Vivo T2 series https://www.91mobiles.com/tamil Tue, 11 Apr 2023 06:10:48 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Snapdragon 695 சிப்செட், 64MP கேமரா, 1300nits பிரகாச திரையோடு வெளியானது Vivo T2 சீரிஸ் https://www.91mobiles.com/tamil/vivo-t2-came-out-with-snapdragon-695-64mp-camera/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=vivo-t2-came-out-with-snapdragon-695-64mp-camera Tue, 11 Apr 2023 06:10:48 +0000 https://www.91mobiles.com/tamil/?p=7440   பட்ஜெட் 5ஜி போனாக வெளியாகி இருக்கிறது Vivo T2 5G மொபைல். 6ஜிபி / 8ஜிபி என இரண்டு வேரியண்டில் வெளியாகி இருக்கும் இந்த மொபைல் லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 13 மேல் Funtouch OS 13 கொண்டு கட்டமைக்கப்பட்ட இயங்குதளத்தில் இயங்குகிறது. கூடவே இது பிரபல 5ஜி சிப்செட்டான ஸ்னாப்டிராகன் 695 சிப்செட்டைக் கொண்டுள்ளது. 1300nits brightness கொண்ட இந்த இந்த மொபைல் 360Hz Touch sampling rateஐயும் கொண்டுள்ளது. இன்று வெளியான இந்த மொபைலை […]

The post Snapdragon 695 சிப்செட், 64MP கேமரா, 1300nits பிரகாச திரையோடு வெளியானது Vivo T2 சீரிஸ் first appeared on .

]]>

Highlights

  • இது Snapdragon 695 சிப்செட்,  44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது.
  • IOS வசதியோடு கூடிய 64MP முன்பக்க கேமரா, 16MP பின்பக்க கேமராவும் உள்ளது.
  • இது ஃப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனைக்கு வருகிறது

 

பட்ஜெட் 5ஜி போனாக வெளியாகி இருக்கிறது Vivo T2 5G மொபைல். 6ஜிபி / 8ஜிபி என இரண்டு வேரியண்டில் வெளியாகி இருக்கும் இந்த மொபைல் லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 13 மேல் Funtouch OS 13 கொண்டு கட்டமைக்கப்பட்ட இயங்குதளத்தில் இயங்குகிறது. கூடவே இது பிரபல 5ஜி சிப்செட்டான ஸ்னாப்டிராகன் 695 சிப்செட்டைக் கொண்டுள்ளது. 1300nits brightness கொண்ட இந்த இந்த மொபைல் 360Hz Touch sampling rateஐயும் கொண்டுள்ளது. இன்று வெளியான இந்த மொபைலை ப்ளிப்கார்ட் பிரத்யேகமாக விற்பனை செய்கிறது.

 

டிஸ்ப்ளே

இந்த Vivo T2 5G மொபைல் 6.38 அங்குல AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது 2400 X 1080 அடர்த்தியையும், 360Hz Touch sampling rateஐயும் கொண்டுள்ளது.  மொத்த மொபைலின் அளவு 158.91 x 73.53 x 7.80 ஆகும். இது 6000000:1 காண்ட்ராஸ்ட் ரேஷ்யோவையும் கொண்டுள்ளது.

கேமரா

இந்த Vivo T2 5G மொபைலின் பின்பக்கத்தில் இரண்டு கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. IOS வசதியுடன் கூடிய 64 மெகாபிக்சல் கேமரா ஒன்றும், 2MP டெப்த் சென்சார் ஒன்றும் இருக்கின்றன. இதனால் இதில் நடுக்கமற்ற தெளிவான படம் / வீடியோவை எடுக்க முடியும். கூடவே ஃப்ளாஷ் ஒன்றும் இருக்கிறது. முன்பக்கத்தில் செல்ஃபி எடுக்கவும், வீடியோ கால்கள் பேசவும் 16MP கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த கேமராக்கள் குறைந்த அப்பசருடன் வெளியாகி இருப்பதால் குறைந்த வெளிச்சத்தில் கூட நல்ல படங்களை எடுக்க முடியும்.

 

மெமரி

இந்த Vivo T2 5G மொபைல்  6 GB / 8 GB   என இரண்டு விதமான ரேம்களில் வெளியாகிறது. இரண்டு வேரியண்ட்களும் 128 GB இண்டர்னல் ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. இந்த இண்டர்னல் ஸ்டோரேஜை அதிகப்படுத்திக் கொள்ள ஒரு Micro SD slot வழங்கப்பட்டுள்ளது. இதில் மைக்ரோ SD கார்டை உபயோகித்து இந்த மொபைலின் சேமிப்புத்திறனை அதிகரித்துக் கொள்ள முடியும்.

 

சிப்செட்

இந்த மொபைலில் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் இருக்கிறது. தற்போது வெளியாகும் பெரும்பாலான மொபைல்கள் இந்த சிப்செட்டைக் கொண்டுள்ளன. இது 6nm அளவில் கட்டமைக்கப்பட்ட ஒரு ஆக்டா கோர் சிப்செட் ஆகும். இது 6,00,000க்கும் அதிகமான அதுது ஸ்கோரைப் பெற்றுள்ளது. இதனால் இதனை தடை இன்றி இயக்க முடியும்.

பேட்டரி

Vivo T2 5G மொபைலில்  44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியோடு கூடிய 4500mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.  இந்த  மொபைல் Velocity Wate, Nitro Blaze என இரண்டு நிறங்களில் வெளியாகி உள்ளது. மேலும் இந்த மொபைலின் எடை 172கிராம் ஆகும்.

 

கனெக்டிவிட்டி

இரட்டை சிம் வசதியோடு வெளியாகி இருக்கும் இந்த மொபைலில் ப்ளூடூத் 5.1, Wi-Fi, Type – C port, OTG வசதி ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்புக்கென இந்த மொபைலில் ‘இன் – டிஸ்ப்ளே ஃபிங்கர் ப்ரிண்ட் சென்சார் இருக்கிறது. இந்த மொபைலில் 3.5mm ஆடியோ ஜாக், NFC, FM போன்ற வசதிகள் இல்லை.

 

 

 

The post Snapdragon 695 சிப்செட், 64MP கேமரா, 1300nits பிரகாச திரையோடு வெளியானது Vivo T2 சீரிஸ் first appeared on .

]]>
(Exclusive) Vivo T2 சீரிஸின் ரேம், ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் மற்றும் கேமரா விவரங்கள் அறிமுகத்திற்கு முன்னதாக வெளியிடப்பட்டது https://www.91mobiles.com/tamil/vivo-t2-series-ram-storage-options-camera-details-revealed/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=vivo-t2-series-ram-storage-options-camera-details-revealed Fri, 31 Mar 2023 11:38:05 +0000 https://www.91mobiles.com/tamil/?p=7233 Vivo இந்தியாவில் Vivo T2 மற்றும் Vivo T2x போன்களைஐ அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது என்று சில நாட்களுக்கு முன்பு, பிரைஸ்பாபாவின் அறிக்கை தெரிவித்தது. இந்த இரண்டு சாதனங்களும் ஏப்ரல் நடுப்பகுதியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிக்கை வெளிப்படுத்தியது. எப்போது வெளியாகும் என்பதைத் தவிர, வரவிருக்கும் இந்த இரண்டு சாதனங்களின் விலையும் ரூ. 20,000 க்குள் இருக்கும் என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது. இப்போது கிடைத்த புதிய தகவலின் அடிப்படையில் Vivo T2 சீரிஸ் மொபைல்களின் ரேம், ஸ்டோரேஜ் […]

The post (Exclusive) Vivo T2 சீரிஸின் ரேம், ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் மற்றும் கேமரா விவரங்கள் அறிமுகத்திற்கு முன்னதாக வெளியிடப்பட்டது first appeared on .

]]>

Highlights

  • Vivo T2 சீரிஸ் போன்கள் Flipkart இல் பிரத்தியேகமாக கிடைக்கும்.
  • Vivo T2x விவோவின் மிகவும் மலிவு விலை 5G ஸ்மார்ட்போனாக இருக்கும்.
  • Vivo T2 போன் AMOLED டிஸ்ப்ளே மற்றும் OIS ஆதரவுடன் 64MP கேமராவைக் கொண்டிருக்கும்.

Vivo இந்தியாவில் Vivo T2 மற்றும் Vivo T2x போன்களைஐ அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது என்று சில நாட்களுக்கு முன்பு, பிரைஸ்பாபாவின் அறிக்கை தெரிவித்தது. இந்த இரண்டு சாதனங்களும் ஏப்ரல் நடுப்பகுதியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிக்கை வெளிப்படுத்தியது. எப்போது வெளியாகும் என்பதைத் தவிர, வரவிருக்கும் இந்த இரண்டு சாதனங்களின் விலையும் ரூ. 20,000 க்குள் இருக்கும் என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது. இப்போது கிடைத்த புதிய தகவலின் அடிப்படையில் Vivo T2 சீரிஸ் மொபைல்களின் ரேம், ஸ்டோரேஜ் மாறுபாடுகள் மற்றும் கேமரா விவரங்கள் பற்றிய பிரத்யேகத் தகவலை, அறிமுகத்திற்கு முன்னதாக வெளியாகி இருக்கிறது.

 

வரவிருக்கும் Vivo T2 தொடர் சாதனங்களான Vivo T2 மற்றும் Vivo T2x ஆகிய மொபைல்கள்  Flipkart தளத்தில் பிரத்தியேகமாக விற்பனைக்கு வரும். Vivo T2 ஆனது 1300 nits பிரகாசத்துடன் AMOLED டிஸ்ப்ளே கொண்டிருக்கும் . மேலும், இந்த ஸ்மார்ட்போன் OIS ஆதரவுடன் 64MP கேமராவைக் கொண்டிருக்கும். Vivo T2 மற்றும் T2x இரண்டும் 5G ஆதரவையும் வலுவான செயல்திறனையும் வழங்கும். Vivo T2x விவோவின் மிகவும் மலிவு விலை 5G ஸ்மார்ட்போனாக இருக்கும்.

Vivo T2 மொபைலானது இரண்டு ரேம் வகைகளில் வரும். அடிப்படை மாடல் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள் சேமிப்புடன் வரும். மற்றொரு வேரியண்ட்  8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். மறுபுறம் Vivo T2x மூன்று ரேம் மற்றும் சேமிப்பக வேரியண்ட்களில் கிடைக்கும். Vivo T2x பேசிக் மாடல் 4GB ரேம் மற்றும் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும். மற்ற இரண்டு வகைகளில் 6GB/8GB ரேம் மற்றும் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் பேக் செய்யப்படும்.

 

Vivo T2 5G ஸ்மார்ட்போன் பிப்ரவரியில் Google Play Console இல் தோன்றியது நினைவிருக்கும். இந்த வரவிருக்கும் இந்த மொபைல் ஸ்னாப்டிராகன் 695 SoC மூலம் இயக்கப்படும் என்று கூகிள் பிளே கன்சோல் வெளிப்படுத்தியது. மேலும், இந்த மொபைல் முழு HD+ தெளிவுத்திறன் மற்றும் வாட்டர் ட்ராப் வடிவ நாட்ச் கொண்டிருக்கும் என்று பட்டியல் வெளிப்படுத்தியது. மென்பொருளைப் பொறுத்தவரை, இந்த வரவிருக்கும் ஸ்மார்ட்போன் கூகிள் பிளே கன்சோல் பட்டியலின் படி ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தில் இயங்கும்.

 

இந்த மாத தொடக்கத்தில், iQOO Z7i உடன் விவோ T2x ஆனது Google Play கன்சோலில் காணப்பட்டது. பட்டியலின் படி, T2x மொபைலின் குளோபல் வேரியண்ட் Dimensity 700 SoC மூலம் இயக்கப்படும். மேலும், இந்த வரவிருக்கும் மொபைல் முழு HD+ தெளிவுத்திறன், 440 PPI பிக்சல் அடர்த்தி மற்றும் 8 ஜிபி ரேம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்றும் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. Vivo T2 ஐப் போலவே, Vivo T2x ஆனது ஆண்ட்ராய்டு 13 OS இல் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

The post (Exclusive) Vivo T2 சீரிஸின் ரேம், ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் மற்றும் கேமரா விவரங்கள் அறிமுகத்திற்கு முன்னதாக வெளியிடப்பட்டது first appeared on .

]]>