thalaivar 170 https://www.91mobiles.com/tamil Thu, 02 Mar 2023 13:25:06 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ரஜினியின் 170-வது படத்தை இயக்குகிறார் ஜெய்பீம் பட இயக்குனர்! https://www.91mobiles.com/tamil/jaibhim-movie-director-happy-for-commit-in-rajini-movie/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=jaibhim-movie-director-happy-for-commit-in-rajini-movie Thu, 02 Mar 2023 13:25:06 +0000 https://www.91mobiles.com/tamil/?p=6195 நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதில் கன்னட நடிகர் சிவராஜ் குமார், நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் யோகிபாபு, வசந்த் ரவி மற்றும் மலையாள நடிகர் விநாயகன் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ரஜினியின் 169-வது படமான ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜெய்பீம் ஜெய்பீம் ரஜினியின் 170-வது படத்தின் இயக்குனர் யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதன்படி, ‘ஜெய் பீம்’ பட இயக்குனர் […]

The post ரஜினியின் 170-வது படத்தை இயக்குகிறார் ஜெய்பீம் பட இயக்குனர்! first appeared on .

]]>

Highlights

  • நடிகர் ரஜினி தற்போது ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். ரஜினியின் 170-வது படத்தை ஜெய்பீம் பட இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்குகிறார்.
  • லைகா புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதில் கன்னட நடிகர் சிவராஜ் குமார், நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் யோகிபாபு, வசந்த் ரவி மற்றும் மலையாள நடிகர் விநாயகன் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ரஜினியின் 169-வது படமான ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜெய்பீம் ஜெய்பீம் ரஜினியின் 170-வது படத்தின் இயக்குனர் யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதன்படி, ‘ஜெய் பீம்’ பட இயக்குனர் டி.ஜே. ஞானவேல் இப்படத்தை இயக்கவுள்ளார். லைகா புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும், ரஜினியின் 170-வது திரைப்படம் 2024-ஆம் ஆண்டு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த அறிவிப்பு குறித்து மகிழ்ச்சியோடு இயக்குனர் டி.ஜே.ஞானவேல் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மகிழ்வான தருணம்.. புதிய பயணம் இனிதே ஆரம்பம்.. என்று பதிவிட்டுள்ளார். இவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது சிம்பு சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் சிம்புவுடன் இணைந்து கவுதம் மேனன், கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சிம்பு நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்ற கேள்வி இணையத்தில் எழுந்துள்ளது. அதன்படி இப்படத்தை துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளதாகவும் அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தை கமல் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குமுன்பு தேசிங்கு பெரியசாமி ரஜினியை வைத்து படம் இயக்கப்போவதாக வலைத்தளங்களில் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

The post ரஜினியின் 170-வது படத்தை இயக்குகிறார் ஜெய்பீம் பட இயக்குனர்! first appeared on .

]]>