற டிஸ்ப்ளே மெலிதான பெசல்கள் மற்றும் வளைந்த விளிம்புடன் இருப்பதும் இதில் தெரிகிறது.

 

டிரிபிள் ரியர் கேமரா

Phantom Vision V இன் பின்புறம் குவாட்-எல்இடி ஃபிளாஷ் கொண்ட டிரிபிள் கேமரா யூனிட் உடன் வருகிறது. இந்த போல்டபில் போனின் கேமரா அமைப்பின் கீழ், ஒரு சிறிய டிஸ்பிளே இருப்பதையும் நம்மால் பார்க்க முடிகிறது. இது நோட்டிபிகேஷன், கடிகாரம், ரீமைண்டர் போன்ற ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளேவாக செயல்படும் போல் தெரிகிறது. இந்த சாதனம் ஒரு விண்வெளி தர டைட்டானியம் அலாய் உறையுடன் வர இருப்பதாக கூறப்படுகிறது.

 

புதிய ப்ரீமியம் போன்

இந்த போனை மடிந்தால், வழக்கமான, பாக்கெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்ஃபோன் போல் தோன்றும். அதேபோல் இந்த போன் அதன் டிஸ்ப்ளேவை ரோல் செய்து விரிவடையும் படி உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் கூடுதல் டிஸ்ப்ளே ஏரியா நமக்கு கிடைக்கிறது. புதிய ப்ரீமியம் ஸ்மார்ட்போன் வாங்கத் திட்டமிட்டவர்களுக்கு இந்த போன் வரப்பிரசாதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

The post பிப். 28 வெளியாகிறது Tecno Phantom V Fold first appeared on .

]]>