vivo x90 https://www.91mobiles.com/tamil Thu, 09 Mar 2023 07:56:27 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 12GB ரேம், ஆண்ட்ராய்டு 13 உடன் அறிமுகமாக இருக்கிறது விவோ எஸ்16 https://www.91mobiles.com/tamil/vivo-s16-might-launching-soon-with-these-specification/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=vivo-s16-might-launching-soon-with-these-specification Thu, 15 Dec 2022 16:48:19 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4334 விவோ நிறுவனம் பல்வேறு விலைப்பிரிவில் புதுப்புது ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. இதனால் விவோவிற்கான வாடிக்கையாளர்கள் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் விவோ நிறுவனம் விரைவில்12GB ரேம், ஆண்ட்ராய்டு 13 உடன் விவோ எஸ்16 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. சிறப்பம்சங்கள் விவோ எஸ்16 கீக்பெஞ்சில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 870 எஸ்ஓசி சிப்செட் மற்றும் 12 ஜிபி ரேம் ஆதரவோடு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. Vivo S16 ஸ்மார்ட்போனானது […]

The post 12GB ரேம், ஆண்ட்ராய்டு 13 உடன் அறிமுகமாக இருக்கிறது விவோ எஸ்16 first appeared on .

]]>

விவோ நிறுவனம் பல்வேறு விலைப்பிரிவில் புதுப்புது ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. இதனால் விவோவிற்கான வாடிக்கையாளர்கள் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் விவோ நிறுவனம் விரைவில்12GB ரேம், ஆண்ட்ராய்டு 13 உடன் விவோ எஸ்16 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது.

சிறப்பம்சங்கள்

விவோ எஸ்16 கீக்பெஞ்சில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 870 எஸ்ஓசி சிப்செட் மற்றும் 12 ஜிபி ரேம் ஆதரவோடு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. Vivo S16 ஸ்மார்ட்போனானது கீக்பெஞ்ச் தளத்தில் V2244A மாடல் எண்ணுடன் காணப்பட்டுள்ளது. 12 ஜிபி ரேம், குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 எஸ்ஓசி மற்றும் அட்ரீனோ 650 ஜிபியூ உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இதில் இருக்கிறது.

கீக்பெஞ்ச்

இந்த ஸ்மார்ட்போன் கீக்பெஞ்ச் மல்டிகோர் சோதனையில் 3,138 புள்ளிகளை பெற்றிருக்கிறது. விவோ எஸ்16 குறித்த தகவல் கடந்த சில வாரங்களாக இணையதளத்தில் உலா வந்துக் கொண்டிருக்கிறது. Vivo S16 வெளியீடு விரைவில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நம் 91 மொபைல்ஸ் இந்த ஸ்மார்ட்போனை கீக்பெஞ்சில் கண்டறிந்திருக்கிறது. இதன்மூலம் இந்த ஸ்மார்ட்போனின் சில விவரக்குறிப்புகள் கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 13 மூலம் இயக்கப்படும் என இதன்மூலம் தெரிய வந்து இருக்கிறது.

சிப்செட் & ரேம்

அதேபோல் விவோ எஸ்16 ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் என்பது ஏறத்தாழ முடிவு செய்யப்பட்டுவிட்டது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் 12ஜிபி ரேம் ஆதரவைக் கொண்டிருக்கும் என்பதையும் கணிக்க முடிகிறது. விவோ எஸ்16 ஸ்மார்ட்போன் குறித்த கூடுதல் தகவல் எதுவும் இல்லை. இருப்பினும் இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் குறித்த தகவல்கள் கடந்த சில நாட்களாக இணையதளத்தில் உலா வந்துக் கொண்டிருக்கிறது.

வெளியீடு

முழு எச்டி+ டிஸ்ப்ளே, வேகமாக சார்ஜ் செய்யும் திறன், பெரிய பேட்டரி, குறைந்தபட்சம் டூயல் ரியர் கேமரா அமைப்புகளைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. Vivo S16 சீரிஸ் இந்த மாதம் சீனாவில் அறிமுகமாகும் எனவும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பிற நாட்டு சந்தைகளில் அறிமுகமாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் விவோ நிறுவனம் Vivo X90 சீரிஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. புதிய ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டவர்களை கண்டிப்பாக காத்திருக்க வைக்கும் வகையில் இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. விவோவின் Vivo X90 சீரிஸ் ஸ்மார்ட்போனானது Bureau of Indian Standards (BIS) இணையதளத்தில் காணப்பட்டிருக்கிறது. பிஐஎஸ் இணையதளத்தில் வி2218 என்ற மாடல் எண்ணுடன் இது காணப்பட்டிருக்கிறது. மேலும் இதன்மூலம் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாகும் என்பதும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

விவோ எக்ஸ்90 ஸ்மார்ட்போனானது 6.78 அங்குல அமோலெட் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கும் எனவும் கணிக்கப்படுகிறது. விவோ எக்ஸ்80 சீரிஸ் இன் வாரிசாக இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் என்னவாக இருக்கும் என்பதை ஓரளவு கணித்துவிடலாம். காரணம், இந்த ஸ்மார்ட்போன் முன்னதாகவே சீனாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகி இருக்கிறது.

The post 12GB ரேம், ஆண்ட்ராய்டு 13 உடன் அறிமுகமாக இருக்கிறது விவோ எஸ்16 first appeared on .

]]>
இரண்டுவிதமான டிஸ்ப்ளேவுடன் வெளியாகிறது Vivo X90 https://www.91mobiles.com/tamil/vivo-x90-smartphone-specs-officially-teased-by-vivo-a-head-of-launch-two-different-display/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=vivo-x90-smartphone-specs-officially-teased-by-vivo-a-head-of-launch-two-different-display Mon, 21 Nov 2022 11:24:59 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3782 ஒரு ஸ்மார்ட்போனை வாங்கலாம் என திட்டமிட்டால், அந்த விலைப்பிரிவில் பலத்த போட்டிகள் இருக்கிறது. ஒரு போனில் இருக்கும் சிறப்பம்சம் அந்த போனில் இல்லை.. எனவே எந்த போனை வாங்குவது என்பதில் பெரிய குழப்பம் வரும். இந்த அனைத்துக்கும் மத்தியில் ஒருசில போன்கள் அனைத்து எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் வெளியாகிறது. அதன்படி விவோ தரப்பில் வெளியாகும் போன் தான் Vivo X90. இந்த ஸ்மார்ட்போனானது டூயல் காட்சி மற்றும் டிரிபிள் ரியர் கேமரா விருப்பங்களைக் கொண்டுள்ளது. சிறப்பம்சங்கள் […]

The post இரண்டுவிதமான டிஸ்ப்ளேவுடன் வெளியாகிறது Vivo X90 first appeared on .

]]>

ஒரு ஸ்மார்ட்போனை வாங்கலாம் என திட்டமிட்டால், அந்த விலைப்பிரிவில் பலத்த போட்டிகள் இருக்கிறது. ஒரு போனில் இருக்கும் சிறப்பம்சம் அந்த போனில் இல்லை.. எனவே எந்த போனை வாங்குவது என்பதில் பெரிய குழப்பம் வரும். இந்த அனைத்துக்கும் மத்தியில் ஒருசில போன்கள் அனைத்து எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் வெளியாகிறது. அதன்படி விவோ தரப்பில் வெளியாகும் போன் தான் Vivo X90. இந்த ஸ்மார்ட்போனானது டூயல் காட்சி மற்றும் டிரிபிள் ரியர் கேமரா விருப்பங்களைக் கொண்டுள்ளது.

சிறப்பம்சங்கள்

Vivo X90 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போனானது 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கும் எனவும் இந்த ஸ்மார்ட்போனில் BOE Q9 மற்றும் Samsung E6 பேனல் என இரண்டு வெவ்வேறு டிஸ்ப்ளே இருக்கும் எனவும் தெரிகிறது.

இந்த ஸ்மார்ட்போனானது நவம்பர் 22 ஆம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. Vivo X90 ஆனது 50 மெகாபிக்சல்கள் பிரதான கேமரா சென்சார்கள் உட்பட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என்பது வெளியான டீசர் மூலம் தெரியவந்துள்ளது.

இரண்டு வித டிஸ்ப்ளே

நவம்பர் 22 அறிமுகமாக இருக்கும் நிலையில் இந்த ஸ்மார்ட்போன் குறித்து அதிகாரப்பூர்வமாக டீஸ் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 120 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் மற்றும் இரண்டு வெவ்வேறு விதமான டிஸ்ப்ளேகளுடன் வரும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இதில் இந்த ஸ்மார்ட்போனில் BOE Q9 மற்றும் Samsung E6 பேனல் என இரண்டு வெவ்வேறு டிஸ்ப்ளே இருக்கும்.

விவோ நிறுவனம் கடந்த சில காலமாகவே Vivo X90 சீரிஸ் ஸ்மார்ட்போன் தயாரிப்பில் இருக்கிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் வருகிற நவம்பர் 22 ஆம் தேதி (நாளை) அறிமுகமாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆரம்பக் கட்டமாக சீனாவில் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டாலும் விரைவில் உலகளவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விவோ எக்ஸ்90 சீரிஸ்

விவோ எக்ஸ்90 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் குறித்த தகவல் சமீபகாலமாகவே கசிந்த வண்ண இருக்கிறது. இவை அனைத்தும் ஸ்மார்ட்போனின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்யும் வகையில் இருக்கிறது. Vivo X90, Vivo X90 Pro மற்றும் Vivo X90 Pro+ ஆகியவற்றின் இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட், வண்ண விருப்பங்கள் உள்ளிட்டவைகள் லீக் ஆகி இருக்கிறது. Vivo X90 Pro+ ஸ்மார்ட்போனின் முக்கிய விவரக்குறிப்புகள் கீக்பெஞ்சில் முன்னதாக வெளியானது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

வெளியான தகவலின்படி, விவோ எக்ஸ்90 சீரிஸின் வெண்ணிலா பதிப்பு நான்கு மெமரி வகைகளில் வெளியாகும் என கூறப்படுகிறது. அதாவது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வெளியாகும் என தகவல்கள் கூறுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது பிளாக், ஐஸ் ப்ளூ மற்றும் ரெட் நிறங்களில் வெளியாகலாம்.

The post இரண்டுவிதமான டிஸ்ப்ளேவுடன் வெளியாகிறது Vivo X90 first appeared on .

]]>