tips https://www.91mobiles.com/tamil Thu, 05 Jan 2023 12:27:28 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 போனை சார்ஜ் செய்யும் போது கவனிக்க வேண்டியவை! https://www.91mobiles.com/tamil/avoid-this-4-mistakes-while-charging-your-smartphone/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=avoid-this-4-mistakes-while-charging-your-smartphone Thu, 05 Jan 2023 12:51:21 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4747 ஸ்மார்ட்போனை சுமார் 300 முறை சார்ஜ் (Charge) செய்த பிறகு, அந்த ஸ்மார்ட்போனிற்குள் என்ன நடக்கும் என்கிற அதிர்ச்சியான தகவலை மொபைல் போன் வல்லுநர்கள் வெளிப்படுத்தி உள்ளனர். நல்ல செய்தி என்னவென்றால், குறிப்பிட்ட சிக்கலில் இருந்து தப்பிப்பது எப்படி? குறிப்பிட்ட பாதிப்பில் இருந்து உங்கள் ஸ்மார்ட்போனை (Smartphone) எப்படி பாதுகாப்பது? என்பது பற்றியும் வழிகாட்டி இருக்கின்றனர். ஸ்மார்ட்போனை குறைந்தபட்சம் 300 முறைக்கு மேல் சார்ஜ் செய்யும்போது, ஸ்மார்ட்போனிற்குள் இருக்கும் லித்தியம் அயன் (Lithium Ion) பேட்டரியானது அதன் […]

The post போனை சார்ஜ் செய்யும் போது கவனிக்க வேண்டியவை! first appeared on .

]]>

ஸ்மார்ட்போனை சுமார் 300 முறை சார்ஜ் (Charge) செய்த பிறகு, அந்த ஸ்மார்ட்போனிற்குள் என்ன நடக்கும் என்கிற அதிர்ச்சியான தகவலை மொபைல் போன் வல்லுநர்கள் வெளிப்படுத்தி உள்ளனர். நல்ல செய்தி என்னவென்றால், குறிப்பிட்ட சிக்கலில் இருந்து தப்பிப்பது எப்படி? குறிப்பிட்ட பாதிப்பில் இருந்து உங்கள் ஸ்மார்ட்போனை (Smartphone) எப்படி பாதுகாப்பது? என்பது பற்றியும் வழிகாட்டி இருக்கின்றனர்.

ஸ்மார்ட்போனை குறைந்தபட்சம் 300 முறைக்கு மேல் சார்ஜ் செய்யும்போது, ஸ்மார்ட்போனிற்குள் இருக்கும் லித்தியம் அயன் (Lithium Ion) பேட்டரியானது அதன் அதிகபட்ச சார்ஜ் மற்றும் டிஸ்சார்ஜ் சுழற்சியை (Charge / Discharge Cycles) எட்டி இருக்கும். மேற்குறிப்பிட்ட சார்ஜ் / டிஸ்சார்ஜ் சுழற்சிகளை கடந்த பிறகு, அடுத்தடுத்த முறை உங்கள் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யும் போது, உள்ளிருக்கும் லித்தியம் ஐயன் பேட்டரி ஆனது மெல்ல மெல்ல பலவீனமாக தொடங்கும்.

இதன் விளைவாக பேட்டரியின் திறன் மெல்ல மெல்ல குறைந்துகொண்டே போகும். ஒருகட்டத்தில், உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தாலும் கூட, அது நீண்ட நேரம் நீடிக்காமல் அடிக்கடி தீர்ந்து போகும். இந்த சிக்கலை தவிர்க்க விரும்பினால், உங்கள் மொபைலைச் சார்ஜ் போடும் போது கீழ் வரும் 4 தவறுகளில் ஒன்றைக்கூட செய்ய வேண்டாம் என்று வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர்!

01. 20% மற்றும் 100% சார்ஜ்!

உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரி லெவல் ஆனது10% முதல் 20%-ஐ அடையும் போது மட்டுமே அதை சார்ஜ் செய்ய வேண்டும். 30% அல்லது 45% எல்லாம் ‘லோ பேட்டரி’ (Low Battery) ஆகி விடாது. அதே போல 2% அல்லது 3% வரட்டும் என்று காத்திருந்து, அதன் பின்னர் சார்ஜ் செய்வதும் தவறு தான்! அதை விட முக்கியமாக, சார்ஜ் போடும் போது உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரி லெவல் ஆனது 100% ஐ எட்டட்டும், அப்போது தான் அது முழுமையாக சார்ஜ் (Full Charge) ஆனதாக கணக்கு என்றும் காத்திருக்க வேண்டாம். 90% க்கு மேல் சென்றதுமே சார்ஜ் செய்வதை நிறுத்திக்கொள்ளவும். 300 சார்ஜ் / டிஸ்சார்ஜ் சுழற்சிகளுக்கு பின்னர், மேற்குறிப்பிட்ட பழக்கத்தை தொடர்ந்து பின்பற்றினால் உங்கள் பேட்டரி லைஃப் (Battery Life) பெரிய அளவில் பாதிக்கப்படாது!

02. ஒரிஜினல் VS ஃபேக்

தற்போது வரையிலாக, பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களுடன், அதற்கு ஏற்ற சார்ஜர்களை (Charger) அனுப்புகிறது. ஆனால் இந்த வழக்கம் கூடிய விரைவில் மாற உள்ளது. அதாவது, வரும் நாட்களில் மொபைல் பிராண்டுகள் தத்தம் ஸ்மார்ட்போன்களுடன் சார்ஜர்களை அனுப்புவதை நிறுத்த உள்ளனர் மற்றும் சார்ஜர்களை தனித்தனியாக விற்பனை செய்ய உள்ளனர். அந்த நேரத்திலும் சரி (தற்போதும் சரி) உங்கள் ஸ்மார்ட்போனுடன் இணக்கமான அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஒரு சார்ஜரை தான் வாங்குகிறீர்கள் / பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். பணத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்று போலியான சார்ஜர்களை (Fake Chargers) பயன்படுத்த வேண்டாம். ஏற்கனவே பலவீனமாக உள்ள உங்களுடைய ஸ்மார்ட்போன் பேட்டரி ஆனது இன்னும் பலவீனமாகும்; மோசமாகும்!

03. ஓவர் நைட் சார்ஜிங்

சமீப காலமாக வெளியாகும் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்கள் ஆனது 100% என்கிற பேட்டரி லெவலை எட்டியதும் தனக்குள் இருக்கும் பேட்டரியை சார்ஜ் செய்வதை நிறுத்தி விடுகின்றன. ஆனால் ஸ்மார்ட்போனுடன் கனெக்ட் செய்யப்பட்டு இருக்கும் சார்ஜர் ஆனது வேலை செய்து கொண்டே தான் இருக்கும்; அது உங்கள் பேட்டரியை பாதிக்காமல் போகலாம்; ஆனால் உங்கள் ஸ்மார்ட்போனை பாதிக்கலாம். எனவே ஒரு இரவு முழுவதும், ஸ்மார்ட்போனிற்கு சார்ஜ் செய்யும் (Overnight Charge) வழக்கம் / பழக்கம் உங்களிடம் இருந்தால் அதை உடனே நிறுத்திக்கொள்ளவும்.

04. ஹை டெம்ப்ரேச்சர்

ஒரு ஸ்மார்ட்போனில் உள்ள பேட்டரியின் லைஃப்டைம் மற்றும் அதன் சகிப்புத்தன்மைக்கு – அந்த ஸ்மார்ட்போனை சுற்றியுள்ள வெப்பநிலை மிக முக்கியமான பங்களிப்பை வழங்குகிறது. ஏனென்றால், அதிக வெப்பநிலையின் கீழ் வைக்கப்படும் போது உங்கள் ஸ்மார்ட்போனிற்குள் இருக்கும் பேட்டரியானது அதிக அழுத்தத்தின் கீழ் வைக்கப்படுகிறது மற்றும் குறைந்த வெப்பநிலையில் இருப்பதை விட மிகவும் வேகமான முறையில் அதன் திறனையும் (பேட்டரி லெவலை) இழக்கிறது! எனவே, உங்கள் ஸ்மார்ட்போனை வெயிலில் வைப்பது; அடுப்பின் அருகே வைப்பது; அதிக நேரம் கார் டிக்கி அல்லது ஸ்கூட்டர் டிக்கியில் வைப்பது போன்றவைகளை தவிர்க்கவும்!

The post போனை சார்ஜ் செய்யும் போது கவனிக்க வேண்டியவை! first appeared on .

]]>
மொபைல் பேட்டரி ஆயுளை அதிகரிக்க 7 டிப்ஸ்! https://www.91mobiles.com/tamil/how-to-increase-battery-life/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=how-to-increase-battery-life Sat, 12 Nov 2022 06:00:30 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3575 ஒரு ஸ்மார்ட்போனின் பேட்டரி ஆனது மிகவும் வேகமாக காலி ஆவதற்கு பின்னால் பல காரணங்கள் உள்ளன. அவற்றில் மிகவும் முக்கியமான, மற்றும் நம்மில் பலரும் யூகித்து கூட பார்க்க முடியாத ஒரு காரணம் உள்ளது. அதுதான் – கல்பிங் ஆப்ஸ் (Gulping Apps). அதாவது, உங்களுக்கே தெரியாமல் உங்கள் மொபைல் போனின் பேட்டரியை உறிஞ்சி குடிக்கும் ஆப்கள். லோ பேட்டரி (Low Battery) தொடர்பான இன்னொரு கசப்பான உண்மை என்னவென்றால், 4ஜி ஸ்மார்ட்போன்களை விட 5G ஸ்மார்ட்போன்கள் […]

The post மொபைல் பேட்டரி ஆயுளை அதிகரிக்க 7 டிப்ஸ்! first appeared on .

]]>

ஒரு ஸ்மார்ட்போனின் பேட்டரி ஆனது மிகவும் வேகமாக காலி ஆவதற்கு பின்னால் பல காரணங்கள் உள்ளன. அவற்றில் மிகவும் முக்கியமான, மற்றும் நம்மில் பலரும் யூகித்து கூட பார்க்க முடியாத ஒரு காரணம் உள்ளது. அதுதான் – கல்பிங் ஆப்ஸ் (Gulping Apps). அதாவது, உங்களுக்கே தெரியாமல் உங்கள் மொபைல் போனின் பேட்டரியை உறிஞ்சி குடிக்கும் ஆப்கள்.
லோ பேட்டரி (Low Battery) தொடர்பான இன்னொரு கசப்பான உண்மை என்னவென்றால், 4ஜி ஸ்மார்ட்போன்களை விட 5G ஸ்மார்ட்போன்கள் தான் மிகவும் மோசமாக பாதிக்கப்பட உள்ளது! அதாவது இப்போது (4ஜி போன்கள் வழியாக) நீங்கள் சந்திக்கும் லோ பேட்டரி பிரச்சனைகள் எல்லாம் ஒன்றுமே இல்லை. 5ஜி நெட்வொர்க்கின் கீழ் இயங்கும் ஸ்மார்ட்போன்களின் பேட்டரி ஆனது “ஒப்பீட்டளவில்” மிகவும் வேகமாக காலி ஆவதை வல்லுநர்களே ஏற்றுக்கொண்டுள்ளனர்.

உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரி லைஃப்-ஐ அதிகரிக்க உதவும் எளிமையான டிப்ஸ்கள் (Simple Tips) உள்ளன. அவைகளில் ஏதேனும் சிலவற்றை செய்தாலும் கூட போதும். உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரி லைஃப்பில் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள்.

01. சோஷியல் மீடியா ஆப்கள்

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், ட்விட்டர், டிண்டர் போன்ற சோஷியல் மீடியா ஆப்களில் – எது தேவை இல்லையோ, அதன் – நோட்டிஃபிக்கேஷன்களை நிறுத்தி வைக்கவும்! இது ஒரு சின்ன காரியம் தான் ஆனால் பேட்டரி லைஃப்பில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்!

02. தேவை இல்லாத நோட்டிஃபிக்கேஷன்களை டிசேபிள் செய்த கையோடு சோஷியல் மீடியா ஆப்களின் பேக்கிரவுண்ட் டேட்டா பயன்பாட்டையும் (Background data usage) கட்டுப்படுத்துங்கள். இதை செய்வதன் வழியாக, நீங்கள் ஒரு குறிப்பிட்ட சோஷியல் மீடியா ஆப்பில் இருந்து வெளியேறியதுமே, அது ஃப்ரீஸ் (Freeze) ஆகிவிடும் அல்லது முற்றிலும் ஷட் டவுன் (Shut Down) செய்யப்படும். எனவே அவைகளால் உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரியை சீரழிக்க முடியாது! Background data usage-ஐ கட்டுப்படுத்தும் முறை Android மற்றும் iOS ஆகிய இரண்டிலுமே கிடைக்கிறது.

3. தேவை இல்லாத நேரங்களில் மொபைல் டேட்டா அல்லது வைஃபையை ஆஃப் செய்வது மற்றொரு வழி ஆகும். தூங்கும் போது, குளிக்கும் போது, சாலையில் வாகனம் ஓட்டும் போது, முக்கியமான மீட்டிங்கில் இருக்கும் போது, தியேட்டரில் சினிமா பார்க்கும் போது என இப்படி பல இடங்களில் உங்கள் ஸ்மார்ட்போனை உங்களால் பயன்படுத்தவே முடியாது அல்லவா? அதுபோன்ற நேரங்களில் மொபைல் டேட்டாவை அல்லது வைஃபையை ஆப் செய்து விடவும்; இது நிச்சயம் உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரி லைஃப்-ஐ அதிகரிக்கும்!

04. ‘லைட்’ வெர்ஷன்களை புறக்கணிக்க வேண்டாம்! பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற முக்கியமான சோஷியல் மீடியா ஆப்களுக்கு லைட் வெர்ஷன்கள் (Light Versions) உள்ளன. பொதுவாக லைட் வெர்ஷன்கள் ஆனது குறைந்த அளவிலான ரிசோர்ஸ்களையே எடுத்துக்கொள்ளும். இது டேட்டா நுகர்வை குறைப்பதோடு சேர்த்து மொபைல் பேட்டரியின் பயன்பாட்டையும் குறைக்கும்!

05. பேசாமல் வெப்சைட்டிற்கு போயிடுங்க! பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சோஷியல் மீடியாக்களை, ஆப்களின் வழியாக பயன்படுத்துவது போல, அந்தந்த சோஷியல் மீடியாக்களின் வெப்சைட் வெர்ஷன்களையும் கூட நீங்கள் பயன்படுத்தலாம். மொபைலில் உள்ள பேஸ்புக் ஆப் ஆனது மிகப்பெரிய பேட்டரியை உறிஞ்சும் மறுகையில் அதன் வெப்சைட் வெர்ஷன் ஆனது மிகவும் குறைவான அளவிலேயே பேட்டரியை பயன்படுத்துகிறது. இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டருக்கும் கூட இதையே கூறலாம்!

06. லோ பவர் மோட் அல்லது லோ பேட்டரி மோட்! எப்போதெல்லாம் முடிகிறதோ, அப்போதெலாம் லோ பவர் மோட் (Low Power Mode) அல்லது லோ பேட்டரி மோட்-ஐ (Low battery mode) இயக்கலாம். இந்த அம்சம் iOS மற்றும் Android ஆகியே இரண்டிலுமே கிடைக்கிறது. இதை நீங்கள் எனேபிள் செய்யும் பட்சத்தில், பேக்கிரவுண்ட்டில் நடக்கும் ஆப் அப்டேட்கள் நிறுத்தப்படும் மற்றும் அடிப்படை செயல்பாடுகளை மட்டுமே செய்யும்படி மொபைல் போனின் சிஸ்டம் ஆனது கட்டுப்படுத்தப்படும். சில ஆண்ட்ராய்டு போன்களில் அல்ட்ரா பேட்டரி சேவர் மோட் (Ultra Battery Saver mode). அது இன்னும் திறம்பட செயல்படும்; முடிந்த அளவில் மொபைல் போன் பேட்டரியை சேமிக்கும்!

07. டாஸ்க் ஸ்விட்ச்சர்! கடைசியாக, ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு ஆகிய இரண்டிலுமே இருக்கும் டாஸ்க் ஸ்விட்ச்சரை (Task Switcher) ஓப்பன் செய்யலாம். இது ஆப்களை போர்ஸ் க்ளோஸ் (Force close) செய்ய உதவும். அதேசமயம் உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரி ஆயுளையும் அதிகரிக்கும்.

The post மொபைல் பேட்டரி ஆயுளை அதிகரிக்க 7 டிப்ஸ்! first appeared on .

]]>