Trigo BX4 https://www.91mobiles.com/tamil Thu, 09 Mar 2023 06:30:15 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 மூன்று சக்கரத்துடன் வரும் ட்ரிகோ பிஎக்ஸ்4 எலக்ட்ரிக் ஸ்கூட்டர். https://www.91mobiles.com/tamil/igowise-mobility-all-set-to-launch-trigo-bx4-ev/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=igowise-mobility-all-set-to-launch-trigo-bx4-ev Tue, 08 Nov 2022 10:22:21 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3477 புதுமையான அம்சங்கள் மற்றும் வித்தியாசமான தோற்றத்தில் வெளியாகும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் என ஐகோவைஸ் (iGowise Mobility) நிறுவனத்தின் ட்ரிகோ பிஎக்ஸ்4 (Trigo BX4) எலெக்ட்ரிக் டூ-வீலரை குறிப்பிடலாம். இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தைக் கூறலாம். இந்த நிறுவனம் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 20,000 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைச் செய்திருக்கன்றது. இந்த எண்ணிக்கை வரும் மாதங்களில் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த […]

The post மூன்று சக்கரத்துடன் வரும் ட்ரிகோ பிஎக்ஸ்4 எலக்ட்ரிக் ஸ்கூட்டர். first appeared on .

]]>

புதுமையான அம்சங்கள் மற்றும் வித்தியாசமான தோற்றத்தில் வெளியாகும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் என ஐகோவைஸ் (iGowise Mobility) நிறுவனத்தின் ட்ரிகோ பிஎக்ஸ்4 (Trigo BX4) எலெக்ட்ரிக் டூ-வீலரை குறிப்பிடலாம்.

இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தைக் கூறலாம். இந்த நிறுவனம் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 20,000 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைச் செய்திருக்கன்றது.

இந்த எண்ணிக்கை வரும் மாதங்களில் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாதிரியான சிறப்பான வரவேற்பு காரணமாக, புதிய வாகன உற்பத்தியாளர்கள் பலர் தங்களின் புதிய தயாரிப்புகளை இந்தியாவை மையமாகக் கொண்டு அறிமுகம் செய்து வருகின்றனர்.

அந்தவகையில், ஐகோவைஸ் மொபிலிட்டி (iGowise Mobility) எனும் புதிய நிறுவனம் அதன் புதிய எலெக்ட்ரிக் டூவீலரை இந்திய மின்சார இருசக்கர வாகன சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் ட்ரிகோ பிஎக்ஸ்4 (Trigo BX4) எனும் இருசக்கர வாகனத்தை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதை இரு சக்கர வாகனம் என்பதை விட மூன்று சக்கர வாகனம் என்று சொன்னால் சரியாக இருக்கும்.

மிகவும் தனித்துவம் வாய்ந்த ஓரு புதிய தோற்றத்தில் ட்ரிகோ பிஎக்ஸ்4 எலெக்ட்ரிக் வாகனத்தை ஐகோவைஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இதனை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி அன்று அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

இந்த இ-வாகனத்தை, எஸ்யூவி காருக்கு இணையான வசதியைக் கொண்டது என தயாரிப்பு நிறுவனமான ஐகோவைஸ் தெரிவித்துள்ளது. கார்களில் கிடைக்கும் பயண அனுபவம் இந்த வாகனத்தில் கிடைக்கும் என நிறுவனம் உறுதியளித்துள்ளது.

அதேவேளையில், இதன் விலையும் பிற மின்சார வாகனங்களுக்கு போட்டியளிக்கும் வகையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ. 1.1 லட்சம் முதல் 1.2 லட்ச ரூபாய் வரையிலான விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எதிர்பார்க்கப்படுகின்றது. அதேநேரத்தில், மும்மடங்கு அதிக நிலைப்புத் தன்மை, 2 மடங்கு அதிக இட வசதி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை வழங்கும் வகையில் இந்த வாகனம் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த இருசக்கர வாகனத்தில் ஓர் முழு சார்ஜில் 145 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 75 கிமீ ஆகும். இந்த சூப்பர் வேக திறனுக்காக 180 என்எம் டார்க்கை வெளியேற்றும் மின்சார மோட்டார் ட்ரிகோ பிஎக்ஸ்4-இல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இவற்றுடன் இந்த டூ-வீலரில் செல்ஃப் ஸ்டெபிலைசேஷன் அம்சமும் இருசக்கர வாகனத்தில் வழங்கப்பட இருக்கின்றது. இந்த அம்சம் குறைவான வேகத்தில் பயணிக்கும்போதுகூட சாயாமல் பயணிக்க உதவும். இதேபோல், அதிக வேகத்தின்போது பாதுகாப்பை வழங்கும் விதமாக இன்டலிஜென்ட் ஆட்டோ-ஸ்விவெல்லிங் (intelligent auto-swivelling) அம்சம் வழங்கப்பட்டிருக்கின்றது.
இந்த அனைத்து அம்சங்களும் அதிக சொகுசான பயணத்தையும், பாதுகாப்பையும் வழங்கும் விதமாக வழங்கப்பட்டிருக்கின்றது. இவற்றுடன் சேர்த்து 6 அங்குல ஸ்மார்ட் அம்சங்கள் கொண்ட திரை மற்றும் சென்சிபிள் ஸ்மார்ட் சார்ஜிங் அம்சம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சமும் இந்த எலெக்ட்ரிக் டூவீலரில் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வளவு சிறப்பு வசதிகளுடன் சேர்த்து முதல் ஐயாயிரம் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வாரண்டி, இலவச அலங்கார அணிகலன்கள், உறுதியான ரீசேல் மதிப்பு மற்றும் பை-பைக் வசதி உள்ளிட்ட சிறப்பு சலுகைகள் வழங்கப்பட இருக்கின்றன. ஆகையால், இந்த இருசக்கர வாகனம் இந்தியர்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

The post மூன்று சக்கரத்துடன் வரும் ட்ரிகோ பிஎக்ஸ்4 எலக்ட்ரிக் ஸ்கூட்டர். first appeared on .

]]>