vivo v21s 5G https://www.91mobiles.com/tamil Thu, 09 Mar 2023 05:40:25 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 44MP செல்ஃபி கேமராவோடு வெளியாகிறது விவோ V21s 5G https://www.91mobiles.com/tamil/vivo-introduced-new-5g-phone-but-it-packs-only-4000mah-battery/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=vivo-introduced-new-5g-phone-but-it-packs-only-4000mah-battery Fri, 18 Nov 2022 06:33:09 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3707 விவோ நிறுவனம் தனது வி சீரிஸில் புதிய விவோ வி21எஸ் 5ஜி என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த போன் தற்போது தைவானில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது விவோ வி21எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம். டிஸ்ப்ளே Vivo V21s 5G ஸ்மார்ட்போன் ஆனது 6.44 அங்குல ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வருகிறது. மேலும் 2,404 […]

The post 44MP செல்ஃபி கேமராவோடு வெளியாகிறது விவோ V21s 5G first appeared on .

]]>

விவோ நிறுவனம் தனது வி சீரிஸில் புதிய விவோ வி21எஸ் 5ஜி என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த போன் தற்போது தைவானில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது விவோ வி21எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

டிஸ்ப்ளே

Vivo V21s 5G ஸ்மார்ட்போன் ஆனது 6.44 அங்குல ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வருகிறது. மேலும் 2,404 x 1,080 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

சிப்செட்

விவோ வி21எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் Dimensity 800U சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனில் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் FunTouch OS 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது.

இந்த புதிய விவோ போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் Dark Blue மற்றும் Colorful நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த விவோ வி21எஸ் 5ஜி ஸ்மார்ட்போன்.

கேமரா

விவோ வி21எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே முன்புறத்தில் OIS (optical image stabilization) வசதியுடன் கூடிய 44எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதனால் வீடியோ காலிங் மற்றும் இதன் மூலம் எடுக்கப்படும் செல்ஃபி போட்டோகள் நடுக்கம் இன்றி தெளிவாக இருக்கும். புகைப்படமும் பெரிதாக இருக்கும். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது. கேமராவில் கொடுக்கப்பட்டு இருக்கும் வசதிகளை வைத்துப் பார்க்கும் போது இது கேமராவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியாகி இருக்கும் ஒரு மொபைல் என்பது நன்கு தெரிகிறது.

பேட்டரி

விவோ வி21எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 4000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக 5ஜி போன் என்றால் கண்டிப்பாக பேட்டரிக்கு தான் அதிக முக்கியம் கொடுக்கப்படும். ஆனால் இந்த போனில் பேட்டரி வசதிக்கு அப்படி முக்கியத்துவம் கொடுக்கவில்லை. சாதரணமாக 5ஜி-ஐ பயன்படுத்தும் போது விரைவில் சார்ஜ் தீர்ந்துவிடும் நிலைமை உள்ளது. எனவே இதுபோன்ற போன்களில் 5000 அல்லது அதற்கும் மேற்பட்ட பேட்டரியை வழங்கினால் தான் நன்றாக இருக்கும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

கனெக்டிவிட்டி

இந்த விவோ வி21எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஒரு டூயல் சிம் மொபைல் ஆகும். இதில் 5ஜி, டூயல் பேண்ட் வைஃபை, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், புளூடூத் வி5.1, 3.5எம்எம் ஹெட்போன் ஜாக், GPS உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது. இதன் விலை தைவானில் NTD 11,490 (இந்திய மதிப்பில் ரூ.30,000) ஆக உள்ளது. விரைவில் இந்தியா உட்பட மற்ற நாடுகளிலும் இந்த போனை எதிர்பார்க்கலாம்.

The post 44MP செல்ஃபி கேமராவோடு வெளியாகிறது விவோ V21s 5G first appeared on .

]]>