vivo Y01 https://www.91mobiles.com/tamil Thu, 17 Nov 2022 05:32:13 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 அறிமுகமானது விவோ Vivo Y01A – பக்காவான பட்ஜெட் ஸ்மார்ட்போன் https://www.91mobiles.com/tamil/best-low-price-smartphone-by-vivo-vivo-y01a-launched/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=best-low-price-smartphone-by-vivo-vivo-y01a-launched Thu, 17 Nov 2022 05:32:13 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3672 Vivo நிறுவனம் Y01A என்ற ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போன் பட்ஜெட் விலையில் வெளியாகி இருக்கிறது. இதன் வசதிகளை வைத்துப் பார்க்கும் போது குறைந்த விலை பிரிவில் கிடைக்கும் பிற ஸ்மார்ட்போன்களுக்கு இது கடுமையான போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிஸ்ப்ளே விவோ நிறுவனம் Vivo Y01A ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி35 எஸ்ஓசி மற்றும் ஆண்ட்ராய்டு கோ ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது. Vivo Y01A ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து […]

The post அறிமுகமானது விவோ Vivo Y01A – பக்காவான பட்ஜெட் ஸ்மார்ட்போன் first appeared on .

]]>

Vivo நிறுவனம் Y01A என்ற ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போன் பட்ஜெட் விலையில் வெளியாகி இருக்கிறது. இதன் வசதிகளை வைத்துப் பார்க்கும் போது குறைந்த விலை பிரிவில் கிடைக்கும் பிற ஸ்மார்ட்போன்களுக்கு இது கடுமையான போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிஸ்ப்ளே

விவோ நிறுவனம் Vivo Y01A ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி35 எஸ்ஓசி மற்றும் ஆண்ட்ராய்டு கோ ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது. Vivo Y01A ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இதில் 1600×720 பிக்சல்கள் HD+ தீர்மானத்துடனான 6.51 அங்குல ஐபிஎஸ் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த டிஸ்ப்ளே ஆனது 720p தெளிவுத்திறன் மற்றும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவைக் கொண்டிருக்கிறது. 6.51 அங்குலம் என்பது பெரிய அளவிலான டிஸ்ப்ளே ஆகும். மலிவு விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களை விட மெல்லிய பெசல்கள் இதில் இருக்கிறது. இந்த டிஸ்ப்ளே வாட்டர் டிராப் நாட்ச் வசதியோடு இருக்கிறது.

இயங்குதளம்

Vivo Y01A ஸ்மார்ட்போனானது மீடியாடெக் ஹீலியோ பி35 எஸ்ஓசி சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது. பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் மூலம் இந்த சேமிப்புத் திறனை விரிவு செய்யும் வசதியும் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்ட் 11 Go பதிப்புடனான Funtouch OS 11.1 லேயர் உடன் இயக்கப்படுகிறது.

பேட்டரி

Vivo Y01A ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. பெரிய டிஸ்ப்ளே போல் இதில் பெரிய பேட்டரியும் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை அனைத்தும் மலிவு விலை ஸ்மார்ட்போனில் கிடைப்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போனில் 10 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் வழங்கப்பட்டு இருக்கிறது.

விலை

இது ஒரு 4ஜி போன் ஆகும். இதில் 4ஜி வோல்ட்இ, டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.0 மற்றும் டூயல் சிம்கார்ட் ஆதரவுகள் வழங்கப்பட்டிருக்கிறது. பாதுகாப்பு அம்சத்துக்கு என ஃபிங்கர் பிரிண்ட் ஆதரவு இதில் வழங்கப்படவில்லை. வழக்கமான பின் மற்றும் பேட்டர்ன் லாக் ஆதரவு இதில் வழங்கப்பட்டிருக்கிறது. இதில் 5ஜி ஆதரவு இல்லை. இது Sapphire Blue மற்றும் Elegant Black ஆகிய நிறங்களில் வெளியாகி இருக்கிறது. இந்த புதிய விவோ ஸ்மார்ட்போனானது தாய்லாந்தில் ฿3,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு ரூ.9,000 ஆகும்.

இந்திய அறிமுகம்

பட்ஜெட் விலை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனான இது Bureau of Indian Standards (BIS) தரவுத்தளத்தில் தோன்றி இருக்கிறது. எனவே Vivo விரைவில் இந்தியாவில் Y01A ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனுக்கு என தனி வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். எனவே வெளியாகும் போது இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அதீத வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post அறிமுகமானது விவோ Vivo Y01A – பக்காவான பட்ஜெட் ஸ்மார்ட்போன் first appeared on .

]]>