TVS iQube https://www.91mobiles.com/tamil Thu, 09 Mar 2023 12:49:05 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 2022ன் சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்! https://www.91mobiles.com/tamil/best-electric-scooter-in-2022/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=best-electric-scooter-in-2022 Tue, 13 Dec 2022 09:36:59 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4264 இந்தியாவில் இந்த 2022ம் ஆண்டு ஏகப்பட்ட எலக்ட்ரிக் டூவீலர்கள் அறிமுகமாகிவிட்டது. குறிப்பாக ஸ்கூட்டர் செக்மெண்டில் பல முக்கியமான ஸ்கூட்டர்கள் அறிமுகமாகியுள்ளன. இந்தாண்டு அறிமுகமான டாப் 4 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தான் இந்த பதிவில் விரிவாகக் காணப்போகிறோம். குறைந்த விலையில், பலவிதமான நிறுவங்களின் பல ஸ்கூட்டர்கள் அறிமுகமானாலும், திறன், மைலேஜ், விலை, நம்பகத்தன்மை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு 4 சிறந்த ஸ்கூட்டர்களை தெரிவு செய்து இருக்கிறோம். இந்தியாவில் ஸ்கூட்டர் மார்கெட்டிற்கு மிகப்பெரிய டிமாண்ட் இருக்கிறது. பெண்கள் முதல் நகர்ப் […]

The post 2022ன் சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்! first appeared on .

]]>
இந்தியாவில் இந்த 2022ம் ஆண்டு ஏகப்பட்ட எலக்ட்ரிக் டூவீலர்கள் அறிமுகமாகிவிட்டது. குறிப்பாக ஸ்கூட்டர் செக்மெண்டில் பல முக்கியமான ஸ்கூட்டர்கள் அறிமுகமாகியுள்ளன. இந்தாண்டு அறிமுகமான டாப் 4 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தான் இந்த பதிவில் விரிவாகக் காணப்போகிறோம். குறைந்த விலையில், பலவிதமான நிறுவங்களின் பல ஸ்கூட்டர்கள் அறிமுகமானாலும், திறன், மைலேஜ், விலை, நம்பகத்தன்மை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு 4 சிறந்த ஸ்கூட்டர்களை தெரிவு செய்து இருக்கிறோம்.

இந்தியாவில் ஸ்கூட்டர் மார்கெட்டிற்கு மிகப்பெரிய டிமாண்ட் இருக்கிறது. பெண்கள் முதல் நகர்ப் பகுதிகளில் வாழும் பலரும் ஸ்கூட்டர்களை தங்கள் தின பயன்பாட்டிற்காகப் பயன்படுத்த விரும்புகின்றனர். இதனால் நாளுக்கு நாள் ஸ்கூட்டர்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மக்களைக் கவர பெரும்பாலான இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் பிராண்டில் ஸ்கூட்டர்களை களம் இறக்கி வருகின்றனர்.

ஓலா எஸ்1 ஏர்

ஓலா நிறுவனம் குறைந்த விலையில் ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கடந்த தீபாவளி சமயத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்கூட்டர் தான் ஓலா எஸ்1 ஏர். இந்த ஸ்கூட்டர் மார்கெட்டில் ரூ84,999 என்ற விலையில் விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்கூட்டர் அறிமுகமாகி இருந்தாலும் இந்த ஸ்கூட்டருக்கான விற்பனை மற்றும் டெலிவரி துவங்கவில்லை. தற்போது புக்கிங் மட்டுமே நடந்து வருகிறது. இந்த ஸ்கூட்டர் 2.5 கிலோ வாட் ஹவர் பேட்டரியையும் 4.5 கிலோ வாட் மோட்டாரையும் கொண்டது. இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜில் எக்கோ மோடில் 101 கி.மீ ரேஞ்ச் செல்லும் திறன் கொண்டது. இந்த ஸ்கூட்டர் அதிகபட்சமாக 90 கி.மீ வேகத்தில் பயணிக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது.

ஹீரோ விடா வி1 இ-ஸ்கூட்டர்

தற்போது இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பிரபலமாகி வரும் நிலையில் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் தன் கால் தடத்தைப் பதிக்கும் விதமாக விடா என்ற பிராண்டை அறிமுகப்படுத்தி அதில் வி1 என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்கூட்டரில் 3.44 கிலோ வாட் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 80 கி.மீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது. முழு சார்ஜில் 165 கி.மீ வரை ரேஞ்ச் கொடுக்கும். மேலும் இந்த ஸ்கூட்டரில் ஏகப்பட்ட அம்சங்கள் மற்றும் அதிகமான சார்ஜிங் ஆப்ஷன்கள் உள்ளன.

டிவிஎஸ் ஐக்யூப்

டிவிஎஸ் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகன பிரிவில் ஐக்யூப் என்ற ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பேஸ், எஸ் மற்றும் எஸ்டி என மொத்தம் 3 வேரியன்ட்களில் கிடைக்கிறது. இந்த ஸ்கூட்டரின் பவர் மற்றும் ரேஞ்ச் சிறப்பாக இருக்கிறது. விலையும் குறைவாக இருக்கிறது. இந்த ஸ்கூட்டரின் டாப் வேரியன்டான எஸ்டி என்ற வேரியன்ட் முழு சார்ஜில் 145 கி.மீ பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் மில்டிபிள் சார்ஜிங் ஆப்ஷன்களை கொண்டது.

ஏத்தர் 450 ஜென்3

ஏத்தர் நிறுவனம் 450 என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனை செய்து வருகிறது. அதிக நம்பகத்தன்மை வாய்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இது. இதன் பெர்ஃபாமென்ஸ் மட்டுமல்ல இதன் வடிவமைப்பு மற்றும் பில்டு குவாலிட்டியும் வெகு சிறப்பாக இருக்கிறது. இந்த ஸ்கூட்டரின் 3ம் தலைமுறை ஸ்கூட்டர் இந்தாண்டு அறிமுகமானது. இது முந்தைய தலைமுறையைவிட அதிக அம்சங்களை கொண்டிருக்கிறது. இதன் ரேஞ்ச், அம்சங்கள், வெளிப்புற தோற்றம், உட்புறம் பயன்படுத்தப்பட்ட பாகங்கள் எல்லாம் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்தமாக வாடிக்கையாளர்களுக்கு செம அப்டேட்டாக இருக்கிறது.

இருசக்கர வாகன விற்பனையில் ஸ்கூட்டர் செக்மெண்டை மெல்ல மெல்ல எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பிடித்து வருகிறது. இன்னும் சில மாதங்களில் ஸ்கூட்டர் என்றாலே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தான் என்றநிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. அந்த அளவிற்கு எலெக்ட்ரிக் வாகன விற்பனை அதிகரித்து வருகிறது.

The post 2022ன் சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்! first appeared on .

]]>
டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பிரம்மாண்ட டெலிவரி நிகழ்வு! https://www.91mobiles.com/tamil/tvs-iqube-electric-scooter-mega-delivery-event/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=tvs-iqube-electric-scooter-mega-delivery-event Tue, 15 Nov 2022 06:13:10 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3623 ஒரு நாளைக்கு 3 ரூபாய் மட்டுமே செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ள எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பிரம்மாண்ட டெலிவரி நிகழ்ச்சி நடந்துள்ளது. இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஒன்று டிவிஎஸ் ஐக்யூப் (TVS iQube). இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் (Electric Scooter) அப்டேட் செய்யப்பட்ட 2022 மாடலை டிவிஎஸ் நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்தது.   மைலேஜ் டிவிஎஸ்ன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், ஐக்யூப் (iQube), ஐக்யூப் எஸ் (iQube […]

The post டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பிரம்மாண்ட டெலிவரி நிகழ்வு! first appeared on .

]]>

ஒரு நாளைக்கு 3 ரூபாய் மட்டுமே செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ள எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பிரம்மாண்ட டெலிவரி நிகழ்ச்சி நடந்துள்ளது. இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஒன்று டிவிஎஸ் ஐக்யூப் (TVS iQube). இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் (Electric Scooter) அப்டேட் செய்யப்பட்ட 2022 மாடலை டிவிஎஸ் நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்தது.

 

மைலேஜ்

டிவிஎஸ்ன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், ஐக்யூப் (iQube), ஐக்யூப் எஸ் (iQube S) மற்றும் ஐக்யூப் எஸ்டி (iQube ST) என மூன்று வேரியண்ட்களில் 2022 மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதில், ஐக்யூப் மற்றும் ஐக்யூப் எஸ் ஆகிய வேரியண்ட்களில் 3.4 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 100 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், ஐக்யூப் எஸ்டி வேரியண்ட்டில் 5.1 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 140 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

விலை

இதில், ஐக்யூப் வேரியண்ட்டின் விலை 99,130 ரூபாய் ஆகும். மறுபக்கம் ஐக்யூப் எஸ் வேரியண்ட்டின் விலை 1,04,123 ரூபாயாக உள்ளது. இது டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தில் விற்பனை செய்யப்படும் ஆன் ரோடு விலையாகும். மேலும் இவை ஃபேம்-2 (FAME-2) மற்றும் மாநில அரசின் மானியங்களுக்கு பிறகான விலை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் ஐக்யூப் எஸ்டி வேரியண்ட்டின் விலையை டிவிஎஸ் நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை. எனினும் 999 ரூபாயை முன்பணமாக செலுத்தி ஐக்யூப் எஸ்டி வேரியண்ட்டை தற்போது முன்பதிவு செய்து கொள்ள முடியும்.

 

என்ன செலவு

நகர பகுதிகளில் வழக்கமாக ஓட்டுகிறீர்கள் என்றால், ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு ஒரு நாளைக்கு வெறும் 3 ரூபாய் மட்டுமே செலவு ஆகும் (Running Cost) என டிவிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் எவ்வளவு தூரம் ஓட்டுகிறோம்? எப்படி ஓட்டுகிறோம்? என்பதையெல்லாம் பொறுத்து இந்த செலவு மாறுபடுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

 

டெலிவரி

இந்த சூழலில் டிவிஎஸ் நிறுவனம் டெல்லியில் ஒரே நாளில் 200க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு புதிய ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தற்போது டெலிவரி செய்துள்ளது. இந்த பிரம்மாண்டமான டெலிவரி நிகழ்ச்சி கடந்த நவம்பர் 13ம் தேதி நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து, டெல்லியில் மட்டும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை டிவிஎஸ் நிறுவனம் டெலிவரி செய்துள்ளது. இதில், டிவிஎஸ் ஐக்யூப் மற்றும் ஐக்யூப் எஸ் வேரியண்ட்கள் அடங்குகின்றன.

 

போட்டியாளர்கள்

இந்தியாவில் தற்போதைய நிலையில் பஜாஜ் சேத்தக் (Bajaj Chetak), ஓலா எஸ்1 ப்ரோ (Ola S1 Pro) மற்றும் ஏத்தர் 450 எக்ஸ் (Ather 450X) போன்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுடன் டிவிஎஸ் ஐக்யூப் போட்டியிட்டு வருகிறது. வரும் காலங்களில் டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு போட்டி அதிகரிக்கலாம். ஏனெனில் இந்திய சந்தையில் பல்வேறு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு ஏராளமான முன்னணி நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. ஹோண்டா (Honda) மற்றும் யமஹா (Yamaha) போன்ற நிறுவனங்களும் இந்தியாவில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன.

The post டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பிரம்மாண்ட டெலிவரி நிகழ்வு! first appeared on .

]]>