vivo Y35 5G https://www.91mobiles.com/tamil Thu, 09 Mar 2023 16:01:34 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 குறைந்த விலையில் வெளியாகும் விவோ Y35 5G போன்! https://www.91mobiles.com/tamil/vivo-y35-5g-smartphone-to-launch-soon-with-5g-chipset-specs-features-and-more/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=vivo-y35-5g-smartphone-to-launch-soon-with-5g-chipset-specs-features-and-more Fri, 02 Dec 2022 06:31:06 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4043 விவோ நிறுவனம் விவோ Y35 5G எனும் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே இதே பெயரில் 4ஜி மொபைல் இருக்கிறது. இப்போது அதன் அப்கிரேடட் வெர்ஷனாக ஒரு 5ஜி போன் வெளியாகிறது. வழக்கத்திற்கு மாறாக இம்முறை குறைந்த விலையில் புதிய விவோ போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதனால் இந்த போனுக்கான எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது. டிஸ்பிளே இந்த விவோ Y35 5G மொபைலில் என்னென்ன வசதிகள் இருக்கும் என ஆன்லைனில் கசிந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களை […]

The post குறைந்த விலையில் வெளியாகும் விவோ Y35 5G போன்! first appeared on .

]]>

விவோ நிறுவனம் விவோ Y35 5G எனும் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே இதே பெயரில் 4ஜி மொபைல் இருக்கிறது. இப்போது அதன் அப்கிரேடட் வெர்ஷனாக ஒரு 5ஜி போன் வெளியாகிறது. வழக்கத்திற்கு மாறாக இம்முறை குறைந்த விலையில் புதிய விவோ போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதனால் இந்த போனுக்கான எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது.

டிஸ்பிளே

இந்த விவோ Y35 5G மொபைலில் என்னென்ன வசதிகள் இருக்கும் என ஆன்லைனில் கசிந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம். இந்த விவோ Y35 5G ஸ்மார்ட்போன் ஆனது 6.51 அங்குல எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும். அதேபோல் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1080 பிக்சல்ஸ் ஆதரவுடன் அறிமுகமாக இருக்கிறது.

சிப்செட்

விரைவில் அறிமுகமாக இருக்கும் விவோ Y35 5G ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 5ஜி சிப்செட் வசதியுடன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். மேலும் இந்த புதிய போன் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தில் இயங்கும் என்று கூறப்படுகிறது.

மெமரி

4ஜிபி/6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் புதிய விவோ Y35 5G ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இண்டர்னல் மெமரியை அதிகரித்துக் கொள்ள இந்த மொபைலில் மெமரி நீட்டிப்பு வசதியும் இருக்கிறது. அதாவது நீங்கள் மைக்ரோ எஸ்டி கார்டை பயன்படுத்தி இண்டர்னல் மெமரியை அதிகரிக்க ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழங்கப்பட்டு இருக்கிறது.

கேமரா

விவோ Y35 5G ஸ்மார்ட்போன் பின்பக்கத்தில் 13எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமராக்களைக் கொண்டுள்ளது. மேலும் செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே முன்பக்கத்தில் 5எம்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.

பேட்டரி

விவோ Y35 5G ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். மேலும் 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி இருக்கும் எனத் தெரிகிறது. இதுபோக பாதுகாப்புக்கு என கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் அறிமுகமாக இருக்கிறது இந்த விவோ Y35 5G ஸ்மார்ட்போன்.

கனெக்டிவிட்டி

5ஜி, 4ஜி வோல்ட்இ, என்எப்சி, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். அதேபோல் குறைந்த விலையில் இந்த மொபைல் வெளிவரும் என்று தெரியவருகிறது.

The post குறைந்த விலையில் வெளியாகும் விவோ Y35 5G போன்! first appeared on .

]]>