vijay sethupathy https://www.91mobiles.com/tamil Fri, 10 Mar 2023 07:38:32 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 லியோ படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறாரா? https://www.91mobiles.com/tamil/vijay-sethupathy-will-act-in-lokesh-kanagaraj-leo-movie/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=vijay-sethupathy-will-act-in-lokesh-kanagaraj-leo-movie Mon, 20 Feb 2023 12:34:52 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5944 மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என நான்கு படங்களின் ஹிட்டுக்கு அடுத்ததாக விஜய்யின் லியோ படத்தை இயக்கிவருகிறார் லோகேஷ் கனகராஜ். வாரிசு படம் பெற்ற கலவையான விமர்சனங்களுக்கு அடுத்து விஜய் இந்தப் படத்தில் நடிப்பதால் இப்படம் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையில் இருக்கின்றனர் விஜய் ரசிகர்கள்.   லியோ ப்ரோமோ லியோ படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், கௌதம் வாசுதேவ், மிஷ்கின், மாத்யூ தாமஸ், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்துவருகின்றனர். அனிருத் இசையமைக்கிறார். மாஸ்டர் பட கூட்டணி […]

The post லியோ படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறாரா? first appeared on .

]]>

Highlights

  • விஜயின் லியோ படத்தைப்பற்றி இயக்குநர் ரத்னகுமார் ட்வீட் பதிவு செய்திருக்கிறார்.
  • இந்த ட்வீட் லியோ படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறாரா என்ற கேள்வியை ரசிகர்களிடம் எழுப்பியிருக்கிறது.

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என நான்கு படங்களின் ஹிட்டுக்கு அடுத்ததாக விஜய்யின் லியோ படத்தை இயக்கிவருகிறார் லோகேஷ் கனகராஜ். வாரிசு படம் பெற்ற கலவையான விமர்சனங்களுக்கு அடுத்து விஜய் இந்தப் படத்தில் நடிப்பதால் இப்படம் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையில் இருக்கின்றனர் விஜய் ரசிகர்கள்.

 

லியோ ப்ரோமோ

லியோ படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், கௌதம் வாசுதேவ், மிஷ்கின், மாத்யூ தாமஸ், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்துவருகின்றனர். அனிருத் இசையமைக்கிறார். மாஸ்டர் பட கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் இந்தப் படம் மிகப்பெரும் வெற்றியை பதிவு செய்யும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர் விஜய் ரசிகர்கள். படத்தின் டைட்டில் ப்ரோமோவும் அதை உறுதி செய்திருப்பதாக கூறிவருகின்றனர்.

 

லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸில் லியோ?

லோகேஷ் கனகராஜ் தனது விக்ரம் படத்தில் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்ற ஐடியாவை அறிமுகப்படுத்தினார். அந்தப் படத்தில் கைதி படத்தின் கதாபாத்திரங்களை இணைத்தது ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. காஷ்மீரில் நடந்துவரும் லியோ ஷூட்டிங்கில் கலந்துகொள்வதற்காக கைதி படத்தில் நடித்த ஜார்ஜ், விக்ரம் படத்தில் நடித்த ஏஜெண்ட் டீனா ஆகியோரும் சென்றிருப்பதால் இந்தப் படமும் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸுக்குள் வருமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.

 

ட்விஸ்ட் வைத்த இயக்குநர் ரத்னகுமார்

இந்நிலையில் லோகேஷ் கனகராஜின் படங்களுக்கு திரைக்கதையும், வசனமும் எழுதிவரும் ரத்னகுமார் பதிவு செய்திருக்கும் ஒரு ட்வீட் தற்போது ட்ரெண்டாகியுள்ளது. அந்த ட்வீட்டில் ஒரு பக்க கண்ணாடியை வைத்துக்கொண்டு Never Say Die என்று காஷ்மீரில் இருந்து குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த ட்வீட் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளதோடு ரசிகர்களிடையே கேள்வி ஒன்றையும் எழுப்பியுள்ளது.

 

லியோவில் விஜய் சேதுபதி?

 

ரத்னகுமார் கையில் வைத்திருக்கும் கண்ணாடியானது விக்ரம் படத்தில் சந்தனம் கேரக்டரில் நடித்த விஜய்சேதுபதியின் கண்ணாடியை ஒத்திருக்கிறது. இதனால் லியோ படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறாரா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பிவருகின்றனர். அதேசமயம் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி உயிரிழந்தது போல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் சூழலில் இது எப்படி சாத்தியம் என ஒரு தரப்பினர் கேள்வி எழுப்ப; படத்தில் விஜய் சேதுபதி இருக்கும் கண்டெய்னர் வெடிக்கும்படிதான் காட்சி இருக்கும் அதில் அவர் உயிரிழந்தாரா என்பது உறுதியாக தெரியாது. எனவே இதில் விஜய் சேதுபதி நடிக்க வாய்ப்புகள் இருக்கலாம் எனவும் மறுதரப்பினர் கூறுகின்றனர்.

முன்னதாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய இயக்குநரும், திரைக்கதை ஆசிரியருமான ரத்னகுமார், “லியோ படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து கொடுக்கப்பட்டுவிட்டன. இதனால் அடுத்த அப்டேட் வர தாமதமாகும். படம் குறித்த எதிர்பார்ப்பை பெரிதாகவே வைத்துக்கொள்ளுங்கள். அந்த எதிர்பார்ப்பைவிட படம் அதிக அளவு இருக்கும்” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

The post லியோ படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறாரா? first appeared on .

]]>
ஃபார்ஸி வெற்றியைத் தொடர்ந்து பாலிவுட்டில் பிரபலமான விஜய்சேதுபதி https://www.91mobiles.com/tamil/vijay-sethupathi-gets-huge-response-in-bollywood-after-farzi-release/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=vijay-sethupathi-gets-huge-response-in-bollywood-after-farzi-release Fri, 10 Feb 2023 12:34:21 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5749 தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கில் நடிக்க ஆரம்பித்த விஜய்சேதுபதி, தற்போது பாலிவுட்டில் ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார். மக்கள் திலகம் என தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட விஜய்சேதுபதி, சிறந்த நடிகர் என பாலிவுட் ரசிகர்களாலும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறார். ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் வெளியான ஃபர்ஸி வெப்சீரிஸ் மூலம் சர்வதேச ரசிகர்களையும் தனது நடிப்பால் கவர்ந்துள்ளார் பாலிவுட் நடிகர்கள் நடித்து நெட்பிளிக்ஸில் வெளியான சேக்ரட் கேம்ஸ், ரஜினிகாந்தின் பேட்ட படங்களில் நடித்து அசத்திய பாலிவுட் நடிகர் […]

The post ஃபார்ஸி வெற்றியைத் தொடர்ந்து பாலிவுட்டில் பிரபலமான விஜய்சேதுபதி first appeared on .

]]>

Highlights

  • ஃபர்ஸி வெப்சீரிஸ் மூலம் விஜய்சேதுபதிக்கு பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
  • துணை நடிகராக, குறும்பட நடிகராக நடித்து சின்ன பட்ஜெட் படங்களில் நாயகனாக உருவான விஜய்சேதுபதி தனது அபார நடிப்பால் ஆல் இந்தியா நடிகராக மாறி உள்ளார்

தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கில் நடிக்க ஆரம்பித்த விஜய்சேதுபதி, தற்போது பாலிவுட்டில் ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.

மக்கள் திலகம் என தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட விஜய்சேதுபதி, சிறந்த நடிகர் என பாலிவுட் ரசிகர்களாலும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறார். ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் வெளியான ஃபர்ஸி வெப்சீரிஸ் மூலம் சர்வதேச ரசிகர்களையும் தனது நடிப்பால் கவர்ந்துள்ளார்

பாலிவுட் நடிகர்கள் நடித்து நெட்பிளிக்ஸில் வெளியான சேக்ரட் கேம்ஸ், ரஜினிகாந்தின் பேட்ட படங்களில் நடித்து அசத்திய பாலிவுட் நடிகர் நவாஸுதின் சித்திக்கை மிஞ்சும் அளவுக்கு விஜய்சேதுபதி தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை வியக்க வைத்து வருகிறார் என பாலிவுட் ரசிகர்கள் #VijaySethupathi ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

15 படங்கள் தொடர்ந்து பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் தோல்வியடைந்த நிலையில், விஜய்சேதுபதியின் நடிப்பால் ஃபர்ஸி வெப்சீரிஸ் ஹிட் அடித்துள்ளது. விஜய்சேதுபதி மற்றும் கேகே மேனன் புகைப்படங்களை வீட்டில் மாட்டி ஷாகித் கபூர் கும்பிடணும் என பாலிவுட் ரசிகர்கள் ட்வீட் போட்டு வருகின்றனர். அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்கான கபிர் சிங் மட்டும் ஷாகித் கபூருக்கு இடையே ஹிட் கொடுத்ததாக அவரது ரசிகர்கள் சப்போர்ட் செய்து வருகின்றனர்.

தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸில் சர்ப்ரைஸ் இணைப்பாக வந்து ரசிகர்களை கவர்ந்த செல்லம் சார் உடன் விஜய்சேதுபதி போனில் பேசும் காட்சிகள் ஃபர்ஸி மற்றும் ஃபேமிலிமேனை கனெக்ட் செய்யும் யூனிவர்ஸாக மாறி விட்டது என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மைக்கேல் கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி காவல் அதிகாரியாக வரும் காட்சிகள் எல்லாம் அவரது ஸ்டைலான நடிப்பால் சும்மா கெத்துக் காட்டுகிறார். இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே மீண்டும் அவர்கள் இருவரும் வெப்சீரிஸ் வெற்றியாளர்கள் என்பதை அடித்துச் சொல்கிறது என பாராட்டுக்கள் பறக்கின்றன.

ஃபர்ஸி வெப்சீரிஸில் விஜய்சேதுபதி பேசும் வசனங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. அதிலும், தேங்யூ நமஸ்தே ஜெய்ஹிந்த் வசனத்தை ஏகப்பட்ட ரசிகர்கள் வரிசையாக போட்டு விஜய்சேதுபதியை கொண்டாடி வருகின்றனர்.

கத்ரீனா கைஃப் உடன் மெர்ரி கிறிஸ்துமஸ், ஷாருக்கானுக்கு வில்லனாக அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்திலும் விஜய்சேதுபதி நடித்து வருகிறார். தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வரும் விஜய்சேதுபதிக்கு ரெட்கார்ப்பெட் வரவேற்பை பாலிவுட் ரசிகர்கள் கொடுத்து வரவேற்று இருப்பது விஜய்சேதுபதி ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது.

The post ஃபார்ஸி வெற்றியைத் தொடர்ந்து பாலிவுட்டில் பிரபலமான விஜய்சேதுபதி first appeared on .

]]>
மீண்டும் வரும் பொன்னியின் செல்வன்! https://www.91mobiles.com/tamil/ponniyin-selvan-movie-update/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=ponniyin-selvan-movie-update Tue, 27 Dec 2022 11:32:41 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4587 மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதி புகழ்பெற்ற வரலாற்றுப் புனைவு நாவலான பொன்னியின் செல்வனை பல ஆண்டுகால முயற்சிக்கு பின் மணிரத்னம் படமாக எடுத்தார். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்தனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இரண்டு பாகங்களாக உருவான பொன்னியின் செல்வனின் முதல் பாகம் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ‘அடிவானத்தில் ஏதோ விசேஷம் இருக்கிறது. என்னவென்று […]

The post மீண்டும் வரும் பொன்னியின் செல்வன்! first appeared on .

]]>

மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதி புகழ்பெற்ற வரலாற்றுப் புனைவு நாவலான பொன்னியின் செல்வனை பல ஆண்டுகால முயற்சிக்கு பின் மணிரத்னம் படமாக எடுத்தார். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்தனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இரண்டு பாகங்களாக உருவான பொன்னியின் செல்வனின் முதல் பாகம் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், ‘அடிவானத்தில் ஏதோ விசேஷம் இருக்கிறது. என்னவென்று உங்களால் யூகிக்க முடிகிறதா..? ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் புதிய அறிவிப்பு நாளை மாலை 4 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு ‘பொன்னியின் செல்வன்’ இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பாக இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

விஜய் சேதுபதியும் பிரபல இந்தி நடிகை கத்ரினா கைப்பும் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே இந்தியில் வெற்றி பெற்ற ‘அந்தாதூன்’ படத்தை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தாதூன் படம் தற்போது தமிழில் ‘ரீமேக்’ செய்யப்பட்டுள்ளது. ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனை படக்குழுவினர் மறுத்தனர். பிறகு கிறிஸ்துமஸ் பண்டிகையில் தியேட்டரில் வெளியாகும் என்றும் அறிவித்தனர். ஆனால் திட்டமிட்டபடி படம் வெளியாகவில்லை.

இந்த நிலையில் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் வருகிற பொங்கல் தினத்தன்று வெளியாகவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்தின் தொழில்நுட்ப பணிகள் இன்னும் முடியாததால் தள்ளிவைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘துணிவு’. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

‘துணிவு’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இந்நிலையில் துணிவு படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. தற்போது துணிவு பட விளம்பர பேனரை விமானத்தில் இருந்து குதித்து பறக்கவிட்ட நிகழ்வு துபாயில் நடத்துள்ளது. இதுதொடர்பான வீடியோவை படக்குழு தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில் அஜித் வழியில்… (Going A.K. way) 31 டிசம்பர் 22 அன்று ஒரு அற்புதமான புதிய அறிவிபுடன் வருகிறோம்! என பதிவிட்டு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ‘வாரிசு’ திரைப்படம் வருகிற பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் சில நாட்களுக்கு முன் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்த பல ரசிகர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், ரசிகர்கள் பலர் உற்சாக மிகுதியால் அதிகப்படியான இருக்கைகளை சேதப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து சேதம் குறித்த கணக்கெடுப்பு நடத்திய பின் ‘வாரிசு’ பட தயாரிப்பு நிறுவனத்திடம் உரிய அபராதம் வசூலிக்கப்படும் என்று நேரு உள் விளையாட்டரங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post மீண்டும் வரும் பொன்னியின் செல்வன்! first appeared on .

]]>
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் படத்தில் விஜய் சேதுபதி https://www.91mobiles.com/tamil/vijay-sethupathi-in-dsp/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=vijay-sethupathi-in-dsp Fri, 11 Nov 2022 08:38:32 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3568 2010-ல் வெளியான ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமான விஜய்சேதுபதி தற்போது முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். பீட்சா, சூது கவ்வும், நானும் ரவுடிதான், சேதுபதி, தர்மதுரை, விக்ரம் வேதா, 96 உள்ளிட்ட படங்கள் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தின. விஜய் சேதுபதியின் 46-வது திரைப்படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்குகிறார். இந்த படத்தில் விஜய்சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஜய்சேதுபதி மீண்டும் போலீஸ் அதிகாரியாகவும், அவருக்கு ஜோடியாக அனு கீர்த்திவாஸ் நடித்திருக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் […]

The post மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் படத்தில் விஜய் சேதுபதி first appeared on .

]]>

2010-ல் வெளியான ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமான விஜய்சேதுபதி தற்போது முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். பீட்சா, சூது கவ்வும், நானும் ரவுடிதான், சேதுபதி, தர்மதுரை, விக்ரம் வேதா, 96 உள்ளிட்ட படங்கள் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தின.

விஜய் சேதுபதியின் 46-வது திரைப்படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்குகிறார். இந்த படத்தில் விஜய்சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஜய்சேதுபதி மீண்டும் போலீஸ் அதிகாரியாகவும், அவருக்கு ஜோடியாக அனு கீர்த்திவாஸ் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு டிஎஸ்பி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் விஜய் சேதுபதி காவல்துறை அதிகாரியின் உடையில் பைக்கில் அமர்ந்துக் கொண்டு வருவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. தற்போது அந்த போஸ்டர் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷின் படம் ரிலீஸ் ஆவது தள்ளிப் போய் இருக்கிறது. வத்திக்குச்சி’ படத்தை இயக்கிய இயக்குனர் பா.கின்ஸ்லின் இயக்கியுள்ள படம் ‘டிரைவர் ஜமுனா’. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் ‘ஆடுகளம்’, நரேன், ஸ்ரீ ரஞ்சனி, ‘ஸ்டான்ட் அப் காமடியன்’ அபிஷேக், ‘ராஜாராணி’ பட புகழ் பாண்டியன், கவிதா பாரதி, பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

டிரைவர் ஜமுனா போஸ்டர் இப்படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இதைத்தொடர்ந்து ‘டிரைவர் ஜமுனா’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தள்ளி வைத்துள்ளது. இது குறித்து படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாளை 11 தேதியன்று வெளியாவதாக இருந்த ‘டிரைவர் ஜமுனா’ திரைப்படம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் புதிய வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தடம், மீகாமன் போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் படம் ‘கலகத் தலைவன்’. இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருக்கிறார். மேலும், பிக்பாஸ் ஆரவ், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. ‘கலகத் தலைவன்’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பலரின் கவனம் ஈர்த்தது. கலகத் தலைவன் கலகத் தலைவன் இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்சியில் இயக்குனர்கள் மிஷ்கின், மாரி செல்வராஜ் மற்றும் படக்குழு உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். இதனிடையே இப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியுள்ள இத்திரைப்படம் வருகிற நவம்பர் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

கலகத் தலைவன் – ட்ரெயிலர்

The post மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் படத்தில் விஜய் சேதுபதி first appeared on .

]]>
விரைவில் வருகிறது.. இடம் பொருள் ஏவல்! https://www.91mobiles.com/tamil/tamil-cinema-director-seenu-ramasamy-tweet-about-idam-porul-yaeval-movie/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=tamil-cinema-director-seenu-ramasamy-tweet-about-idam-porul-yaeval-movie Mon, 17 Oct 2022 12:47:38 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3087 கூடல் நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே, மாமனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி. இதனிடையே இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க இடம் பொருள் ஏவல் என்ற படம் தொடங்கப்பட்டு நீண்ட நாட்களாகியும் வெளிவராமல் இருந்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உருவான இப்படம், நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது திரைக்குவர உள்ளதாக சீனு ராமசாமி நேற்று அறிவித்தார். யுவன் சங்கர் இசை இடம் பொருள் ஏவல் இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து விஷ்ணு […]

The post விரைவில் வருகிறது.. இடம் பொருள் ஏவல்! first appeared on .

]]>

கூடல் நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே, மாமனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி. இதனிடையே இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க இடம் பொருள் ஏவல் என்ற படம் தொடங்கப்பட்டு நீண்ட நாட்களாகியும் வெளிவராமல் இருந்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உருவான இப்படம், நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது திரைக்குவர உள்ளதாக சீனு ராமசாமி நேற்று அறிவித்தார்.

யுவன் சங்கர் இசை

இடம் பொருள் ஏவல் இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து விஷ்ணு விஷால் மற்றும் நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள வைய்யம்பட்டி வல்லக்குட்டி என்ற பாடலின் லிரிக்கல் வீடியோவை பகிர்ந்து சமூக வலைத்தளத்தில் சீனு ராமசாமி பதிவிட்டுள்ளார். அதில், பறவைகள் எச்சந்தான் காடு எங்க பண்பாட்டில் காடேதான் வீடு என்று குறிப்பிட்டுள்ளார்.

வாழ்த்து மடல்

இடம் பொருள் ஏவல் இடம் பொருள் ஏவல் சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான மாமனிதன் திரைப்படம் பல விருதுகளை குவித்தது குறிப்பிடத்தக்கது. ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இயக்குனர் சீனுராமசாமி சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு பிறந்தநாள் பரிசாக அவரது மனைவி இவரின் கவிதைகள் அனைத்தையும் தொகுத்து நூலாக்கி கொடுத்துள்ளார். இதற்கு தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து மடல் எழுதியுள்ளார்.

இது குறித்து சீனுராமசாமி தனது சமூக வலைதளப் பக்கத்தில் “அனைவருக்கும் அன்பான வணக்கம் எழுதுவது சீனுராமசாமி. எனக்கு ஆச்சர்ய பரிசு தர இது நாள்வரை நான் எழுதிய கவிதைகள் அத்துணையும் சேகரித்து எனக்குத் தெரியாமல் நூலாக்கி ‘சொல்வதற்கு சொற்கள் தேவையில்லை’ என அந்நூலுக்கு என் கவிதையையே தலைப்பிட்டு பிறந்தநாள் பரிசாக மனைவி தர்ஷணாவும் மகள்களும் தந்தனர்.

பாராட்டுக் கடிதம்

மாண்புமிகு நம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒரு கணவனுக்கு ஆச்சர்யமூட்டும் பரிசு தருவதற்காக ஒரு மனைவி தொகுத்த கவிதை தொகுப்பிற்கு ஊக்கமளித்து பாராட்டி ஒரு கடிதம் தந்து வாழ்த்திய உங்கள் உயர்ந்த உள்ளம் பற்றி நினைப்பதா? அல்லது என் போன்ற கலைஞர்களுக்கு நீங்கள் தரும் இதயப்பூர்வமான அன்பை எண்ணி நெகிழ்வதா எனத் தெரியவில்லை.

வைரமுத்து

என்னால் இதை முதலில் நம்ப முடியவில்லை. முதல்வரின் கனிந்த இதயத்திற்கு முன் வணங்கி நிற்கிறேன். மேலும் அணிந்துரை தந்தவர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்.. கவிஞரும் தன் பங்களிப்பாக ஆயிரம் மலர்களை சொற்களாக்கி சூடிவிட்டார். உங்கள் கருத்த கைகளை முத்தமிடுகிறேன் கவிஞரே.. கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் அம்மா, எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் சத்யபாமா பல்கலைக்கழக வேந்தர் மரிய சீனாஜான்சன் என் வாழ்நாளில் சிறப்பான நினைவு பரிசினை தந்த உங்களுக்கு இதய நன்றிகள். நூலினை வீட்டிற்கே வந்து வெளியிட்டவர் நடிகர் மோகன் அவர்கள் அதுவும் தீடீரென்று.. என் காதலுக்குரியவர் அவர் மோகன் சாருக்கு இதய நன்றிகள். ஆச்சர்யம் அதிர்ச்சியாயிற்று. திக்குமுக்காடிப்போனேன். வாழ்த்திய அனைவருக்கும் அன்பு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post விரைவில் வருகிறது.. இடம் பொருள் ஏவல்! first appeared on .

]]>