vivo v27 pro https://www.91mobiles.com/tamil Thu, 09 Mar 2023 16:12:23 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 விற்பனைக்கு வந்தது விவோ வி27 ப்ரோ! https://www.91mobiles.com/tamil/vivo-v27-pro-india-sale-starts-4-reasons-to-buy-and-3-reasons-to-skip/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=vivo-v27-pro-india-sale-starts-4-reasons-to-buy-and-3-reasons-to-skip Mon, 06 Mar 2023 13:02:48 +0000 https://www.91mobiles.com/tamil/?p=6257 விவோ வி27 ப்ரோ மொபைலின் மீது என்னென்ன சலுகைகள் (பேங்க் & எக்ஸ்சேன்ஜ் ஆபர்) கிடைக்கும்? இதை நம்பி வாங்கலாமா அல்லது தவிர்க்கலாமா? இதற்கு பதிலாக வேறு என்னென்ன போன்களை (Best Alternative Phones) கருத்தில் கொள்ளலாம்? போன்ற விவரங்களைப் பார்க்கலாம்.   Vivo V27 Pro விலை விவோ வி27 ப்ரோ ஸ்மார்ட்போனானது மொத்தம் 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் வாங்க கிடைக்கும். 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் விலை = ரூ.37,999; […]

The post விற்பனைக்கு வந்தது விவோ வி27 ப்ரோ! first appeared on .

]]>

Highlights

  • விவோ வி27 ப்ரோவின் (Vivo V27 Pro) இந்திய விற்பனை இன்று முதல், அதாவது மார்ச் 6 முதல் தொடங்குகிறது.
  • ஐசிஐசிஐ வங்கி, கோடக் மற்றும் ஹெச்டிஎஃப்சி பேங்க் கார்டுகளை பயன்படுத்தினால் ரூ.3,000 வரையிலான இன்ஸ்டன்ட் பேங்க் ஆபர் கிடைக்கும்.

விவோ வி27 ப்ரோ மொபைலின் மீது என்னென்ன சலுகைகள் (பேங்க் & எக்ஸ்சேன்ஜ் ஆபர்) கிடைக்கும்? இதை நம்பி வாங்கலாமா அல்லது தவிர்க்கலாமா? இதற்கு பதிலாக வேறு என்னென்ன போன்களை (Best Alternative Phones) கருத்தில் கொள்ளலாம்? போன்ற விவரங்களைப் பார்க்கலாம்.

 

Vivo V27 Pro விலை

விவோ வி27 ப்ரோ ஸ்மார்ட்போனானது மொத்தம் 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் வாங்க கிடைக்கும்.

8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் விலை = ரூ.37,999;

8ஜிபி ரேம் + 256ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் விலை = ரூ.39,999

12ஜிபி ரேம் + 256ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் விலை = ரூ.42,999.

Vivo V27 Pro கலர் ஆப்ஷன்ஸ்

மேற்கண்ட மூன்று ஸ்டோரேஜ் ஆப்ஷன்களுமே நோபல் பிளாக் (Noble Black) மற்றும் மேஜிக் ப்ளூ (Magic Blue) என்கிற 2 கலர் ஆப்ஷன்களின் கீழ் வாங்க கிடைக்கும். அதில் மேஜிக் ப்ளூ வேரியண்ட் ஆனது ஃப்ளோரைடு ஏஜி கலர் சேஞ்சிங் (Fluoride AG Color-Changing Material) மெட்டீரியல் உடனான கலர் சேஞ்சிங் பேக் பேனலுடன் வருகிறது.

 

Vivo V27 Pro சலுகைகள்

ஐசிஐசிஐ வங்கி, கோடக் மற்றும் ஹெச்டிஎஃப்சி பேங்க் கார்டுகளை பயன்படுத்தினால் ரூ.3,000 வரையிலான இன்ஸ்டன்ட் பேங்க் ஆபர் கிடைக்கும். மேலும் ரூ.2,500 வரையிலான எக்ஸ்சேன்ஜ் ஆபரும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட சலுகைகள் பிளிப்கார்ட் (Flipkart) வலைதளம் வழியாக அணுக கிடைக்கும்.

 

எங்கு கிடைக்கும்?

இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் வழியாக மட்டுமின்றி விவோ இ-ஸ்டோர் (Vivo e-Store) வழியாகவும் வாங்க கிடைக்கும். கூடுதலாக க்ரோமா (Chroma) மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் (Reliance Digital) உள்ளிட்ட முக்கிய சில்லறை விற்பனை நிலையங்களின் வழியாகவும் விவோ வி27 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்படும்.

Vivo V27 Pro நம்பி வாங்க 4 காரணங்கள்

விவோ வி27 ப்ரோவை நம்பி வாங்க 4 முக்கிய காரணங்களை முன்வைக்கலாம். ஒன்று – இது மிகவும் அழகான வடிவமைப்பை பெற்றுள்ளது; இரண்டு – இதில் அட்டகாசமான அமோஎல்இடி டிஸ்பிளே உள்ளது: மூன்று – இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி லைஃப் நன்றாக இருக்கிறது; நான்கு – இதன் கேமராக்கள் மிகவும் திறமையானதாக உள்ளன.

 

Vivo V27 Pro வாங்காமல் தவிர்க்க 3 காரணங்கள்

குறைகளை பற்றி பேசும் போது, இந்த ஸ்மார்ட்போனின் செயல்திறன் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கலாம்; மேலும் இதில் ப்ளோட்வேரை (Bloatware) காண முடிகிறது. கடைசியாக இதுவொரு பிரீமியம் ஸ்மார்ட்போனாக இருந்தும் கூட, இதில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் இல்லை. இந்த 3 சிறிய குறைகளில் ஏதேனும் 1 பெரிய குறையாக தோன்றினால், இந்த போனை வாங்காமல் தவிர்க்கலாம்!

 

Vivo V27 Pro விற்கு சிறந்த மாற்று எது?

விவோ வி 27 ப்ரோவின் நேரடி போட்டியாளர்களாக மூன்று ஸ்மார்ட்போன்களை பட்டியலிடலாம். அவைகள் ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி (OnePlus 11R 5G), ரியல்மி ஜிடி நியோ 3 (Realme GT Neo 3) மற்றும் ஐக்யூ 9டி (iQOO 9T) போன்கள் ஆகும்.

The post விற்பனைக்கு வந்தது விவோ வி27 ப்ரோ! first appeared on .

]]>
சோனி கேமராவோடு பிப்.25ல் வெளியாகும் விவோ வி27 ப்ரோ https://www.91mobiles.com/tamil/vivo-v27-pro-smartphone-to-launch-in-india-on-february-25/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=vivo-v27-pro-smartphone-to-launch-in-india-on-february-25 Sun, 19 Feb 2023 06:22:47 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5907 விவோ வி27 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் Dimensity 1300 சிப்செட், ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம், சோனி கேமரா உள்ளிட்ட பலவித சிறப்பான வசதிகளைக் கொண்டு இருக்கும் எனத் தெரிகிறது. ஆன்லைனில் கசிந்த விவோ 27 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். டிஸ்ப்ளே விவோ வி27 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.56 அங்குல AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. கூடவே 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு […]

The post சோனி கேமராவோடு பிப்.25ல் வெளியாகும் விவோ வி27 ப்ரோ first appeared on .

]]>

Highlights

  • விவோ நிறுவனம் இந்தியாவில் வரும் பிப்ரவரி 25-ம் தேதி புதிய விவோ வி27 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.
  • இந்த புதிய ஸ்மார்ட்போன் சோனி கேமரா, தரமான சிப்செட் உடன் வெளியாகிறது.

விவோ வி27 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் Dimensity 1300 சிப்செட், ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம், சோனி கேமரா உள்ளிட்ட பலவித சிறப்பான வசதிகளைக் கொண்டு இருக்கும் எனத் தெரிகிறது. ஆன்லைனில் கசிந்த விவோ 27 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

டிஸ்ப்ளே

விவோ வி27 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.56 அங்குல AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. கூடவே 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த விவோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக விவோ நிறுவனம் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது.

 

சிப்செட்

விவோ வி27 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் Dimensity 1300 சிப்செட் வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் இந்த புதிய விவோ ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதி உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேமரா

இந்த விவோ வி27 ப்ரோ ஸ்மார்ட்போன் 64எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த போன் சோனி கேமரா சென்சார் வசதியுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. கூடவே செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே முன்பக்கத்தில் 16எம்பி கேமரா இந்த புதிய போனில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த விவோ வி27 ப்ரோ ஸ்மார்ட்போன்.

 

பேட்டரி

விவோ வி27 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4600 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். கூடவே 66 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், 8ஜிபி ரேம் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டு இந்த விவோ வி27 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த Vivo Y56 5G ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

விவோ Y56 5ஜி அம்சங்கள்

விவோ Y56 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5 அங்குல ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. கூடவே 2408 × 1080 பிக்சல்ஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது. 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ Y56 5ஜி ஸ்மார்ட்போன். விவோ Y56 5ஜி ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதி உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் சிறந்த செயல்திறன் வழங்கும். கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த உதவும்

இந்த மொபைல் FunTouch OS சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் வெளிவந்துள்ளது. 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமராவைக் கொண்டுள்ளது எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அருமையான புகைப்படங்களை எடுக்க முடியும். கூடவே செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது. விவோ Y56 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். கூடவே 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த புதிய போன்.

 

கனெக்டிவிட்டி

5ஜி, 4ஜி எல்டிஇ, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த விவோ Y56 5ஜி ஸ்மார்ட்போன். 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ Y56 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.19,999 என்ற விலைக்கு விற்பனைகிறது.

The post சோனி கேமராவோடு பிப்.25ல் வெளியாகும் விவோ வி27 ப்ரோ first appeared on .

]]>
சோனி கேமராவோடு வெளிவரும் விவோ வி27 மற்றும் விவோ வி27 ப்ரோ! https://www.91mobiles.com/tamil/vivo-v27-and-vivo-v27-pro-phones-will-soon-be-launched-with-sony-camera-sensors/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=vivo-v27-and-vivo-v27-pro-phones-will-soon-be-launched-with-sony-camera-sensors Fri, 03 Feb 2023 12:14:17 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5548 விவோ வி27 & விவோ வி27 ப்ரோ மொபைலில் சிறந்த கேமராவை வழங்க நினைக்கும் மொபைல் நிறுவனங்கள் சோனி நிறுவனத்தின் கேமரா சென்சாரை தான் அதிகம் பயன்படுத்துகின்றன. ஏனெனில் இந்த சென்சார்கள் உதவியுடன் தரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோவை எடுக்க முடியும். இந்நிலையில் விவோ நிறுவனமும் தனது புதிய விவோ போன்களில் சோனி கேமரா சென்சாரை பயன்படுத்தி உள்ளது. இப்போது ஆன்லைனில் கசிந்த விவோ வி27 மற்றும் விவோ வி27 ப்ரோ மொபைலின் சில முக்கிய அம்சங்களைப் […]

The post சோனி கேமராவோடு வெளிவரும் விவோ வி27 மற்றும் விவோ வி27 ப்ரோ! first appeared on .

]]>

Highlights

  • விவோ நிறுவனம் விரைவில் விவோ வி27 மற்றும் விவோ வி27 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது.
  • இந்த இரண்டு விவோ போன்களில் தான் சோனி கேமரா சென்சாரை பயன்படுத்தி உள்ளது.

விவோ வி27 & விவோ வி27 ப்ரோ

மொபைலில் சிறந்த கேமராவை வழங்க நினைக்கும் மொபைல் நிறுவனங்கள் சோனி நிறுவனத்தின் கேமரா சென்சாரை தான் அதிகம் பயன்படுத்துகின்றன. ஏனெனில் இந்த சென்சார்கள் உதவியுடன் தரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோவை எடுக்க முடியும். இந்நிலையில் விவோ நிறுவனமும் தனது புதிய விவோ போன்களில் சோனி கேமரா சென்சாரை பயன்படுத்தி உள்ளது. இப்போது ஆன்லைனில் கசிந்த விவோ வி27 மற்றும் விவோ வி27 ப்ரோ மொபைலின் சில முக்கிய அம்சங்களைப் பார்ப்போம்.

 

சிப்செட்

விவோ வி27 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் Dimensity 8200 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். விவோ வி27 மற்றும் விவா வி27 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் வாட்டர் டிராப் டிஸ்பிளே, 8ஜிபி ரேம், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது. தற்போது இந்த போன்களின் ஒரு சில அம்சங்கள் மட்டுமே தெரியவந்துள்ளது. கூடிய விரைவில் இந்த போன்களின் அனைத்து அம்சங்களும் தெரியவரும்.

விவோ Y35m டிஸ்ப்ளே

கடந்த மாதம் விவோ நிறுவனம் அறிமுகம் செய்த விவோ Y35m ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்ற விரிவாகப் பார்ப்போம்.விவோ Y35m ஸ்மார்ட்போன் ஆனது 6.51 அங்குல எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. கூடவே, 720 x 1600 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது.

 

விவோ Y35m சிப்செட்

விவோ Y35m ஸ்மார்ட்போன் மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் OriginOS Ocean சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாககொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது

 

விவோ Y35m கேமரா

விவோ Y35m ஸ்மார்ட்போன் ஆனது 13எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது. இதுதவிர எல்டிஇ பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த புதிய விவோ Y35m போன்.

 

மெமரி

இந்த போனில் 4ஜிபி/6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. இதன்மூலம் போனின் சேமிப்புத்திறனை அதிகரித்துக்கொள்ள முடியும்.

 

பேட்டரி

டான் கோல்ட், ஐஸ் கிளவுட் ப்ளூ மற்றும் அப்சிடியன் பிளாக் நிறங்களில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் இந்த விவோ Y35m ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு 15 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த புதிய போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 

கனெக்டிவிட்டி

5ஜி, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த விவோ Y35m ஸ்மார்ட்போன்.

 

 

The post சோனி கேமராவோடு வெளிவரும் விவோ வி27 மற்றும் விவோ வி27 ப்ரோ! first appeared on .

]]>