vadivelu https://www.91mobiles.com/tamil Tue, 15 Nov 2022 07:18:15 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 வடிவேலு சொந்த குரலில் பாடிய ‘அப்பத்தா’ பாடல் வெளியானது. https://www.91mobiles.com/tamil/naai-sekar-returns-movie-first-song-released/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=naai-sekar-returns-movie-first-song-released Tue, 15 Nov 2022 07:15:52 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3627 இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’. இந்த படத்தில் ‘குக் வித் கோமாளி’ புகழ் சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ திரைப்படத்தின் முதல் பாடலை படக்குழு […]

The post வடிவேலு சொந்த குரலில் பாடிய ‘அப்பத்தா’ பாடல் வெளியானது. first appeared on .

]]>

இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’. இந்த படத்தில் ‘குக் வித் கோமாளி’ புகழ் சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ திரைப்படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘அப்பத்தா’ என்ற வரிகளில் தொடங்கும் இந்த பாடலை வடிவேலு பாடியுள்ளார். இந்த பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்துள்ளார். தற்போது இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. சந்தோஷ் நாராயணன் இசையில் ராப் பாடலாக அப்பத்தா பாடல் உருவாகியுள்ளது. ஆங்கில வரிகள் கலந்து எழுதப்பட்டுள்ள இந்தப் பாடல் வரிகளை பாடல் ஆசிரியர் விவேக் எழுதி இருக்கிறார்.
இந்நிலையில் இப்பாடல் வரிகள் சர்ச்சையில் சிக்கி உள்ளன. அதன்படி இதில் இடம்பெறும் “நான் உண்டு என் வேலை உண்டுனு இருந்தேன்… சில ‘நாய்’யால நான் சீக்காளி ஆனேன்” என்கிற வரிகள் தான் இந்த சர்ச்சைக்கு காரணம்.

இயக்குனர் ஷங்கர் உடனான பிரச்சனையால் தான் அவர் நடிக்க முடியாமல் போனது என்பது ஊருக்கே தெரியும். அப்படி இருக்கையில் அவரை வம்பிழுக்கும் வகையில் தான் இப்படி ஒரு வரியை அப்பாடலில் வைத்துள்ளதாக நெட்டிசன்கள் சந்தேகத்தை கிளப்பி வருகின்றனர்.

பிரபுதேவா கோரியோகிராபு செய்த இந்தப் பாடலுக்காக சுமார் ஒன்றரை கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது. கதைக்கு தேவையே இல்லாத இந்தப் பாடலை இப்போது க்ளைமேக்ஸ் காட்சிக்கு பின்னர் தான் வைக்க முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளதாம்.

அதனால் இந்தப் பாடலுக்காக செய்த செலவு வீண்தான் என தயாரிப்பு தரப்பில் இருந்து புகார்கள் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்திலும் வடிவேலுவால் பட்ஜெட் பிரச்சினை ஏற்பட்டது. இந்நிலையில், லைகாவும் அதிருப்தி தெரிவித்துள்ளதாக வெளியான தகவல்கள் வைரலாகி வருகின்றன.

இப்படத்தின் உடைய ஷூட்டிங் முழுவதும் முடிந்துவிட்ட நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தை டிசம்பரில் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கின்றது.

அந்தவகையில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் டிசம்பர் மாதம் 9-ஆம் தேதி வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது. ஏனெனில் ராகவா லாரன்ஸுடன் ‘சந்திரமுகி 2’, உதயநிதியுடன் ‘மாமன்னன்’ ஆகிய படங்களிலும் வடிவேலு முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். மற்றப் படத்தைப் போலவே சந்திரமுகி 2, மாமன்னன் ஆகிய படங்களும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக அந்தப் படங்களின் அப்டேட் வெளியாகும் முன்னரே நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தை ரிலீஸ் செய்ய நம்ம வைகைப்புயல் வடிவேலு ஆசைப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளதாலேயே தான் வடிவேலுக்கு இந்த அவசரம் என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மத்தியில் பேச்சுகள் அடிபடுகின்றன.

The post வடிவேலு சொந்த குரலில் பாடிய ‘அப்பத்தா’ பாடல் வெளியானது. first appeared on .

]]>