vivo X80 Lite https://www.91mobiles.com/tamil Fri, 23 Sep 2022 10:55:03 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 அறிமுகமானது Vivo X80 Lite https://www.91mobiles.com/tamil/vivo-x80-lite-smartphone-launched-with-64mp-primary-camera-dimensity-900-soc-and-more/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=vivo-x80-lite-smartphone-launched-with-64mp-primary-camera-dimensity-900-soc-and-more Fri, 23 Sep 2022 10:55:03 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2567 விவோ நிறுவனம் Vivo X80 Lite ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டைமன்சிட்டி 900 எஸ்ஓசி சிப்செட், டிரபிள் ரியர் கேமரா என பல்வேறு அம்சங்களுடன் வெளியாகி இருக்கிறது. விவோ எக்ஸ்80 சீரிஸை கடந்த சில தினங்களுக்கு முன்பு விவோ நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்த தொடரில் விவோ எக்ஸ் 80 மற்றும் விவோ எக்ஸ் 80 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்கள் இடம்பெற்றன. இந்த நிலையில் தற்போது இந்த தொடரின் நுழைவு நிலை ஸ்மார்ட்போனாக விவோ […]

The post அறிமுகமானது Vivo X80 Lite first appeared on .

]]>

விவோ நிறுவனம் Vivo X80 Lite ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டைமன்சிட்டி 900 எஸ்ஓசி சிப்செட், டிரபிள் ரியர் கேமரா என பல்வேறு அம்சங்களுடன் வெளியாகி இருக்கிறது.

விவோ எக்ஸ்80 சீரிஸை கடந்த சில தினங்களுக்கு முன்பு விவோ நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்த தொடரில் விவோ எக்ஸ் 80 மற்றும் விவோ எக்ஸ் 80 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்கள் இடம்பெற்றன. இந்த நிலையில் தற்போது இந்த தொடரின் நுழைவு நிலை ஸ்மார்ட்போனாக விவோ எக்ஸ்80 லைட் அறிமுகம் செய்யதுள்ளது.

சிறப்பம்சங்கள்

Vivo X80 லைட் ஸ்மார்ட்போனில் 6.44 அங்குல Full HD plus AMOLED டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளே 1,080×2,400 பிக்சல்கள் அடர்த்தி, 90Hz ரெஃப்ரஷிங் ரேட், 1300 நிட்ஸ் உச்ச பிரகாசம் மற்றும் 180Hz டச் மாதிரி விகிதத்தைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 900 SoC ஆதரவைக் கொண்டிருக்கிறது.

கேமரா

இந்த போனில் பாதுகாப்பு அம்சத்துக்கு இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 64 எம்பி முதன்மை கேமரா இருக்கிறது. 8 எம் அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா ஆதரவும் இருக்கிறது. ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 50 எம்பி செல்ஃபி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

இயங்குதளம்

இந்த விவோ ஸ்மார்ட்போனில் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4400 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் FuntouchOS 12 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 12 மூலம் இயங்குகிறது.

Vivo Y22 ஸ்மார்ட்போன்

Vivo நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் Vivo Y22 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இது பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ Y22 ஸ்மார்ட்போனின் விலை ரூ.14,999-ஆக உள்ளது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 கேஷ்பேக் சலுகையும் வழங்கப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை ரூ.13,999-விலையில் வாங்க முடியும்.

டிஸ்ப்ளே

விவோ Y22 ஸ்மார்ட்போன் ஆனது 6.55 அங்குல HD plus IPS LCD டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. 720 x 1612 பிக்சல்ஸ், 20:1:19 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 530 நிட்ஸ் ப்ரைட்னஸ் உள்ளிட்ட சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது.

கேமரா

விவோ Y22 ஸ்மார்ட்போன் ஆனது 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. கூடவே செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது.

பேட்டரி

விவோ Y22 ஸ்மார்ட்போனில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் வசதி உள்ளது. எனவே ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் Funtouch OS 12 சார்ந்தஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. விவோ Y22 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். மேலும் 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களையும் கொண்டிருக்கிறது.

The post அறிமுகமானது Vivo X80 Lite first appeared on .

]]>