top 10 https://www.91mobiles.com/tamil Wed, 05 Jul 2023 07:51:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 நெட்ஃப்ளிக்ஸ் இந்தியாவின் ஜூலை மாத டாப் 10 திரைப்படங்கள் https://www.91mobiles.com/tamil/netflix-top-10-in-india-on-july/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=netflix-top-10-in-india-on-july Wed, 05 Jul 2023 07:50:16 +0000 https://www.91mobiles.com/tamil/?p=9176 வீட்டு தியேட்டரான நெட்ஃப்ளிக்ஸில் ஒவ்வொரு வாரமும் புதிய திரைப்படங்களும், சீரிஸ்களும் வெளியாகிக் கொண்டே தான் இருக்கின்றன. அவை எல்லாமும் மக்கள் மத்தியில வரவேற்பைப் பெறுவதில்லை. ஆனாலும் கூட சில படங்கள் காலம் தாண்டி, மொழி தாண்டி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. அப்படி இந்த ஜூலை மாதத்தில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட டாப் 10 திரைப்படங்களின் பட்டியலை இப்போது பார்க்கலாம். முன்பே குறிப்பிட்டவாறு இந்த பட்டியலில் பல மொழி திரைப்படங்கள் உள்ளன. மொழிமாற்று வசதியின் (டப்பிங்) காரணமாக இப்போது […]

The post நெட்ஃப்ளிக்ஸ் இந்தியாவின் ஜூலை மாத டாப் 10 திரைப்படங்கள் first appeared on .

]]>

வீட்டு தியேட்டரான நெட்ஃப்ளிக்ஸில் ஒவ்வொரு வாரமும் புதிய திரைப்படங்களும், சீரிஸ்களும் வெளியாகிக் கொண்டே தான் இருக்கின்றன. அவை எல்லாமும் மக்கள் மத்தியில வரவேற்பைப் பெறுவதில்லை. ஆனாலும் கூட சில படங்கள் காலம் தாண்டி, மொழி தாண்டி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. அப்படி இந்த ஜூலை மாதத்தில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட டாப் 10 திரைப்படங்களின் பட்டியலை இப்போது பார்க்கலாம்.

முன்பே குறிப்பிட்டவாறு இந்த பட்டியலில் பல மொழி திரைப்படங்கள் உள்ளன. மொழிமாற்று வசதியின் (டப்பிங்) காரணமாக இப்போது ஒரு திரைப்படமானது ஒரு குறிப்பிட்ட மொழியில் எடுக்கப்பட்டாலும், அது இந்தியாவின் முக்கிய சில பிறமொழியிலும் மொழிமாற்று செய்யப்படுகிறது. சில படங்கள் எடுக்கப்படும் போதே இரண்டு மொழிகளில் எடுக்கப்படுகிறது. ஓடிடியின் முக்கியமான வசதிகளில் இதுவும் ஒன்று.  இப்போது பட்டியலைப் பார்க்கலாம்.

 

  1. Gumraah

க்ரைம் வகையைச் சார்ந்த இந்த ஹிந்தி படத்தை வர்தன் கேட்கர் இயக்கியுள்ளார். இதில், ஆதித்யா ராய் கபூர், மிருணால் தாக்கூர், ரோனித் ராய், வேதிகா பின்டோ ஆகியோர் நடித்துள்ளனர். நேற்று இந்த படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி உள்ளது.

 

  1. Old

த்ரில்லர் / சூப்பர் நேச்சுரல் வகையைச் சேர்ந்த இந்த படத்தை மனோஜ் நைட் ஷ்யாமளான் இயக்கியுள்ளார். ஆங்கிலப்படமான இதில் கேல் கார்சியா பெர்னல், விக்கி க்ரீப்ஸ், தாமசின் மெக்கென்சி உட்பட பலர் நடித்துள்ளனர். 2021ல் வெளியான இந்த திரைப்படம் இந்த மாதம் அதிகம் பார்க்கப்பட்ட படங்களில் 9வது இடத்தில் உள்ளது.

 

  1. Sniper: Rogue Mission

ஆக்‌ஷன் வகையைச் சேர்ந்த இந்த அமெரிக்கத் திரைப்படத்தை ஆலிவர் தாம்ஸன் இயக்கியுள்ளார்.  சென்ற வருடம் ஆகஸ்ட் மாதத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் சாட் மைக்கேல் காலின்ஸ், ரியான் ராபின்ஸ், சயாகா அகிமோட்டோ போன்றோர் நடித்துள்ளனர். இது 8வது இடத்தில் உள்ளது.

  1. Lust Stories

ரொமான்ஸ் வகையைச் சேர்ந்த இந்த ஆந்தாலஜி திரைப்படத்தை கரண் ஜோஹர், திபாகர் பானர்ஜி ஆகியோர் இயக்கியுள்ளனர். 4 கதைகளைக் கொண்ட இந்த திரைப்படத்தில் ராதிகா ஆப்தே, ஆகாஷ் தோசர், ரன்தீப் ஜா, பூமி பெட்னேகர், நீல் பூபாலம், ஜெய்தீப் அஹ்லாவத், மனிஷா கொய்ராலா போன்றோர் நடித்துள்ளனர். இது 2018ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். சமீபத்தில் இதன் இரண்டாம் பாகம் வெளியான காரணத்தால்,  இப்போது இந்த முதல் பாகம் ரசிகர்களிடையே மீண்டும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

  1. தீரா காதல்

ட்ராமா வகையைச் சேர்ந்த இந்த தமிழ் படத்தை ரோஹின் வெங்கடேசன் இயக்கி இருக்கிறார். ஜெய் சம்பத், ஷிவதா நாயர், ஐஸ்வர்யா ராஜேஷ் உட்பட பலர் நடித்திருக்கும் இந்த திரைப்படம் தியேட்டரில் பெற்ற வரவேற்பை விட நெட்ஃப்ளிக்ஸில் வெளியான போது அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இது தற்போது டாப் 10ல் 6வது இடத்தில் உள்ளது.

 

  1. Extraction 2

அமெரிக்க ஆக்‌ஷன் படமான இது மேக்கிங் மற்றும் சண்டை காட்சிகளுக்காகவே ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. நெட்ஃப்ளிக்சால் தயாரிக்கப்பட்டு சென்ற மாதம் வெளியான இந்த படத்தை சாம் ஹர்கிரேவ் இயக்கியுள்ளார். தோர் கதாபத்திரத்தில் நடித்த கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் உட்பட ருத்ராக்ஷ் ஜெய்ஸ்வால், கோல்ஷிஃப்டே ஃபராஹானி என பலர் நடித்திருக்கும் இந்த திரைப்படம், ஆக்‌ஷன் விரும்பிகளுக்கானது.

 

  1. Nobody

இதுவும் ஒரு அமெரிக்க ஆக்‌ஷன் படம். 2021ல் வெளியான இப்படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்று இந்த மாதம் டாப் 4 இடத்தில் இருக்கிறது.  இல்யா நைஷுல்லர் இயக்கிய இந்த படத்தில் பாப் ஓடென்கிர்க், கிறிஸ்டோபர் லாயிட், கோனி நீல்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

 

  1. F9 (ஃபாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் – 9)

இந்த படத்திற்கு எந்த அறிமுகமும் தேவை இருக்காது.  சமீபத்தில் இந்த பட வரிசையின் 10வது பாகமான Fast X வெளியாகி இருப்பதால், ரசிகர்கள் இதன் முந்தைய பாகமான இந்த F9 படத்தை மீண்டும் பார்த்து இதனை டாப்10ன் 3வது இடத்துக்கு கொண்டு வந்துவிட்டார்கள். ஜஸ்டின் லின் இயக்கியுள்ள இந்த படத்தில் வின் டீசல், மைக்கேல் ரோட்ரிக்ஸ், ஜோர்டானா ப்ரூஸ்டர் உட்பட பலர் நடித்துள்ளனர்.

 

  1. Afwaah

ட்ராமா வகையைச் சேர்ந்த இந்த இந்தி படத்தை Serious Men போன்ற படத்தை இயக்கிய சுதிர் மிஸ்ரா இயக்கியுள்ளார்.  நவாசுதீன் சித்திக், பூமி பெட்னேகர், சுமீத் வியாஸ் போன்றோர் நடித்துள்ள இந்த படம் மே 5ஆம் தேதி வெளியானது. இந்த மாதத்தில் இது 2வது இடத்தில் உள்ளது.

 

  1. Lust stories 2

2018ல் வெளியான திரைப்படத்தின் சீக்குவலாக வெளியாகி இருக்கும் இந்த திரைப்படமும் முந்தையதைப் போல பல சிறுபடங்களின் தொகுப்பாக ஆந்தாலஜி முறையில் வெளியாகி இருக்கிறது. கொங்கோனா சென் சர்மா, அமித் சர்மா, சுஜோய் கோஷ் ஆகியோர் இயக்கிய இந்த படத்தில் கஜோல், தமன்னா உட்பட நீனா குப்தா, குமுத் மிஸ்ரா, அம்ருதா சுபாஷ், தில்லோடமா ஷோம், விஜய் வர்மா போன்ற பலர் நடித்துள்ளனர். அந்தரங்கத்தை மையப்படுத்தி வெளியாகி இருக்கும் இந்த படத்தில் சில ஆடைக்குறைப்பு காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. இது டாப்10ல் முதல் இடத்தில் உள்ளது.

 

The post நெட்ஃப்ளிக்ஸ் இந்தியாவின் ஜூலை மாத டாப் 10 திரைப்படங்கள் first appeared on .

]]>