tecno pop 6 pro https://www.91mobiles.com/tamil Wed, 28 Sep 2022 05:09:57 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 இந்தியாவில் ரூ.6,099க்கு வெளியானது Tecno Pop 6 Pro https://www.91mobiles.com/tamil/tecno-pop-6-pro-entry-level-smartphone-with-5000mah-battery-price-in-india-and-availability/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=tecno-pop-6-pro-entry-level-smartphone-with-5000mah-battery-price-in-india-and-availability Wed, 28 Sep 2022 05:09:57 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2641 நீண்ட காத்திருப்பிற்குப் பிறகு, டெக்னோ நிறுவனம் நேற்று டெக்னோ பாப் 6 ப்ரோ ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த Tecno Pop 6 Pro ஸ்மார்ட்போன் கடந்த வாரம் வங்கதேசத்தில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. Tecno Pop 6 Pro டெக்னோவின் பாப் சீரிஸ் ஸ்மார்ட்போன்களைப் போலவே, Tecno Pop 6 Pro ஸ்மார்ட்போனும் ஒரு என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் ஆகும். இது ஒரு என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் என்பதனால், முதல் முறையாக ஸ்மார்ட்போன் வாங்குபவர்களை […]

The post இந்தியாவில் ரூ.6,099க்கு வெளியானது Tecno Pop 6 Pro first appeared on .

]]>

நீண்ட காத்திருப்பிற்குப் பிறகு, டெக்னோ நிறுவனம் நேற்று டெக்னோ பாப் 6 ப்ரோ ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த Tecno Pop 6 Pro ஸ்மார்ட்போன் கடந்த வாரம் வங்கதேசத்தில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tecno Pop 6 Pro

டெக்னோவின் பாப் சீரிஸ் ஸ்மார்ட்போன்களைப் போலவே, Tecno Pop 6 Pro ஸ்மார்ட்போனும் ஒரு என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் ஆகும். இது ஒரு என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் என்பதனால், முதல் முறையாக ஸ்மார்ட்போன் வாங்குபவர்களை இலக்காகக் கொண்டு மலிவு விலையில், டீசெண்டான அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உண்மையிலேயே, இதன் விலை மிகவும் மலிவாகத் தான் இருக்கிறது.

அம்சங்கள்

Tecno Pop 6 Pro போனின் விலை தான் குறைவே தவிர, இதில் இருக்கும் அம்சங்களுக்குக் குறைவே இல்லை. இது அட்டகாசமான குவாட் கோர் சிப்செட் உடன் சீறிப்பாய்கிறது. இது 5000mah கொண்ட பெரிய பேட்டரியைக் கொண்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் பெரிய டிஸ்ப்ளே மற்றும் டூயல் ரியர் கேமராக்களோடு வந்திருக்கிறது. இந்த மொபைல் Redmi A1 மற்றும் Realme C30 போன்ற மாடல்களுடன் போட்டி போடுகிறது.

விலை

இந்தியாவில் Tecno Pop 6 Pro ஸ்மார்ட்போனின் விலை என்ன? இதை எப்போது வாங்கலாம்? இதன் சிறப்பம்ச விபரங்கள் என்ன என்பதைத் தெளிவாகப் பார்க்கலாம். டெக்னோ பாப் 6 ப்ரோவின் விலை பற்றிப் பார்க்கையில், இந்த புதிய ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் + 32ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இதன் விலை ரூ.6,099 ஆக இருக்கிறது. இந்த போனை இப்போது Amazon வழியாக வாங்க முடியும்.

சிறப்பம்சம்

புதிய Tecno Pop 6 Pro சாதனம் 720 × 1612 பிக்சல் அடர்த்தி கொண்ட HD+ 6.6 அங்குல அளவு உடைய, 120Hz டச் சாம்ப்ளிங் ரேட் கொண்ட வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது குவாட் ஆக்டா கோர் ஹீலியோ A22 சிப்செட் உடன் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி LPDDR4X ரேம் + 32 ஜிபி eMMC5.1 ஸ்டோரேஜ் மாடலாக வருகிறது. இது ஆண்ட்ராய்டு 12 Go எடிஷனின் ஆதரவோடு கூடிய HiOS 8.6 இயங்குதளத்தில் இயங்குகிறது.

கேமரா & பேட்டரி

இந்த டிவைஸ் டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில், 8MP பிரைமரி ஷூட்டர் உடன் AI லென்ஸ் மற்றும் LED ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு மலிவு விலை என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் சாதனம் என்பதனால் இதில் 5MP செல்பி கேமராவழங்கப்பட்டுள்ளது. இது 5000mah பேட்டரியைக் கொண்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் மற்றும் ஃபேஸ் அன்லாக் பாதுகாப்பும் உள்ளது.

யாருக்கானது இந்த மொபைல்

இந்த Tecno Pop 6 Pro சாதனம் பவர் பிளாக் (Power black) மற்றும் பீஸ்ஃபுல் ப்ளூ (Peaceful blue) வண்ண விருப்பங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 42 நாட்கள் வரையிலான ஸ்டான்பை நேரத்தை வழங்குகிறது. மொபைலின் சார்ஜிங் திறன் மற்றும் சார்ஜிங் போர்ட் வகை இன்னும் அறியப்படவில்லை. மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது டூயல் சிம், 4ஜி, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ் மற்றும் ஓடிஜி போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. மலிவு விலையில் பெஸ்டான போனை வாங்க நினைப்பவர்களுக்கு இது பெஸ்ட் சாய்ஸ்.

The post இந்தியாவில் ரூ.6,099க்கு வெளியானது Tecno Pop 6 Pro first appeared on .

]]>
வெறும் ரூ.6099க்கு அறிமுகமாகும் Tecno Pop 6 Pro https://www.91mobiles.com/tamil/tecno-pop-6-pro-will-soon-debut-in-india-know-price-and-specification-details/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=tecno-pop-6-pro-will-soon-debut-in-india-know-price-and-specification-details Tue, 20 Sep 2022 06:08:15 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2446 Tecno Pop 6 Pro ஸ்மார்ட்போன், பட்ஜெட் மற்றும் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் பயனர்களையே வியப்படையச் செய்துள்ளது. ஏனென்றால், இந்த ஸ்மார்ட்போன் டீசெண்டான அம்சங்களுடன், யாரும் எதிர்பார்த்திடாத வகையில் மிகவும் குறைந்த விலையில் வெளியிட இருக்கிறது. டெக்னோ நிறுவனம் டெக்னோ பாப் 6 ப்ரோ என்ற புதிய ஸ்மார்ட்போனை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்த இருக்கிறது. டெக்னோ பாப் 6 ப்ரோ இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக, இப்போது வங்கதேசத்தில் இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டெக்னோவின் சமீபத்திய ஸ்மார்ட்போன் வாட்டர் […]

The post வெறும் ரூ.6099க்கு அறிமுகமாகும் Tecno Pop 6 Pro first appeared on .

]]>

Tecno Pop 6 Pro ஸ்மார்ட்போன், பட்ஜெட் மற்றும் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் பயனர்களையே வியப்படையச் செய்துள்ளது. ஏனென்றால், இந்த ஸ்மார்ட்போன் டீசெண்டான அம்சங்களுடன், யாரும் எதிர்பார்த்திடாத வகையில் மிகவும் குறைந்த விலையில் வெளியிட இருக்கிறது.

டெக்னோ நிறுவனம் டெக்னோ பாப் 6 ப்ரோ என்ற புதிய ஸ்மார்ட்போனை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்த இருக்கிறது. டெக்னோ பாப் 6 ப்ரோ இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக, இப்போது வங்கதேசத்தில் இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டெக்னோவின் சமீபத்திய ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப் நாட்ச் உடன் பெரிய டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது 8MP பின்புற கேமரா மற்றும் 5MP செல்ஃபி கேமராவைக் கொண்டு இருக்கிறது.

என்ன கேமராவின் மெகாபிக்சல் குறைவாக இருக்கிறது என்று நினைப்பவர்களுக்கு, இது ஒரு மலிவு விலை ஸ்மார்ட்போன் சாதனம் என்பதை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்துகிறோம். இது மலிவு விலை போனாக இருந்தாலும் கூட, இதில் 5000mAh பேட்டரி, குவாட்-கோர் சிப்செட், பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் மற்றும் ஆண்ட்ராய்டு கோ போன்றவை வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறுகிறது, இதன் விலை என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

சிறப்பம்சம்

புதிய Tecno Pop 6 Pro மொபைல் 6.6 அங்குல அளவில், 720 × 1612 பிக்சல் அடர்த்தி கொண்ட, 120Hz டச் சாம்ப்ளிங் ரேட் கொண்ட வாட்டர் டிராப் நாட்ச் டிசைனோடு கூடிய HD+ டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது குவாட் ஆக்டா கோர் சிப்செட் உடன் இயங்குகிறது. சிப்செட் பற்றிய விவரங்களை Tecno குறிப்பிடவில்லை. இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் + 32 ஜிபி ஸ்டோரேஜ் மாடலாக வருகிறது. இது ஆண்ட்ராய்டு 12 Go எடிஷனில் இயங்கும் HiOS 8.6 உடன் இயங்குகிறது.

பேட்டரி

இந்த போன் டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில், 8MP பிரைமரி ஷூட்டர் உடன் AI லென்ஸ் மற்றும் LED ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு மலிவு விலை என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் சாதனம் என்பதனால் இதில் 5MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இது 5000mah பேட்டரியைக் கொண்டு இருக்கிறது. கூடவே இந்த ஸ்மார்ட்போனில் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் பாதுகாப்பும் உள்ளது. இதுமட்டுமின்றி ஃபேஸ் அன்லாக் அம்சத்தையும் கொண்டுள்ளது.

விலை?

இந்த சாதனம் பவர் பிளாக் (Power Black) மற்றும் பீஸ்ஃபுல் ப்ளூ (Peaceful Blue) ஆகிய நிறங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய டெக்னோ பாப் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெறும் ரூ. 6,099 என்ற விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும், இந்த மொபைல் தீபாவளிக்கு முன்னதாக இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெக்னோ பாப் 6 ப்ரோ பல நுழைவு-நிலை ஸ்மார்ட்போன்களில் நாம் பார்த்த வழக்கமான அம்சங்களைக் கொண்டுள்ளது என்றாலும் கூட, இது பெரிய டிஸ்ப்ளே மற்றும் 5,000எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது. இதனால், மலிவு விலை பிரிவில் புது போன் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களை இந்த ஸ்மார்ட்போன் அதிகம் ஈர்க்கும் என்பதில் சந்தேகமில்லை. Redmi A1 ஆனது Tecno Pop 6 Pro இன் மிகப்பெரிய போட்டியாக இருக்கும் எனத் தெரிகிறது.

The post வெறும் ரூ.6099க்கு அறிமுகமாகும் Tecno Pop 6 Pro first appeared on .

]]>