Tecno POP 7 Pro https://www.91mobiles.com/tamil Tue, 07 Mar 2023 06:05:16 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ரூ.6799 விலையில் விற்பனைக்கு வந்தது Tecno Pop 7 Pro https://www.91mobiles.com/tamil/tecno-pop-7-pro-entry-level-mobile-phone-goes-on-sale-via-amazon-today/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=tecno-pop-7-pro-entry-level-mobile-phone-goes-on-sale-via-amazon-today Wed, 22 Feb 2023 12:57:56 +0000 https://www.91mobiles.com/tamil/?p=6016 டெக்னோவின் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடலான Tecno POP 7 Pro மாடலை நிறுவனம் ஏற்கனவே நைஜீரியா உட்பட சில நாடுகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவிற்குள் இந்த புதிய Tecno POP 7 Pro மொபைல் மிகவும் குறைந்த விலையில், ரூ.6000 முதல் 7500 விலைக்குள் கிடைக்கிறது. மலிவு விலையில் புது மொபைல் வாங்கத் துடிக்கும் வாடிக்கையாளர்களைக் குறிவைத்து இந்த போன் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த Tecno Pop 7 Pro ஸ்மார்ட்போனில் என்னென்ன ஸ்பெஷல் அம்சங்கள் இடம்பெறுகிறது, […]

The post ரூ.6799 விலையில் விற்பனைக்கு வந்தது Tecno Pop 7 Pro first appeared on .

]]>

Highlights

  • டெக்னோ (Tecno) நிறுவனம், டெக்னோ பாப் 7 ப்ரோ (Tecno POP 7 Pro) என்ற புதிய ஸ்மார்ட்போனின் விற்பனையை இந்தியாவில் இன்று துவங்கி இருக்கிறது.
  • இந்த போன் வெறும் 6000 ரூபாய் விலை பிரிவில், அட்டகாசமான அம்சங்களுடன் விற்பனைக்கு வந்துள்ளது.

டெக்னோவின் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடலான Tecno POP 7 Pro மாடலை நிறுவனம் ஏற்கனவே நைஜீரியா உட்பட சில நாடுகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவிற்குள் இந்த புதிய Tecno POP 7 Pro மொபைல் மிகவும் குறைந்த விலையில், ரூ.6000 முதல் 7500 விலைக்குள் கிடைக்கிறது. மலிவு விலையில் புது மொபைல் வாங்கத் துடிக்கும் வாடிக்கையாளர்களைக் குறிவைத்து இந்த போன் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்த Tecno Pop 7 Pro ஸ்மார்ட்போனில் என்னென்ன ஸ்பெஷல் அம்சங்கள் இடம்பெறுகிறது, இது வாங்க சிறந்ததா? இல்லையா? என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் பார்க்கலாம். டெக்னோ பாப் 7 ப்ரோ இன்று முதல் முறையாக நாட்டில் விற்பனைக்கு வருகிறது. இது ஒரு என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் மாடலாகும். கடந்த வாரம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது முதல் முறையாக இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.

Tecno Pop 7 Pro அம்சங்கள்

  • 6.56 அங்குல HD+ கொண்ட 1612 × 720 பிக்சல் டிஸ்பிளே
  • வாட்டர் டிராப் நாட்ச்
  • குவாட் கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 சிப்செட்
  • 2ஜிபி ரேம் + 64ஜிபி / 3ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ்
  • பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்
  • IMG PowerVR ஜிபியு
  • ஆண்ட்ராய்டு 12 (கோ எடிஷன்) உடன் HiOS 11.0 ஸ்கின்
  • 12MP ப்ரைமரி ரியர் ஷூட்டர் கேமரா
  • AI லென்ஸ் கேமரா
  • முன்பக்கத்தில் 5MP ஷூட்டர்
  • டூயல்-எல்இடி ஃபிளாஷ்
  • 5000mah பேட்டரி
  • 10W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
  • டைப்-சி சார்ஜிங் போர்ட்
  • 3.5மிமீ ஆடியோ ஜாக்
  • பிளாக் மற்றும் யுயுனி ப்ளூ வண்ணம்
  • டூயல் சிம்
  • 4G
  • WiFi (2.4GHz மற்றும் 5GHz)
  • புளூடூத் 5.0
  • GPS

Tecno Pop 7 Pro விலை

டெக்னோ பாப் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 3ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் உடன் இரண்டு ஸ்டோரேஜ் வகைகளில் இன்று முதல் வாங்கக் கிடைக்கும். இந்த மொபைலின் அடிப்படை வேரியண்ட் மாடலான 2ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.6799 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், 3ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலின் விலை ரூ.7299 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு இன்று முதல் வாங்க கிடைக்கிறது. மிகவும் மலிவு விலையில், புது போன் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்கள் அமேசான் வழியாக இந்த Tecno Pop 7 Pro ஸ்மார்ட்போனை வாங்கலாம்.

The post ரூ.6799 விலையில் விற்பனைக்கு வந்தது Tecno Pop 7 Pro first appeared on .

]]>
பட்ஜெட் விலையில் அடுத்த வாரம் அறிமுகமாகிறது Tecno POP 7 Pro https://www.91mobiles.com/tamil/tecno-pop-7-pro-budget-mobile-phone-to-launch-in-india-next-week/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=tecno-pop-7-pro-budget-mobile-phone-to-launch-in-india-next-week Mon, 13 Feb 2023 11:54:13 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5798 Tecno POP 7 Pro டெக்னோவின் இந்த புதிய ஸ்மார்ட்போனான Tecno POP 7 Pro மொபைலை ஏற்கனவே நைஜீரியா உட்பட சில நாடுகளில் அறிமுகமாகி விட்டது. இந்தியாவிற்குள் இந்த புதிய Tecno POP 7 Pro மொபைல் மிகவும் குறைந்த விலையில், ரூ.12,000 விலைக்குள் – புது மொபைல் வாங்க துடிக்கும் வாடிக்கையாளர்களைக் குறிவைத்து அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறுகிறது என்று இப்போது பார்க்கலாம்.   மறுபதிப்பு வரவிருக்கும் புதிய ஸ்மார்ட்போன் […]

The post பட்ஜெட் விலையில் அடுத்த வாரம் அறிமுகமாகிறது Tecno POP 7 Pro first appeared on .

]]>

Highlights

  • டெக்னோ (Tecno) நிறுவனம், புதிய ஸ்மார்ட்போனை அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம் ஆக இருக்கிறது.
  • இந்த மொபைல் டெக்னோ பாப் 7 ப்ரோ (Tecno POP 7 Pro) என்ற பெயரில் அறிமுகம் ஆக இருக்கிறது.

Tecno POP 7 Pro

டெக்னோவின் இந்த புதிய ஸ்மார்ட்போனான Tecno POP 7 Pro மொபைலை ஏற்கனவே நைஜீரியா உட்பட சில நாடுகளில் அறிமுகமாகி விட்டது. இந்தியாவிற்குள் இந்த புதிய Tecno POP 7 Pro மொபைல் மிகவும் குறைந்த விலையில், ரூ.12,000 விலைக்குள் – புது மொபைல் வாங்க துடிக்கும் வாடிக்கையாளர்களைக் குறிவைத்து அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறுகிறது என்று இப்போது பார்க்கலாம்.

 

மறுபதிப்பு

வரவிருக்கும் புதிய ஸ்மார்ட்போன் மாடலான Tecno POP 7 Pro சாதனம், டெக்னோ ஸ்பார்க் கோ 2023 (Tecno Spark Go 2023) இன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது. டெக்னோ நிறுவனம் இந்த புதிய ஸ்மார்ட்போனை வரும் வாரம் அறிமுகம் செய்யுமென்று ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில் துல்லியமான நாள் விபரம் இடம்பெறவில்லை.

டிஸ்ப்ளே

இந்த புதிய ஸ்மார்ட்போனின் ஸ்பெக்ஸ் (Specs) விபரங்களை பொறுத்தவரை, Tecno POP 7 Pro ஆனது 720p தெளிவுத்திறனுடன் கூடிய 6.6 அங்குல LCD டிஸ்பிளேவை (Display) கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

 

சிப்செட் & மெமரி

இது MediaTek Helio A22 சிப்செட் (Chipset) உடன் வெளிவரும் என்று தகவல்கள் தெரிவிக்கிறது. ஸ்டோரேஜ் (Storage) பற்றி பேசுகையில், இது இரண்டு ரேம் விருப்பங்களை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 3ஜிபி ரேம் அல்லது 4ஜிபி ரேம் (RAM) உடன் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் 512ஜிபி வரை எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜ் (External storage) இடம் பெரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கேமரா

புதிய Tecno POP 7 Pro ஸ்மார்ட்போனின் கேமரா (Camera) அம்சம் பற்றி பார்க்கையில், இது 13MP பிரைமரி கேமரா மற்றும் QVGA டெப்த் சென்சார் கொண்ட டூயல் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு இதன் முன்பக்கத்தில் 5MP சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.

பேட்டரி

இது ஒரு 4ஜி மொபைல் ஆகும். இந்த ஸ்மார்ட்போன் USB-C போர்ட் வழியாக 10W சார்ஜிங் உடன் 5,000mAh பேட்டரியை (Battery) பேக் செய்துள்ளது.

 

விலை

இந்த ஸ்மார்ட்போன் நைஜீரியாவில் 64,000 நைஜீரிய நைரா என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய மதிப்பின் படி, இது தோராயமாக ரூ. 11,428 விலையில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, Tecno POP 7 Pro ஆனது இந்தியாவிலும் பட்ஜெட் போனாக அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

நிறங்கள்

இந்த ஸ்மார்ட்போன் சாதனம் எண்ட்லெஸ் பிளாக் (Endless Black), யுயுனி ப்ளூ (Uyuni Blue) மற்றும் நெபுலா பர்பில் (Nebula Purple) ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.10,000 முதல் 15,000 விலைக்குள் இப்போது 5ஜி (5G) போன்களே (5G Phones) கிடைக்கும் போது, இந்த போன் எப்படி போட்டியிடப் போகிறது என்பது ஆர்வத்தை தூண்டுகிறது.

 

The post பட்ஜெட் விலையில் அடுத்த வாரம் அறிமுகமாகிறது Tecno POP 7 Pro first appeared on .

]]>