thalapathy 67 https://www.91mobiles.com/tamil Tue, 03 Jan 2023 07:21:12 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 துணிவு படத்தின் நீளம் இதுதான்! 17 இடங்களில் ‘மியூட்’, U/A சர்டிபிகேட்! https://www.91mobiles.com/tamil/ajith-kumar-s-thunivu-running-time-and-censor-board-certified-details/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=ajith-kumar-s-thunivu-running-time-and-censor-board-certified-details Tue, 03 Jan 2023 07:35:25 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4649 எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘துணிவு’. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. ‘துணிவு’ திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. சமீபத்தில் ‘துணிவு’ படத்தின் ‘சில்லா சில்லா’, காசேதான் கடவுளடா’, ‘கேங்ஸ்டா’ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல […]

The post துணிவு படத்தின் நீளம் இதுதான்! 17 இடங்களில் ‘மியூட்’, U/A சர்டிபிகேட்! first appeared on .

]]>

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘துணிவு’. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

‘துணிவு’ திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. சமீபத்தில் ‘துணிவு’ படத்தின் ‘சில்லா சில்லா’, காசேதான் கடவுளடா’, ‘கேங்ஸ்டா’ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி 36 மில்லியன் முறை பார்க்கப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று ட்ரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தில் இருந்து வருகிறது.

இந்நிலையில், துணிவு படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. அதில் துணிவு படத்திற்கு யு/ஏ சான்றிதழை தணிக்கைக்குழு கொடுத்துள்ளதாகவும், படம் 2 மணிநேரம் 25 நிமிடங்கள் 48 நொடிகள் ஓடக்கூடிய வகையில் ரன்னிங் டைம் கொண்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், இப்படத்தில் வரும் வடக்கன்ஸ் என்கிற வார்த்தைக்கு பீப் போட்டதாகவும், காசேதான் கடவுளடா பாடலில் வரும் காந்தி என்கிற வார்த்தைக்கு பீப் போடப்பட்டதாகவும், ஒரு சில காட்சிகளில் வந்த கெட்ட வார்த்தை என மொத்தம் 17 இடங்களில் மியூட் போடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. மேலும் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. துணிவு படத்தின் ஆடியோ உரிமத்தை ஜி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. விஜய்யின் வாரிசு படமும் பொங்கலுக்கு வெளியாக உள்ளதால், இரண்டு படங்களுக்கும் சரி சமமாக தியேட்டர்கள் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் துணிவு படத்தின்  தயாரிப்பாளர் போனி கபூர் சமீபத்தில் வெளியாகி பெரிய ஹிட் அடித்த லவ் டுடே திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய இருப்பதாக தகவல்கள் பரவின. இதற்கு போனி கபூர் தனது டிவிட்டர் பக்கத்தில் மறுப்பு தெரிவித்துள்ளார். அதில், லவ் டுடே படத்தின் இந்தி ரீமேக் உரிமத்தை நான் வாங்கவில்லை. இது தொடர்பாக வெளியான செய்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை மற்றும் பொய்யானவை என தெரிவித்துள்ளார் . தேவையில்லாத வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு துவங்கியதாக மனோபாலா நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதில் தான் கலந்து கொள்வதாகவும் குறிப்பிட்டு இருந்தார். அதில்,  “லோகேஷ் மற்றும் எங்கள் தளபதியை சந்தித்தேன்… அதே ஆற்றல் முழு வீச்சில்.. முதல் நாளே தூள்..” என்று நடிகர் மனோபாலா சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவை விஜய் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வைரலாக்கினர்.

இந்நிலையில் அந்த ட்வீட்டை மனோபாலா இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கி விட்டார். அதற்கு பதில் இன்னொரு ட்வீட்டை பதிவிட்டு இருக்கிறார். அதில், எனது ட்வீட்டை நீக்கிவிட்டேன்… என்னை மன்னியுங்கள்.. என்று குறிப்பிட்டுள்ளார். மனோபாலாவின் புதிய பதிவு ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், மனோபாலா தரப்பில் இதற்கு எந்த வித விளக்கமும் கொடுக்கவில்லை.

 

The post துணிவு படத்தின் நீளம் இதுதான்! 17 இடங்களில் ‘மியூட்’, U/A சர்டிபிகேட்! first appeared on .

]]>