this week release https://www.91mobiles.com/tamil Thu, 02 Feb 2023 12:50:25 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ஓடிடி இந்த வார ரிலீஸ் https://www.91mobiles.com/tamil/this-week-ott-releases-movies-and-web-series-list/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=this-week-ott-releases-movies-and-web-series-list Thu, 02 Feb 2023 12:50:25 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5514 ஓடிடியில் இந்த வாரம் என்னென்ன படங்கள் மற்றும் வெப் தொடர்கள் வந்துள்ளது என்று பார்க்கலாமா? ஒரு திரைப்படம் தியேட்டரில் வெளியானதும், அடித்து பிடித்து டிக்கெட்டை வாங்கிய காலம் எல்லாம் மாறிப்போய்விட்டது. இப்போது வீட்டிலேயே, அதுவும் உட்கார்ந்த இடத்திலேயே நமக்கு பிடித்த படங்களை ஓடிடியில் பார்த்து வருகிறோம். மக்களின் இந்த பல்சை நன்கு தெரிந்து கொண்ட ஓடிடி நிறுவனங்கள் வாரா வாரம் புதுபுதுப்படங்களை வெளியிட்டு வருகின்றன. Black Panther : Wakanda forever நவம்பர் மாதம் Black Panther […]

The post ஓடிடி இந்த வார ரிலீஸ் first appeared on .

]]>
ஓடிடியில் இந்த வாரம் என்னென்ன படங்கள் மற்றும் வெப் தொடர்கள் வந்துள்ளது என்று பார்க்கலாமா?

ஒரு திரைப்படம் தியேட்டரில் வெளியானதும், அடித்து பிடித்து டிக்கெட்டை வாங்கிய காலம் எல்லாம் மாறிப்போய்விட்டது. இப்போது வீட்டிலேயே, அதுவும் உட்கார்ந்த இடத்திலேயே நமக்கு பிடித்த படங்களை ஓடிடியில் பார்த்து வருகிறோம். மக்களின் இந்த பல்சை நன்கு தெரிந்து கொண்ட ஓடிடி நிறுவனங்கள் வாரா வாரம் புதுபுதுப்படங்களை வெளியிட்டு வருகின்றன.

Black Panther : Wakanda forever

நவம்பர் மாதம் Black Panther : Wakanda forever வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு பிறகு ஓடிடியில் இன்று முதல் வெளியாகி உள்ளது. டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் ஆங்கிலம், இந்தி,தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் காணலாம். த்ரில்லிங் காட்சிகள் நிறைந்த இந்த Black Panther : Wakanda forever படத்தை கெவின் ஃபைஜ் மற்றும் நேட் மூர் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

Jehanabad: Of Love & War

Jehanabad: Of Love & War என்ற வெப் தொடர் பிப்ரவரி 3ந் தேதி முதல் Sony LIV- ல் வெளியாக உள்ளது. 2005ம் ஆண்டு ஜெகனாபாத்தில் நடந்த உண்மையான சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இக்கதை நகர்கிறது. இதில், ரித்விக் பௌமிக், பரம்பிரதா சாட்டர்ஜி மற்றும் ஹர்ஷிதா கவுர் ஆகியோர் நடித்துள்ளனர். பீகாரில் உள்ள ஒரு கிராமத்தை சுற்றியே கதை நகர்கிறது.

ஃபார்ஸி farzi (வெப் தொடர்)

தி பேமிலி மேன் வெப் தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டிகே அடுத்து இயக்கியுள்ள வெப் தொடர் தான் ‘ஃபார்ஸி’. க்ரைம் த்ரில்லர் தொடரான இதில் இந்தி நடிகர் ஷாஹித் கபூர், விஜய் சேதுபதி முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கே.கே.மேனன், ராஷி கண்ணா, அமோல் பலேகர், ரெஜினா, புவன் அரோரா உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தி, தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளில் பிப்ரவரி 10ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இத்தொடர் வெளியாக உள்ளது.

செம்பி

இயக்குநர் பிரபு சாலமனின் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் செம்பி. கோவை சரளா, குழந்தை நட்சத்திரம் நிலா மற்றும் குக் வித் கோமாளி புகழ் அஷ்வின் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். தனது 10 வயது பேத்தி செம்பிக்கு நிகழ்ந்த கொடுமைக்கு, நீதி கேட்கும் வீரத்தாயாகவும் பழங்குடியினப் பெண்ணாகவும் இதுவரை நடிக்காத கதாபாத்திரத்தில் கோவை சரளா நடித்துள்ளார். இப்படம், பிப்ரவரி 3 முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ளது.

அயலி (வெப் தொடர்)

இயக்குனர் முத்துக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப்தொடர் அயலி. எட்டு எபிசோடுகள் கொண்ட இந்த தொடரில் அபி நட்சத்திரா, அனுமோல், அருவி மதன், லிங்கா, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜீ5 ஓடிடியில் கடந்த வாரம் ஜனவரி 26ந் தேதி வெளியான இந்த தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை இந்த தொடரை பார்க்காதவர்கள் பார்க்கலாம்.

The post ஓடிடி இந்த வார ரிலீஸ் first appeared on .

]]>
இன்று ரிலீஸ் ஆன படங்கள்! https://www.91mobiles.com/tamil/movies-releasing-in-theaters-today/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=movies-releasing-in-theaters-today Fri, 09 Dec 2022 10:13:31 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4223 சின்ன படங்களோ.. பெரிய படங்களோ, வெற்றியோ.. தோல்வியோ வார வாரம் படங்கள் வெளியாவது மட்டும் குறைவதில்லை. அந்தவகையில் இந்தவாரமும் திரைப்பட ரசிகர்களுக்காக பல படங்கள் ரிலீஸ் ஆகி இருக்கின்றன. இன்று திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள் குறித்து இப்போது பார்க்கலாம். வைகைப்புயல் ரிட்டர்ன்ஸ் கோலிவுட்டின் காமெடி கிங் என ரசிகர்களால் கொண்டாடப்படும் வைகைப்புயல் வடிவேலு, பல வருட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் வெள்ளி திரையில் முகம் காட்டுகிறார். சுராஜ் இயக்கத்தில் அவர் ஹீரோவாக நடித்துள்ள ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ […]

The post இன்று ரிலீஸ் ஆன படங்கள்! first appeared on .

]]>
சின்ன படங்களோ.. பெரிய படங்களோ, வெற்றியோ.. தோல்வியோ வார வாரம் படங்கள் வெளியாவது மட்டும் குறைவதில்லை. அந்தவகையில் இந்தவாரமும் திரைப்பட ரசிகர்களுக்காக பல படங்கள் ரிலீஸ் ஆகி இருக்கின்றன. இன்று திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

வைகைப்புயல் ரிட்டர்ன்ஸ்

கோலிவுட்டின் காமெடி கிங் என ரசிகர்களால் கொண்டாடப்படும் வைகைப்புயல் வடிவேலு, பல வருட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் வெள்ளி திரையில் முகம் காட்டுகிறார். சுராஜ் இயக்கத்தில் அவர் ஹீரோவாக நடித்துள்ள ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ காமெடி ஜானரில் உருவாகியுள்ளது. இந்தப் படம் டிசம்பர் 9ம் தேதியான இன்று திரையரங்குகளில் வெளியாகிறது. லைகா தயாரிப்பில் சந்தோஷ் நாராயாணன் இசையமைத்துள்ள நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், வடிவேலுவுக்கு கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், இந்தப் படத்தின் ட்ரெய்லருக்கு ரசிகர்களிடம் எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜீவாவின் வரலாறு முக்கியம்

தமிழ்த் திரையுலகில் திறமையான இளம் நடிகரான ஜீவா, கடந்த சில வருடங்களாக வெற்றிப் படங்கள் இல்லாமல் திணறி வருகிறார். இந்நிலையில், இன்று அவர் நடித்துள்ள ‘வரலாறு முக்கியம்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. ஆர்.பி. செளத்ரி தயாரித்துள்ள இந்தப் படம் மூலமாக, சந்தோஷ் ராஜன் இயக்குநராக அறிமுகமாகிறார். சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 92வது படமான இதில், காஷ்மீரா பர்தேஷி, பிரக்யா நாகரா, விடிவி கணேஷ், கேஎஸ் ரவிக்குமார், மலையாள நடிகர் சித்திக், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள்ளனர். ‘ஜிமிக்கி கம்மல்’ பாடல் புகழ் ஷான் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. வரலாறு முக்கியம் ஜீவாவின் கேரியரிலும் முக்கியமான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிஆர் 56

ப்ரியாமணி நடித்துள்ள ‘டிஆர் 56’ படத்தை ராஜேஷ் ஆனந்த் லீலா இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் இந்தப் படம் இன்று வெளியாகிறது. ஆக்சன் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

தாதா

அதேபோல், நிதின் சத்யா, யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள ‘தாதா’ திரைப்படமும் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது. கின்னஸ் கிஷோர் இயக்கியுள்ள இப்படத்தில் காயத்ரி, மனோபாலா, சிங்கமுத்து நடித்துள்ளனர்.

குருமூர்த்தி

நட்டி நட்ராஜ், ராம்கி நடிப்பில் உருவாகியுள்ள ‘குருமூர்த்தி’ திரைப்படமும் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது. கே.பி.தனசேகர் இயக்கியுள்ள இந்தப் படத்தில், பூனம் பஜ்வா, மொட்ட ராஜேந்திரன், ரவி மரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

விஜயனாந்த்

அதேபோல், கன்னடத்தில் ரிஷிகா ஷர்மா இயக்கியுள்ள ‘விஜயானந்த்’ இன்று திரையரங்குகளில் வெளியாகிறது. பான் இந்தியா படமாக வெளியாகும் இதில், நிஹல், பாபன் பூபண்ணா, வினயா பிரசாத் நடித்துள்ளனர். மிகப்பெரிய தொழிலதிபரான பத்மஸ்ரீ விருது பெற்ற விஜய் சங்கேஷ்வரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இந்தப் படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வாரம் வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், ஜீவாவின் வரலாறு முக்கியம் திரைப்படங்களுக்கு பாக்ஸ் ஆபிஸில் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், இந்த ரேஸில் கடந்த வாரங்களில் வெளியான லவ் டுடே, கட்டா குஸ்தி ஆகிய திரைப்படங்களும் போட்டிப் போட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

The post இன்று ரிலீஸ் ஆன படங்கள்! first appeared on .

]]>