vision 3 turbo https://www.91mobiles.com/tamil Mon, 26 Sep 2022 05:05:54 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 அடேயப்பா! ரூ7,699 மொபைலில் 6GB RAM? https://www.91mobiles.com/tamil/itel-vision-3-turbo-launched-in-india-with-up-to-6gb-ram-at-a-price-of-rs-7699/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=itel-vision-3-turbo-launched-in-india-with-up-to-6gb-ram-at-a-price-of-rs-7699 Mon, 26 Sep 2022 05:05:54 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2580 itel நிறுவனம், செப்டம்பர் 22 ஆம் தேதி இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் itel Vision 3 Turbo என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போனாக மிகவும் மலிவான விலையில் போதுமான அம்சங்களுடன் வெளியாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்களை இப்போது பார்க்கலாம். 6ஜிபி ரேம் உடன் வருகிறதா? itel Vision 3 Turbo ஸ்மார்ட்போனை மிகக் குறைந்த விலையில் அறிமுகம் […]

The post அடேயப்பா! ரூ7,699 மொபைலில் 6GB RAM? first appeared on .

]]>

itel நிறுவனம், செப்டம்பர் 22 ஆம் தேதி இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் itel Vision 3 Turbo என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போனாக மிகவும் மலிவான விலையில் போதுமான அம்சங்களுடன் வெளியாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்களை இப்போது பார்க்கலாம்.

6ஜிபி ரேம் உடன் வருகிறதா?

itel Vision 3 Turbo ஸ்மார்ட்போனை மிகக் குறைந்த விலையில் அறிமுகம் செய்துள்ளது ஐடெல். இதன் விலைக்கு ஏற்ற சிறப்பான அம்சங்களை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருந்தாலும், இந்த மொபைலின் மிகவும் சிறப்பம்சமான அம்சம் என்னவென்றால், மலிவான விலையில் 6ஜிபி ரேம் உடன் கிடைக்கும் ஒரே ஸ்மார்ட்போன் இது மட்டுமே.

ரேம்

உண்மையைத் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால், இந்த மொபைல் 3 ஜிபி ரேம் உடன் தான் வருகிறது. ஆனால், இந்த ஸ்மார்ட்போனின் ஒட்டுமொத்த செயல்திறனை மேம்படுத்த ஐடில் மெமரியில் இருந்து கூடுதலாக 3ஜிபி கடன் வாங்கிக்கொண்டு, இது 6ஜிபி ரேம் போனாக செயல்படுகிறது.

சிப்செட்

இந்த புதிய itel Vision 3 Turbo ஸ்மார்ட்போன் UNISOC SC9863A ஆக்டா கோர் சிப்செட் உடன் செயல்படுகிறது. இது ஆண்ட்ராய்டு 11 OS இல் இயங்குகிறது. இதில் கூடுதல் ரேம் வழங்கப்பட்டுள்ளதால், ஸ்மார்ட்போனின் அனுபவம் மிகவும் தடையின்றி, சிறப்பானதாக இருக்கும். இந்த விலை பிரிவில் இப்படி ஒரு பெர்பார்மர் போனை நீங்கள் பார்க்க முடியாது என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

சிறப்பம்சம்

இந்த itel Vision 3 Turbo சாதனம் 6.6 அங்குலம் கொண்ட LCD IPL டிஸ்பிளே பேனலைக் கொண்டுள்ளது. இது எச்டி+ தெளிவுத்திறன் உடன் 2.5D கர்வுட் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டரைக் கொண்டுள்ளது. அதேபோல், இந்த itel Vision 3 Turbo ஸ்மார்ட்போன் அதன் பின்புறத்தில் 8MP கொண்ட AI டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த சாதனம் 6ஜிபி வரையிலான ரேம் ஆதரிக்கிறது.

பாஸ்ட் சார்ஜிங்

இந்த சாதனம் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. itel Vision 3 Turbo ஸ்மார்ட்போன் 18W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் பெரிய 5,000mAh பேட்டரியோடு அறிமுகமாகி இருக்கிறது. குறிப்பிடத்தக்க வகையில், இது ரிவர்ஸ் சார்ஜிங், இன்டெலிஜெண்ட் பவர் மேனேஜ்மேண்ட் மற்றும் AI பவர் மாஸ்டர் போன்ற அம்சங்களையும் ஆதரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பிற்காக, பின்புறத்தில் பிரிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் மற்றும் ஃபேஸ் அன்லாக்கையும் இந்த சாதனம் ஆதரிக்கிறது.

விலை

Itel, இந்த போனை வாங்குபவர்களுக்கு “ஒன் டைம் ஸ்கிரீன் ரீப்ளேஸ்மென்ட் ஆஃபர்” என்ற சேவை உத்தரவாதத்தையும் வழங்குகிறது, மேலும் மொபைல் வாங்கிய 100 நாட்களுக்குள் டிஸ்பிளே ஸ்கிரீன் உடைந்தால் அதனை இலவசமாக மாற்றித்தருகிறது. இந்த மொபைல் மல்டி கிரீன், ஜூவல் ப்ளூ மற்றும் டீப் ஓஷன் ப்ளூ ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. இத்தகைய அம்சங்களைக் கொண்ட இந்த itel Vision 3 Turbo விலை வெறும் ரூ. 7,699 மட்டுமே.

The post அடேயப்பா! ரூ7,699 மொபைலில் 6GB RAM? first appeared on .

]]>